ஜும்ஆ ரெண்டு குத்பாவும் தமிழில் பேசுவது வழிகெட்ட பித்அத்தாகும்.

51

ஜும்ஆ ரெண்டு குத்பாவும் தமிழில் பேசுவது வழிகெட்ட பித்அத்தாகும்.

 

📖 குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி, YSYR✍️) www.islamysyr.com

 

ஜும்ஆ குத்பா (உபதேசம்) முழுவதையும் தமிழில் மாத்திரம் தான் பிரசங்கம் செய்ய வேண்டும் என்று வாதிடும் தவ்ஹீத் வஹாபிஷ உலமாக்களிடம் நேரடி ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சுற்றி வளைத்து கூறும் ஆதாரம் பின்வருமாறு

 

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ‌ فَيُضِلُّ اللّٰهُ 

 

குர்ஆன் கூறுகிறது. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (அழைத்து போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; (14:4)

 

உபதேசம் செய்வதாக இருந்தாலும் சரி, நேர்வழிக்கு அழைப்பதாக இருந்தாலும் சரி, அது அல்லத அழைப்பதாக இருந்தாலும் சரி புரியாத பாஷையில் கூறுவதை விட மக்கள் புரிந்து கொள்ளும் பாஷையில் அழைப்பதும் உபதேசம் செய்வதும் தான் ஏனைய நபிமார்களின் நடைமுறையாக உள்ளது. இதனையே நாமும் கடைபிடிக்க வேண்டும்.

 

எனவே ஜும்ஆ குத்பா உபதேசம் முழுவதையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்கள் புரிந்து கொள்ளும் அரபு பாஷையில் கூறியுள்ளார்கள். இருப்பினும் அரபு தெரியாத மக்களுக்கு புரியாத அரபு பாஷையில் கூறுவதை விட மக்கள் புரிந்து கொள்ளும் பாஷையில் தான் கூற வேண்டும் என்று வாதிடும் வஹாபிஷ உலமாக்கள் பர்ளு தொழுகைக்கான அதான் (பாங்கு) அழைப்பையும் மேற்கூறிய இறைவசனத்தின் பிரகாரம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு புரிந்து கொள்ளும் அரபு பாஷையில் கூறினார்கள். இருப்பினும் அரபு தெரியாத மக்களுக்கு புரியாத அரபு பாஷையில் கூறி அழைப்பதை விட மக்கள் புரிந்து கொள்ளும் தமிழ் பாஷையில் கூறினால் தானே எந்த நோக்கத்திற்காக அதான் (பாங்கு) அழைப்பு கூறப்படுகிறது என்று அரபு மொழி தெரியாத முஸ்லிம் மக்களுக்கு புரியும்.

 

உதாரணமாக :- பாங்கு கூறும் போது ஹய்யாலஸ்ஸலா, ஹய்யாலல்பலா அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம் என்று முஅத்தின் கூறினால்! தமிழ் பேசும் மக்களுக்கு எப்படி புரியும்? அதனை மொழிபெயர்ப்பு செய்து தொழுகைக்காக விரைந்து வாருங்கள். வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள். தூக்கத்தை விடத் தொழுகை மேலானது என்று புரியும் பாஷையில் கூறினால் தானே தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கு புரியும்? உள்ளத்தில் இறையச்சம் ஏற்பட்டு தொழுகையின் பக்கம் விரைந்து வருவார்கள்? மேலும் ஏனைய தமிழ் பேசும் மாற்று மதத்தினர்களுக்கும் இதன் எதார்த்தம் புரியும் அல்லவா? எனவே ஜும்ஆவில் குத்பா (உபதேசம்) முழுவதையும் தமிழில் பன்னுவது தான் சிறந்தது என்றால்! தொழுகைக்கான அதான் (அழைப்பும்) தமிழில் கூறுவது தானே சிறந்தது?

 

♦️1) ஜும்ஆ குத்பா அரபியில் மட்டும் தான் பன்ன வேண்டும் என்று நேரடியாக குர்ஆன் ஹதீஸில் ஒரு ஆதாரமும் இல்லை.

 

♦️2) தொழுகைக்கான (பாங்கு) அதான் மற்றும் இகாமத் அழைப்பை அரபியில் மட்டும் தான் கூற வேண்டும் என்று நேரடியாக குர்ஆன் ஹதீஸில் ஒரு ஆதாரமும் இல்லை.

