சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள் என்பதாகக் கூறப்படும் ஹதீஸ் பற்றிய தெளிவு
சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள் என்பதாகக் கூறப்படும் ஹதீஸ் பற்றிய தெளிவு
📚 :- திருக்குர்ஆன் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ أَبُو أُمَامَةَ الْبَاهِلِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ، اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ وَسُورَةَ آلِ عِمْرَانَ فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ وَتَرْكَهَا حَسْرَةٌ وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ قَالَ مُعَاوِيَةُ بَلَغَنِي أَنَّ الْبَطَلَةَ السَّحَرَةُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில் குர்ஆன் ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆல இம்ரான் ஆகிய இரு சூராக்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில் அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். அல்பகரா அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும். இந்த சூரத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள்.
அறிவிப்பவர் :- அபூ உமாமா அல்பாஹிலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1910
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஆவியா பின் சல்மான் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸிலுள்ள அல் பத்தலா எனும் சொல்லுக்கு சூனியக்காரர்கள் என்று பொருள்படும்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ أَخْبَرَنَا يَحْيَى يَعْنِي ابْنَ حَسَّانَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ وَكَأَنَّهُمَا فِي كِلَيْهِمَا وَلَمْ يَذْكُرْ قَوْلَ مُعَاوِيَةَ بَلَغَنِي
மேற்கூறிய ஹதீஸ் இன்னும் ஓர் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளன. அதில் முஆவியா பின் சல்மான் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இடம் பெற்றுள்ளார்கள். அதில் அவர்கள் எந்த ஒரு மேலதிக அர்த்தமும் செய்யவில்லை என்பதைக் காரணமாக வைத்து அல் பத்தலா எனும் சொல்லுக்கு சூனியக்காரர்கள் என்ற அர்த்தம் கொடுக்க முடியாது என்பதாகக் கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதங்களும் அதற்குறிய தெளிவுகளும்.
قَالَ بَلْ اَلْقُوْا فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى
குர்ஆன் கூறுகிறது அதற்கவர் “நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்” என்று கூறினார். (அவர்கள் எறியவே எறிந்த) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவது போல் இவருக்குத் தோன்றின.
ﻓَﺎَﻭْﺟَﺲَ ﻓِﻰْ ﻧَﻔْﺴِﻪٖ ﺧِﻴْﻔَﺔً ﻣُّﻮْﺳٰﻰ
குர்ஆன் கூறுகிறது ஆகவே மூஸா அலை அவர்கள் தன் பயத்தை உனந்தார்கள்.
قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى
குர்ஆன் கூறுகிறது (அச்சமயம் நாம் அவரை நோக்கி) “நீங்கள் பயப்படாதீர்கள்! நிச்சயமாக நீங்கள்தான் உயர்ந்தவர்” என்று கூறினோம்.
சூரா தாஹா ஆயத் 66, 67, 68
சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் பாம்புகளாகி) ஓடுவது போல் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தோன்ற செய்தனர் அப்பொழுது நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பயந்ததாகவும் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று இறைவன் கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.
இது போன்ற ஓர் சம்பவத்தை இறைவன் திர்குர்ஆனில் இன்னும் ஓர் இடத்தில் குறிப்பிட்டு கூறியுள்ளான்.
فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَـنَحْنُ الْغٰلِبُوْنَ
குர்ஆன் கூறுகிறது ஆகவே, அவர்கள் தங்களுடைய தடிகளையும், கயிறுகளையும் எறிந்து “ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாய் நாங்களே வென்றுவிட்டோம்” என்று கூறினார்கள்.
فَاَ لْقٰى مُوْسٰى عَصَاهُ فَاِذَا هِىَ تَلْقَفُ مَايَاْفِكُوْنَ
குர்ஆன் கூறுகிறது பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்து விட்டது.
சூரா ஷுஹ்ரா ஆயத் 44, 45
சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் எறிந்தார்கள் என்றும் அதன் பின்னர் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் கைதடியை எறிந்தார்கள் என்றும் மேற்கூறிய இறைவசனங்களில் இடம் பெற்றுள்ளது.
