திருமணமும் துறவறமும்
திருமணமும் துறவறமும்
நம்முடைய சக்திக்கு ஏற்றவாறு திருமணம் செய்து கொள்ளுங்கள்
فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً
உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக திருமணம் முடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் முடித்துக் கொள்ளுங்கள்.
சூரா நிஷா ஆயத் 3
♦️நம்முடைய சக்தி வசதிக்கு ஏற்றவாறும் 4க்கு உட்பட்டவாறும் பருவ வயதை எத்திய ஒவ்வொரு முஸ்லிம்களும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.
வசதி வாய்ப்புக்கள் இருந்தும் திருமணம் செய்ய மறுப்போர் எம்மை சார்ந்தவர் அல்ல
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلَا أَتَزَوَّجُ أَبَدًا فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ فَقَالَ أَنْتُمْ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي
(மூன்றாம் நபர்) “நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் திருமணம் முடித்துக் கொள்ள மாட்டேன்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டு விடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை திருமணம் செய்துள்ளேன். யார் என்னுடைய வழிமுறையை புறக்கணிப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5063 முஸ்லிம் 1401
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النِّكَاحُ مِنْ سُنَّتِي، فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். திருமணம் என்னுடைய ஸுன்னத்தான வழிமுறையாகும். அதனை யார் செய்யவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1846
♦️திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியவருக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பதில் :- யார் என்னுடைய வழிமுறையை புறக்கணிப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவல்ல என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற உபதேசம்
عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ هَلْ تَزَوَّجْتَ قُلْتُ لاَ قَالَ فَتَزَوَّجْ فَإِنَّ خَيْرَ هَذِهِ الأُمَّةِ أَكْثَرُهَا نِسَاءً
என்னிடம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணம் முடித்தீரா?’ என்று கேட்டார்கள். நான் இல்லை’ என்றேன். அதற்கு அவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவரான (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) அதிகமான பெண்களை திருமணம் முடித்தவராவார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஸயித் இப்னு ஜுபைர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 5069
♦️அனைவருக்கும் முன்மாதிரியாக திகழும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே திருமணம் செய்துள்ளார்கள் என்பதாகக் கூறி நீங்களும் அவ்வாறு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஸஹாபாக்கள் தாபியீன்களுக்கு வழியுருத்திக் கூறியுள்ளார்கள் என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.
திருமணம் முடிக்க இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம், “இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1400 நஸாயி 2239 தாரமீ 2211
♦️திருமணம் செய்வது நபிவழியாகும். அதனை நிராகரிப்பதும் மறுப்பதும் நபிவழிக்கு முறனாகும். மேலும் திருமணம் முடிக்க இயலாதோர் (ஆண்மை மற்றும் வசதி வாய்ப்புக்கள் முழுமையாக) இல்லை என்றால் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, ஆசையைக் கட்டுப்படுத்தக்கூடியது என்ற கருத்தை இஸ்லாம் போதிக்கிறது.
துறவறம் இஸ்லாத்தில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ التَّبَتُّلِ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துறவறத்தை தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் :- ஸமுரத் இப்னு ஜுன்துப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1082 இப்னு மாஜா 1849 நஸாயி 3214 அஹ்மது 20192
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا صَرُورَةَ فِي الْإِسْلَامِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இஸ்லாத்தில் துறவறம் என்பது கிடையாது.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 1729 அஹ்மது 2844
ஆண்மை நீக்கம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لَاخْتَصَيْنَا
உஸ்மான் பின் மழ்ஊன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் துறவறம் மேற்கொள்ள (விரும்பி, அனுமதி கேட்ட போது) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவர்கள் மட்டும் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம் என்றனர்.
அறிவிப்பவர் :- ஸயித் இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1402 திர்மிதி 1083 நஸாயி 3212
♦️ அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!. உடலில் சக்தி மற்றும் வசதி வாய்ப்புக்கள் இருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஆண்மை மற்றும் வசதி வாய்ப்புக்கள் முழுமையாக இல்லை என்றால் முடிந்த வரை நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். ஆண்மை நீக்கம் செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
குறிப்பு :- ஆண் குறியில் ஆண்மை உள்ளவன், உணவு, உடை ஆகியவையும் கொடுக்க வசதி பெற்றவனுக்கும் பருவ வயதை எத்தியவளுக்கும் திருமணம் செய்து வைப்பது ஸுன்னத்தாகும். மேலும் உணர்ச்சியை அடக்க முடியாத ஆண் பெண்னுக்கு திருமணம் செய்து வைப்பது (கட்டாயம்) வாஜிபாகும். உடலுறவு கொள்ள இயலாதவனுக்கு திருமணம் செய்து வைப்பது மக்ரூஹ் ஆகும்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்