துஆ கேட்பதின் ஒழுக்கங்கள்

88

துஆ கேட்பதின் ஒழுக்கங்கள்

 

♦️1) ஹராமை முழுமையாக தவிர்த்து கொள்ளுதல்

 

♦️2) உள்ளம் தூய்மையான நிலையில் இருத்தல்.

 

♦️3) துஆக் கேட்பதற்கு முன்னர் தர்மம் மற்றும் தொழுகை அது அல்லாத நற்செயல்களில் ஈடுபட்டு விட்டு துஆ கேட்பது.

 

♦️4) அசுத்தங்களை விட்டும் பரிசுத்தமாக இருத்தல்.

 

♦️5) வுளூ செய்து கொள்ளுதல்.

 

♦️6) கிப்லாவை முன்னோக்கி இருத்தல்

 

♦️7) துஆவின் ஆரம்பத்திலும் கடைசியிலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து கூறுதல்.

 

♦️8) இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்விடம் பயபக்தியுடன், தாழ்மையுடன், பணிவுடன் துஆக் கேட்க வேண்டும் 

♦️9) வானத்தின் பக்கம் பார்வையை உயர்த்தாமலிருப்பது.

 

♦️10) அஸ்மாவுல் ஹுஸ்னா மற்றும் அல்லாஹ்வுடைய சிறப்புத் தன்மைகள் ஆகியவற்றைக் கூறி துஆ கேட்பது.

 

♦️11) நபிமார்கள் நல்லடியார்களை வஸீலாவாக முன் நிறுத்தி அல்லாஹ்விடம் துஆ கேட்பது.

 

♦️12) சப்தமிடமால் மெதுவான துஆ கேட்பது. கூட்டு துஆவாக இருந்தால் சத்தமிட்டு துஆ கேட்பது.

 

♦️13) எல்லாத் தேவைகளையும் உள்ளடக்கிய கருத்துக் கொண்ட வாசகங்களைக் கொண்டு துஆ கேட்பது.

♦️14) முதலில் தனக்காகவும், பிறகு தன் பெற்றோருக்காகவும், பிறகு முஃமினான சகோதரர்களுக்காகவும் துஆ கேட்பது.

 

♦️15) இமாமாக இருப்பவர் தனக்காக மட்டும் துஆ கேட்காமல் அனைவருக்காகவும் துஆ கேட்பது.

 

♦️16) துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உறுதியுடனும், ஆசையுடனும், ஆர்வத்துடனும் கேட்பது.

 

♦️17) மன ஓர்மையுடனும் மனப்பூர்வமாக துஆ கேட்பது.

 

♦️18) முக்கியமான துஆவை மடக்கி மடக்கி கேட்பது.

 

♦️19) பாவகாரியங்கள் செய்ய துஆ கேட்காமலிருத்தல்.

 

♦️20) முடிந்து விட்ட காரியத்தைப் பற்றி (அது நிகழாமல் இருந்தால் நன்றாக இருக்கும். இது நிகழ்ந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று )துஆக் கேட்காமலிருத்தல்.

 

♦️21) துஆ செய்பவரும் அதனைக் கேட்பவரும் ஆமீன் எனக் கூறுதல்.

 

♦️22) துஆ முடிந்தவுடன் தன் இருகைகளையும் முகத்தில் தடவுதல்.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.