திக்ரு மஜ்லிஸின் சிறப்புக்கள்
திக்ரு மஜ்லிஸின் சிறப்புக்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ، يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ، فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ. قَالَ فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا. قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهْوَ أَعْلَمُ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي قَالُوا يَقُولُونَ يُسَبِّحُونَكَ، وَيُكَبِّرُونَكَ، وَيَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ. قَالَ فَيَقُولُ هَلْ رَأَوْنِي قَالَ فَيَقُولُونَ لاَ وَاللَّهِ مَا رَأَوْكَ. قَالَ فَيَقُولُ وَكَيْفَ لَوْ رَأَوْنِي قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً، وَأَشَدَّ لَكَ تَمْجِيدًا، وَأَكْثَرَ لَكَ تَسْبِيحًا. قَالَ يَقُولُ فَمَا يَسْأَلُونِي قَالَ يَسْأَلُونَكَ الْجَنَّةَ. قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لاَ وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا. قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا، وَأَشَدَّ لَهَا طَلَبًا، وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً. قَالَ فَمِمَّ يَتَعَوَّذُونَ قَالَ يَقُولُونَ مِنَ النَّارِ. قَالَ يَقُولُ وَهَلْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لاَ وَاللَّهِ مَا رَأَوْهَا. قَالَ يَقُولُ فَكَيْفَ لَوْ رَأَوْهَا قَالَ يَقُولُونَ لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا، وَأَشَدَّ لَهَا مَخَافَةً. قَالَ فَيَقُولُ فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ. قَالَ يَقُولُ مَلَكٌ مِنَ الْمَلاَئِكَةِ فِيهِمْ فُلاَنٌ لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ. قَالَ هُمُ الْجُلَسَاءُ لاَ يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்’ என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் ‘என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்’ என்று வானவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்’ என்பார்கள். அதற்கு இறைவன், ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்’ என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவுவான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)’ என்று பதிலளிப்பார். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்’ என்பர். அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்’ என்று கூறுவான்.
அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்’ என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்’ என்று கூறுவான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6408
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ ؛ فَارْتَعُوا ” قَالُوا : وَمَا رِيَاضُ الْجَنَّةِ ؟ قَالَ : حِلَقُ الذِّكْرِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சுவனத்துப் பூங்காவின் பக்கம் நீங்கள் செல்ல நேர்ந்தால், அதனுடைய “பழங்களை சாப்பிடுங்கள்”. சஹாபாக்கள் கேட்டார்கள் “சுவனத்து பூங்கா என்றால் என்ன? என்று. அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை திக்ர் செய்ய ஒன்று கூடும் இடம் திக்ர் மஜ்லிஸ் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3510 அஹ்மது 12523
قلنا يا رسول الله وما رياض الجنة؟ قال : مجالس الذكر
நாங்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யா ரஸுலல்லாஹ்! சுவனத்து பூங்கா என்றால் என்ன? என்று கேட்க. அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை திக்ர் செய்ய ஒன்று கூடும் இடம் திக்ர் மஜ்லிஸ் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம்” முஸ்தத்ரக் 954
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ اِنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلٰى حَلْقَةٍ مِنْ اَصْحَابِه فَقَالَ مَا اَجْلَسَكُمْ قَالُوْا جَلَسْنَا نَذْكُرُاللهَ وَنَحْمَدُهُ عَلٰى مَاهَدَانَا لِلْاِسْلَامِ وَمَنَّ عَلَيْنَا قَالَ اَللهِ مَااَجْلَسَكُمْ اِلَّا ذٰلِكَ قَالُوْا اللهِ مَااَجْلَسَنَا اِلّاَ ذٰلِكَ قَالَ اَمَا اَنِّيْ لَمْ اَسْتَحْلِفْكُمْ تَهْمَةً لَكُمْ وَلٰكِنَّهُ اَتَانِيْ جِبْرِيْلُ فَاَخْبَرَنِيْ اَنَّ اللهَ تَعَالٰى يُبَاهِيْ بِكُمُ الْمَلٰئِكَةَ اَخْرَجَهُ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒரு நாள் தங்கள் தோழர்களான ஸஹாபாக்களின் கூட்டத்திற்கு சென்று, ‘நீங்கள் ஏன் என்று சேர்ந்து கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டார்கள். ஸஹாபாக்கள், அல்லாஹ் எங்களுக்கு பெரும் உபகாரம் செய்து எங்களை சத்திய மார்க்கத்தில் நேர்வழி காட்டியதற்காக வேண்டி அவனை நாங்கள் புகழ்ந்து திக்ரு செய்து கொண்டிருக்கிறோம் என்பதாகச் சொன்னார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (ஸஹாபாக்களை பார்த்து) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் இதற்காகத்தானா ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டார்கள். ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இதற்காகவேதான் ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறோம். அச்சமயம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் உங்கள் பேரில் சந்தேகப்பட்டதற்காக சத்தியம் செய்து கேட்கவில்லை, எப்போதும் அல்லாஹ் உங்களைக் கொண்டு மலக்குகளிடத்தில் பெருமை பேசுவதாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்து சொன்னார்கள்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஸயீத் அல்குதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3379
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَيَبْعَثَنَّ اللهُ أَقْوَاماً يَوْمَ الْقِيَامَةِ فِي وُجُوهِهِمُ النُّورُ عَلَي مَنَابِرِ اللُّؤْلُؤِ يَغْبِطُهُمُ النَّاسُ لَيْسُوا بِأَنْبِيَاءَ وَلاَ شُهَدَاءَ قَالَ: فَجَثَا أَعْرَابِيٌّ عَلَي رُكْبَتَيْهِ فَقَالَ: يَارَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَلِّهِمْ لَنَا نَعْرِفْهُمْ قَالَ : هُمُ الْمُتَحَابُّونَ فِي اللهِ مِنْ قَبَائِلَ شَتَّي وَبِلاَدٍ شَتَّي يَجْتَمِعُونَ عَلَي ذِكْرِاللهِ يَذْكُرُونَهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் சிலரை அவர்கள் முகங்கள் ஒளி வீசும் நிலையில் கியாமத் நாளன்று எழுப்புவான். அவர்கள் முத்து மேடைகளில் அமர்ந்திருப்பார்கள், அவர்களைப் பார்த்து மக்கள் பொறாமை கொள்வார்கள். அவர்கள் நபிமார்களோ, ஷுஹதாக்களோ அல்லர்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னபோது, ஒரு. (ஸஹாபி) கிராமவாசி முழந்தாளிட்டு அமர்ந்த நிலையில், யா ரஸூலல்லாஹ்! அவர்கள் யாரென்று விளக்குங்கள், அறிந்து கொள்கிறோம்’ என்று கேட்டார். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் பிரியத்தால், பல்வேறு கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வந்து ஒன்றுகூடி அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டவர்கள்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தபரானி, மஜ்மஉஸ் ஜவாயித் 3678
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்