சூனியம் உன்மை என்றால் அதனைக் கொண்டு ஆட்சியாளர்களை தன் எதிரிகளை கொலை செய்யலாமா?
சூனியம் உன்மை என்றால் அதனைக் கொண்டு ஆட்சியாளர்களை தன் எதிரிகளை கொலை செய்யலாமா?
📚 :- திருக்குர்ஆன் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
وَمَاهُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ
குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வின் கட்டளையின்றி அதாவது (நாட்டமின்றி சூனியத்தின்) மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
சூரா பகரா ஆயத் 102
சூனியத்தின் மூலம் தீங்கு ஏற்படுத்த முடியாது என்றால் எந்த விதத்திலும் முடியாது என்று அர்த்தம் அல்ல. கீழ் கானும் இறைவசனத்தை கூர்ந்து கவனியுங்கள்.
وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا
குர்ஆன் கூறுகிறது நிலத்திலும், நீரிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிருவதில்லை.
சூரா அன்ஆம் ஆயத் 59
எந்தவொரு இலையும் உதிருவதில்லை என்றால் எந்த விதத்திலும் இலைகள் உதிராது கீழே விழாது என்று அர்த்தம் கொள்ளலாமா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியத்தின் மூலம் ஒருவருக்கும் தீங்கிழைத்திட முடியாது. அவன் நாடினால் முடியும். அதே போன்று தான் அல்லாஹ்வின் நாட்டம் அனுமதி இன்றி ஒரு இலைகூட கீழே விழாது. அவன் நாடினால் அவைகள் கீழே விழும் என்பதையே மேற்கூறிய இரு இறைவசங்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.
சற்று சிந்தித்துப் பாருங்கள். ஷைத்தான் வழிகெடுக்கவும் தீங்கு ஏற்படுத்தவும் அல்லாஹ் நாடுவானா? என்ற கேள்விக்குறிய பதில்களை திருக்குர்ஆனில் அதிகம் காணமுடியும். இதுபற்றி முன்பும் கூறப்பட்டுள்ளது. மீண்டும் அவைகளை ஞாபகம் ஊட்டுகிறேன். இப்லீஸ் எனும் ஷைத்தான் நம்முடைய பெற்றோர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சுவனத்தில் வைத்து உணர்வு ரீதியாக தீங்கு ஏற்படுத்தி வழிதவறச் செய்துள்ளான். இந்த தீங்கை இப்லீஸ் எனும் ஷைத்தான் அல்லாஹ்வின் நாட்டமின்றி செய்திருக்க முடியுமா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
சூனியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் ஆற்றல் இருக்கும் என்றால் சூனியத்தின் மூலம் ஆட்சியாளர்களை எதிரிகளை கொலை செய்து காட்டுங்கள்? தீங்கு ஏற்படுத்தி காட்டுங்கள் என்று கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு நம் தரப்பிலிருந்து சில கேள்விகளை கேட்க ஆசைப்படுகிறோம். அவை பின்வருமாறு
1) கேள்வி :- நவீன ஆயுதங்கள் துப்பாக்கிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் ஆற்றல் இருக்கும் என்றால்; அந்த ஆயுதங்கள் மூலம் ஆட்சியாரை எதிரிகளை கொலை செய்து காட்டுங்கள் பார்ப்போம்?
2) கேள்வி :- உமக்கு வீரம் இருக்கும் என்றால் உன்னிடம் கூர்மையான கத்தி இருக்கும் என்றால்! உன் வீரத்தை கொண்டும், உன்னிடம் உள்ள கூர்மையான கத்தியை கொண்டும் உன் ஆட்சியாரை எதிரிகளை கொலை செய்து காட்டுங்கள் பார்ப்போம்?
3) கேள்வி :- உன் ஆட்சி அதிகாரத்திற்கு ஓர் பவர் இருக்கும் என்றால் அந்த ஆட்சி அதிகாரத்தை கொண்டு ஓர் சமூகத்தை உன் எதிரிகளை ஒளித்துக் காட்டுங்கள் பார்ப்போம்?
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! மேற்கூறிய கேள்விகளை கூர்ந்து கவனியுங்கள். நவீன ஆயுதங்களுக்கு சக்தி உண்டு, கூர்மையான கத்திக்கு தீங்கு ஏற்படுத்தும் ஆற்றில் உண்டு, ஆட்சி அதிகாரத்திற்கு பவர் உண்டு, இருப்பினும் அல்லாஹ் நாடினால் தான் அவைகளை கொண்டு தீங்கு ஏற்படுத்த முடியும். அவனின் நாட்டம் இல்லை என்றால் எந்த விதத்திலும் தீங்கு ஏற்படுத்த முடியாது. அது போன்று தான் சூனியத்தின் மூலம் ஷைத்தான்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. எனினும் அல்லாஹ் நாடினால் தான் அவைகளால் தீங்கு ஏற்படுத்த முடியும். அவனின் நாட்டம் இல்லை என்றால் எந்த விதத்திலும் தீங்கும் ஏற்படுத்த முடியாது. இதுவே அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்களின் ஆழமான நம்பிக்கையாகும்.
♦️குறிப்பு :- ஃபிர்அவ்ன், நம்ரூத், அபூ ஜஹில், உத்பா போன்றவர்களை பற்றி திருக்குர்ஆன் ஞாபகம் ஊட்டுகிறது. அவர்களிடம் கூர்மையான கத்திகள் இன்னும் பல ஆயுதங்கள், பலமான அடியாட்கள், சூழ்ச்சி செய்யும் சூனியக்காரர்கள், ஆட்சி அதிகாரங்கள். அனைத்தும் இருந்தும் அவர்களால் அவர்களின் எதிரிகாளான நபிமார்கள் நல்லடியார்களை கொலை செய்ய முடியவில்லை, முழுமையாக தீங்கு ஏற்படுத்த முடியவில்லை. இதில் முஃமின்களுக்கு நிறைய படிப்பினை உள்ளது. நெருப்புக் குழியில் ஒருவர் விழுந்து விட்டால் அவரை நெருப்பு தீண்டும். ஆனால் நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக் குழியில் விழுந்த போது அது அவர்களுக்கு தீண்டவில்லை. காரணம் அல்லாஹ் நாடினால் நெருப்பு தீண்டும் இல்லையென்றால் எந்த விதத்திலும் நெருப்பு தீண்டாது. அது போன்று தான் சூனியமும். (சூனியம்) என்பது ஷைத்தானின் சூழ்ச்சி வேலையாகும். அல்லாஹ் நாடினால் அதன் மூலம் தீங்கு ஏற்படும். இல்லையென்றால் எந்த விதத்திலும் தீங்கு ஏற்படாது இதுதான் அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்களின் ஆழமான நம்பிக்கையாகும். ஆக சூனியத்தை கொண்டு பிற மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தி கொலை செய்ய முற்படுவதும், சூனியம் செய்ய தூண்டுவதும், அதற்கு உடந்தையாக முன் நிற்பதும் இஸ்லாத்தின் பார்வையில் பெரும் பாவமாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்