சூனியத்தை நம்பினால் அவர் சுவனம் நுழைய மாட்டார் என்ற ஹதீஸின் உன்மையான விளக்கமும் அதன் தரமும்

262

சூனியத்தை நம்பினால் அவர் சுவனம் நுழைய மாட்டார் என்ற ஹதீஸின் உன்மையான விளக்கமும் அதன் தரமும்

 

📚 :- திருக்குர்ஆன் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 26833

 

சூனியத்தை உன்மை என்று நம்புபவன் (அதாவது அதை கொண்டு யார் ஈமான் கொள்கிறாறோ) அவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள் என்ற ஹதீஸை தவறாக புரிந்து கொண்ட ஹதீஸ் மறுப்பாளர்கள் சூனியம் என்ற ஒன்றில்லை அதை யாரவது நம்பினால் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் காஃபிர்கள் என்றும் அவர்களுக்கு சுவனம் நுழைய முடியாது என்றும் மக்கள் மத்தியில் தவறான வாதங்களை முன் வைத்து வருகின்றனர்.

 

இது போன்ற வாதங்கள் முற்றிலும் தவறானதாகும். காரணம் சூனியம் என்ற ஒன்று இருக்கும் என்று யாராவது நம்பினால் அவர் சுவனம் நுழைய மாட்டார் என்பதாக மேற்கூறிய ஹதீஸ் ஒருபோதும் கூறவில்லை இவ்வாறு கூருவது திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதை கீழ் காணும் இறைவசனங்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ளலாம்.

 

وَنُنَزِّلُ مِنَ الْـقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا‏

 

குர்ஆன் கூறுகிறது இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், நோய் நிவாரணையாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.

சூரா பனீ இஸ்ராயில் ஆயத் 82

 

முஃமின்களுக்கு திருக்குர்ஆன் ரஹ்மத்தாகவும் நோய் நிவாரணையாகவும் இருக்கிறது என்பதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இவைகளை (ஈமான் கொண்டால்) நம்பினால் தான் அவன் திருக்குர்ஆனுக்கு கட்டுப்பட்டவன். இல்லையென்றால் அவன் திருக்குர்ஆனை நிராகரித்தவனை போலாவான். மேலும்

 

ﻭَﻣَﺎٓ ﺍُﻧْﺰِﻝَ ﻋَﻠَﻰ ﺍﻟْﻤَﻠَـﮑَﻴْﻦِ ﺑِﺒَﺎﺑِﻞَ ﻫَﺎﺭُﻭْﺕَ ﻭَﻣَﺎﺭُﻭْﺕَؕ ﻭَﻣَﺎ ﻳُﻌَﻠِّﻤٰﻦِ ﻣِﻦْ ﺍَﺣَﺪٍ ﺣَﺘّٰﻰ ﻳَﻘُﻮْﻟَﺎۤ ﺍِﻧَّﻤَﺎ ﻧَﺤْﻦُ ﻓِﺘْﻨَﺔٌ ﻓَﻠَﺎ ﺗَﻜْﻔُﺮْؕ ﻓَﻴَﺘَﻌَﻠَّﻤُﻮْﻥَ ﻣِﻨْﻬُﻤَﺎ ﻣَﺎ ﻳُﻔَﺮِّﻗُﻮْﻥَ ﺑِﻪٖ ﺑَﻴْﻦَ ﺍﻟْﻤَﺮْﺀِ ﻭَ ﺯَﻭْﺟِﻪٖؕ

 

குர்ஆன் கூறுகிறது இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்).
ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் – னைவியிடையே
பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.

சூரா பகரா ஆயத் 102

 

ஹாரூத் மாரூத் என்ற இரு மலக்குகள் மூலம் பூமிக்கு நாமே சூனியத்தை இறக்கி வைத்தோம். மேலும் அவர்கள் இருவரும் சூனியத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள் என்பதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இவைகளை (ஈமான் கொண்டால்) சூனியத்தை நம்பினால் தான் அவன் திருக்குர்ஆனுக்கு கட்டுப்பட்டவன். இல்லையென்றால் அவன் திருக்குர்ஆனை நிராகரித்தவனை போலாவான். இதே போன்று தான் மேற்கூறிய ஹதீஸை தவறான முறையில் புறிந்து கொண்டு சூனியத்தை நம்பினால் அவர் சுவனம் நுழைய மாட்டார் என்று கூருவது திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

(ஹதீஸின் உன்மையான விளக்கம் என்னவெனில் சூனியத்தை உன்மை என்று நம்பினால்) ஈமானை குறிக்கும் அதாவது சூனியத்தின் மூலம் சுயமாக எல்லாம் செய்யலாம் என்று யாராவது ஈமான் கொண்டால் நம்பினால் (அவர் சுவனம் நுழைய மாட்டார்) என்று தான் மேற்கூறிய ஹதீஸ் தெழிவு படுத்துகிறதே தவிர சூனியம் என்ற ஒன்றில்லை. அப்படி இருப்பதாக யாராவது நம்பினால் அவர் சுவனம் நுழைய மாட்டார் என்பதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும். அது திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

சூனியத்தை நம்பினால் அவர் சுவனம் நுழைய மாட்டார் என்ற ஹதீஸின் நிலையும் அதன் தரமும்

 

