சூனியம் சம்பந்தமான ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முறன் படுகிறதா? குர்ஆன் கூறும் தெளிவு

488

சூனியம் சம்பந்தமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று முறன் படுகிறதா? குர்ஆன் கூறும் தெளிவு

 

A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி)
நூல் 📚 :- [திருக்குர்ஆனுடைய பார்வையில் சூனியமும் சூனியத்தால் பாதிக்கப்பட்டோர்களும்]

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سُحِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا يَفْعَلُهُ حَتَّى كَانَ ذَاتَ يَوْمٍ دَعَا وَدَعَا ثُمَّ قَالَ أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِيمَا فِيهِ شِفَائِي أَتَانِي رَجُلانِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلَيَّ فَقَالَ أَحَدُهُمَا لِلآخَرِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ قَالَ فِيمَا ذَا قَالَ فِي مُشُطٍ وَمُشَاقَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذَرْوَانَ فَخَرَجَ إِلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ رَجَعَ فَقَالَ لِعَائِشَةَ حِينَ رَجَعَ نَخْلُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ فَقُلْتُ اسْتَخْرَجْتَهُ؟ فَقَالَ لا أَمَّا أَنَا فَقَدْ شَفَانِي اللَّهُ وَخَشِيتُ أَنْ يُثِيرَ ذَلِكَ عَلَى النَّاسِ شَرًّا ثُمَّ دُفِنَتْ الْبِئْرُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சூனியம் செய்து வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு மாயத் தோற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள். என் நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் இந்த மனிதரைப் பீடித்துள்ள (வேதனை அதாவது) நோய் என்ன? என்று கேட்டார். மற்றொருவர், இவருக்குச் சூனியம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் செய்தது யார்? என்று கேட்க, லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று இவர் பதிலளித்தார். எதில்? என்று அவர் கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று அவர் பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். (இதைச் சொல்லி முடித்த) பிறகு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; (சூனியப் பொருள் கட்டைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.) பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், இந்த (விசயத்தை மக்களுக்கு) வெழிப்படுத்துனீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அந்த விசயத்தை வெளிப்படுத்தினால்) அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு மூடப்பட்டு விட்டது

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 3268

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سَحَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم رَجُلٌ مِنْ بَنِي زُرَيْقٍ يُقَالُ لَهُ لَبِيدُ بْنُ الأَعْصَمِ حَتَّى كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ كَانَ يَفْعَلُ الشَّيْءَ وَمَا فَعَلَهُ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ أَوْ ذَاتَ لَيْلَةٍ وَهُوَ عِنْدِي لَكِنَّهُ دَعَا وَدَعَا ثُمَّ قَالَ يَا عَائِشَةُ أُشْعِرْتُ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ أَتَانِي رَجُلانِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلَيَّ فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ فَقَالَ مَطْبُوبٌ قَالَ مَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ قَالَ فِي أَيِّ شَيْءٍ قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعِ نَخْلَةٍ ذَكَرٍ قَالَ وَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذَرْوَانَ فَأَتَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ فَجَاءَ فَقَالَ يَا عَائِشَةُ كَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الحِنَّاءِ أَوْ كَأَنَّ رُؤوسَ نَخْلِهَا رُؤوسُ الشَّيَاطِينِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلا اسْتَخْرَجْتَهُ قَالَ قَدْ عَافَانِي اللَّهُ فَكَرِهْتُ أَنْ أُثَوِّرَ عَلَى النَّاسِ فِيهِ شَرًّا فَأَمَرَ بِهَا فَدُفِنَتْ تَابَعَهُ أَبُو أُسَامَةَ وَأَبُو ضَمْرَةَ وَابْنُ أَبِي الزِّنَادِ عَنْ هِشَامٍ وَقَالَ اللَّيْثُ وَابْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامٍ فِي مُشْطٍ وَمُشَاقَةٍ يُقَالُ المُشَاطَةُ مَا يَخْرُجُ مِنَ الشَّعَرِ إِذَا مُشِطَ وَالمُشَاقَةُ مِنْ مُشَاقَةِ الكَتَّانِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவன் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்ததாக மாயத் தோற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இறுதியில், அவர்கள் ஒரு நாள் அல்லது ஓரிரவு என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள். பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் செய்து வைத்தவர் யார்? என்று கேட்டார். அதற்கவர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! இந்த (விசயத்தை மக்களுக்கு) தாங்கள் வெளிப்படுத்த வில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றி விட்டான். அதை வெளிப்படுத்துவதன் மூலம் மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றை மூடிவிடும் படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது மூடப்பட்டது.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 5763

