வைரஸ் தொற்று நோயை ஷைத்தானின் தீங்கு என இஸ்லாம் பறைசாற்றுகிறது

83

தொற்று நோயை ஷைத்தானின் தீங்கு என இஸ்லாம் பறைசாற்றுகிறது

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

(ஆதாரம் 1) 👇

 

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَنَاءُ أُمَّتِي بِالطَّعْنِ وَالطَّاعُونِ فَقِيلَ يَا رَسُولَ اللهِ، هَذَا الطَّعْنُ قَدْ عَرَفْنَاهُ، فَمَا الطَّاعُونُ؟ قَالَ وَخْزُ أَعْدَائِكُمْ مِنَ الْجِنِّ وَفِي كُلٍّ شُهَدَاءُ

رواه أحمد برجال ثقات وروى الطبراني وأبو نعيم بإسناد حسن

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நிச்சயமாக எனது உம்மத்தினர்கள் கொலையாலும் மற்றும் “தாஊன்” தொற்று நோயாளும் (அதிக) உயிரிழப்புக்களைச் சந்திக்கும்” என்று கூறினார்கள். அப்போது (ஸஹாபாக்களில்) சிலர்கள், யா ரஸுலல்லாஹ், கொலை செய்வது என்றால் என்னவென்பதைப் புரிந்து கொண்டோம். ஆனால், “தாஊன் (கொள்ள நோய்) தொற்று நோய் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஜின் இனத்தைச் சேர்ந்த உங்கள் எதிரிகளால் அதாவது (ஷைத்தான்களாள்) நீங்கள் குத்தப்படுவது தான் அது. யார் அதன் மூலம் மரணிக்கிறாரோ, அவர் ஸஹீத் உயிர்த்தியாகியாவார்” என்று பதில் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ மூஸா அல் அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்னத் அஹ்மத் 19528 பஸ்ஸார் 3040

 

حَدَّثَنَا بَكْرُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بَلْجٍ قَالَ: حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي مُوسَى الْأَشْعَرِيُّ، عَنْ أَبِيهِ عَبْدِ اللهِ بْنِ قَيْسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ الطَّاعُونَ فَقَالَ وَخْزٌ مِنْ أَعْدَائِكُمْ مِنَ الْجِنِّ، وَهِيَ شَهَادَةُ الْمُسْلِمِ

 

மேற்கூறப்பட்ட ஹதீஸை போன்று இந்த ஹதீஸும் (கொள்ளை நோய்) தொற்று நோய் ஜின் இனத்தை சேர்ந்த எதிரிகளான (ஷைத்தான்களின்) தீங்கு பற்றியும் (அதில் மரணிப்பவர்) ஸஹீது பற்றியும் பேசுவது

 

அரிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு கைஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 1/50

 

ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ رَضِيَ الله عَنْهَا ﻗَﺎﻟَﺖْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : الطَّاعُونُ شَهَادَةٌ لأُمَّتِي وَوَخْزُ أَعْدَائِكُمْ مِنَ الْجِنِّ

 

மேற்கூறப்பட்ட ஹதீஸை போன்று இந்த ஹதீஸும் (கொள்ளை நோய்) தொற்று நோய் ஜின் இனத்தை சேர்ந்த எதிரிகளான (ஷைத்தான்களின்) தீங்கு பற்றியும் (அதில் மரணிப்பவர்) ஸஹீது பற்றியும் பேசுவது

 

அறிவிப்பவர் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் தபரானி 242

 

மேற்கூறிய மூன்று விதமான ஹதீஸ்களும் இரு விதமான கருத்தை சுற்றி காட்டும் வகையில் அமந்துள்ளது. முதலாவது கருத்து :- தொற்று நோய் ஷைத்தான்களின் தீங்கு என்று பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. இரண்டாவது கருத்து :- தொற்று நோயால் மரணித்தால் அவர் ஸஹீத் உயிர்த்தியாகியாவார் என்று பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. இவைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 

(ஆதாரம் 2) 👇

 

முதல் கருத்து :- தொற்று நோய் ஷைத்தான்களின் தீங்கு என்று நபிமொழிகள் பறைசாற்றுகிறது இது பற்றி ஆரம்பித்தில் பார்க்கலாம்.