இவைகளை கூர்ந்து கவனியுங்கள். ஒரு கருத்தை தரும் இருவிதமான சம்பவங்களை பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூரும் போது சூனியக்காரர்களின் சூழ்ச்சியை கண்டு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பயந்தார்கள் என்பதாக குறிப்பிட்டு கூறுகிறான். இருப்பினும் இதே போன்ற ஓர் சம்பவத்தை இன்னும் சில இறைவசனங்களில் கூரும் போது மேற்கூறிய மேலதிக வார்த்தைகளை இறைவன் குறிப்பிட்டு கூறவில்லை. இவைகளை போன்று தான் மேற்கூறிய ஹதீஸில் இடம் பெற்றுள்ள அல் பத்தலா என்ற சொல்லுக்கு சூனியக்காரர்கள் என்ற பொருள் ஓர் இடத்தில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. மற்ற ஹதீஸில் இமாம் அவர்கள் குறிப்பிட்டு கூறவில்லை. எனவே ஓர் இடத்தில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இன்னும் ஓர் இடத்தில் குறிப்பிட்டு கூறவில்லை என்ற ஓர் காரணத்தை மட்டுமே வைத்து குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளதை மறுக்க முற்படுவது முற்றிலும் தவறு என்பதை திருக்குர்ஆன் நமக்கு தெளிவு படுத்துகிறது.
மேற்கூறிய திருக்குர்ஆன் ஆயத்துக்களை மூலமாக வைத்து சில கேள்விகள்.
கேள்வி :- சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் பாம்புகளாகி) ஓடுவது போல் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தோன்ற செய்தனர் என்றால் எப்படி?
கேள்வி :- சூனியக்காரர்கள் செய்த செயலில் இருந்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பயமுறுத்த செய்தது எது?
கேள்வி :- சூனியக்காரர்களின் அந்த செயலுக்கு எங்கிருந்து சக்தி கிடைத்தது? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
ஷைத்தான் தீய சக்திகளை கொண்டு சூனியக்காரர்கள் சூழ்ச்சி செய்து மக்களுக்கு தீங்கு ஏற்படுத்துகின்றனர். அவைகளை மூலமாக வைத்து தான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கூட பயமுறுத்தி உள்ளனர். இதன் காரணத்தினால் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ. قَالَ مُعَاوِيَةُ : بَلَغَنِي أَنَّ الْبَطَلَةَ : السَّحَرَةُ
அல்பகரா அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஆவியா பின் சல்லாம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸில் உள்ள அல் பத்தலா எனும் சொல்லுக்கு சூனியக்காரர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதாகக் கூறிய காரணம் சூனியம் என்பது ஷைத்தானின் சூழ்ச்சி என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சூனியக்காரர்கள் ஷைத்தானை கொண்டு சூழ்ச்சி செய்கிறார்கள். அல் பகரா சூரத்தை ஓதுவதன் மூலம் அந்த ஷைத்தான்களை செயல் படவிடாமல் நெருங்க விடாமல் அதை விரட்டி அடிக்க முடியும். அச்சமயம் சூனியக்காரர்களின் சூழ்ச்சி செயலிழந்து விடும் என்பதையெல்லாம் காரணமாக வைத்து தான் முஆவியா பின் சல்மான் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அல் பத்தலா என்ற சொல்லுக்கு சூனியக்காரர்கள் என்று பொருள் படும் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்களே அன்றி வேறில்லை.
அல் பகரா சூராவை ஓதுவதன் மூலம் ஷைத்தானை நெருங்க விடாமல் அதை விரட்டி அடிக்க முடியுமா? என்ற கேள்விக்கு ஹதீஸ்கள் ஆதாரமாக அமைகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்கள் வீடுகளை (தொழுகை ஓதல் நடைபெறாத)சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். அல் பகரா எனும் (இரண்டாவது) சூரா ஓதப்படும் வீடுகளிலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1430 திர்மிதி 2802 அஹ்மது 7487
عَنْ أَبِي مَسْعُودٍ البَدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல் பகரா சூராவின் இறுதி இரண்டு (2:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும்.
அறிவிப்பவர் :- அபூ மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 4008 முஸ்லிம் 807
عَنْ النُّعْمَانِ بْنِ بَشِير رَضِيَ اللَّهُ عَنْه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال إِنَّ اللَّهَكِتَابًا قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ بِأَلْفَيْ عَامٍ أَنْزَلَ مِنْهُ آيَتَيْنِ خَتَمَ بِهِمَا سُورَةَ الْبَقَرَةِ وَلَا يُقْرَآنِ فِي دَارٍ ثَلَاثَ لَيَالٍ فَيَقْرَبُهَا شَيْطَانٌ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் வானம் பூமியை படைப்பதற்கு ஆயிரம் வருடத்திற்கு முன்பு ஒரு கிதாபை எழுதினான். அந்த கிதாபிருந்து இரண்டு இறைவசனத்தை இறக்கி சூரத்துல் பகராவை முடித்திருக்கிறான். எந்த வீட்டில் மூன்று இரவுகள் (சூரா பகரா) ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் ஷைத்தான் நெருங்க மாட்டான்.
