தராவீஹ் தொழுகையும் தவறிப் போனவர்களும்

66

தராவீஹ் தொழுகையும் தவறிப் போனவர்களும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

எம் பெருமானார் முஹம்மதே முஸ்தபா ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்கள் தொழுதார்களா? அல்லது இருபது ரக்அத்துகள் தொழுதார்களா? அவர்களை பின்தொடர்ந்த சத்திய ஸஹாபாக்கள் எட்டு ரக்அத்கள் தொழுதார்களா? அல்லது இருபது ரக்அத்துகள் தொழுதார்களா? என்பதில் உலக முஸ்லீம்களுக்கிடையில் பல சந்தேகங்களும் பல பிரிவினைகளும் ஏற்படுவதை சமகாலத்திலிருந்து நாம் பார்த்து வருகிறோம் இதற்கு முக்கிய காரணம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னா (சொல்,செயல், அங்கீகாரம்) விளங்காததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் சாதாரணமாக புரிந்து கொள்ள முடிகிறது.

 

ரமழான் மாதத்தில் பிரயோத்திகமாக குறிப்பாக தொழப்படும் ஓர் தொழுகை தான் தராவீஹ் (கியாமுர் ரமழான்) என்ற பெயரில் அழைக்கப்படும் முக்கியமான ஓர் சுன்னத்து தொழுகையாகும் இந்த தொழுகை ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.

 

عَنْ أَبي هُرَيرَة رَضِيَ اللهُ عَنْه، قال: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرغِّبُ يُرَغِّبُ فِي قِيَامِ رَمَضَانَ

قلت: يرغب الناس في قيام رمضان رواه أحمد وإسناده حسن

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் இரவுகளில் தொழும்படி மக்களுக்கு ஆர்வமூட்டுபவர்களாக இருந்தார்கள்

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 2009 முஸ்லிம்1/259. அஹ்மத் 5017 ஹதீஸ் ஸஹீஹ் ஆதாரப்பூர்வமானது

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதம் வந்து விட்டால் அந்த இரவு காலங்களில் நின்று வணங்குங்கள் என்பதாக மக்களுக்கு ஆசையூட்டக்கூடியவர்களாவும் ஆர்வமூட்டக்கூடியவர்களாகவும் இருந்தார்கள் காரணம்.

 

عَنْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْكُمْ صِيَامَهُ، وَسَنَنْتُ لَكُمْ قِيَامَهُ

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் உங்களுக்கு ரமழானுடைய நோன்பை கடமையாக்கியுள்ளான் அது போன்று நான் அதே ( ரமழான் இரவு காலங்களில் உங்களுக்கு பிரத்தியேகமான) தொழுகையை சுன்னத்தாக்கியுள்ளேன்.

 

அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் இப்னு மாஜா 1328 நஸாயி 2210

 

ரமழான் மாதத்தில் இறைவன் பகலில் நோன்பை கடமையாக்கியதை போண்று எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதே ரமழான் இரவு காலங்களில் பிரத்தியேகமான தொழுகையை நமக்கு ( سنة مؤكده ) முக்கிய சுன்னத்தாக ஏற்படுத்தி தந்துள்ளார்கள் அதனால் தான் ரமலான் மாதத்தில் இத்தொழுகையை தொழும் படி மக்களுக்கு ஆர்வம் ஊட்டியுள்ளார்கள் மேலும் இத்தொழுகையை தொழுவதன் மூலம் இறைவனிடமிருந்து பல சிறப்புக்களை நாம் அடைந்து கொள்ளளாம்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ரமழானில் யார் நின்று வணங்குகிறாரோ அவரது முன்னையே பாவங்கள் மன்னிக்கப்படும்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 200 முஸ்லிம் 759

 

மேற்கூப்பட்ட ஹதீஸில் (قَامَ رَمَضَان) காம ரமலான் அதாவது ரமலானில் நின்று வணங்குங்கள் என்பதாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் அதனால் தான் ரமலான் மாதத்தில் இரவு காலங்களில் குறிப்பாக தொழப்படும் இத்தொழுகைக்கு (قيام رمضان) கியாமுர் ரமலான் என்ற பெயர் கூறப்படுகிறது

 

கியாமுர் ரமழான் என்ற தொழுகைக்கு தராவீஹ் என்ற பெயர் ஏன் கூறப்படுகிறது

 

ரமழான் மாதத்தில் இஷா தொழுகைக்குப் பிறகு கியாமுர் ரமழான் இருபது ரக்அத்துகளையும் மக்கள் இரண்டு அல்லது நான்கு ரக்அத்துகளுக்கு ஒரு ஸலாம் என்ற அடிப்படையில் தொழுது வருகிறார்கள் ஒவ்வொரு இரண்டு அல்லது நான்கு ரக்அத்களுக்கு மத்தியில் ஓய்வு பெற்று ராகத்து பெற்று சுமார் இருபது ரக்அத்துகளையும் முற்காலத்தில் வாழ்ந்த சத்திய ஸஹாபாக்கள் தாபீஈன்கள் தொழுது வந்தார்கள் இதனால் தான் இத்தொழுகைக்கு (صَلاةِ التَّرَاوِيحِ) ஸலாத்துத் தராவீஹ் ஓய்வுவெடுத்து தொழும் தொழுகை என்பதாக பெயர் கூறப்படுகிறது.

 

وسميت الصلاة في الجماعة في ليالي رمضان (التراويح ) حافظ ابن حجر العسقلانی کتاب ,فتح الباری شرح صحیح البخاری

 

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள் ரமழான் மாதத்தினுடைய இரவு காலங்களில் ஜமாத்தோடு தொழுதற்கு தராவீஹ் என கூறப்படும் என்பதாக கூறியுள்ளார்கள்

 

ஆதாரம் புஹாரி ஷரீப் விரிவுரை பத்ஹுல் பாரி 4 / 250

 

குறிப்பு :- பெருநாள் தொழுகையை இன்றைய போலி தவ்ஹீத் வாதிகள் திடல் தொழுகை என்ற பெயரை வைத்து அழைப்பது போன்று நாமும் கியாமுர் ரமழான் என்ற தொழுகையை தராவீஹ் தொழுகை என்ற பெயரை வைத்து அழைக்குகிறோம் இதில் எவ்வித குற்றமும் இல்லை எனவே ரமழான் மாதத்தில் பிரத்தியேகமான தொழுகை அதாவது தராவீஹ் என்ற பெயரில் அழைக்கப்படும் கியாமுர் ரமழான் என்ற தொழுகையாகும் இத்தொழுகை முக்கியமான ஓர் சுன்னத்து என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டலிலிருந்து நாம் தெளிவான முறையில் புரிந்து
கொள்ளலாம்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.