 

( Plague – طاعون ) இந்த வார்த்தைக்கு கொள்ளை நோய், தொற்று நோய், வைரஸ் ஆற்கொள்ளி நோய் என்று பொதுவாக கூறப்படும். இந்த தொற்று நோய் இரு வகைகளாக கணப்படுகிறது. முதல் வகை :- பொதுவாக ஊர்களில் ஏற்படும் தொற்று நோய் ஊரோடி எனப்படும். இது எல்லா ஊர்களிலும் பொதுவாக காணப்படும். உதாரணமாக. காய்ச்சல், கண்நோய், அம்ம போடுதல் இது போன்ற நோய்கள் 5 நாள் அல்லது 10 நாட்களில் நோய் நீங்கி விடும். அடுத்த வகை :- ஒவ்வொரு நூற்றாண்டிலும் தோன்றும் தொற்று நோய் இடைப்பட்ட காலங்களில் தோன்றும் நோய் உதாரணமாக கொலரா, கொரோனா போன்ற நோய்களாகும். இந்த நோய் குறிப்பிட்ட காலங்களில் ஊரையும், நாட்டையும், உலகத்தையும் அச்சுறுத்தும் ஷைத்தான்களின் தீங்கினால் ஏற்படும் நோயாகும். இது அதிக வேகமாக மனித உடலில் உள்நுளையும் ஆற்றல் பெற்றது. இதன் மூலம் மனிதனை முடக்குவது முற்றாக அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதே நோக்கத்தை தான் சூனியமும் பறைசாற்றுகிறது.

 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النُّشْرَةِ فَقَالَ : مِنْ عَمَلِ الشَّيْطَانِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நுஷ்ரா (சூனியம்) பற்றி கேட்கப்பட்ட போது, ‘அது ஷைத்தானின் வேலையாகும்’ என்று பதில் கூறினார்கள்

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 3859

 

சூனியம் என்றால் ஷைத்தானின் வேலை சூழ்ச்சியை குறிக்கும். ஒரு மனிதரை ஒன்றுமில்லாமல் செய்வதன் மூலம், அவரை முழுமையாக முடக்குவது அல்லது அவரை முற்றாக அழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

 

சூனியத்தின் நோக்கமும் ஒவ்வொரு நூற்றாண்டில் தோன்றும் தொற்று நோயின் நோக்கமும் ஒன்றாகவே அமைந்துள்ளது. அதாவது மனிதர்களை முடக்குவது முழுமையாக அவர்களை அழிப்பதே ஆகும். இதனால் தான் இரண்டிற்கும் ஜின் இனத்தை சேர்ந்த ஷைத்தான்களின் தீண்டுதல் தீங்கு என மேற்கூறப்பட்ட நபிமொழிகள் பறைசாற்றுகிறது.

 

(ஆதாரம் 3) 👇

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا أَخْبَرَتْنَا : أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّاعُونِ فَأَخْبَرَهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَنَّهُ كَانَ عَذَابًا يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 5426

 

ஒவ்வொரு நூற்றாண்டிலும் அல்லது அதற்கு இடப்பட்ட காலங்களிலும் வெளிவரும் ஆற்கொள்ளி நோய் அதாவது தொற்று நோய் இது கடுமையான வேதனைகளை ஏற்படுத்தும். என்ற கருத்தை மேற்கூறப்பட்ட ஹதீஸ்களை மூலமாக வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. மேலும்

 

اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ

 

குர்ஆன் கூறுகிறது வட்டி (வாங்கித்) தின்பவர்களை (மறுமை நாளில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவர்கள் போன்று (வேதனையை கொடுத்து அவர்கள்) எழுப்பப்படுவார்கள்.

சூரா பகரா ஆயத் 275

 

வட்டி உண்பவன் மறுமை நாளில் ஷைத்தான் தீண்டி பித்தம் கொண்டவன் போன்று எழுப்பப்படுவான் என்று கூறியதன். காரணம் ஷைத்தானின் தீண்டுதல் என்பது மிகமிக கொடுமையான நோவினையை தரக்கூடியது. இதை அதிமானோர் உணர்வதில்லை. சூனியத்தின் மூலம் ஷைத்தான் தீண்டுவதை உணர்ந்த மக்கள் 100 க்கு 5 வீதமே காணப்படுகிறார்கள். மீதியுள்ள 95 வீதமான மக்களுக்கு ஷைத்தானின் தீண்டுதல் பற்றிய அறியாமல் உள்ளனர். அவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் தான் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த அற்கொள்ளி தொற்று நோய் அதாவது ஷைத்தானின் தீண்டுதலை இறைவன் வெளிப்படுத்துகிறான். இதன் நோவினை வேதனையை உடல் ரிதியாகவும் உணர்வு ரீதியாகவும் 100 க்கு 95 வீதமான மக்கள் அறிந்துள்ளனர். எனவே இது போன்ற வேதனையை கொடுத்து வட்டி வாங்கி தின்பவர்களை இறைவன் மறுமையில் எழுப்புவான் என்ற கருத்தையும் குர்ஆன் பறைசாற்றுகிறது.

