திருமணத்தின் சிறப்புக்கள்

276

திருமணத்தின் சிறப்புக்கள்

 

 முன்னுள்ள நபிமார்களுக்கும் திருமணம் ஆகுமாக்கப்பட்டுள்ளது

 

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) உங்களுக்கு முன் பல ரசூல்மார்களை அனுப்பி வைத்தோம். மேலும் அவர்களுக்கு மனைவி மற்றும் மக்களையும் அளித்திருந்தோம்.

 

சூரா ரஃது ஆயத் 38

 

திருமணம் உங்களுக்கும் ஆகுமாக்கப்பட்டுள்ளது 

 

وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًا وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَٰجِكُم بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ் உங்களிலிருந்தே உங்களுக்காக மனைவிகளை படைத்திருக்கிறான். அன்றி உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும், உற்பத்தி செய்து, உங்களுக்கு நல்ல ஆகாரங்களையும் புகட்டுகிறான்.

 

சூரா நஹ்லு ஆயத் 72

 

மன அமைதி, அன்பு, நேசம், பாசம், அனைத்தும் திருமணத்தின் மூலம் கிடைக்கப் பெறும்

 

خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًا لِّتَسْكُنُوٓاْ إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً

 

குர்ஆன் கூறுகிறது உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை அல்லாஹ் படைத்துள்ளான். நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுவதற்காக உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டு பண்ணியுள்ளான்.

 

சூரா ரூம் ஆயத் 21

 

திருமணம் செய்வதன் மூலம் பரம்பரை பெருகும் 

 

فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ‌ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً

 

குர்ஆன் கூறுகிறது உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணம் முடித்துக் கொள்ளுங்கள்.

 

சூரா நிஷா ஆயத் 3

 

நல்ல முறையில் திருமணம் செய்து அல்லாஹ்விற்கு முழுவதும் அடிபணிந்து வாழ்ந்தவர்களுக்கு மறுமையில்
கிரீடம் சூட்டப்படும்

 

عَنْ رَجُلٍ مِنْ أَبْنَاءِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَزَوَّجَ لِلَّهِ تَوَّجَهُ اللَّهُ تَاجَ الْمُلْكِ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் இறைவனுக்காக (அவனின் விதிகளுக்கு கட்டுப்பட்டு) திருமணம் முடித்தாரோ அவருக்கு அல்லாஹ் (மறுமை நாளில்) அரசாங்கத்தினுடைய கிரீடத்தை சூட்டுவான்.

 

ஆதாரம் :- மிஷ்காதுல் மஸாபீஹ் 4275

 

திருமணத்தின் மூலம் மனித வாழ்க்கை அபிவிருத்தியடைகிறது. இரணம் விஸ்தீரணம் அடையும்

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجُوا النِّسَاءَ، فَإِنَّهُنَّ يَأْتِينَكُمْ بِالمَالِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பெண்களைத் திருமணம் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அப்பெண்கள் உங்களுக்கு செல்வத்தின் (அபிவிருத்தியை) கொண்டு வருகின்றார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் ஹாகிம் 2726

 

திருமணம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும் 

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النِّكَاحُ مِنْ سُنَّتِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். திருமணம் என்னுடைய ஸுன்னத்தான வழிமுறையாகும்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1846

 

திருமணம் செய்வது கொள்வது முன்னுள்ள நபிமார்களின் வழிமுறையாகும் 

 

عَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ :- فذكر منها النِّكَاحُ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான்கு விஷயங்கள் நபிமார்களின் வழிமுறையாகும். அதில் ஒன்றுதான் திருமணமாகும்.

 

அறிவிப்பவர் :- அபூ அய்யூப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1080 அஹ்மது ‌23581

 

திருமணம் செய்து கொண்டோர் மார்க்கத்தின் ஒரு பகுதியை பூர்த்தி செய்து விட்டார்

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدِ اسْتَكْمَلَ نِصْفَ دِينِهِ فَلْيَتَّقِ اللهَ فِي النِّصْفِ الْبَاقِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எந்த அடியார் திருமணம் செய்து கொண்டாரோ அவர் மார்க்கத்தில் இரண்டில் ஒரு பகுதியை நிலைநிறுத்தி விட்டார். மீதப் பகுதியில் அவர் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 5486 தப்ரானி 7647

 

ஸாலிஹான மனைவி கிடைத்து விட்டால் மார்க்கத்தின் பாதி பூர்த்தி அடைவது மட்டுமின்றி அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கப்பெறும்

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَن رَزَقَهُ اللَّهُ امرَأَةً صَالِحَةً فَقَد أَعَانَهُ عَلَى شَطرِ دِينِهِ، فَليَتَّقِ اللَّهَ فِي الشَّطرِ الثَّانِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யாருக்கு அல்லாஹ் ஸாலிஹான மனைவியை அமைத்துத் தருகிறானோ
அவருக்கு மார்க்கத்தின் பாதியை பரிபூரணமாக்க உதவி செய்கிறான், மீதிப் பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தபரானி 7646 ஹாகிம் 2/175

 

குறிப்பு :- திருமணம் என்பது பல சிறப்புக்களை உள்ளடக்கிய ஓர் அங்கமாகும். அது உள்ளத்தின் தன்மையையும், எண்ணத்தின் திண்ணத்தையும் ஒருங்கிணைத்த ஒன்றாகும். அன்பும் பண்பும் பாசமும் நேசமும்தான் அதன் அணிகலன்களாகும். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து திருமணத்தின் மூலம் கணவர் மனைவியாக இணைந்த ஆண் பெண் இருவருக்கிடையில் இருக்கும் இனம் புரியாத இணைப்பு எப்படிவந்தது? என்று சமகாலத்திலுள்ள எவரும் முழுமையாக கூறிவிட மாட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் அல்லாஹ் அமைத்த அமைப்பு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.