தராவீஹ் தொழுகை எட்டு ரகாத்துக்கள் என்று கூறும் ஆதாரமும் அதன் தெளிவும்

66

தராவீஹ் தொழுகை எட்டு ரகாத்துக்கள் என்று கூறும் ஆதாரமும் அதன் தெளிவும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ؟ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزِيدُ فِي رَمَضَانَ وَلَا فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلَا تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلَا تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلَاثًا، قَالَت عَائِشَةُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ! أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ؟ فَقَالَ: “يَا عَائِشَةُ! إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ، وَلَا يَنَامُ قَلْبِي

 

ரமழான் மாதத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ரமழானிலும், சரி ரமழான் அல்லாத மாதங்களிலும் சரி எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று கூறிய பின்னர் அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன என் உள்ளம் உறங்குவதில்லை என்பதாக கூறினார்கள் என்று அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஸலமா பின் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 1147, 2013, 35

 

மேற்கூப்பட்ட ஹதீஸை மூலமாக வைத்து பார்க்கும் போது இன்றைய காலகட்டத்தில் ஏகத்துவம் என்ற பெயரில் இஸ்லாத்தை ஏங்க வைக்கும் போலி தவ்ஹீத் வாதிகளினால் சமகாலத்தில் உருவாக்கப்பட்ட இமாம் ஜமாத்துடன் தொழும் எட்டு ரக்அத்து தொழுகை தராவீஹ் தொழுகையா ? அல்லது தஹஜ்ஜத் வித்ரு தொழுகையா? என்பதை சாதாரணமாக நாம் புரிந்து கொள்ள முடியும் காரணம்.

 

ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ரமழான் மாதத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தொழுகை எவ்வாறு இருந்தது என்று தான் ஆனால் அவர்கள் கூறிய பதில் ரமழான் மாதத்திலும் சரி அது அல்லாத மாதங்களிலும் சரி பதினொரு ரக்அத்தை விட அதிகமாக்கவில்லை என்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பதில் கூறினார்கள் என்பதாக மேற்கூறப்பட்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது என்னவென்றால் கேட்கப்பட்ட கேள்வி கியாமுர் ரமழான் (தராவீஹ் தொழுகையை) குறிக்கும் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறிய பதில் (தஹஜ்ஜத் தொழுகை வித்ரு தொழுகையை) குறிக்கும் காரணம் தராவீஹ் தொழுகை ரமழான் மாதத்தில் மாத்திரம் தொழப்படும் ஓர் தொழுகையாகும் இவைகளை பற்றி தெளிவான முறையில் ஆரம்பத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

 

எனவே அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறிய பதினொரு ரக்அத்துகள் ரமழான் மாதத்தில் மாத்திரம் அல்லாமல் ரமழான் அல்லாத மாதங்களிலும் அதாவது பன்னிரெண்டு மாதமும் தொடர்ச்சியாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனித்தவாறு அவர்களுடைய வீட்டிலேயே அதுவும் ஒவ்வொரு இரவின் கடைசி பகுதியிலும் தூங்கி எழுந்த பின் அதாவது விழித்தெழுந்து இத்தொழுகையை இரண்டு ஸலாமை கொண்டு நான்கு நான்கு ரக்அத்கள் தொழக்கூடியவர்களாக எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்து வந்தார்கள்.

 

ஆனால் இன்றைய நவீன போலி தவ்ஹீத் வாதிகள் ரமழான் அல்லாத மாதங்களை விட்டு விட்டு ரமழான் மாதத்தில் மாத்திரம் பதினொரு ரக்அத்துக்களை குறிப்பாக இமாம் ஜமாத்துடன் அதுவும் பள்ளியில் மக்களை ஒன்று கூட்டியவாறு இஷா தொழுகைக்குப் பிறகு இத்தொழுகையை நான்கு ஸலாமை கொண்டு இரண்டு இரண்டு இரண்டு இரண்டு ரக்அத்துகளாக சுமார் எட்டு ரக்அத்கள் தொழுது வருவதை நாம் அவர்களுடைய பள்ளியில் காணமுடிகிறது.

 

இறை அச்சம் உள்ள முஸ்லீம்களே சற்று சிந்தித்து பாருங்கள் நபிவழி என்ற பெயரில் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறிய அந்த ஹதீஸை தூக்கி பிடிக்கும் நவீன போலி தவ்ஹீத் வாதிகளின் நபிவழி இரவு தொழுகையை சற்று சிந்தித்து பாருங்கள் ரமழான் அல்லாத மாதங்களிலும் தொழப்படும் இத்தொழுகையை ஏன் ரமழான் மாதத்தில் மாத்திரம் தொழுகிறார்கள்? வீட்டில் தொழுத தொழுகையை ஏன் மஸ்ஜிதுகளில் தொழுகிறார்கள்? தனிமையில் தொழுத தொழுகையை ஏன் இமாம் ஜமாத்துடன் ஒன்று சேர்ந்து தொழுகிறார்கள்? தூங்கி எழுந்து தொழப்படும் தொழுகையை தூங்க முன் இஷா தொழுகைக்குப் பிறகு ஏன் தொழுகிறார்கள்? இரண்டு ஸலாமை கொண்டு நான்கு நான்கு ரக்அத்கள் தொழுத தொழுகையை ஏன் நான்கு ஸலாமை கொண்டு இரண்டு இரண்டு இரண்டு இரண்டு ரக்அத்துகளாக ஏன் தொழுகிறார்கள்? மேலே குறிப்பிடப்பட்ட ஹதீஸில் உள்ள தொழுகைக்கும் இன்று இரவு தொழுகை என்ற பெயரில் போலி தவ்ஹீத் வாதிகள் இப்பொழுது தொழும் எட்டு ரக்அத்து தொழுகைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

