ஜம்ஜம் நீரின் சிறப்புக்கள்
ஜம்ஜம் நீரின் சிறப்புக்கள்
عَنْ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஜம்ஜம் நீர் எந்த நோக்கத்துடன் அருந்தப்படுமோ அது நிறைவேறும்.
அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜ 3062 அஹ்மது 14849
دخلت الطواف في ليلة ظلماء فاخذني من البول ماشغلني فجعلت اعتصر حتي اذاني وخفت ان خرجت من المسجد ان اطأ بعض تلك الاقدام وذلك ايام الحج فذكرت هذا الحديث فدخلت زمزم فتضلعت منه فذهب عني الي الصباح
இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள். ஒரு நாள் இருளான இரவில் தவாப் செய்ய ஹரம் ஷரீபுக்கு சென்றேன் அந்த சமயத்தில் எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்பட்டது நான் சிறுநீர் கழிக்காமல் அதை அடக்கிக் கொண்டிருந்தேன் வெளியில் சென்றால் மக்களின் பாதங்களை மிதித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் அது ஹஜ்ஜூடைய காலம் என்பதாலும் அவ்வாறு செய்தேன் அப்போது இந்த ஹதீஸ் எனக்கு நினைவிற்கு வந்தது உடனே ஜம் ஜம் கிணற்றுக்குச் சென்று அதன் நீரை வயிறு நிரம்ப குடித்தேன் அதன் பரக்கத்தால் அடுத்தநாள் காலை வரை எனக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்படவில்லை என்றார்கள்.
ஆதாரம் தப்ஸீர் குர்துபி 9/32
روي عن عبد الله بن عمرو رضي الله عنه: ان في زمزم عينا في الجنة من قبل الركن
அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களின் மூலம் அறிவிக்கப்படுகிறது. ஜம் ஜம் கிணற்றிலிருந்து ருக்னுல் யமானியின் திசையின் வழியாக சுவர்க்கத்தின் பக்கம் ஒரு ஊற்று இருக்கின்றது.
ஆதாரம் :- தப்ஸீர் குர்துபி பாகம் 9/32
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்