தயம்மம் செய்வது பற்றிய விபரம் பகுதி 2

62

தயம்மத்தின் பர்ளுகள் நான்காகும் 

 

♦️1) மண்ணை நாடுதல் மண்ணில் இருகைகளையும் அடிக்கும் போதே நிய்யத்துச் செய்தல். 

♦️2) முந்திய அடியால் முகத்தைத் தடவிக் கொள்ளுதல். 

♦️3. இரண்டாம் அடியால் இரு கைகளையும் முழங்கை உட்பட தடவிக் கொள்ளுதல். 

♦️4. மேற்கூறியவைகளை வரிசைக் கிரமமாகச் செய்தல்.

 

தயம்மத்தின் ஷர்த்துக்கள் பத்தாகும் 

 

♦️1) தயம்மம் செய்ய வேண்டிய வஸ்து மண்ணாக இருத்தல். 

குறிப்பு :- சுண்ணாம்பு, சீமெந்து, மாவு, தனி மணலாக இருக்கக் கூடாது. 

♦️2) அந்த மண் சுத்தமானதாக இருத்தல். 

♦️3) முன்னர் தயம்மத்திற்கு உபயோகிக்கப்படாததாக அந்த மண் இருத்தல்.  

♦️4) அம்மண் புளுதி உள்ளதாக இருத்தல். 

♦️5) அந்தந்த நேரம் வந்தபின் அந்தந்த வக்துக்காக தயம்மம் செய்தல். 

♦️6) தண்ணீர் உபயோகிக்க வாய்ப்பில்லாமல் இருத்தல்.  

♦️7) தயம்மத்திற்கு முன் உடம்பிலுள்ள அசுத்தங்களைச் சுரண்டித் தேய்த்துக் கழுவுதல். 

♦️8) முகத்திற்காக ஒரு தடவையும் கைக்காக ஒரு தடவையுமாக மண்ணை எடுப்பது. 

♦️9) தயம்மத்திற்கு முன் கிப்லாவை நிச்சயித்துக் கொள்வது தயம்மும் செய்த பின் அதனை நிச்சயம் செய்தால் தயம்மும் கூடாது.  

♦️10) தொழுகைக்குரிய நேரம் வந்த பின் தயம்மும் செய்வது. 

 

தயம்மத்தின் ஸுன்னத்துக்கள் மூன்றாகும் 

 

♦️1) ஆரம்பத்தில் “பிஸ்மில்லாஹ்” சொல்வது.

 ♦️2) தடவும் போது வலது கையை முதலாவதாகத் தடவுதல். 

♦️3) கைகளுக்கு மஸ்ஹு செய்தல் 

🔸அதாவது கைகளுக்கு மஸ்ஹு செய்யும் போது இடது கையின் பெருவிரலைத் தவிர மற்ற விரல்களி உட்புறத்தை வலது கைவிரல்களின் முதுகுப்புறத்தில் (மேற்பகுதியில்) வைத்த வண்ணம் முழங்கைவரை தடவி அதன்பின் இடதுகையின் உள்ளங்கையை வலது கையின் (கீழ்பகுதியில்) தொட்டவண்ணம் மணிக்கட்டுவரை தடவுதல். உட்பாகத்தில் பின்னர் இடது கைப்பெருவிரலை வலது கைப் பெருவிரலின் மேற்பாகத்தில் தடவுதல் இதேவிதமாக இடதுகைக்கும் வலது கையால் தடவ வேண்டும்.

 

தயம்மத்தை முறிக்கும் காரியங்கள் மூன்றாகும்  

 

♦️1) உழுவை முறிக்கும் செயல்கள் அனைத்தும் தயம்முமை முறித்து விடும். 

♦️2) தண்ணீர் கிடைத்து விடுதல். 

♦️3) இஸ்லாத்தை விட்டும் மதம் மாறிப் போகுதல். 

🔸குறிப்பு :- ஒரு தயம்மத்தைக் கொண்டு ஒரே ஒரு வக்து பரளு தொழுகையையும், அதன் ஸுன்னத்துத் தொழுகையையும், மையித்துத் தொழுகையையும், குர்ஆனைத் தொடுதல், அந்த ஓதலில் உள்ள சஜ்தா திலாவத் ஆகியவற்றைச் செய்யலாம். மற்றொரு வக்தின் பர்ளு தொழுகையை நிறைவேற்ற முடியாது. மேலும் ஆனால் மையித்துத் தொழுகைக்கென்றோ அல்லது குர்ஆனைத் தொடுதல், அல்லது அதிலுள்ள சஜ்தா திலாவத்தை நினைத்துக் கொண்டோ தயம்மம் செய்து விட்டு அந்தத் தயம்மத்தால் வேறு எந்த பர்ளு தொழுகையையும் தொழ முடியாது.

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.