சூனியத்தின் மூலம் முஹம்மத் ﷺ அவர்களுக்கு ஏட்பட்ட தாக்கம் என்ன? குர்ஆன் கூறும் தெளிவு

422

சூனியத்தின் மூலம் முஹம்மத் ﷺ அவர்களுக்கு ஏட்பட்ட தாக்கம் என்ன?

 

A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி ✍️)
நூல் 📚 :- [திருக்குர்ஆனுடைய பார்வையில் சூனியமும் சூனியத்தால் பாதிக்கப்பட்டோர்களும்]

 

سُحِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا يَفْعَلُهُ

 

ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தது அதாவது ஒரு செயலை செய்யாமல் அதை செய்தது போண்று அவர்களுக்கு மாயத்தோற்றம் சூனியத்தின் மூலம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 3268, 5763, 5766, முஸ்லிம் 2189 இப்னு மாஜா 3545 அஹ்மது 24300

 

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُحِرَ حَتَّى كَانَ يَرَى أَنَّهُ يَأْتِي النِّسَاءَ وَلاَ يَأْتِيهِنَّ

 

(மாயத்தோற்றம் ஏற்படுத்திய அந்த செயல் என்ன என்பதை அடுத்த ஹதீஸ்களை மூலமாக வைத்து பார்க்கும் போது) தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள் அதாவது மனைவியுடன் ஒன்று சேராமல் ஒன்று சேர்ந்ததாக அவர்களுக்கு மாயத்தோற்றம் சூனியத்தின் மூலம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 5765, 6063 அஹ்மது 24650

 

மேற்கூறியது போன்ற ஒரு செயல் பற்றி திருக்குர்ஆன் கூறுவதை கூர்ந்து கவனியுங்கள்

 

ﻗَﺎﻝَ ﺑَﻞْ ﺍَﻟْﻘُﻮْﺍۚ ﻓَﺎِﺫَﺍ ﺣِﺒَﺎﻟُﻬُﻢْ ﻭَﻋِﺼِﻴُّﻬُﻢْ ﻳُﺨَﻴَّﻞُ ﺍِﻟَﻴْﻪِ ﻣِﻦْ ﺳِﺤْﺮِﻫِﻢْ ﺍَﻧَّﻬَﺎ ﺗَﺴْﻌٰﻰ :- ﻓَﺎَﻭْﺟَﺲَ ﻓِﻰْ ﻧَﻔْﺴِﻪٖ ﺧِﻴْﻔَﺔً ﻣُّﻮْﺳٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது அதற்கவர் அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள் என்று (மூஸா) கூறினார். (சூனியக்காரர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது (மாயத்தோற்றம் ஏற்பட்டது) அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் (பயம்) கொண்டார்.

சூரா தாஹா ஆயத் 66, 67

 

சூனியம் எனும் ஷைத்தானின் சூழ்ச்சியை கொண்டு சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் நெளிவது போன்று நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மாயத்தோற்றம் ஏற்படுத்தினார்கள். அதன் காரணமாக அவர்கள் அச்சப்பட்டார்கள் பயப்பட்டார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துவதை போல லபீத் பின் அஃஸம் என்ற சூனியக்காரன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களுக்கு சூனியம் செய்த காரணத்தினால். அவர்கள் ஒரு செயலை செய்யாமல் அதை செய்தது போண்று அதாவது மனைவியுடன் ஒன்று சேராமல் ஒன்று சேர்ந்ததாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாயத்தோற்றம் சூனியத்தின் மூலம் ஏற்பட்டது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️குறிப்பு :- சூனியம் என்பது ஷைத்தானின் சூழ்ச்சி வேலையாகும். அவைகளை கொண்டு கயிறுகளையும் தடிகலையும் நெளிவது போண்று மாயத்தோற்றம் ஷைத்தான்களால் ஏற்படுத்த முடியும். மேலும் ஒரு செயலை செய்யாமல் அதை செய்தது போண்று அதாவது மனைவியுடன் ஒன்று சேராமல் ஒன்று சேர்ந்தது போன்ற மாயத்தோற்றத்தையும் ஷைத்தான்களால் ஏற்படுத்த முடியும் என்பதை மேற்கூறிய திருக்குர்ஆன் இறைவசனங்களும் சூனியம் சம்பந்தமாக இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

ஒரு செயலை செய்து விட்டு அதை செய்யாதது போன்ற ஓர் மாயத்தோற்றம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் யார்?