குறிப்பு :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறிய தொழுகைக்கும் இன்றைய நவீன போலி தவ்ஹீத் வாதிகள் தொழும் தொழுகைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவே அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பன்னிரெண்டு மாதமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுததாக கூறிய தொழுகை வேறு ரமழான் (தராவீஹ் தொழுகையை) குறிக்கும் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறிய பதில் (தஹஜ்ஜத் தொழுகை வித்ரு தொழுகையை) குறிக்கும் காரணம் தராவீஹ் தொழுகை ரமழான் மாதத்தில் மாத்திரம் தொழப்படும் ஓர் தொழுகையாகும் இவைகளை பற்றி தெளிவான முறையில் ஆரம்பத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது

எனவே அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறிய பதினொரு ரக்அத்துகள் ரமழான் மாதத்தில் மாத்திரம் அல்லாமல் ரமழான் அல்லாத மாதங்களிலும் அதாவது பன்னிரெண்டு மாதமும் தொடர்ச்சியாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனித்தவாறு அவர்களுடைய வீட்டிலேயே அதுவும் ஒவ்வொரு இரவின் கடைசி பகுதியிலும் தூங்கி எழுந்த பின் அதாவது விழித்தெழுந்து இத்தொழுகையை இரண்டு ஸலாமை கொண்டு நான்கு நான்கு ரக்அத்கள் தொழக்கூடியவர்களாக எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்து வந்தார்கள் ஆனால் இன்றைய நவீன போலி தவ்ஹீத் வாதிகள் ரமழான் அல்லாத மாதங்களை விட்டு விட்டு ரமழான் மாதத்தில் மாத்திரம் பதினொரு ரக்அத்துக்களை குறிப்பாக இமாம் ஜமாத்துடன் அதுவும் பள்ளியில் மக்களை ஒன்று கூட்டியவாறு இஷா தொழுகைக்குப் பிறகு இத்தொழுகையை நான்கு ஸலாமை கொண்டு இரண்டு இரண்டு இரண்டு இரண்டு ரக்அத்துகளாக சுமார் எட்டு ரக்அத்கள் தொழுது வருவதை நாம் அவர்களுடைய பள்ளியில் காணமுடிகிறது

 

இறை அச்சமுள்ள முஸ்லீம்களே! சற்று சிந்தித்து பாருங்கள் நபிவழி என்ற பெயரில் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறிய அந்த ஹதீஸை தூக்கி பிடிக்கும் நவீன போலி தவ்ஹீத் வாதிகளின் நபிவழி இரவு தொழுகையை சற்று சிந்தித்து பாருங்கள் ரமழான் அல்லாத மாதங்களிலும் தொழப்படும் இத்தொழுகையை ஏன் ரமழான் மாதத்தில் மாத்திரம் தொழுகிறார்கள்? வீட்டில் தொழுத தொழுகையை ஏன் மஸ்ஜிதுகளில் தொழுகிறார்கள்? தனிமையில் தொழுத தொழுகையை ஏன் இமாம் ஜமாத்துடன் ஒன்று சேர்ந்து தொழுகிறார்கள்? தூங்கி எழுந்து தொழப்படும் தொழுகையை தூங்க முன் இஷா தொழுகைக்குப் பிறகு ஏன் தொழுகிறார்கள்? இரண்டு ஸலாமை கொண்டு நான்கு நான்கு ரக்அத்கள் தொழுத தொழுகையை ஏன் நான்கு ஸலாமை கொண்டு இரண்டு இரண்டு இரண்டு இரண்டு ரக்அத்துகளாக ஏன் தொழுகிறார்கள்? மேலே குறிப்பிடப்பட்ட ஹதீஸில் உள்ள தொழுகைக்கும் இன்று இரவு தொழுகை என்ற பெயரில் போலி தவ்ஹீத் வாதிகள் இப்பொழுது தொழும் எட்டு ரக்அத்து தொழுகைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்

 

குறிப்பு :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறிய தொழுகைக்கும் இன்றைய நவீன போலி தவ்ஹீத் வாதிகள் தொழும் தொழுகைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவே அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பன்னிரெண்டு மாதமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுததாக கூறிய தொழுகை வேறு ரமழான் மாதத்தில் குறிப்பாக தொழப்படும் தொழுகை வேறு என்பதை மேற்குறிப்பிட்ட ஹதீஸ்களை மூலமாக வைத்து தெளிவான முறையில் நாம் புரிந்து கொள்ளலாம்.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.