சூனியக்கார்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்றால் சூனியம் இல்லை அதன் மூலம் எந்த தீங்கும் ஏற்படாது என்று அர்த்தமா?

196

சூனியக்கார்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்றால் சூனியம் இல்லை அதன் மூலம் எந்த தீங்கும் ஏற்படாது என்று அர்த்தமா?

 

📚 :- திருக்குர்ஆன் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

وَاَلْقِ مَا فِىْ يَمِيْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا اِنَّمَا صَنَعُوْا كَيْدُ سٰحِرٍ وَلَا يُفْلِحُ السّٰحِرُ حَيْثُ اَتٰى‏

 

குர்ஆன் கூறுகிறது “இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டார்கள் ” (என்றும் கூறினோம்).

சூரா தாஹா ஆயத் 69

 

♦️சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்பதாக இறைவன் கூறிவிட்ட காரணத்தால் சூனியம் என்ற ஒன்றில்லை. அதன் மூலம் எந்த ஒரு தீங்கும் அதனால் ஏற்படுத்த முடியாது என்பதாகக் கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதங்கள் முற்றிலும் தவறானவையாகும். காரணம் மேற்கூறிய இறைவசனத்தை போன்று இன்னும் சில இறைவசனங்கள் வேரு விதமாகவும் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. அவை பின்வருமாறு

 

ﻓَﻤَﻦْ ﺍَﻇْﻠَﻢُ ﻣِﻤَّﻦِ ﺍﻓْﺘَـﺮٰﻯ ﻋَﻠَﻰ ﺍﻟﻠّٰﻪِ ﻛَﺬِﺑًﺎ ﺍَﻭْ ﻛَﺬَّﺏَ ﺑِﺎٰﻳٰﺘِﻪٖ ؕ ﺍِﻧَّﻪٗ ﻟَﺎ ﻳُﻔْﻠِﺢُ ﺍﻟْﻤُﺠْﺮِﻣُﻮْﻥَ

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் இவர்களை விட மிக அநியாயம் செய்பவர் யார்? (குற்றவாளிகள்) பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.

சூரா யூனுஸ் ஆயத் 17

 

ﻭَﻣَﻦْ ﺍَﻇْﻠَﻢُ ﻣِﻤَّﻦِ ﺍﻓْﺘَﺮٰﻯ ﻋَﻠَﻰ ﺍﻟﻠّٰﻪِ ﻛَﺬِﺑًﺎ ﺍَﻭْ ﻛَﺬَّﺏَ ﺑِﺎٰﻳٰﺘِﻪٖؕ ﺍِﻧَّﻪٗ ﻟَﺎ ﻳُﻔْﻠِﺢُ ﺍﻟﻈّٰﻠِﻤُﻮْﻥَ

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட , அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக் காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள் .

சூரா அன்ஆம் ஆயத் 21

 

الَّذِيْنَ تَمَـنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ يَقُوْلُوْنَ وَيْكَاَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَوْلَاۤ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيْكَاَنَّهٗ لَا يُفْلِحُ الْكٰفِرُوْنَ

 

குர்ஆன் கூறுகிறது முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் வெற்றியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

சூரா கஸஸ் ஆயத் 82

 

♦️ஆரம்ப வசனத்தில் குற்றவாளிகள் அதாவது பாவம் செய்தவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்றும், அடுத்த வசனத்தில் அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்றும், அதற்கடுத்த வசனத்தில் காஃபிர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்றும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

 

♦️சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பதைக் காரணமாக வைத்து சூனியம் இல்லை அதன் மூலம் எந்தவித தீங்கும் ஏற்பட மாட்டாது என்று அர்த்தம் என்றால்! குற்றவாளிகள் பாவம் செய்தார்களும், அநியாயக்காரர்களும், காஃபிர்களும் வெற்றி பெற மாட்டார்கள் என்பதாக வேறு சில ஆயத்துக்களில் இடம் பெற்றுள்ளதே! அப்படியென்றால் குற்றவாளிகள் பாவம் செய்தார்கள் அநியாயக்காரர்கள் காஃபிர்கள் என்று யாரும் இல்லை என்பதாக அர்த்தமா? அல்லது அவர்களால் எந்தவித தீங்கும் ஏற்படுத்த முடியாது என்று அர்த்தமா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பதாக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏன் கூறினார்கள் அதன் காரணம் என்ன?

 

فَلَمَّا جَآءَهُمُ الْحَـقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِيْنٌ‏

 

குர்ஆன் கூறுகிறது நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது, “நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும்” என்று கூறினார்கள்.

சூரா யூனுஸ் ஆயத் 76

 

قَالَ مُوْسٰٓى اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ اَسِحْرٌ هٰذَا وَلَا يُفْلِحُ السَّاحِرُوْنَ

 

குர்ஆன் கூறுகிறது அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.