 

وَدَخَلَ الْمَدِيْنَةَ عَلٰى حِيْنِ غَفْلَةٍ مِّنْ اَهْلِهَا فَوَجَدَ فِيْهَا رَجُلَيْنِ يَقْتَتِلٰنِ هٰذَا مِنْ شِيْعَتِهٖ وَهٰذَا مِنْ عَدُوِّهٖ فَاسْتَغَاثَهُ الَّذِىْ مِنْ شِيْعَتِهٖ عَلَى الَّذِىْ مِنْ عَدُوِّهٖۙ فَوَكَزَهٗ مُوْسٰى فَقَضٰى عَلَيْهِ قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّيْطٰنِ اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِيْنٌ‏

 

குர்ஆன் கூறுகிறது (மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார். ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடத்தில் கோரிக் கொண்டான். (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தி அவன் காரியத்தை முடித்து விட்டார். (அதனால் அவன் இறந்து விட்டான். இதை அறிந்த மூஸா) “இது ஷைத்தானுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான எதிரி” எனக் கூறினார்.

சூரா கஸஸ் ஆயத்15

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு செயலை செய்யாமல் அதை செய்தது போண்ற மாயத்தோற்றம் ஏற்பட்டதால் அவர்களுக்கு மனநோய் (பைத்தியம்) என்பதாகக்கூறி பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்களே! மேற்கூறிய இறைவசனத்தை கூர்ந்து கவனியுங்கள்.

 

கிப்திகளின் இனத்தைச் சேர்ந்த பகைவனை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொலை செய்து விட்டு அதாவது ஒரு செயலை செய்து விட்டு (இதனை நான் செய்யவில்லை) இது ஷைத்தானுடைய சூழ்ச்சி வேலை என்பதாக அவர்களுடைய மனதில் மாயத்தோற்றம் ஏற்பட்டுள்ளதை காரணமாக வைத்து. நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மனநோய் (பைத்தியம்) அவர் ஒரு செயலைச் செய்து விட்டு அதனை செய்யவில்லை என்று பொய் சொல்கிறார் என்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றன. எனவே நாம் அவைகளை மறுக்க வேண்டும் என்பதாக ஹதீஸ் மறுப்பாளர்கள் கூறுவார்களா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

உதாரணமாக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு செயலை செய்து விட்டு அதனை நான் செய்ய வில்லை என்று கூறுகிறார்களே! இது போன்று தான் வஹி விடயத்திலும் அது அல்லாத விடயங்களிலும் (இவர்) இவ்வாறுதான் கூறுவார் என்பதாக் கூறியவாறு ஒரு கூட்டம் மேற்கூறிய இறைவசனத்தை மறுக்க முற்பட்டால் அவர்கள் உன்மையான ஏகத்துவ வாதிகளாக இருக்க முடியுமா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். அதே போன்று தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு செயலை செய்யாமல் அதை செய்தது போன்று அவர்களுக்கு மாயத்தோற்றம் ஏற்பட்டதை காரணமாக வைத்து அவர்கள் இது போன்று தான் வஹி விடயத்திலும் அது அல்லாத விடயங்களிலும் இவ்வாறுதான் கூறுவார் என்பதாக் கூறியவாறு ஒரு கூட்டம் மேற்கூறிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்க முற்பட்டால் அவர்கள் உன்மையான ஏகத்துவ வாதிகளாக இருக்க முடியுமா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

♦️குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு ஒரு செயலை செய்யாமல் அதை செய்தது போன்ற மாயத்தோற்றம் அதாவது மனைவியுடன் ஒன்று சேராமல் ஒன்று சேர்ந்தது போண்ற ஓர் மாயத்தோற்றமாகும். இது போன்ற மாயத்தோற்றம் மனைவியர் விடயத்தில் மாத்திரம் தான் ஏட்பட்டது. வஹி விடயத்திலோ அது அல்லாத விடயங்களிலோ இது போன்று மாயத்தோற்றம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்படவில்லை என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஒரு செயலை செய்யாமல் அதை செய்தது போண்ற மாயதோற்றம் ஏற்பட்டால் அவர் யார்?

 

ﻗَﺎﻝَ ﺑَﻞْ ﺍَﻟْﻘُﻮْﺍۚ ﻓَﺎِﺫَﺍ ﺣِﺒَﺎﻟُﻬُﻢْ ﻭَﻋِﺼِﻴُّﻬُﻢْ ﻳُﺨَﻴَّﻞُ ﺍِﻟَﻴْﻪِ ﻣِﻦْ ﺳِﺤْﺮِﻫِﻢْ ﺍَﻧَّﻬَﺎ ﺗَﺴْﻌٰﻰ :- ﻓَﺎَﻭْﺟَﺲَ ﻓِﻰْ ﻧَﻔْﺴِﻪٖ ﺧِﻴْﻔَﺔً ﻣُّﻮْﺳٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது அதற்கவர் அவ்வாறன்று! நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (சூனியக்காரர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது (மாயத்தோற்றம் ஏற்பட்டது) அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் (பயம்) கொண்டார்.

