திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்ட பெண்கள் 14 வகையினர்

368

திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்ட பெண்கள் 14-வகையினர் 

 

♦️1) உங்களின் தாய்மார்கள், இதில் தாயைப் பெற்ற தாயும், தந்தையைப் பெற்ற தாயும், இதன் தொடரிலுள்ள பாட்டிமார்களும் கட்டுப்படுவார்கள். 

♦️2) உங்களின் புதல்விகள், இதில் நீங்கள் பெற்ற ஆண், பெண் மக்களின் புதல்விகளும், அதன் தொடரிலுள்ள பேத்திமார்களும் கட்டுப்படுவார்கள். 

♦️3) உங்கள் உடன் பிறந்த சகோதரிகள். இதில் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்த சகோதரிகளும், தந்தை ஒன்று தாய் வேறு. அல்லது தாய் ஒன்று தந்தை வேறு, இவ்வாறு பிறந்த சகோதரிகளும் அவர்களின் புதல்விகளும் கட்டுப்படுவார்கள். 

♦️4) உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், இதில் தந்தையின் தந்தையுடைய சகோதரிகளும், அதன் தொடரிலுள்ள பாட்டனின் சகோதரிகளும் கட்டுப்படுவார்கள்.  

♦️5) உங்கள் தாயின் உடன் பிறந்த சகோதரிகள், இதில் தாயின் தாயுடைய சகோதரிகளும், அதன் தொடரிலுள்ள பாட்டியின் சகோதரிகளும் கட்டுப்படுவார்கள். 

♦️6) உங்கள் உடன் பிறந்த சகோதரரின் புதல்விகள். அப்புதல்விகளின் புதல்விகளும், அதன் தொடரிலுள்ள பேத்திமார்களும் கட்டுப் படுவார்கள். இதில் உங்கள் உடன் பிறந்த சகோதரர்களின் புதல்வர்களுடைய புதல்விகளும், பேத்திகளும் கட்டுப்படுவார்கள். 

♦️7) உங்கள் உடன் பிறந்த சகோதரியின் புதல்விகள், இதில் அவளின் புதல்விகளின் புதல்விகளும், அதன் தொடரிலுள்ள பேத்திகளும் கட்டுப்படுவார்கள். மேலும் இதில் உடன் பிறந்த சகோதரிகளின் புதல்வர்களுடைய புதல்விகளும், பேத்திகளும் கட்டுப்படுவார்கள். 

♦️8) உங்களுக்குப் பாலூட்டிய செவிலித்தாய். அதாவது உங்க ளைப் பெறாமல் தன் பாலை மட்டும் ஊட்டியதில் தாய் உரிமை பெற்றவள். 

♦️9) உங்கள் செவிலித்தாயின் புதல்விகள். அதாவது, பால்குடி சகோதரிகள்.  

♦️10) உங்கள் மனைவியரின் தாய், அதாவது மாமிமார்கள், இதில் மாமிகளின் தாய், மாமனாரின் தாய், அதன் தொடரிலுள்ள பாட்டிமார்களும் கட்டுப்படுவார்கள். 

♦️11) நீங்கள் உடலுறவு கொண்ட உங்கள் மனைவியரின் முந்திய கணவருக்குப் பிறந்த உங்கள் பராமரிப்பில் வளர்ந்து வரும் புதல்விகள். 

அதாவது ஒரு பெண்ணை நீங்கள் மணக்கின்றீர்கள். அவளுடன் உடலுறவும் கொண்டு விட்டீர்கள். அவளுக்கு ஏற்கனவே ஒரு திருமணமாகி அவள் முதல் கணவருக்கு புதல்விகளைப் பெற்றெடுத்திருந்தால், அப்புதல்விகளின் புதல்விகளையும், அதாவது உங்கள் மனைவிகளின் பேத்திமார்களையும் நீங்கள் மணப்பது கூடாது. ஆனால் அம் மனைவியுடன் நீங்கள் உடலுறவு கொள்ளாதிருந்தால் அவளை விவாகரத்து செய்து விட்டு அவளின் புதல்விகளையோ, பேத்திகளையோ நீங்கள் மணப்பது கூடும். 

♦️12) உங்கள் புதல்வர்களின் மனைவிகள், அதாவது நீங்கள் பெற்றெடுத்த மகன்களின் மனைவிகள். இதில் நீங்கள் சுவீகாரம் எடுத்து வளர்க்கும் வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவிகள் கட்டுப்படமாட்டார்கள். 

♦️13) ஒரு தாய், அல்லது ஒரு தந்தைக்குப் பிறந்த இரு சகோதரிகளை, அதாவது அக்காள் தங்கைகளை ஒரே சமயத்தில் இருவரையும் மனைவிகளாக்கி கொள்வது கூடாது. 

♦️14) கணவனுள்ள பெண்கள். அதாவது முதலில் திருமணமாகி முதல் கணவரால் விவாகரத்து அளிக்கப்படாத பெண்களையும் மணம் முடிப்பது கூடாது.

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.