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَت سُحِرَ النَّبِىُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّىْءَ وَمَا فَعَلَهُ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ وَهْوَ عِنْدِى دَعَا اللَّهَ وَدَعَاهُ ثُمَّ قَالَ أَشَعَرْتِ يَا عَائِشَةُ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِى فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ قُلْتُ وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ جَاءَنِى رَجُلاَنِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِى وَالآخَرُ عِنْدَ رِجْلَىَّ ثُمَّ قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ الْيَهُودِىُّ مِنْ بَنِى زُرَيْقٍ قَالَ فِيمَا ذَا قَالَ فِى مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِى بِئْرِ ذِى أَرْوَانَ قَالَ فَذَهَبَ النَّبِىُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِى أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ إِلَى الْبِئْرِ فَنَظَرَ إِلَيْهَا وَعَلَيْهَا نَخْلٌ ثُمَّ رَجَعَ إِلَى عَائِشَةَ فَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَأَخْرَجْتَهُ قَالَ لاَ أَمَّا أَنَا فَقَدْ عَافَانِى اللَّهُ وَشَفَانِى وَخَشِيتُ أَنْ أُثَوِّرَ عَلَى النَّاسِ مِنْهُ شَرًّا وَأَمَرَ بِهَا فَدُفِنَتْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்று அவர்களுக்கு மாயத் தோற்றம் ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்னிடம் இருந்த போது அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவளித்து விட்டான் என்று கூறினார்கள். நான், என்ன அது, அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடைய தலைமாட்டிலும் இன்னொருவர் என்னுடைய கால்மாட்டிலும் அமர்ந்தனர். பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்க, மற்றவர், இவருக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், இவருக்கு யார் சூனியம் வைத்தார்? என்று கேட்க, மற்றவர், பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் எனும் யூதன் என்று பதிலளித்தார். முதலாமவர், எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்க, அடுத்தவர், சீப்பிலும், சிக்குமுடியிலும், ஆண்பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று சொன்னார். முதலாமவர், அது எங்கே வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்க, அடுத்தவர், தர்வான் குலத்தாரின் கிணற்றில் என்று பதிலளித்தார். ஆகவே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதைக் கூர்ந்து கவனித்தார்கள். சுற்றிலும் பேரீச்ச மரங்கள் இருந்தன. (சூனியப் பொருள் கட்டைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.) பிறகு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து, அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தானின் தலைகளைப் போன்று இருந்தன என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! இந்த (விசயத்தை மக்களுக்கு) தாங்கள் வெளிப்படுத்திருக்க கூடாதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை; எனக்கோ அல்லாஹ் ஆரோக்கியமளித்து குணப்படுத்தி விட்டான். அதை வெளிப்படுத்தினால் மக்கள் குழப்பமடைந்து விடுவார்களோ என அஞ்சினேன் என்று சொன்னார்கள். பின்னர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆணையின் பேரில் அக்கிணறு மூடப்பட்டது

