தினம்தோறும் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது முக்கியமான ஸுன்னத்தாகும். இதனை மறுப்பது பித்அத்தாகும்

80

தினம்தோறும் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது முக்கியமான ஸுன்னத்தாகும். இதனை மறுப்பது பித்அத்தாகும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ مُحَمَّدٍ قَالَ قُلْتُ لِأَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ هَلْ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الصُّبْحِ قَالَ نَعَمْ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا

 

நான் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், ருகூஉவிற்குப் பின்பு ஓதினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1200 நஸாயி 1071

 

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْنُتُ فِي صَلَاةِ الصُّبْحِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- பர்ராஃ இப்னு ஆசிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 1229, தாரமி 1650

 

عَن عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْنُتُ في صَلَاةِ الفَجْرِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 1061

 

மேற்கூறிய ஹதீஸ்கள் பிரகாரம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது. இருப்பினும் சுபஹ் தொழுகையில் குறிப்பிட்ட காலம் வரை குனூத் ஓதினார்களா? அல்லது பயணிக்கின்ற வரை குனூத் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதினார்களா? என்ற கருத்தை கீழ்காணும் ஹதீஸ்களை மூலாதாரமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ளலாம்.

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ‏ قَنَتَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ ثُمَّ تَرَكَهُ وَأَمَّا فِى الصُّبْحِ فَلَمْ يَزَلْ يَقْنُتُ حَتَّى فَارَقَ الدُّنْيَا

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். பின்னர் அதனை விட்டு விட்டார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே இருந்தார்கள்.

 

أخرجه عبد الرزاق في المصنف 3/110 ومن طريقه الدارقطني في السنن 2/39 وأخرجه ابن أبي شيبة في المصنف 2/312 وأحمد في المسند 3/162 وعنه البيهقي في السن 2/201 قال الحافظ الهيثمي في مجمع الزوائد 2/139

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் :- ரஸ்ஸாக் “முஸன்னப்” 3/110 தாரகுத்னி “ஸுனன்” 2/39 இப்னு அபீஷைபா “முஸன்னப்” 2/312 அஹ்மத் “முஸ்னத்” 3/162 பைஹகி “ஸுனன்” 2/201 ஹைதமி ” மஜ்மூஃ அல்ஸவாயித் 2/139 போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்கூறப்பட்ட ஹதீஸின் அறிவப்பார்கள் பற்றி தகவல் பின்வருமாறு

 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ح وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِىُّ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِىُّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ الرَّازِىُّ عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

 

இந்த அறிவிப்பாளர் வரிசையில் அனைவரும் நம்பகமானவர்கள் என்று உருதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அபூ ஜஃபர் அர்ராஸி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பலஹீமானவர் என்று கூறியவாறு மேற்கூறப்பட்ட ஹதீஸை வஹாபிஷ வாதிகள் மறுக்க முற்படுவது முற்றிலும் தவறாகும்.

 

அபூ ஜஃபர் அர்ராஸி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பலஹீனமானவர் என்று சில அறிஞர்கள் கூறிய கருத்து பின்வருமாறு

 

قال النسائي ليس بالقوي وقال أحمد بن حنبل والنسائي وغيرهما ليس بالقوي وقال عمرو بن علي فيه ضعف وقال العجلي ليس بالقوي. تهذيب التهذيب

 

அதே போன்று அபூ ஜஃபர் அர்ராஸி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நம்பகமானவர்கள் என்று பல அறிஞர்கள் கூறிய கருத்துக்களை ஏன் மறுக்க முற்படுகிறார்கள்! அவை பின்வருமாறு

 

قال يحيى بن معين ثقة وقال أبو حاتم ثقة وقال أبو زرعة شيخ يهم كثيرًا وكان ثقة وقال ابن المديني هو عيسى بن أبي عيسى ثقة كان يخلط وقال حنبل عن أحمد صالح الحديث وقال ابن المديني كان عندنا ثقة وقال ابن عمار الموصلي ثقة وقال ابن عدي له أحاديث صالحة وقال ابْن عمار ثقة وقال ابن عبد البر هو عندهم ثقة عالم بتفسير القرآن وقال الحاكم ثقة. تهذيب التهذيب وسير أعلام النبلاء ولسان الميزان والتاريخ الكبير والطبقات الكبرى

 

மேற்கூறிய இருதரப்பு அறிஞர்களின் கருத்து பிரகாரம் அபூ ஜஃபர் அர்ராஸி ரஹ்மத்துல்லாஹ் அவர்களை சில அறிஞர்கள் குறைகூறி உள்ளனர். இருப்பினும் பல அறிஞர்கள் அவர்களை நம்பகமானவர்கள் என்ற கருத்தை பறைசாற்றிக் கூறியுள்ளார்கள். மேலும் அபூ ஜஃபர் அர்ராஸி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வழியாக வரும் ஹதீஸ் எப்போது பலஹீனம் அடையும் என்ற கருத்துக்களையும் அறிஞர்கள் பின்வருமாறு கூறுகிறனர்.

