தராவீஹ் தொழுகையை இமாம் ஜமாத்துடன் புதிதாக தோற்றுவித்தவர்கள் யார்? அதன் எண்ணிக்கை எத்தனை?

69

தராவீஹ் தொழுகையை இமாம் ஜமாத்துடன் புதிதாக தோற்றுவித்தவர்கள் யார்? அதன் எண்ணிக்கை எத்தனை?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ قَالَ عُمَرُ نِعْمَ الْبِدْعَةُ هَذِه

 

ரமழானில் ஓரிரவில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு நான் பள்ளிக்குச் சென்றேன். சிலர் தனித்தும், வேறு சிலர் ஜமாஅத்தாகவும் தொழுது கொண்டிருந்தனர். இதனைக் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு இவர்களை ஒரே இமாமின் கீழ் ஜமாஅத்தாக தொழச் செய்வது மிகச் சிறந்தது எனக் கூறி உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் ஜமாஅத்தாக்கினார்கள். மற்றொரு நாள் நான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பள்ளிக்குச் சென்றபோது மக்கள் ஜமாஅத்தாக தொழுது கொண்டிருந்தனர். இது கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘இதோர் நல்ல பித்அத்’ என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துர் றஹ்மான் இப்னு அப்துல் காரி ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம் புஹாரி 2010

 

عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ أنَّ عمر أَمَرَ أُبَيًّا رَضِي الله عَنْهُمَا أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فِي رَمَضَانَ فَقَالَ إِنَّ النَّاسَ يَصُومُونَ النَّهَار وَلَا يحسنون أَن يقرؤوا فَلَوْ قَرَأْتَ الْقُرْآنَ عَلَيْهِمْ بِاللَّيْلِ فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَذَا شَيْءٌ لَمْ يَكُنْ فَقَالَ قَدْ عَلِمْتُ وَلَكِنَّهُ أَحْسَنُ فَصَلَّى بِهِمْ عِشْرِينَ رَكْعَة

رواه الضياء المقدسي في المختارة 1161، وقال: محققه … إسناده حسن وكنز العمال 8/ 409

உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள், ரமழான் இரவில் தொழுவிக்கும்படி உமர் ரலியல்லாஹு அன்ஹு கட்டளையிட்டுவிட்டுச் சொன்னார்கள், ‘மக்கள் பகலில் நோன்பு நோற்கிறார்கள். (களைப்பால்) இரவில் திருமறையை ஒழுங்காக ஓதுகிறார்களில்லை.நீங்கள் (உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்) இரவில் (ஜமாஅத் நடத்துவதன் மூலம்) அவர்கள் மீது திருமறையை ஓதினால் நன்றாக இருக்கும்.’ இது கேட்ட உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள், ‘அமீருல் முஃமினீன்! இது (முன்னர்) நடைபெறாத ஒரு விஷயமாயிற்றே!’ ஆம்! அதனை நான் நன்கறிவேன். ஆயினும் இது நல்ல அழகிய ஒன்றே!’ என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலிறுத்தனர். (பின்) இருபது ரக்அத்துகள் ஜமாஅத்தாக உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

 

அறிவிப்பவர்: உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் கன்ஸுல் உம்மால் 4/ 409 ஹதீஸ் ஸஹீஹ் ஆதாரப்பூர்வமானது

 

عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ عِشْرِينَ رَكْعَةً

 

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்கு இருபது ரக்அத்கள் தொழுகை நடத்துமாறு ஒரு மனிதரை ஏவினார்கள்

 

அறிவிப்பவர் :- ஸாயித் இப்னு யஹ்யா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் இப்னு அபீஷைபா 7682

 

عَنِ الْحَسَنِ اَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ جَمَعَ النَّاسَ عَلٰی اُبَیِّ بْنِ کَعْبٍ فِیْ قِیَامِ رَمْضَانَ ،فَکَانَ یُصَلِّیْ بِھِمْ عِشْرِیْنَ رَكْعَةً

 

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களை உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய தலைமையில் ஒன்று கூட்டினார்கள். அவர்களுக்கு இருபது ரக்அத்துகள் தொழவைத்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் அபூ தாவூத் 2556

 

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான் தராவீஹ் என்ற பெயரில் அழைக்கப்படும் இருபது ரகாஅத்து தொழுகை இமாம் ஜமாத்துடன் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது என்பதை நாம் மேற்கூப்பட்ட ஹதீஸ்களை மூலமாக வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.