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 5766

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طُبَّ حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ قَدْ صَنَعَ الشَّيْءَ وَمَا صَنَعَهُ وَإِنَّهُ دَعَا رَبَّهُ ثُمَّ قَالَ أَشَعَرْتِ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ فَقَالَتْ عَائِشَةُ فَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ جَاءَنِي رَجُلاَنِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلَيَّ فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ مَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ قَالَ فِي مَاذَا قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعَةٍ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي ذَرْوَانَ وَذَرْوَانُ بِئْرٌ فِي بَنِي زُرَيْقٍ قَالَتْ فَأَتَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ رَجَعَ إِلَى عَائِشَةَ فَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ قَالَتْ فَأَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهَا عَنِ البِئْرِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَهَلَّا أَخْرَجْتَهُ قَالَ أَمَّا أَنَا فَقَدْ شَفَانِي اللَّهُ وَكَرِهْتُ أَنْ أُثِيرَ عَلَى النَّاسِ شَرًّا زَادَ عِيسَى بْنُ يُونُسَ وَاللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا وَدَعَا وَسَاقَ الحَدِيثَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்ததாக அவர்களுக்கு மாயத் தோற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), (ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான் என்று கூறினார்கள். அதற்கு நான், அது என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்: என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும், மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அதற்கு அவருடைய தோழர், இவருக்குச் சூனியம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளிக்க, முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தது யார்? என்று வினவினார். அதற்கு லபீத் பின் அஃஸம் என்று தோழர் பதிலளித்தார். அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே உள்ளது? என்று கேட்க, மற்றவர், தர்வானில் உள்ளது என்றார் தர்வான்’ என்பது பனூ ஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.- பிறகு அங்கு சென்று (அவைகளை வெளியேற்றி) விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் ஷைத்தானின் தலையைப் போன்று இருந்தன என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்த போது நான், அல்லாஹ்வின் தூதரே! இந்த (விசயத்தை மக்களுக்கு) தாங்கள் வெளிப்படுத்த வில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்து விட்டான். மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடுவதை நான் வெறுத்தேன் என்று சொன்னார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 6391

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُحِرَ حَتَّى كَانَ يَرَى أَنَّهُ يَأْتِي النِّسَاءَ وَلاَ يَأْتِيهِنَّ قَالَ سُفْيَانُ وَهَذَا أَشَدُّ مَا يَكُونُ مِنَ السِّحْرِ إِذَا كَانَ كَذَا فَقَالَ يَا عَائِشَةُ أَعَلِمْتِ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ أَتَانِي رَجُلاَنِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلَيَّ فَقَالَ الَّذِي عِنْدَ رَأْسِي لِلْآخَرِ مَا بَالُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ أَعْصَمَ رَجُلٌ مِنْ بَنِي زُرَيْقٍ حَلِيفٌ لِيَهُودَ كَانَ مُنَافِقًا قَالَ وَفِيمَ قَالَ فِي مُشْطٍ وَمُشَاقَةٍ قَالَ وَأَيْنَ قَالَ فِي جُفِّ طَلْعَةٍ ذَكَرٍ تَحْتَ رَاعُوفَةٍ فِي بِئْرِ ذَرْوَانَ قَالَتْ فَأَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ البِئْرَ حَتَّى اسْتَخْرَجَهُ فَقَالَ هَذِهِ البِئْرُ الَّتِي أُرِيتُهَا وَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الحِنَّاءِ وَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ قَالَ فَاسْتُخْرِجَ قَالَتْ فَقُلْتُ أَفَلاَ؟ أَيْ تَنَشَّرْتَ فَقَالَ أَمَّا اللَّهُ فَقَدْ شَفَانِي وَأَكْرَهُ أَنْ أُثِيرَ عَلَى أَحَدٍ مِنَ النَّاسِ شَرًّا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.- (ஒரு நாள்) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், இந்த மனிதரின் நிலையென்ன? என்று கேட்டார். மற்றவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார் என்று சொன்னார். அதற்கு அவர், யார் அவருக்குச் சூனியம் வைத்தார்? என்று கேட்டார். மற்றவர், யூதர்களின் நட்புக் குலமான பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார் என்று பதிலளித்தார். அவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், சீப்பிலும், சிக்கு முடியிலும் என்று பதிலளித்தார். அவர், எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் தர்வான் குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். பிறகு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இது தான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொல்லிவிட்டுப் பிறகு அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறினார்கள். நான், இந்த (விசயத்தை மக்களுக்கு) தாங்கள் உடைத்து காட்டக்கூடாதா? எனக் கேட்டேன். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் எனக்கு நிவாரணம் அளித்துவிட்டான். மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 5765