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ، وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ “رواه مسند أحمد 26833

 

وفي إسناده “ضعيف” سليمان بن عتبة الدمشقي وقال صالح بن محمد روى أحاديث مناكير، وكان الهيثم بن خارجة وهشام بن عمار يوثقانه وقال أحمد ابن حنبل لا أعرفه وضعفه ابن معين وغيره “تهذيب التهذيب 4/184

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

ஆதாரம் அஹ்மது 26833

 

மேற்கூறிய ஹதீஸ் பலஹீனமானதாகும். இதில் இடம்பெற்றுள்ள சுலைமான் இப்னு உத்பா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவரை சில அறிஞர்கள் நம்பகமானவர் என்று கூறினாலும் இன்னும் சில அறிஞர்கள் இவரை குறை கூறியும் உள்ளனர்.

ஆதாரம் தஹ்தீபுத் தஹ்தீப் 4/184

 

حَدَّثَنَا أَحْمَدُ ثنا عُمَرُ ثنا يَحْيَى بْنُ بِسْطَامَ ثنا أَبُو مَعْشَرٍ الْبَرَاءُ قَالَ أَبُو مُعَاذٍ خَتَنُ بُدَيْلٍ قَالَ أَبُو حَرِيزٍ أَنَّ أَبَا بُرْدَةَ حَدَّثَهُ عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلاثَةٌ لا يَدْخُلُونَ الْجَنَّةَ مُدْمِنُ الْخَمْرِ وَقَاطِعُ الرَّحِمِ وَمُصَدِّقٌ بِالسِّحْرِ “رواه مسند أحمد 19075

 

وإسناده ضعيف” من طريق أبي حريز عن أبي بردة عن أبي موسى الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم فذكره قلت ورجال إسناده ثقات غير أبي حريز ففيه ضعف وقال أبو داود في موضع آخر ليس حديثه بشيء وقال النسائي ضعيف وقال أحمد منكر الحديث “تهذيب التهذيب 8/ 300

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிரந்தரமாக மது அருந்துபவன்,
உறவுகளைப் பேணாதவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் ஆகிய மூவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

ஆதாரம் அஹ்மது 19075

 

மேற்கூறிய ஹதீஸ் பலஹீனமானதாகும். இதில் இடம்பெற்றுள்ள அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழியாக அபூ ஹரீஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவரை பல அறிஞர்கள் பலயீனமானவர் என்று குறைகூறி உள்ளனர்.

ஆதாரம் தஹ்தீபுத் தஹ்தீப் 8/300

 

حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنِ الْأَعْمَشِ عَنْ سَعْدٍ الطَّائِيِّ عَنْ عَطِيَّةَ بْنِ سَعْدٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ الْجَنَّةَ صَاحِبُ خَمْسٍ مُدْمِن خَمْرٍ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا قَاطِعُ رَحِمٍ وَلَا كَاهِنٌ وَلَا مَنَّانٌ “رواه مسند أحمد 11107

 

وإسناده ضعيف” فيه عطية بن سعد قال الذهبي في “ديوان الضعفاء” 2843 مجمع على ضعفه” انتهى وقال ابن حبان في “المجروحين” 2/176 والسهمي في ” تاريخ جرجان ” 255 من طريق عطية بن سعد عن أبي سعيد الخدري وإسناده ضعيف” قلت ورجاله ثقات رجال البخاري غير عطية وهو العوفي وهو ضعيف “السنن الكبرى 7/ 369

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிரந்தரமாக மது அருந்திக் கொண்டிருப்பவன், சூனியத்தை நம்புபவன், உறவுகளை துண்டித்து வாழ்பவன், குறிபார்ப்பவன், கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன் இந்த ஐவரும் சுவனம் நுழைய மாட்டார்கள்.

ஆதாரம் அஹ்மது 11107

 

மேற்கூறிய ஹதீஸ் பலஹீனமானதாகும். இதில் இடம்பெற்றுள்ள அதிய்யா பின் ஸஅத் என்பவர் இடம் பெறுகிறார் இவரை பல அறிஞ்சர்கள் பலயீனமானவர் என்பதாகக் குறைகூறி உள்ளனர்.

ஆதாரம் அஸ்ஸுனன் அல் குப்ரா 7/369

 

♦️குறிப்பு :- சூனியம் என்பது ஷைத்தானுடைய வேலையாகும். இறைவன் நாடினால் அதன் மூலம் தீங்கு ஏற்படுத்த முடியும். அதை கொண்டு சுயமாக எல்லாம் செய்யலாம் என்று அவநம்பிக்கை அதாவது ஈமான் கொல்லக்கூடாது என்ற கருத்தையே மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது. மேலும் மேற்கூறிய ஹதீஸ் சூனியம் என்ற ஒன்றில்லை என்பதாகக் கூறவில்லை. சூனியம் இருக்கிறது என்று நம்பினால் அவர் சுவனம் நுழைய மாட்டார் என்பதாகவும் கூறவில்லை. இன்னும் தெழிவான முறையில் கூறப்போனால் மேற்கூறிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அல்ல. பலயீனமான ஹதீஸ்களாகும். இது போன்ற பலயீனமான ஹதீஸ்களை முன் வைத்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களளை மறுக்க முற்படுவது முற்றிலும் தவறு என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.