 

(ஆதாரம் 4) 👇

 

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ الْمَدِينَةَ المَسِيحُ وَلَا الطَّاعُونُ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’
மதீனாவில் மஸீஹ் (தஜ்ஜால்) நுழைய மாட்டான்; கொள்ளைநோயும் நுழைய முடியாது.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5731

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلّ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَنْقَابِ الْمَدِينَةِ مَلَائِكَةٌ لَا يَدْخُلُهَا الطَّاعُونُ وَلَا الدَّجَّالُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (தொற்று நோய்) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1880

 

இந்த இருவிதமான ஹதீஸ்களை நன்றாக பாருங்கள். மதினா நகரிற்குள் தஜ்ஜாலும் தொற்று நோயும் நுழைய முடியாது என்ற ஹதீஸ்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தஜ்ஜால் தொற்று நோய் இரண்டுக்கும் என்ன தொடர்பு உண்டு, இரண்டையும் இணைத்தவாறு ஏன் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற வேண்டும் என்பதை சற்று சிந்தித்து செய்து பாருங்கள்.

 

குறிப்பு :- தஜ்ஜால் :- (மனித இனத்தை சேர்ந்த ஷைத்தான்) நோற்று நோய் (ஜின் இனத்தை சேர்ந்த ஷைத்தான்கள்) ஆக இரு பிரிவினர்களும் மதினா நகரிற்குள் நுழைய முடியாது என்ற கருத்தை தான் நபிமொழிகள் பறைசாற்றுகிறது.

 

(ஆதாரம் 5) 👇

 

இரண்டாம் கருத்து :- தொற்று நோயால் மரணித்தால் அவர் ஸஹீத் உயிர்த்தியாகி என்று நபிமொழிகள் பறைசாற்றுகிறது. இது பற்றி அடுத்து பார்க்கலாம்.

 

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ ، حَدَّثَنَا عَاصِمٌ حَدَّثَتْنِي حَفْصَةُ بِنْتُ سِيرِينَ قَالَتْ : قَالَ لِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : يَحْيَى بِمَ مَاتَ ؟ قُلْتُ : مِنَ الطَّاعُونِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ

 

ஹஃப்ஸா பின்த் சீரின் ரஹ்மத்துல்லாஹ் கூறினார்கள். அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம், ‘(உன் சகோதரரான) யஹ்யா இப்னு சீரின் எதனால் இறந்தார்?’ என்று கேட்டார்கள். நான், தொற்று நோய் ‘கொள்ளைநோயால் இறந்தார்’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘கொள்ளைநோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும் ஸஹீத்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5732

 

தொற்று நோய்களால் மரணித்தவர்கள் வீரமரணம் உயிர்தியாகி ஸஹீத் என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிகள் பறைசாற்றுகிறது. மேலும்

 

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَنَاءُ أُمَّتِي بِالطَّعْنِ وَالطَّاعُونِ فَقِيلَ: يَا رَسُولَ اللهِ، هَذَا الطَّعْنُ قَدْ عَرَفْنَاهُ، فَمَا الطَّاعُونُ ؟ قَالَ وَخْزُ أَعْدَائِكُمْ مِنَ الْجِنِّ وَفِي كُلٍّ شُهَدَاءُ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நிச்சயமாக எனது உம்மத்தினர்கள் கொலையாலும் மற்றும் தொற்று நோயாளும் (அதிக) உயிரிழப்புக்களைச் சந்திக்கும்” என்று கூறினார்கள். அப்போது (ஸஹாபாக்களில்) சிலர்கள், யா ரஸுலல்லாஹ், கொலை செய்வது என்றால் என்னவென்பதைப் புரிந்து கொண்டோம். ஆனால் (கொள்ள நோய்) தொற்று நோய் என்றால் என்ன?” என்று (ஸஹாபாக்கள்) கேட்டனர். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஜின் இனத்தைச் சேர்ந்த உங்கள் எதிரிகளால் அதாவது (ஷைத்தான்களாள்) நீங்கள் குத்தப்படுவது தான் அது. யார் அதன் மூலம் மரணிக்கிறாரோ, அவர் ஸஹீத் உயிர்த்தியாகியாவார் என்று பதில் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ மூஸா அல் அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்னத் அஹ்மத் 19528 பஸ்ஸார் 3040