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَكَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَا وَكَذَا يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَأْتِي أَهْلَهُ وَلاَ يَأْتِي قَالَتْ عَائِشَةُ فَقَالَ لِي ذَاتَ يَوْمٍ‏ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ أَفْتَانِي فِي أَمْرٍ اسْتَفْتَيْتُهُ فِيهِ، أَتَانِي رَجُلاَنِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رِجْلَىَّ وَالآخَرُ عِنْدَ رَأْسِي فَقَالَ الَّذِي عِنْدَ رِجْلَىَّ لِلَّذِي عِنْدَ رَأْسِي مَا بَالُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ‏ يَعْنِي مَسْحُورًا‏‏ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ أَعْصَمَ‏ قَالَ وَفِيمَ قَالَ فِي جُفِّ طَلْعَةٍ ذَكَرٍ فِي مُشْطٍ وَمُشَاقَةٍ تَحْتَ رَعُوفَةٍ فِي بِئْرِ ذَرْوَانَ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ‏هَذِهِ الْبِئْرُ الَّتِي أُرِيتُهَا كَأَنَّ رُءُوسَ نَخْلِهَا رُءُوسُ الشَّيَاطِينِ وَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ فَأَمَرَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأُخْرِجَ‏ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَهَلاَّ تَعْنِي تَنَشَّرْتَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ‏ أَمَّا اللَّهُ فَقَدْ شَفَانِي وَأَمَّا أَنَا فَأَكْرَهُ أَنْ أُثِيرَ عَلَى النَّاسِ شَرًّا‏ قَالَتْ وَلَبِيدُ بْنُ أَعْصَمَ رَجُلٌ مِنْ بَنِي زُرَيْقٍ حَلِيفٌ لِيَهُودَ‏

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்து கொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்று வந்து விட்டதாக மாயத் தோற்றம் ஏற்பட்ட நிலையில் நீடித்தார்கள். அவர்கள் ஒரு நாள் என்னிடம், ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அதில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். இரண்டு பேர் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் கால்மாட்டிலும் மற்றவர் என்னுடைய தலைமாட்டிலும் அமர்ந்தனர். அப்போது என் கால்மாட்டில் அமர்ந்திருந்தவர் என் தலைமாட்டில் அமர்ந்திருந்தவரிடம் (என்னைக் காட்டி), இந்த மனிதரின் நிலை என்ன? என்று கேட்க, மற்றவர், இவருக்குச் சூனியம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்க, மற்றவர், லபீத் பின் அஃஸம் என்று பதிலளித்தார். முதலாமவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறை, (தலைவாரும்) சீப்பு, சிக்குமுடி ஆகியவற்றில் (சூனியம்) செய்யப்பட்டு தர்வான்’ (குலத்தாரின்) கிணற்றில் ஒரு பாறைக்கடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். ஆகவே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் தோழர்களுடன் அந்தக் கிணற்றுக்கு) வந்து (அவைகளை வெளியேற்றிவிட்டு), இந்தக் கிணறுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்டது. அந்தக் கிணற்றினைச் சுற்றியிருந்த பேரீச்சம் மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றிருந்தது என்று சொன்னார்கள். பின்னர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட அது வெளியே எடுக்கப்பட்டத. நான், அல்லாஹ்வின் தூதரே! இந்த (விசயத்தை மக்கள்) காண்பிக்க வில்லையா? என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் என்னைக் குணப்படுத்தி விட்டான். நானோ மக்களுக்கெதிராகத் வன்மத்தைத் தூண்டி விடுவதை அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சூனியம் வைத்தவன் லபீத் பின் அஃஸம், பனூ ஸுரைக் குலத்தாரிலுள்ள ஒருவன் ஆவான். (அவன்) யூதர்களின் நட்புக் குலத்தவன் ஆவான்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 6063

 

மேற்கூறிய அனைத்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் வெவ்வேறு அறிவிப்புகளில் வெவ்வேறு விதமாக முரண்பட்டு வரும் காரணத்தால் மேற்கூறிய ஹதீஸ்கள் அனைத்தும் பொய்யான தகவல் என்று மக்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு கீழ் கானும் திருக்குர்ஆன் இறைவசனங்கள் பதிலடியாக அமைந்துள்ளது.