சூரா யூனுஸ் ஆயத் 77

 

♦️இறைவனிடமிருந்து சத்தியம் அதாவது (அத்தாட்சி) வந்த போது அதை காஃபிர்கள் சூனியம் என்பதாகக்கூறி அவைகளை மறுத்து விட்டனர். அச்சமயம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நிச்சயமாக சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பதாகக் கூறினார்கள். இங்கு கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இது போன்ற ஓர் சம்பவத்தை இறைவன் இன்னும் இறைவசனத்தில் குறிப்பிட்டுள்ளான். அவை பின்வருமாறு 

 

فَلَمَّا جَآءَهُمْ مُّوْسٰى بِاٰيٰتِنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّفْتَـرًى وَمَا سَمِعْنَا بِهٰذَا فِىْۤ اٰبَآٮِٕنَا الْاَوَّلِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.

சூரா கஸஸ் ஆயத் 36

 

وَقَالَ مُوْسٰى رَبِّىْۤ اَعْلَمُ بِمَنْ جَآءَ بِالْهُدٰى مِنْ عِنْدِهٖ وَمَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது (அப்போது மூஸா) கூறினார் “அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

சூரா கஸஸ் ஆயத் 37

 

♦️காஃபிர்களிடம் (சத்தியம்) அத்தாட்சி வந்த போது அவைகளை மறுக்கும் நோக்கில் சூனியம் என்ற வார்த்தையை தான் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் காரணமாகத்தான் அந்த காஃபிர்களை நோக்கி நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பதாக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிய கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️இங்கு கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறைவனிடமிருந்து சத்தியம் அதாவது அத்தாட்சி வந்த போது அவைகளை காஃபிர்கள் தெழிவான சூனியம். இட்டுக்கட்டப்பட்ட சூனியம் என்பதாகக் கூறியவாறு சத்தியத்தையும் அத்தாட்சிகளையும் மறுத்த காரணத்தினால் தான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காஃபிர்களை நோக்கி இதுவா சூனியம்? நிச்சயமாக சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்றும். மற்ற ஆயத்தில் இவைகளை சூனியம் என்பதாகக்கூறிய அத்தகைய அநியாயக்காரர்களும் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள் என்ற இருவிதமான கருத்தையும் இறைவன் திருக்குர்ஆனில் கூறியுள்ளதை நம்மால் காண முடிகிறது.

 

♦️குறிப்பு :- சூனியக்கார்களும் அநியாயக்காரர்களும் வெற்றி பெற மாட்டார்கள் என்பதாக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிய காரணத்தால் சூனியக்காரர்கள் அநியாயக்காரர்கள் என்று யாருமில்லை. அவர்களால் எந்த தீங்கும் ஏற்படுத்த முடியாது என்ற அர்த்தத்தில் அல்ல. இறைவன் நாடி இவ்வுலகில் ஏதோ ஓர் வகையில் அவர்கள் வெற்றி பெற்றாலும். மறுவுலகில் இவர்களால் வெற்றி பெற முடியாது. வெற்றி பெற மாட்டார்கள் என்ற அர்த்தத்தின் அடிப்படையில் தான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்களே அன்றி வேறில்லை.

 

அநியாயக்காரர்களும் காஃபிர்களும் சூனியக்காரர்களும் வெற்றி பெற மாட்டார்கள் என்றால் அவர்களால் எந்த ஒரு தீங்கும் ஏற்படாது அல்லது ஏற்படுத்த முடியாது என்பதாக அர்த்தமா?

 

ﻭَﻗَﺎﻝَ ﻣُﻮْﺳٰﻰ ﻳٰﻘَﻮْﻡِ ﺍِﻥْ ﻛُﻨْﺘُﻢْ ﺍٰﻣَﻨْﺘُﻢْ ﺑِﺎﻟﻠّٰﻪِ ﻓَﻌَﻠَﻴْﻪِ ﺗَﻮَﻛَّﻠُﻮْﺍۤ ﺍِﻥْ ﻛُﻨْﺘُﻢْ ﻣُّﺴْﻠِﻤِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது மூஸா (தம் சமூகத்தவரிடம்) “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்தால், நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே அவனையேன நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்.

சூரா யூனுஸ் ஆயத் 84

 

ﻓَﻘَﺎﻟُﻮْﺍ ﻋَﻠَﻰ ﺍﻟﻠّٰﻪِ ﺗَﻮَﻛَّﻠْﻨَﺎ ۚ ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗَﺠْﻌَﻠْﻨَﺎ ﻓِﺘْﻨَﺔً ﻟِّـﻠْﻘَﻮْﻡِ ﺍﻟﻈّٰﻠِﻤِﻴْﻦَۙ

 

குர்ஆன் கூறுகிறது (அதற்கு) அவர்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்

சூரா யூனுஸ் ஆயத் 85

 

ﻭَﻧَﺠِّﻨَﺎ ﺑِﺮَﺣْﻤَﺘِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜٰﻔِﺮِﻳْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது (எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்ளான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக (என்றும் பிரார்த்தித்தார்கள்)

சூரா யூனுஸ் ஆயத் 86

 

