திருக்குர்ஆன் தப்ஸீர் விளக்கவுரை நூல்களும் சமகாலத்து அறிஞர்களும்
திருக்குர்ஆன் தப்ஸீர் விளக்கவுரை நூல்களும் சமகாலத்து அறிஞர்களும்
قُلْ لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّـكَلِمٰتِ رَبِّىْ لَـنَفِدَ الْبَحْرُ قَبْلَ اَنْ تَـنْفَدَ كَلِمٰتُ رَبِّىْ وَلَوْ جِئْنَا بِمِثْلِهٖ مَدَدًا
(நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (முழுமையாக எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!”
(அல்குர்ஆன் : 18:109)
திருக்குர்ஆனுக்கு எத்தனை தப்ஸீர் விரிவுரைகள் வந்த போதிலும், பல அறிஞர்கள் எழுதிய போதிலும். இறைவேதம் திருக்குர்ஆனுக்கு முழுமையான விரிவுரை இந்த பிரபஞ்சத்தில் எவர்களாலும் இதுவரை காலமும் எழுதி முடிக்க வில்லை. இதனை முழுமைப் படுத்த எந்த மார்க்க அறிஞர்களும் பிறக்கவும் இல்லை. இனி பிறக்க போவதும் இல்லை.
இவ்வாறு இருக்கையில் நாங்கள் தான் திருக்குர்ஆனை முழுமையாக புரிந்து வைத்திருக்கிறோம் இஸ்லாத்தை புரிந்து வைத்திருக்கிறோம் என்று ஒவ்வொரு இஸ்லாமிய கொள்கை அமைப்புக்களும் மாறுதட்டி பேசுவதை கேட்கும் போது வேடிக்கையாக உள்ளது. முன் சென்ற மார்க்க அறிஞர்கள் அறிவு ஞானத்தை கொண்டு பல திருக்குர்ஆன் விரிவுரைகளை எழுதி முடித்தார்கள். இருப்பினும் அவர்களை விமர்சனம் செய்யும் சமகாலத்திலுள்ள அறிஞர்கள் இன்று வரைக்கும் ஒரு விரிவுரை நூல்களை கூட எழுதி முடிக்க வில்லை.
ஆச்சரியம் என்னவெனில் அல்லாஹ் முன்னைய நூற்றாண்டில் வாழ்ந்த இமாம்கள் அறிஞர்களுக்கு மார்க்க அறிவை அதிகளவில் கொடுத்துள்ளான். வாய் பேச்சை குறைவாக கொடுத்துள்ளான். சமகாலத்து மார்க்க அறிஞர்களுக்கு அறிவை குறைவாக கொடுத்துள்ளான். வாய் பேச்சை அதிகமாகவே கொடுத்துள்ளான். இவர்களது வாய் பேச்சுக்கள் பூரண இஸ்லாம் ஆகாது. அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன். அல்ஹம்துலில்லாஹ்
திருக்குர்ஆன் தப்ஸீர் விளக்கவுரை நூல்கள் பின்வருமாறு