தராவீஹ் தொழுகை ஸஹாபாக்களின் காலத்தில் இருபது ரக்அத்துகள் என்று இமாம்களின் கூற்றாகும்

111

தராவீஹ் தொழுகை ஸஹாபாக்களின் காலத்தில் இருபது ரக்அத்துகள் என்று இமாம்களின் கூற்றாகும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

தராவீஹ் தொழுகை ஸஹாபாக்களுடைய காலத்தில் இருபது ரக்அத்துகள் என்பதாக வஹாபிகளின் முக்கிய இரு இமாம்கள்

 

قال ابن تيمية: ثبت أن الصحابة في عهد عمر كانوا يصلون عشرين ركعة ويوتر بثلاث

كتاب الصيام من المحرر لسليمان الحربي 1 /51 وقال ابن عبد البر في “الاستذكار”2/69, بن ماجة 1327

عشرون ركعة هو الصحيح عن أبي بن كعب رضي الله عنه وقال ابن تيمية في مجموع الفتاوى 23/ 112

 

(இப்னு தைமியா) உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்தில் (தராவீஹ் தொழுகை) இருபது ரக்அத்துகளும் மூன்று வித்ரும் நடைமுறையில் இருந்தது என்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

قال محمد بن عبد الوهاب ذكر في جوابه عن عدد ركعات التروايح أن عمر رضي الله عنه لما جمع الناس على أبي بن كعب كانت صلاتهم عشرين ركعة . فأجاب‏:‏ “الذي أستحب أن تكون عشرين ركعة‏

 

(وفي مجموعة الفتاوى النجدية)

(முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்) உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்தில் மக்களை ஒன்று சேர்த்து உபைய் இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் தராவீஹ் இருபது ரகாத்துக்கள் தொழுது வரப்பட்டுள்ளது எனவே தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் தொழுவதே ஆகுமானதாகும் என்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகளாகும் மேலும் ஸஹாபாக்களுடைய காலங்களிலும் இவ்வாறு தான் இருந்தது என்று அதிகமான இமாம்களுடைய ஏகோ பித்த முடிவாகும்.

 

قال النووي : , صلاة التراويح عشرون ركعة حكم صلاة التراويح في المسجد: السنة في التراويح أن تُؤدَّى جماعةً في المساجد، وهو ما ذهب إليه جمهور الفقهاء

المجموع ” 4 / 31

இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள் புகஹாக்களுடைய ஏகோபித்த முடிவின் படி தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகளாகும் மேலும் அவைகளை பள்ளியில் தொழுவது சுன்னத்தாகும்.

 

قال الترمذي: أكثر أهل العلم من الصحابة وغيرهم على أن صلاة التراويح عشرين ركعة

كتاب الصيام من المحرر لسليمان الحربي 1 51 وقال ابن عبد البر في “الاستذكار” 2/ 69, سنن الترمذي 806

 

இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள் ஸஹாபாக்களுடைய காலத்திலும் அது அல்லாத காலங்களிலும் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் என்று அதிகமான இல்முடையவர்கள் ஏற்றுள்ளார்கள்.

 

قال السرخسي, صلاة التراويح عشرون ركعة

المبسوط ” 2 / 145

இமாம் ஸர்ஹஸி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகளாகும்.

 

عن كثير من السلف, صلاة التراويح عشرون ركعة

انظر : المغني 2 / 604 ، والمجموع 4 / 32

ஸலபுஸ் ஸாலிஹீன்களில் அதிகமானவர்கள் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

 

قال الشافعي: أدركت ببلدنا بمكة الناس يصلون عشرين ركعة

كتاب الصيام من المحرر لسليمان الحربي 1 /51 وقال ابن عبد البر في”الاستذكار” 2/69, وابن ماجة 1327

 

இமாம் ஷாபி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள் மக்கமா நகரில் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் நடைமுறையில் இருந்து என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

 

وصح أن الناس كانوا يصلون على عهد عمر وعثمان وعلي رضي الله عنهم عشرين ركعة ” وهو رأي جمهور الفقهاء من الحنفية والشافعية والحنابلة وقال النووي : صلاة التراويح سنة بإجماع العلماء ، ومذهبنا أنها عشرون ركعة بعشر تسليمات وتجوز منفردا وجماعة

المجموع ” 4 / 31 قال السرخسي وهو من أئمة المذهب الحنفي : فإنها عشرون ركعة سوى الوتر عندنا .” المبسوط ” 2 / 145 وقال ابن قدامة : والمختار عند أبي عبد الله ” يعني الإمام أحمد ” رحمه الله ، فيها عشرون ركعة ، وبهذا قال الثوري ، وأبو حنيفة ، والشافعي ” المغني ” 1 / 457

உமர் ரலியல்லாஹு அன்ஹு உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அலி ரலியல்லாஹு அன்ஹு இவர்களுடைய கால கட்டத்தில் தராவீஹ் தொழுகை இருபது ரகாத்துக்களையும் மக்கள் தொழுது வந்தார்கள் அதை தொடர்ந்து வந்த மாபெரும் இமாம்களும் அவ்வழியில் சென்றார்கள் மேலும், ஹனபி , ஷாபி, ஹன்பலி, போன்ற மாபெரும் மத்ஹபுகளிலும் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் என்று தெளிவான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

عَنْ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ

رواه البخاري 2652 ، ومسلم 2533

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எனது உம்மத்தில் சிறந்தவர்கள் எனது நூற்றாண்டில் வாழ்பவர்களாவர். பின்னர் அவர்களைப் பின்பற்றியோர்கள். பின்னர் அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆவார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 2652 முஸ்லிம் 2533

 

قال النووي رحمه الله :”الصَّحِيحُ أَنَّ قَرْنَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الصَّحَابَةُ  وَالثَّانِي : التَّابِعُونَ  وَالثَّالِثُ : تَابِعُوهُمْ

انتهى من “شرح النووي على مسلم ” 16/85

முற்காலம் சிறந்த காலம் என்பதாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் அதில் ஆரம்ப காலம் ஸஹாபாக்கள் வாழ்ந்த காலம் அடுத்த காலம் தாபீஈன்கள் வாழ்ந்த காலம் அதற்கடுத்த காலம் தபஅத்தாபீஈன்கள் வாழ்ந்த காலம் என்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

ஆதாரம் ஸரஹ் முஸ்லிம் 16 / 85

 

சத்திய ஸஹாபாக்கள் வாழ்ந்த காலம் அவர்களை பின்தொடர்ந்த தாபீஈன்கள் வாழ்ந்த காலம் அவர்களை பின்தொடர்ந்த தபஅத்தாபீன்கள் இவ்வாறான சீதேவிகள் வாழ்ந்த முற்காலங்களிலும் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் நடைமுறை படுத்தப்பட்டிருந்ததை நாம் இமாம்களுடைய கருத்துக்களை மூலமாக வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.