♦️அநியாயக்காரர்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! என்றும் காஃபிர்களிடமிருந்து எங்களை பாதுகாப்பாயாக என்றும் ஈமான் கொண்டவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு தெழிவு படுத்துகிறது. மேலும் அநியாயக்காரர்கள் என்பதாக யாருமில்லை அவர்களால் எந்த தீங்கும் ஏற்படுத்த முடியாது என்றிருந்தால் ஈமான் கொண்டவர்கள் இவ்வாறான துஆ பிராத்தனையை செய்திருப்பார்களா? அல்லது அவர்கள் செய்த அந்த ஏகத்துவ பிரார்த்தனையை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டு கூருவானா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். மேலும்

 

وَاِذْ نَجَّيْنٰکُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ يُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَآءَكُمْ وَفِىْ ذٰلِكُمْ بَلَاۤءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ‏

 

குர்ஆன் கூறுகிறது அன்றி உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.

சூரா பகரா ஆயத் 49

 

ﻓَﻘُﻄِﻊَ ﺩَﺍﺑِﺮُ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﻇَﻠَﻤُﻮْﺍ ؕ ﻭَﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠّٰﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌٰﻠَﻤِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது எனவே, (அநியாயம்) அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

சூரா அன்ஆம் ஆயத் 45

 

♦️முன்சென்ற சமுதாயத்தவர்களில் அதிகமானவர்கள் அநியாயமும் அக்ரமமும் செய்து கொண்டிருந்தார்கள் என்றும் அந்த அநியாயக்காரர்களை இறைவன் அடியோடு அழித்துள்ளான் என்ற கருத்தையும் மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது. மேலும்

 

زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوا الْحَيٰوةُ الدُّنْيَا وَيَسْخَرُوْنَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا ۘ وَالَّذِيْنَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏

 

குர்ஆன் கூறுகிறது நிராகரிப்போருக்கு (காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.

சூரா பகரா ஆயத் 212

 

♦️இறைவன் காஃபிர்களுக்கும் அநியாயக்காரர்களுக்கும் பாவிகளுக்கும் அழிந்து போகக்கூடிய இவ்வுலகை அழகாக்கி கொடுத்துள்ளான் என்றும் அவைகளை மூலமாக வைத்து அவர்கள் ஈமான் கொண்டவர்களை ஏளனம் செய்கிறார்கள். தீங்கு ஏற்படுத்துகிறார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது. மேலும்

 

ﻓَﻠَﻤَّﺎ ﺟَﺎٓﺀَ ﺍﻟﺴَّﺤَﺮَﺓُ ﻗَﺎﻟُﻮْﺍ ﻟِﻔِﺮْﻋَﻮْﻥَ ﺍَٮِٕﻦَّ ﻟَـﻨَﺎ ﻟَﺎَﺟْﺮًﺍ ﺍِﻥْ ﻛُﻨَّﺎ ﻧَﺤْﻦُ ﺍﻟْﻐٰﻠِﺒِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது ஆகவே சூனியக்காரர்கள் வந்த உடன் அவர்கள் பிர்அவ்னை நோக்கி தின்னமாக நாங்கள் (மூஸாவை) வென்று விட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்கும் அல்லவா என்று கேட்டார்கள்.

சூரா ஷுஹ்ரா ஆயத் 41

 

ﻗَﺎﻝَ ﻧَﻌَﻢْ ﻭَﺍِﻧَّﻜُﻢْ ﺍِﺫًﺍ ﻟَّﻤِﻦَ ﺍﻟْﻤُﻘَﺮَّﺑِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்” என்று அவன் கூறினான்.

சூரா ஷுஹ்ரா ஆயத் 42

 

♦️நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாங்கள் வென்று விடுவோம் என்பதாக சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னை நோக்கி உறுதியாக கூறியுள்ளார்கள். காரணம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் போட்டி போடுவதற்கு முன்னர் பல போட்டிகளில் சூனியக்காரர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றும் அதனை காரணமாக வைத்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாங்கள் சர்வ சாதாரணமாக வென்று விடுவோம் என்பதாக சூனியக்காரர்கள் உறுதியாக கூறினார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️குறிப்பு :- மேற்கூறிய இறைவசனங்களின் அர்த்தமாகிறது குற்றவாளிகள், பாவிகள், அநியாயக்காரர்கள், காஃபிர்கள், சூனியக்காரர்கள் அனைவரும் இறைவனின் நாட்டப்படி இவ்வுலகில் வெற்றி பெற்றாலும் (மறுவுலகில்) மறுமை நாளில் இவர்களால் வெற்றி பெற முடியாது. வெற்றி பெறவும் மாட்டார்கள் என்ற அர்த்தத்தின் அடிப்படையில் தான் இறைவன் கூறியுள்ளானே தவிர இவ்வுலகில் அவர்களால் வெற்றி பெற முடியாது என்ற அர்த்தத்தின் அடிப்படையில் இறைவன் கூறவில்லை. இவ்வாறு கூற முற்படுவது திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.