 

فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَ لٰـكِنَّ اللّٰهَ رَمٰى وَلِيُبْلِىَ الْمُؤْمِنِيْنَ مِنْهُ بَلَاۤءً حَسَنًا اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏

 

குர்ஆன் கூறுகிறது (நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களை கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதனை நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதனை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ், செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

சூரா அன்பால் ஆயத்17

 

முஃமின்கள் யுத்தத்தின் போது எதிரிகளை கொலை செய்தார்கள். ஆனால் இறைவனோ நீங்கள் கொலை செய்யவில்லை நான் தான் அவர்களை கொலை செய்தேன் என்று கூருகிறான். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகள் மீது மண்னை எறிந்தார்கள். ஆனால் இறைவனோ நீங்கள் எறியவில்லை அதை நான் தான் எறிந்தேன் என்று கூறுகிறான். இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது ஒரே இறைவசனத்தில் இருவிதமாக கூறப்பட்டுள்ளதைக் காரணமாக வைத்து மேற்கூறிய இறைவசனத்தை மறுக்க முற்படலாமா? அல்லது இவையெல்லாம் பொய்யான தகவல் என்று மக்கள் மத்தியில் கூறலாமா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மேலும்

 

قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌ ۙ‏

 

குர்ஆன் கூறுகிறது (இதனைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) “நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கின்றார்” என்று கூறினார்கள்.

சூரா அஃராப் ஆயத் 109

 

قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌۙ‏

 

குர்ஆன் கூறுகிறது (இதனைக் கண்ணுற்ற ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி, “நிச்சயமாக இவர் மிகவும் நன்கு அறிந்த சூனியக்காரராக இருக்கிறார் (என்று கூறினான்).

சூரா ஷுஃரா ஆயத் 34

 

ஆராம்ப இறைவசனத்தில் ஃபிர்அவ்னின் மக்களின் பிரதிநிதிகள், ஃபிர்அவ்னை நோக்கிக் கூறினார்கள் என்று கூறப்படுகிறது. அடுத்த இறைவசனத்தில் (இல்லை) ஃபிர்அவ்ன் தான் தன்னை சூழ இருந்த தன்னுடைய பிரதிநிதிகளை நோக்கிக் கூறினான் என்று இருவிதமாக கூறப்பட்டுள்ளது. இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது ஓர் வரலாற்றை கூறும் இருவிதமான இறைவசனங்களும் வெவ்வேறு விதமாக இடம் பெற்றுள்ளது. இவைகளை காரணமாக வைத்து மேற்கூறிய இறைவசனங்களை மறுக்க முற்படலாமா? அல்லது இவையெல்லாம் பொய்யான தகவல் என்று மக்கள் மத்தியில் கூறலாமா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

குறிப்பு :- மேற்கூறிய அனைத்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் வெவ்வேறு அறிவிப்புகளில் வெவ்வேறு விதமாக இடம்பெற்றாலும் அதன் எதார்த்தம் ஒன்று தான் அதாவது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்தது உண்மை. அதன் மூலமாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மை. அந்த பாதிப்பிலிருந்து இறைவன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாதுகாத்தது உண்மை. என்பதாகத்தான் அனைத்து ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

தவறான வாதங்களும் தெளிவான பதில்களும்

 

1) வாதம் :-

மேற்கூறிய ஹதீஸ்களில் இந்த மனிதருக்கு என்ன நேர்ந்தது, என்ன நோய், ஏன் வேதனையால் பீடிக்கப்படுள்ளார் என்று மலக்கு கேட்டதற்கு. அடுத்த மலக்கு இவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பதாக பதில் கூறியதைக் காரணமாக வைத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் உடல் ரீதியாகவும் வேதனைகள் ஏற்பட்டுள்ளது என்பதே ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதமாகும்.

