தொப்பி தலைப்பாகை நபிவழியாகும்

110

தொப்பி தலைப்பாகை நபிவழியாகும்

 

தொப்பி அணிவது நபிவழியாகும்

 

يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏

 

ஆதத்தின் மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்! மேலும், உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.

சூரா அஃராப் ஆயத் 31

 

இந்த வசனம் பள்ளிவாசலுக்கு அலங்காரத்துடன் வருமாறு வழியுருத்திக் கூறுகிறது. தொப்பி அணிவது ஒரு அலங்காரமாகும். எனவே ஆடை அணிந்து பள்ளிவாசலுக்கு செல்வது போன்று தலையில் தொப்பி அணிந்து பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும், அதுவும் ஓர் அலங்காரமாகும்.

 

عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا سَأَلَهُ مَا يَلْبَسُ المُحْرِمُ؟ فَقَالَ لاَ يَلْبَسُ القَمِيصَ، وَلاَ العِمَامَةَ، وَلاَ السَّرَاوِيلَ، وَلاَ البُرْنُسَ، وَلاَ ثَوْبًا مَسَّهُ الوَرْسُ أَوِ الزَّعْفَرَانُ، فَإِنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الخُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا تَحْتَ الكَعْبَيْنِ

 

ஒருவர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, ‘சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், தொப்பி, பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 134, 366, 1542 முஸ்லிம் 1177

 

இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணியலாம் என்ற கருத்தையும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்ற கருத்தையும் மேற்கூறிய ஹதீஸை மூலாதாரமாக வைத்து விளங்கிக் கொள்ள முடிகிறது.

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَامَ الفَتْحِ، وَعَلَى رَأْسِهِ المِغْفَرُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1846, 3044 முஸ்லிம் 1357

 

عَنْ فَضَالَةَ بْنَ عُبَيْد رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّاب رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الشُّهَدَاءُ أَرْبَعَةٌ رَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الإِيمَانِ، لَقِيَ العَدُوَّ، فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ، فَذَلِكَ الَّذِي يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَعْيُنَهُمْ يَوْمَ القِيَامَةِ هَكَذَا وَرَفَعَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَتُهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கேட்டதாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஷஹீதுகள் நான்கு பிரிவினர் ஒருவர் பலமான ஈமான் கொண்ட ஒரு முஃமின், இவர் அல்லாஹ்வுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி எதிரிகளுடன் மோதி அதே யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார். மறுமை நாளில் இவரது உயர் அஸ்தஸ்தை ஏனையோர் இவ்வாறு பார்ப்பார்கள் என்று பின்புறமாகத் தனது தலையை வளைத்து அன்னார்ந்து காட்டிய போது தலையில் இருந்து தொப்பி கீழே விழுந்தது.

 

அறிவிப்பவர் :- புழால் இப்னக உபைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1644

 

عن ابن عباس قال‏ كان رسول الله صلى الله عليه وسلم كان يلبس القلانس اليمانية

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமன் நாட்டுடைய நீளமான தொப்பியையும் அணிந்துள்ளார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அஸாகிர் 3534

 

عن ابن عمر رضي الله عنه قال‏ :‏ كان رسول الله صلى الله عليه وسلم يلبس قلنسوة بيضاء

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை நிற தொப்பி அணிந்திருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ரானி 3445

 

தலைப்பாகை அணிவது நபிவழியாகும்

 

عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّة رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَخُفَّيْهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (உளு செய்யும் போது) தமது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.

 

அறிவிப்பவர் : அம்ரு இப்னு உமைய்யா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 205

 

عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْث رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டிய நிலையில் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

 

அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுரைஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1359 அபூதாவூத் 4077

 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ.

 

நிச்சயமாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கறுப்புத் தலைப்பாகை அணிந்த (மக்கா) நகரில் நுழைந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1358

 

தொப்பியும் தலைப்பாகையும்

 

وَقَالَ الْحَسَن رَضِيَ اللَّهُ عَنْهُ : كَانَ الْقَوْمُ يَسْجُدُونَ عَلَى الْعِمَامَةِ وَالْقَلَنْسُوَةِ

 

ஒரு கூட்டம் (ஸஹாபாக்கள் அதிக வெப்பம் காரணமாக) தங்களுடைய தலைப்பாகை தொப்பியின் மீது ஸஜ்தா செய்பவர்களாக இருந்தார்கள்’.

 

அறிவிப்பவர் :- ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி, இப்னு அபிஷைபா 1434

 

عَنْ رُكَانَة رَضِيَ اللَّهُ عَنْهُ وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ فَرْقَ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ العَمَائِمُ عَلَى القَلاَنِسِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைபாகைகளை அணிவதாகும்.

 

அறிவிப்பவர் :- ருக்கானா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 4078 திர்மிதி 1784

 

ஹஜ்ரத் முல்லா அலிகரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள். தொப்பியானது முஸ்லிம்களின் சிறப்பான, முக்கிய இஸ்லாமிய (அடையாளச்) சின்னமாகும்.

 

♦️குறிப்பு :- தொப்பி தலைப்பாகை அணிவது நபிவழியாகும். மேலும் இணை வைப்பவர்கள் அது அல்லாத வஹாபிஷ ஷீஆக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள வேறுபாடு தொப்பி அணிவதாகும். மேலும் தொப்பி முஸ்லிம்களின் சிறப்பான, முக்கிய இஸ்லாமிய அடையாளச் சின்னம் என்ற கருத்தை நாம் மறந்து விடக்கூடாது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.