சூரா தாஹா ஆயத் 66, 67

 

சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் நெளிவது போண்று மாயதோற்றம் எவ்வாறு ஏற்படுத்தினார்கள்? உன்மையில் கயிறுகளும் தடிகளும் பாம்புகள் போன்று நெளியவில்லை என்றிருந்தால் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எதனை கண்டு பயந்தார்கள்? ஒரு செயலை செய்யாமல் அதை செய்தது போண்று மாயதோற்றம் ஏற்பட்டால் அது மனநோய் (பைத்தியம்) என்றிருந்தால் சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் உன்மையில் பாம்புகள் போன்று நெளியச் செய்யவில்லை அதாவது (சூனியக்காரர்கள் உன்மையில் அந்த செயலை செய்யவில்லை) ஆனால் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு (அதை செய்தது போண்று) நெளிவது போண்று மாயதோற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் காரணமாக வைத்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை மனநோய் (பைத்தியம்) என்று கூறலாமா? இது போன்ற ஓர் காரணத்தை வைத்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் மேற்கூறிய இறைவசனத்தை மறுப்பார்களா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

♦️ஒரு செயலை செய்யாமல் அதை செய்தது போண்று மாயத்தோற்றம் ஏற்பட்டால் அதற்கு மனநோய் (பைத்தியம்) என்பதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும். இதற்கு பகல் கணவு என்பதாகக் கூறலாம்.

 

உதாரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னர் அவர் தனிமையில் இருக்கும் போது தேர்தலில் வெற்றிபெற்றதாகவும். அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்வதாகவும். பல சிந்தனைகள் யோசனைகள் அவருடைய மனதில் ஏற்படும் அது போன்றுதான். திருமணம் முடிக்க இருக்கும் ஒருவர் திருமணம் முடிப்பதற்கு முன்னர் அவர் தனிமையில் இருக்கும் போது தன் மனைவியுடன் இவ்வாறு இருக்க வேண்டும், பிள்ளைகள் பிறந்தால் அதை இவ்வாறு இவ்வாறு தான் பராமரிக்க வேண்டும் என்பதாக பல சிந்தனைகள் யோசனைகள் அவருடைய மனதில் ஏற்படும். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இதுபோன்ற ஒரு செயல் இன்னும் நடைபெறவில்லை ஆனால் நடப்பது போன்று அவருக்கு மாயத்தோற்றம் ஏற்படுகிறது என்றால் இவர்களை பார்த்து மனநோய் (பைத்தியம்) என்று கூறலாமா? இன்னும் தெளிவான முறையில் கூறப்போனால்

 

ஒருவர் தனிமையில் இருக்கும் போது பல சிந்தனைகள் பல யோசனைகள் அவருடைய மனதில் ஏதோ ஒரு வகையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். அதாவது (ஒரு செயல் நடக்கவில்லை ஆனால் நடப்பது போன்று நமக்கு நம்முடைய மனதில் மாயத்தோற்றம் ஏற்படும். உதாரணமாக நன்பர்களுடன் விளையாடுவது போன்று. சுற்றுலா செல்வது போன்று. வெளிநாடுகளில் இருப்பது போன்று. பெரிய அளவில் தொழில் செய்வது போன்று. பல சிந்தனைகள் யோசனைகள் தனிமையில் இருக்கும் போது ஏற்படும்) இதற்கு பகல் கணவு என்பதாகக் கூறலாம். இது போன்ற சிந்தனைகள் எல்லா மனிதர்களுக்கும் பொதுவாகவே வரக்கூடிய ஒன்று தான். இதை பிடித்து கொண்டு மனநோய் (பைத்தியம்) என்று கூறினால் இந்த உலகில் இருக்கக்கூடிய எல்லா சக மனிதர்களும் மனநோயாளிகள் (பைத்தியக்கார்கள்) என்று கூறுவதற்கு சமமாகி விடும். அல்லாஹ் இதை விட்டும் எங்களை பாதுகாப்பானாக.

 

♦️குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஷைத்தான் தீன்டியதெல்லாம் ஒரு செயலை செய்யாமல் அதை செய்தது போண்று அவர்களுக்கு மாயத்தோற்றம் ஏற்பட்டது. அதாவது மனைவியுடன் ஒன்று சேராமல் ஒன்று சேர்ந்தது போண்று அவர்களுக்கு மாயத்தோற்றம் ஏற்பட்டது. இதற்கு பகல் கனவு என்பதாக கூறலாம். இந்த அளவுக்குத் தான் ஷைத்தான்களால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தீன்ட முடிந்தது. அதன் பின்னர் அந்த தீங்கிலிருந்து இறைவன் அவர்களை பாதுகாத்து விட்டான் என்ற நற்செய்தி பல ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளது. இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது சூனியம் சம்பந்தமாக இடம் பெற்றுள்ள மேற்கூறிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அனைத்தும் திருக்குர்ஆன் இறைவசனங்களுக்கு நேர்படுகிறதே தவிர. எந்த விதத்திலும் அவைகள் முறன் கிடையாது. சூனியம் சம்மந்தமான ஹதீஸ்களை மறுப்பது குர்ஆனை மறுப்பதற்கு சமம் என்ற கருத்தை ஹதீஸ் மறுப்பாளர்கள் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

 

Leave A Reply

Your email address will not be published.