 

أبو جعفر الرازي ومغيرة قال ابن معين : وكان ثقة خراسانياً وقال مرّة أخرى ثقة وهو يغلط فيما يروي عن مغيرة وقال علي بن المديني يخلّط فيما روى عن مغيرة كان عندنا ثقة

 

குறிப்பு :- அபூ ஜஃபர் அர்ராஸி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நம்பகமானவர்கள் என்று உருதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில அறிஞர்கள் அவர்கள் இடம்பெரும் ஹதீஸ்களை மறுப்பதற்கான முக்கிய காரணம். அபூ ஜஃபர் அர்ராஸி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வழிகயாக ஏதாவது ஓர் ஹதீஸ் இடம் பெறும்போது. அதில் முஹய்ரா என்பவர் இடம் பெற்றால் அந்த ஹதீஸ்களை லயீப் பலஹீமானமான ஹதீஸ் என அறிஞர்களால் அறிவிக்கப்படும். ஆக சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது சம்பந்தமான ஹதீஸில் அபூ ஜஃபர் அர்ராஸி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வழியாக முஹய்ரா என்பவர் இடம் பெறவில்லை. ஆக மேற்கூறிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸே அன்றி எக்காலமும் பலஹினமான ஹதீஸாக ஆகமாட்டாது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் மேற்கூறிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று அறிஞர்களால் உருதி செய்யப்பட்ட தகவல் பின்வருமாறு.

 

يقنت في الصبح حتى فارق الدنيا حديث صحيح رواه جماعة من الحفاظ وصححوه وممن نص على صحته في شرح المهذب ورواه الدارقطني بأسانيد صحيحة أبو جعفر عن مغيرة بل رواه عن معاذ بن أنس ثم إن الحديث قد صححه الإمام الشافعي وهو مذهبه وصححه الحاكم والبيهقي كما في سننه 2/201 وصححه الإمام النووي في الأذكار وفي المجموع 3/504 حيث قال حديث صحيح رواه جماعة من الحفاظ وصححوه وممن نص على صحته الحافظ أبو عبدالله البلخي اهـ وكذا صححه أو حسنه البغوي في شرح السنة بإقراره الحاكم وكذلك صححه شيخ الحافظ ابن حجر وهو الحافظ ابن الملقن في تحفة المحتاج 1/304 قال الحافظ نور الدين الهيثمي في مجمع الزوائد 2/139 رجاله موثقون قلت وهو متصل صحيح

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். பின்னர் அதனை விட்டு விட்டார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே இருந்தார்கள் என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று அனைத்து அறிஞர்களும் உருதி செய்துள்ளார்கள் என்ற கருத்தை வஹாபிஷ அமைப்புக்களுக்கு நாம் மீண்டும் மீண்டும் ஞாபகம் ஊட்டுக் கொள்கிறோம்.

 

சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது பித்அத் என்ற தவறான கருத்துக்களும் அதற்குறிய தெளிவுகளும்

 

عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْقُنُوتِ فِي صَلَاةِ الصُّبْحِ

أخرجه البيهقي في سننه 2/214 والدارقطني في سننه 1688 وهو ضعيف فيه محمد بن يعلى وعنبسة وعبد الله بن نافع كلهم ضعفاء

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபஹ் (தொழுகையில்) குனூத் ஓதுவதைத் தடுத்தார்கள்.

 

அறிவிப்பவர் :- உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி” ஸுன்னத் 2/214, தாரகுத்னி 1688

 

இந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களில் அதிகமானவர்கள் பலஹீனமானவர்கள் என்ற கருத்தை அறிஞர்கள் உறுதி செய்துள்ளார்கள். ஆக மேற்கூறிய ஹதீஸ் (லயீப்) பலஹீனமானதாகும்.

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ الْقُنُوتَ فِي صَلاَةِ الْفَجْر بِدْعَة

عن ابن عباس رضي الله تعالى عنهما أن القنوت في صلاة الفجر بدعة وعن حديث ابن عباس أن القنوت في الصبح بدعة أنه ضعيف جدا وقد رواه البيهقي من رواية أبي ليلى الكوفي وقال هذا لا يصح وأبو ليلى متروك النووي المجموع 4/670

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக பஜ்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது பித்அத்தாகும்.