அறிவிப்பவர் :- நுஹ்மான் இப்னு பஸீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2882 தாரமி 3253
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَصَّ الْحَدِيثَ فَقَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ لَنْ يَزَالَ مَعَكَ مِنَ اللَّهِ حَافِظٌ وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَكَ وَهْوَ كَذُوبٌ ذَاكَ شَيْطَانٌ
ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த உணவுப் பொருளை அள்ளத் துவங்கினான். உடனே நான் அவனைப் பிடித்துக் கொண்டேன். “உன்னை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்) இறுதியில் அவன், “நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது (சூரா பகராவிலுள்ள) ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். இவைகளை பற்றி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொன்ன போது, “அவன் பொய்யனாயிருந்தும் உம்மிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்” என்று (உறுதியாக) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 3275
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِكُلِّ شَيْءٍ سَنَامًا وَإِنَّ سَنَامَ الْقُرْآنِ سُورَةُ الْبَقَرَةِ مَنْ قَرَأَهَا فِي بَيْتِهِ لَيْلًا لَمْ يَدْخُلِ الشَّيْطَانُ بَيْتَهُ ثَلَاثَ لَيَالٍ وَمَنْ قَرَأَهَا نَهَارًا لَمْ يَدْخُلِ الشَّيْطَانُ بَيْتَهُ ثَلَاثَةَ أَيَّامٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் ஒரு காலுக்கு மேல் கால் போட்டு இசை கேட்பார் அவர் குர்ஆனை கேட்பதை விட்டு விடுவார் எந்த வீட்டில் இரவு நேரங்களில் சூரா பகராவை ஓதுகிறார்களோ எந்த வீட்டில் பகல் நேரங்களில் சூரா பகராவை ஓதுகிறார்களோ அந்த வீட்டிற்கு ஷைத்தான் மூன்று நாட்கள் நுழைய மாட்டான்.
அறிவிப்பவர் :- ஷஹ்ல் பின் ஷயத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு ஹிப்பான் 780
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ إِنَّ لِكُلِّ شَيْءٍ سَنَامًا وَسَنَامُ الْقُرْآنِ سُورَةُ الْبَقَرَةِ وَإِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ سُورَةَ الْبَقَرَةِ تُقْرَأُ خَرَجَ مِنَ الْبَيْتِ الَّذِي يُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் ஒரு காலுக்கு மேல் கால் போட்டு இசை கேட்பார் அவர் குர்ஆனை கேட்பதை விட்டு விடுவார் எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அந்த வீட்டை விட்டு ஷைதான் விரண்டோடுகிறான்.
அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரமி 3258
மேற்கூறிய ஹதீஸ்கள் அனைத்தையும் கூர்ந்து கவனியுங்கள். ஷைத்தானை நெருங்க விடாமல் அதை விரட்டி அடிக்கும் முக்கியமான மூல மந்திராக சூரத்துல் பகரா அமைந்திருப்பதை நாம்மால் காணமுடிகிறது.
எனவே ஷைத்தானுக்கு வழிபட்டு அவைகளை மூலமாக வைத்து சூழ்ச்சி செய்பவர்களுக்கு சூனியக்காரர்கள் எனக் கூறப்படும். இதனால் தான் சூனியத்தின் மூலமும் அது அல்லாதவர்கள் மூலமும் ஒருவருக்கு தீங்கு ஏற்பட்டு விட்டால். அவர் முன்னிலையில் வைத்து சூரத்துல் பகரா அத்தியாயத்தை ஓதுவதன் மூலம் அந்த ஷைத்தானை செயல் படவிடாமல் அதாவது முழுமையாக தீங்கு ஏற்படுத்த விடாமல் அவைகளை விரட்டி அடிக்க முடியும். அச்சமயம் சூனியக்காரர்களின் சூழ்ச்சி செயலிழந்து விடும் என்பதைக் காரணமாக வைத்து தான் அல் பத்தலா என்ற சொல்லுக்கு முஆவியா பின் சல்மான் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சூனியக்காரர்கள் என்று பொருள் படும் என்ற கருத்தை திருக்குர்ஆன் ஹதீஸிகளின் அடிப்படையில் கூறினார்களே தவிர எக்காலமும் அதற்கு மாற்றமாக கூறவில்லை என்ற கருத்தை நாம் சாதாரணமாக புரிந்து கொள்ள முடிகிறது.
♦️குறிப்பு :- அன்புக்குரிய ஹதீஸ் மறுப்பாளர்களே! கொள்கையில் உள்ளவர்களே! உங்கள் தலைவர் (PJ) மற்றும் அது அல்லாத அமைப்புக்களின் மீதுள்ள பற்றை ஒரு பக்கம் வைத்து விட்டு. நாம் திருக்குர்ஆன் அடிப்படையில் மேற்கூறிய அம்சங்களை நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். தவறிப் போனவர்களின் தவறான வழியிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். தன் மனோ இச்சை பிரகாரம் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பதை விட்டும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் போதுமானவனாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்