 

♦️3) தொழுகையை அரபியில் மட்டும் தான் நடத்த வேண்டும். தொழுகைக்குள் அரபு மொழியில் மட்டும் தான் ஓத வேண்டும் என்று குர்ஆன் ஹதீஸில் நேரடியாக ஒரு ஆதாரமும் இல்லை. அப்படி இருந்தால் இன்ஷா அல்லாஹ் சமர்ப்பிக்கவும்.

 

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! இன்று ஜும்ஆ குத்பா முழுவதும் தமிழில் நடை பெறுகிறது. நாளை தொழுகைக்கான அதான் அழைப்பும் தமிழில் கூறப்படும் வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளது. அடுத்து வரும் காலங்களில் அல்லாஹ்வை அறிந்து வணங்க வேண்டும் தொழ வேண்டும் என்று குர்ஆன் போதிக்கிறது. அப்படி இருக்கையில் புரியாத அரபு மொழி பாஷையில் இமாம் மக்களுக்கு தொழுகை நடத்துவதை விட மக்கள் புரிந்து கொள்ளும் தமிழ் பாஷையில் இமாம் தொழுகை நடத்துவதன் மூலம் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கு அதன் அர்த்தங்கள் தெரிவது மட்டுமின்றி அல்லாஹ்வை பற்றிய இறையச்சம் பயபக்தியும் அதிகளவில் ஏற்படும். தவறான சிந்தனை முற்றாக அகன்று விடும். மேலும் தமிழ் மொழி பாஷையினை அல்லாஹ்வும் நன்கறிவான் என்று கூறியவாறு வஹாபிஷ ஆய்வாளர்கள் புரியாத பாஷையில் தொழுவதை விட புரியும் பாஷையில் அல்லாஹ்வை வணங்குவது தான் சிறந்தது என்று எதிர் வரும் காலங்களில் புதிய புதிய மார்க்க தீர்ப்புகளை வழங்குவதற்கு முன்னர் அதனை முளையில் கிள்ளி எரிந்து விடுங்கள். இல்லையெனில் புதிய இஸ்லாமிய தலைமுறைக்கு நவீன முறைப்படி தவறான மார்க்க தீர்ப்புகள் வழங்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 

குறிப்பு :- அரபி மொழி அரேபிய தீபகற்பத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்தது. அது அல்லத பல மொழிகளை பேசும் மக்கள் வாழ்ந்த ஈரான், ஈராக். சிரியா, ரோம், ஹபஷா திமிஷ்க், பலஸ்தீன் போன்ற பல நாடுகள் ஸஹாபாக்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட போதும், அந்த மக்களுக்கு புரியும் மொழியில் நேர்வழியின் பக்கம் அழைத்த போதிலும் ஜும்ஆ குத்பா இபாதத் என்று வரும் போது அந்த உரை அதிகளவில் அரபு மொழியிலும் (சிறிதளவு அந்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளும் மொழியிலும் பேசுவது தான் பித்அத்துல் ஹஸனிய்யா நல்ல பித்அத்து) இதுதான் நடைமுறையில் இருந்து வந்தது. அது அல்லாமல் எந்த வரலாற்று நூல்களிலும் ஜும்ஆ 2 குத்பாவும் புரியும் பாஷையில் அவர் அவர்களின் மொழியில் தான் ஸஹாபாக்கள் தாபீன்கள் காலத்தில் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்றதாக எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. தற்போது தவ்ஹீத் என்ற போர்வையில் புதிய நடைமுறை பிரகாரம் புரியும் பாஷையில் தான் ஜும்ஆ 2 குத்பா நடத்த வேண்டும் என்றால்! தொழுகை மட்டுமின்றி தொழுகைக்கான (பாங்கு) அதான், இகாமத் ஆகியவைகளையும் மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் தான் கூற வேண்டும் என்ற நவீன சட்டங்கள் புதிது புதிதாக தோற்றுவிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே ஜும்ஆ 2 குத்பாவையும் புரியும் பாஷையில் எடுத்துரைப்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கிகாரம் இல்லாத செயலாகவும், மேலும் ஏனைய இபாதத்துகளுக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்பதால் இவைகளை வழிகெட்ட பித்அத்தாகவே பார்க்கப்படும். ஜும்ஆ ஒரு போதும் நிறைவேறாது. அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.