ஜகாத் பற்றிய சட்ட திட்டங்கள்
ஜகாத் பற்றிய சட்ட திட்டங்கள்
ஜகாத்” என்ற வார்த்தைக்கு வளர்ச்சியடைதல் தூய்மைப்படுத்துதல் போன்ற அர்த்தங்கள் உள்ளது. மேலும் இஸ்லாத்தின் நான்காவது கடமையாகும். அதாவது ஒரு வருடம் பூர்த்தியான பின் செல்வந்தர்கள் சேமித்து வைக்கும் நிதியிலிருந்து, இரண்டரை சதவீதம் ஏழைகளுக்குகாக கொடுக்க வேண்டும். இந்த விகிதப்படி செல்வந்தர்கள், ஏழைகளின் உரிமையைத் தம்முடைய உடைமையிலிருந்து வெளியேற்றத் தவறினால் செல்வர்கள் சேமித்து வைத்திருக்கும் செல்வம் நிதியாவும் தூய்மையை இழந்துவிடுகிறது என்பதை நாம் ஆரம்பத்தில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
ஜகாத் கொடுப்பதற்கு தகுந்த பொருட்கள் பின்வருமாறு
♦️1) தங்கம், வெள்ளி.
♦️2) பணம் நாணயங்கள்.
♦️3) வியாபாரப் பொருட்கள்.
♦️4) உணவு, தானியங்கள் மற்றும் பழவகைகள்.
♦️5) ஆடு, மாடு ஒட்டகம் போன்ற கால் நடைகள்.
ஜகாத்தை நிறைவேற்றத் தகுதியானவர்கள்
♦️1) சுதந்திரமானவராக இருக்கவேண்டும்.
♦️2) முஸ்லிமாக இருக்கவேண்டும்.
♦️3) புத்தி சுவாதினமுள்ளவராக இருக்கவேண்டும்.
♦️4) பருவ வயது வந்தவராக இருக்கவேண்டும்.
♦️5) நிஸாப் பொருளின் அளவு சொந்தமாக்கியவராக இருக்க வேண்டும்.
ஜகாத் பொருள்களில் கடமையாகும் நிபந்தனைகள் பின்வருமாறு
♦️1) பொருள் நிஸாபுடைய அளவை எத்தியிருக்க வேண்டும்.
♦️2) அந்த பொருள் தனக்குரியதாக இருக்க வேண்டும்.
♦️3) தனது தேவைகள் போக நிஸாப் அதிகப்படியானதாக இருக்க வேண்டும்.
பின்வரும் பொருள்கள் மீது ஜகாத் கடமையாகாது
♦️1) நமது தேவைக்காக வைத்துள்ள அசையாச் சொத்துக்கள்.
♦️2) வசிக்கும் வீடுகள்.
♦️3) நாம் உபயோகிக்கும் ஆடைகள் மற்றும் விரிப்புகள்.
♦️4) வீட்டு உபயோகப் பொருட்கள்.
♦️5) நாம் உபயோகப்படுத்தும் வாகனங்கள்.
♦️6) பாதுகாப்பு ஆயுதங்கள்.
♦️7) சாப்பிட வைத்துள்ள உணவு தானியங்கள்.
♦️8) அலங்காரப் பாத்திரங்கள்.
♦️9) வைரம், பவளம், போன்ற உயர்தரக் கற்கள்.
♦️10) படிப்பதற்காக வைத்துள்ள நூல்கள்.
♦️11) தொழிற்சாலையின் மிஷின்கள்.
♦️12) வாடகைக்கு விடப்படும் வாகனங்கள்.
ஜகாத் பெற்றிட தகுதி வாய்ந்தவர்கள்
♦️1) எவ்வித வருமானமுமில்லாத பரம ஏழைகள்.
♦️2) வருமானத்தை விட செலவினங்கள் விஞ்சிய ஏழைகள்.
♦️3) ஜக்காத்து நிதியின் வசூலர்களாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள்.
♦️4) புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்.
♦️5) அடிமைகளை விடுதலை செய்தல்.
♦️6) கடனில் மூழ்கித் தவிப்பவர்கள்.
♦️7) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர்.
♦️8) வழிப்போக்கர்கள்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்