ஜின்‌ ஷைத்தான்களின் வெளிப்பாடுதான் வைரஸ் தொற்று நோயாகும்

71

ஜின்‌ ஷைத்தான்களின் வெளிப்பாடு தான் வைரஸ் தோற்று நோயாகும் 

 

  عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَاءُ أُمَّتِي بِالطَّعْنِ وَالطَّاعُونِ  فَقِيلَ يَا رَسُولَ اللهِ هَذَا الطَّعْنُ قَدْ عَرَفْنَاهُ فَمَا الطَّاعُونُ؟ قَالَ وَخْزُ أَعْدَائِكُمْ مِنَ الْجِنِّ وَفِي كُلٍّ شُهَدَاءُ

 

رواه أحمد برجال ثقات وروى الطبراني وأبو نعيم بإسناد حسن. رواه أحمد 19528 ورواه البزار 3040  

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக எனது உம்மத்தினர்கள் கொலையாலும் மற்றும் வைரஸ் தொற்று நோயாளும் (அதிக) உயிரிழப்புக்களைச் சந்திப்பார்கள். அப்போது (ஸஹாபாக்களில்) சிலர்கள், யா ரஸூலல்லாஹ்! கொலை செய்வது என்றால் என்னவென்பதைப் புரிந்து கொண்டோம். ஆனால், “தாஊன்” வைரஸ் தொற்று நோய் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், “ஜின் இனத்தைச் சேர்ந்த உங்கள் எதிரிகளால் அதாவது (ஷைத்தான்களாள்) நீங்கள் குத்தப்படுவது தான் அது. யார் அதன் மூலம் மரணிக்கிறாரோ, அவர் ஸஹீத் உயிர்த்தியாகியாவார் என்று பதில் கூறினார்கள். 

அறிவிப்பவர் :- அபூ மூஸா அல் அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்னத் அஹ்மது 19528 பஸ்ஸார் 3040 ஹதீஸ் ஸஹீஹ்

 

ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ رَضِيَ الله عَنْهَا ﻗَﺎﻟَﺖْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الطَّاعُونُ شَهَادَةٌ لأُمَّتِي وَوَخْزُ  أَعْدَائِكُمْ مِنَ الْجِنِّ 

 

♦️மேற்கூறப்பட்ட ஹதீஸை போன்று இந்த ஹதீஸும் வைரஸ், தொற்று நோய் ஜின் இனத்தை சேர்ந்த எதிரிகளான (ஷைத்தான்களின்) தீங்கு என்பதாகவும் (அதில் மரணிப்பவர்) ஸஹீது உயிர்த்தியாகி என்பது பற்றியும் பேசுகிறது.

அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் தபரானி 242 ஹதீஸ் ஸஹீஹ் 

 

மேற்கூறிய ஹதீஸ்களில் தொற்று நோய், வைரஸ் என்பது ஜின் ஷைத்தான்களின் தீங்கு என்று பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதை நம்மால் காண முடிகிறது 

 

♦️குறிப்பு :- ( Plague – طاعون ) இந்த வார்த்தைக்கு கொள்ளை நோய், தொற்று நோய், வைரஸ் ஆற்கொள்ளி நோய் என்று பொதுவாக கூறப்படும். இது போன்ற வைரஸ் தொற்று நோய்கள் இரு வகைகளாக கணப்படுகிறது.  

முதல் வகை :- பொதுவாக ஊர்களில் ஏற்படும் தொற்று நோய்கள் அதாவது ஊரோடி எனப்படும். இது சகல ஊர்களிலும் பொதுவாக காணப்படலாம். உதாரணமாக காய்ச்சல், கண்நோய், அம்ம போடுதல் இது போன்ற நோய்கள் 5 நாட்கள் அல்லது 10 நாட்களில் நோய்க்குறிய நிவாரணம் கிடைத்து விடும்.  

இரண்டாம் வகை :- ஒவ்வொரு நூற்றாண்டிலும் தோன்றும் தொற்று நோய் அல்லது இடைப்பட்ட காலங்களில் தோன்றும் தொற்று நோய் உதாரணமாக கொலரா, கொரோனா போன்ற நோய்களாகும்.

 

இது போன்ற தொற்று நோய்கள் குறிப்பிட்ட காலங்கள் ஊரையும், நாட்டையும், உலகத்தையும் அச்சுறுத்தும் ஆற்றல் பெற்றது. இவைகள் ஷைத்தான்களின் தீங்கினால் ஏற்படும் வைரஸ் தொற்று நோயாகும். இவைகள் அதிக வேகமாக மனித உடலில் உள்நுளையும் ஆற்றல் பெற்றது. இதன் மூலம் மனிதர்களை முடக்குவது முற்றாக அளிப்பதே இதனுடைய முக்கிய நோக்கமாகும். இது போன்ற ஓர் நோக்கத்தை தான் சூனியமும் பறைசாற்றுகிறது. மேலும் மேற்கூறிய ஹதீஸ்களை மறுப்பவர்கள், மேலும் நவீன உலகில் ஆராய்ச்சியாளர்கள் இது போன்ற வைரஸ், தொற்று நோய் எங்கிருந்து உருவாகிறது, எதிலிருந்து உருவாகிறது என்று இன்று வரைக்கும் தெளிவு படுத்திக் கூறவில்லை என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும். 

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம் 

Leave A Reply

Your email address will not be published.