தராவீஹ் தொழுகையும் அதன் நேரமும்

72

தராவீஹ் தொழுகையும் அதன் நேரமும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، عَلَى مِنْبَرِ حِمْصَ يَقُولُ: مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرِ رَمَضَانَ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ إِلَى ثُلُثِ اللَّيْلِ الْأَوَّلِ، ثُمَّ قُمْنَا مَعَهُ لَيْلَةَ خَمْسٍ وَعِشْرِينَ إِلَى نِصْفِ اللَّيْلِ، ثُمَّ قُمْنَا مَعَهُ لَيْلَةَ سَبْعٍ وَعِشْرِينَ حَتَّى ظَنَنَّا أَنْ لَا نُدْرِكَ الْفَلَاحَ، وَكَانُوا يُسَمُّونَهُ السُّحُورَ

 

நாங்கள் ரமழான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவின் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.

 

அறிவிப்பவர் :- நுஃமான் பின் பஷீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 1606

 

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ، فَلَمْ يَقُمْ بِنَا شَيْئًا مِنَ الشَّهْرِ حَتَّى بَقِيَ سَبْعٌ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، فَلَمَّا كَانَتِ السَّادِسَةُ لَمْ يَقُمْ بِنَا، فَلَمَّا كَانَتِ الْخَامِسَةُ قَامَ بِنَا حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ نَفَّلْتَنَا قِيَامَ هَذِهِ اللَّيْلَةِ، قَالَ: فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا صَلَّى مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ حُسِبَ لَهُ قِيَامُ لَيْلَةٍ»، قَالَ: فَلَمَّا كَانَتِ الرَّابِعَةُ لَمْ يَقُمْ، فَلَمَّا كَانَتِ الثَّالِثَةُ جَمَعَ أَهْلَهُ وَنِسَاءَهُ وَالنَّاسَ، فَقَامَ بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ

 

நாங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நோன்பு நோற்றோம். ரமழான் மாதம் முடிய ஏழு நாட்கள் மீதி இருக்கும் வரை எங்களுடன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழவில்லை. பின் இருபத்தி மூன்றாம் இரவின் மூன்றில் ஒரு பாகம் கழியும் வரை எங்களுடன் சேர்ந்து தொழுதார்கள். பின் இருபத்தி நான்காம் இரவு எங்களுடன் தொழவில்லை. இருபத்தி ஐந்தாம் இரவின் சரிபாதி கடக்கும் வரை தொழுதார்கள். இதன்பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இந்த இரவில் நின்று வணங்குவதை இன்னும் அதிகமாக்கியிருக்க வேண்டும் என்றேன். அதற்கு ஒருவர் இமாமுடன் சேர்ந்து கடைசிவரை தொழுவாராயின் அவருக்கு இரவு முழுவதும் தொழுத நன்மை கிடைக்கும் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடை பகர்ந்தார்கள். பின் இருபத்தி ஆறாம் இரவு எங்களுடன் சேர்ந்து தொழவில்லை. இருபத்தி ஏழாம் இரவு அண்ணலாரின் துணைவியர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரையும் திரட்டித் தொழுவித்தார்கள்.
சஹர் தவறிவிடுமோ என அஞ்சும் வரை தொழுகை நீண்டது.

 

அறிவிப்பவர் :- அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 1375

 

மேற்கூப்பட்ட இரு அறிவிப்புக்களிளும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தராவீஹ் தொழுகையை இரவின் முற்பகுதியில் ஆராம்பித்துள்ளார்கள்
முதல் இரவு இரவின் மூன்றில் இரண்டு பகுதிவரை தொழுவித்துள்ளார்கள்.
இரண்டாவது இரவு இரவில் அரைப்பகுதி வரை தொழுவித்துள்ளார்கள். மூன்றாவது இரவு பூராவும் தொழுவித்தார்கள். இவைகளை மூலமாக வைத்து பார்க்கும் போது தராவீஹ் தொழுகையின் நேரம் இரவின் ஆரம்ப பகுதி இஷா தொழுகைக்குப் பிறகு என்பதை நாம் சாதாரணமாக புரிந்து கொள்ளலாம்.

 

عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً قَالَ وَكَانُوا يَقْرَءُونَ بِالْمَئِينِ ، وَكَانُوا يَتَوَكَّئُونَ عَلَى عِصِيِّهِمْ فِي عَهْدِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْ شِدَّةِ الْقِيَامِ 

رواه البيهقي 2/496 رقم الأثر 4801 ، وابن الجعد في مسنده رقم 2825 . إسناده صحيح ، صححه الإمام النووي في المجموع 4/32 ، والخلاصة 1/576

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் மக்கள் இருபது ரக்அத்துகள் தொழுதுவந்தார்கள். நூறு நூறு ஆயத்துகள் கொண்ட சூராவை ஓதினார்கள். உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் எந்தளவு தொழுவார்கள் என்றால். நிற்பதன் சிரமத்தினால் குச்சியின் மீது தாங்கி இருப்பார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸாயிப் பின் யஸீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி பாகம் 2 பக்கம் 496

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலிருந்து உமர் ரலியல்லாஹு அன்ஹு உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலம் வரை தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகளையும் நூறு நூறு ஆயத்துக்கள் கொண்ட சூராக்களை ஓதி வந்ததினால் இரவின் அரைபகுதி இரவின் கடைசிப் பகுதி வரை தராவீஹ் தொழுகை நீண்டு கொண்டு சென்றதை நம்மால் மேற்கூப்பட்ட ஹதீஸ்களை மூலமாக வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

 

குறிப்பு :- தராவீஹ் தொழுகை இரவு காலங்களில் ஓய்வுவெடுத்து ராகத்து பெற்று ரமழான் மாதத்தில் மாத்திரம் தொழக்கூடிய முக்கியமான ஓர் சுன்னத்து தொழுகையாகும் ரமலான் மாதம் முப்பது நாட்களும் இஷாவின் பிந்தின சுன்னத்து தொழுகைக்குப் பின்னர் இத்தொழுகையைத் தொழவேண்டும். இஷா தொழுகைக்குப் பிறகிலிருந்து வைகறைப் பொழுது சுபஹ் வரை இத்தொழுகையின் நேரமாகும் மேலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பத்து ஸலாத்துடன் இருபது ரக்அத்துகள் தொழுது வர வேண்டும் இத்தொழுகை ஹிஜ்ரி இரண்டாம் ஆம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.