 

நமது பதில் :-

வேதனை என்ற உடன் அது உடலியல் ஏற்படும் வேதனையை மட்டுமே குறிக்கும் என்பதாக சிலர்கள் தவறான முறையில் புரிந்து வைத்துள்ளனர். உடலில் ஏற்படும் வேதனைகளை போல, உணர்வுகளின் மூலமாக ஏற்படும் வேதனைகளும் உண்டு. உதாரணமாக செய்யாத ஒரு தவறை செய்ததாக கூறி மக்கள் மத்தியில் வைத்து ஒருவரை இழிவு படுத்தினால், அதன் மூலம் ஏற்படும் தாக்கத்திற்கு மனவேதனை என்று கூறப்படும். அது போன்று தான் ஒரு செயலை செய்யாமல் அதை செய்தது போன்று மாயத் தோற்றம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்டது. இவையெல்லாம் உணர்வு ரீதியாக ஏற்படும் மனவேதனை குறிக்குமே தவிர உடல் ரீதியாக ஏற்படும் வலி வேதனையை குறிக்காது.

 

2) வாதம் :-

மேற்கூறிய ஹதீஸ்களில் இவருக்கு என்ன நேர்ந்தது. ஏன் நோய் வேதனையால் பீடிக்கப்படுள்ளார் என்று மலக்கு கேள்வியாக கேட்டபோது. அடுத்த மலக்கு இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதாவது (ஷைத்தான் தீன்டியுள்ளான்) என்று பதில் கூறியுள்ளார். எனவே நோயினால் ஏற்படும் வேதனை என்பது ஷைத்தானின் தீன்டுதலை குறிக்காது என்பதே ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதமாகும்.

 

وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ ‏

 

குர்ஆன் கூறுகிறது அய்யூபையும் (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் தன் இறைவனை நோக்கி நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. நீயே! கிருபையாளர்களிலெல்லாம் மகா கிருபையாளன்” என்று பிரார்த்தனை செய்தார்.

சூரா அன்பியா ஆயத் 83

 

وَاذْكُرْ عَبْدَنَاۤ اَيُّوْبَۘ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الشَّيْطٰنُ بِنُصْبٍ وَّعَذَابٍ‏

 

குர்ஆன் கூருகிறது (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூருங்கள்! அவர் தம் இறைவனிடம், நிச்சயமாக ஷைத்தான் வேதனையிலும் துன்புறுத்தலாலும் என்னை தீண்டி விட்டான் (என்று கூறிய போது )

சூரா ஸாத் ஆயத் 41

 

நமது பதில் :-

மேற்கூறிய இரு இறைவசனங்களும் நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவை பற்றிப் பேசுகிறது. ஆரம்ப இறைவசனத்தில் நோய் என்னை பீடித்துக் கொண்டது என்பதாகக் கூறப்படுகிறது. மற்ற இறைவனத்தில் வேதனையாளும் துன்புறுத்தலாளும் ஷைத்தான் என்னை தீன்டிவிட்டான் என்பதாகக் கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோயின் தாக்கம் என்று கூறியது ஷைத்தானின் தீன்டுதலை பற்றியதாகும். இதே போன்று தான் மேற்கூறிய ஹதீஸ்களில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நோய் வேதனையால் பீடிக்கப்படுள்ளார்கள் என்பதாக கூறியது ஷைத்தானின் தீன்டுதலை குறிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

3) வாதம் :-

சூனியம் பற்றி இரு மலக்குகள் வந்து இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறியதாக மேற்கூறிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நேரடியாகக் வந்து கூறியதாக வேறு சில ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிணற்றுக்குச் சென்று சூனியப் பொருட்களை எடுத்தார்கள் என்று மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் ஆள் அனுப்பி அந்த சூனியப் பொருட்களை அவர்களிடம் எடுத்து வரப்பட்டாதாக வேறு சில ஹதிஸ் கிரந்தங்களில் கூறப்பட்ட காரணத்தால் மேற்கத்திய இருவிதமான ஹதீஸ்களும் ஒன்றுக்கொன்று முறன் என்பதே ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதமாகும்.

