தஸ்பீஹ் தொழுகையின் துஆ

68

தஸ்பீஹ் தொழுகையின் துஆ

 

اَللّٰهُمَّ اِنِّىْ أَسْئَلُكَ تَوْفِيْقَ اَهْلِ الْهُدٰى وَاَعْمَالَ اَهْلِ الْيَقِيْنِ، وَمُنَاصَحَةَ اَهْلِ التَّوْبَةِ، وَعَزْمَ اَهْلِ الصَّبْرٍ، وَجِدَّ اَهْلَ الْخَشْيَةِ، وَطَلَبَ اَهْلِ الرَّغْبَةٍ، وَتَعَبُّدَ اَهْلِ الْوَرْعِ ،وَعِرْفَانَ اَهْلِ الْعِلْمِ، حَتّٰى اَخَافُكَ اللّٰهُمَّ اِنِّيْ أَسْئَلُكَ مَخَافَةً تَحْجُزُنِىْ عَنْ مَّعَاصِيْكَ، حَتّٰى اَعْمَلَ بِطَاعَتِكَ عَمَلًا اَسْتَحِقُّ بِهِ رِضَاكَ، وَحَتّٰى اُنَاصِحَكَ بِاتَّوْبَةِ خَوْفًا مِّنْكَ، وَحَتّٰى اَخْلُصَ لَكَ النَّصِيْحَةَ حَيَاءً مِّنْكَ، وَحَتّٰى اَتَوَكَّلُ عَلَيْكَ فِى الْاُمُوْرِ حُسْنَ ظَنٍّ بِكَ، سُبْحَانَ خَالِقِ النَّارِ. رَبَّنَا اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفٍرْ لَنَآ اِنَّكَ عَلٰى شَيْئٍ قَدٍيْرٌ بِرَحْمَتِكَ يَآاَرْحَمَ الرَّاحِمِيْنَ

 

யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னைப் பயப்படுவதற்காக நேர்வழி உடையவர்களுக்கு நீ செய்தது போன்ற நல்லுதவியையும் உறுதியுடையவர்களின் அமல்களையும், தவ்பா உடையவர்களின் தூய செயலையும், பொறுமையுடையவர்களின் உறுதியையும் (உன்னை) பயந்தவர்களின் முயற்சியையும், ஆர்வமுள்ளோரின் தேட்டத்தையும், பேணுதலுடையவர்களின் வணக்கத்தையும் கல்விமான்களின் ஞானத்தையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். யா அல்லாஹ்! உனக்கு மாறு செய்வதை விட்டும் என்னைத் தடுக்கும்படியான பயத்தை உன்னிடம் நான் வேண்டுகிறேன். (ஏனெனில்) உன்னுடைய திருப்திக்கு எதைக் கொண்டு நான் தகுதி பெறுவேனோ அத்தகைய அமலை செய்து உனக்கு வழிபடுவதின் மூலமும், உன்னை பயந்து வழிபடுவதின் மூலமும், உன்னைப் பயந்து தவ்பாச் செய்வதில் உனக்கு நான் கலப்பற்ற தூய எண்ணத்துடன் இருப்பதற்காகவும், நான் உன்னை தூய எண்ணத்துடன் நேசிப்பதற்காகவும், எல்லாக் காரியங்களிலும் உன்னிடம் நல்லெண்ணம் வைத்து உன்மீது நான் நம்பிக்கை வைப்பதற்காகவும் (உன் பயத்தை வேண்டுகிறேன்) ஒளிபடைத்த நீ மகாத்தூயவன். எங்களுடைய இரட்சகனே! எங்களின் ஒளியை எங்களுக்கு நீ நிரப்பமாக்கி வைத்து எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி பெற்றவன். அருளாளர்களிலெல்லாம் மாபெரும் அருளாளனே! உன்னுடைய அருளால் இவற்றை எங்களுக்கு அருள்வாயாக!

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.