 

ஆதாரம் :- பைஹகி 2/214 தாரகுத்னி 2/41

 

இந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களில் சிலர் பலஹீனமானவர்கள் என்ற கருத்தை அறிஞர்கள் உறுதி செய்துள்ளார்கள். ஆக மேற்கூறிய ஹதீஸ் (லயீப்) பலஹீனமானதாகும்.

 

عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ لِأَبِي يَا أَبَةِ إِنَّكَ قَدْ صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ هَاهُنَا بِالكُوفَةِ نَحْوًا مِنْ خَمْسِ سِنِينَ أَكَانُوا يَقْنُتُونَ قَالَ أَيْ بُنَيَّ مُحْدَثٌ

 

அபூ மாலிக் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தன் தந்தையிடம். தந்தையே! நீங்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூ பக்கர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும்” ஆகியோருக்குப் பின்னால் தொழுதிருக்கின்றீர்கள், அவர்கள் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்களா? என்று கேட்க, மகனே அது புதிதாக உறுவாக்கப்பட்டது. என்று தந்தை கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ மாலிக் அஸ்ஜயீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 402, 244, அஹ்மத் 15879, 27209, மற்ற அறிவிப்பில்

 

فَكَانُوا يَقْنُتُونَ فِي الْفَجْرِ فَقَالَ أَيْ بُنَيَّ مُحْدَثٌ

 

அவர்கள் (அனைவரும்) பஜ்ர் (தொழுகையில்) குனூத் ஓதுபவர்களாக இருந்தார்களா? என்று கேட்க, மகனே அது புதிதாக உறுவாக்கப்பட்டது. என்று தந்தை கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ மாலிக் அஸ்ஜயீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1242

 

ஆரம்ப ஹதீஸில் பொதுவாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ பக்கர் உமர் உஸ்மான் அலி ரலியல்லாஹு அன்ஹும்” ஆகியோர்கள் பொதுவாகவே குனூத் ஓதவில்லை என்ற கருத்தையும், மற்ற ஹதீஸில் சுபஹ் தொழுகையில் குனூத் ஓத வில்லை என்ற கருத்தையும் மேற்கூறிய இரு ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

இங்கு நாம் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலும் ஸஹாபாக்களின் காலத்திலும் ஒவ்வொரு பர்ளு தொழுகையிலும் சோதனை காலங்களில் குனூத் ஓதுவது நடைமுறையில் இருந்தது. வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது நடைமுறையில் இருந்தது. சுபஹ் தொழுகையிலும் குனூத் தோதனையான காலங்களிலும் ஓதப்பட்டது அதுபோல தினம்தோறும் ஒவ்வொரு சுபஹ் தொழுகையிலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குனூத் ஓதுவது நடைமுறையில் இருந்தது என்ற கருத்தை தரும் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நம்மால் காண முடிந்தது. அப்படி இருக்க மேற்கூறிய இரு ஹதீஸ்களும் குனூத் ஓதுவது புதிதாக உருவாக்கப்பட்டது என்று கூறியதன் காரணம் என்ன? இதன் அர்த்தம் என்ன?

 

عبد الله بن عباس رضي الله عنهما في دعاء القنوت وأنه بدعة وعند الفقهاء القنوت الدعاء

 

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூற்று பிரகாரம் குனூத்தில் ஓதப்படும் துஆக்கள் தான் பித்அத் புதிதாக உருவாக்கப்பட்டது. புகஹாக்களிடத்தில் குனூத் என்பது துஆவை குறிக்கும்.

 

மேற்கூறிய இரு ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ள குனூத் என்பதன் அர்த்தம் :- துஆக்களை குறிக்கும். மேலும் குனூத் ஓதுவது பித்அத் என்று கூறிய காரணம். தாபீன்கள் காலத்தில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அபூ பக்கர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும்” ஆகியோர்கள் குனூத்தில் ஓதிய துஆக்கள் அல்லாத வேறு விதமான புதிதாக இயற்றிய துஆக்களை தாபீன்கள் ஓதி வந்தார்கள். அது குனூத்துன் நாஸிலாவாக இருக்கலாம், அல்லது வித்ரு குனூத்தாக இருக்கலாம், அல்லது சுபஹ் குனூத்தாக இருக்கலாம். ஆக குனூத் பித்அத் அல்ல. குனூத்தில் ஓதப்படும் புதிய துஆக்கள் தான் பித்அத் புதிதாக உருவாக்கப்பட்டது என்ற கருத்தை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.