 

நமது பதில் :-

மேற்கூறிய ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாகும். அதில் எந்த ஒரு முரன்பாடுமில்லை. இருப்பினும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன் வந்து நேரடியாகக் கூறினார்கள் என்ற கருத்தை தரும் ஹதீஸ்களும். ஆள் அனுப்பி அந்த சூனியப் பொருட்களை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எடுத்து வரப்பட்டதாக் கூறப்படும் ஹதீஸ்களும். அஹ்மது நஸாயி போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் பலயீனமானவர்கள். இது போன்ற பவயீனமான ஹதீஸ்களை முன் வைத்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்க முற்படுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் மாபெரும் குற்றவாளிகள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 

4) வாதம் :-

மேற்கூறிய ஹதீஸ்களில் சூனியப் பொருட்களை வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் அதனை உடைத்துக் காட்டவில்லை என்ற கருத்து ஒன்றுக்கொன்று முறன் என்பதே ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதமாகும்.

 

நமது பதில் :-

(கிணற்றிலிருந்து) சூனியப் பொருட்களை வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் (மக்கள் மத்தியில் அவைகளை) உடைத்து காட்டவில்லை என்ற கருத்து ஒன்றுக்கொன்று முறன் கிடையாது.

 

5) வாதம் :-

மேற்கூறிய ஹதீஸ்களில் சூனியப் பொருட்களை வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் வெளிப்படுத்தப்படவில்லை என்பதும். ஒன்றுக்கொன்று முறன் என்பதே ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதமாகும்.

 

நமது பதில் :-

வெளிப்படுத்தப்பட்டது என்பது (கிணற்றிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது) வெளிப்படுத்தப்படவில்லை என்பது அதை (மக்கள் மத்தியில் வைத்து) வெளிப்படுத்தப்படவில்லை என்ற கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முறன் கிடையாது.

 

6) வாதம் :-

மேற்கூறிய ஹதீஸ்களில் கிணற்றுக்கு சென்று சூனியப் பொருட்களை பார்த்தோம் ஆனால் வெளியே எடுக்கவில்லை? என்ற கருத்து ஒன்றுக்கொன்று முறன் என்பதே ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதமாகும்.

 

நமது பதில் :-

கிணற்றுக்கு சென்று சூனியப் பொருட்களை பார்த்தோம் என்றால் (வெளிப்படுத்தி அவைகளை எடுத்து பார்த்தோம் என்று அர்த்தமாகும்) ஆனால் வெளியே எடுக்கவில்லை என்பது. (மக்களுக்கு மத்தியில் வைத்து) அதை வெளியே எடுக்கவில்லை அதாவது (மக்கள் மத்தியில் வைத்து) அதை வெளிப்படுத்தி காட்டவில்லை என்ற கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முறன் கிடையாது.

 

இடை குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சூனியப் பொருட்களை) வெளிப்படுத்தினார்கள் என்று மேற்கூறிய ஹதீஸ்களில் இடம் பெறுவெதல்லாம் கிணற்றிலிருந்து வெளியில் எடுத்ததைக் கூறுகின்றது. பின்னர் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய கேள்விக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படுத்தவில்லை என்பதாக பதில் கூறியதெல்லாம் (சூனியப் பொருட்களை) மக்கள் மத்தியில் வைத்து வெளிப்படுத்தவில்லை காரணம் மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை என்பதைக் குறிக்கிறது. இவைகளை கூர்ந்து கவனித்து பார்த்தல் இவ்விரண்டும் வேறு வேறு அம்சங்களை பற்றி பேசுகிறது. இதில் எந்த ஒரு முரண்பாடுகளும் கிடையாது.

 

குறிப்பு :- அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! மேற்கூறிய சூனியம் சம்பந்தமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முறன்பட வில்லை. மேலும் மேற்கூறிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அனைத்து ஷீஆக்கள், முஃதஸிலாக்கள், ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு முறன் படுகிறதே தவிர திருக்குர்ஆனுக்கு எந்த விதத்திலும் முறன் படவில்லை என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.