 

இந்த ஹதீஸின் விளக்கம் :- கொலையாளும் தொற்று நோய் ஷைத்தானின் தீண்டுதலாளும் கொள்ளப்படுபவர்கள் ஸஹீத் எனப்படுகிறது. கொலை :- காஃபிர்களுடன் போராடி அவர்களின் கத்திகளால் கொல்லப்படுவது. தொற்று நோய் :- ஜின் இனத்தை சேர்ந்த எதிரிகளான ஷைத்தானின் தீண்டுதலோடு போராடி அதன் மூலம் கொல்லப்படுவது. ஆக இவ்விரண்டிற்கும் ஸஹீத் என்ற பட்டமே கிடைக்கும் என்பதாக குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

 

குறிப்பு கொலை :- (மனித இனத்தை சேர்ந்த ஷைத்தான்களான அதாவது தீய எதிரிகளின் கத்தியால் கொலை செய்யப்படுவது) தொற்று நோய் :- (ஜின் இனத்தை சேர்ந்த ஷைத்தான்களின் தீங்கினால் கொலை செய்யப்படுவது) ஆக இரு பிரிவினர்களின் தீங்கினாலும் கொலை செய்யப்பட்டால் அவர்கள் ஸஹீத் உயிர்தியாகி என்று மேற்கூறப்பட்ட நபிமொழிகள் நமக்கு பறைசாற்றுகிறது.

 

(ஆதாரம் 6) 👇

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ : حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ : سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ, عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ، وَلَا مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ

 

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى – وَاللَّفْظُ لِأَبِي الطَّاهِرِ – قَالَا : أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي يُونُسُ ، قَالَ : ابْنُ شِهَابٍ : فَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ حِينَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا عَدْوَى وَلَا صَفَرَ وَلَا هَامَة

 

இருவிதமான நபிமொழிகளையும் சுருக்கமாக பாருங்கள் முதல் நபிமொழி கூறுகிறது :- இஸ்லாத்தில் தொற்று நோய் இல்லை நபிமொழி ஆதாரம் முஸ்லிம் 4234 இதே போன்று இரண்டாம் நபிமொழி கூறுகிறது :- சூனியத்தை நம்பினால் சுவனம் இல்லை நபிமொழி ஆதாரம் அஹ்மத் 26833 சுருக்கமாக மேற்கூறப்பட்ட இருவிதமான ஹதீஸ்களையும் அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

 

இந்த இரு ஹதீஸ்களும் ஷைத்தானின் தீங்கை பற்றி பேசுகிறது. குறிப்பாக அல்லாஹ்வின் சக்தியை பறைசாற்றுகிறது. அதாவது இஸ்லாத்தை தொற்று நோய் இல்லை என்பதன் அர்த்தம் தொற்று நோய்க்கு (சுய ஆற்றல்) இல்லை என்பதை குறிக்கும். சூனியத்தை நம்பினால் சுவனம் இல்லை என்று கூறியதன் அர்த்தம் சூனியத்திற்கு (சுய ஆற்றல் இருப்பதாக) நம்பினால் அவருக்கு சுவனம் இல்லை. ஆக (நோற்று நோய் – சூனியம் ) இவ்விண்டும் ஷைத்தானின் தீங்கு என குர்ஆன் ஹதீஸ் பறைசாற்றுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

 

ஆக ( Plague – طاعون ) இந்த வார்த்தைக்கு கொள்ளை நோய், தொற்று நோய், வைரஸ் ஆற்கொள்ளி நோய் என்று பொதுவாக கூறப்படும். இது கண்களுக்குப் புலப்படாததாக மறைந்து தீங்கு ஏற்பத்துவதால் இதற்கு தீய கிருமிகள் எனப்படுகிறது. இதே போன்று தான் ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது என்று பொருள்படும். ஜின் என்ற படைப்பு கண்ணுக்குப் புலப்படாததாக மறைந்து இருப்பதால் அவற்றிற்கு அந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. ஆக இரண்டும் ஒன்று தான் வெவ்வேறு அல்ல என்ற கருத்துக்களை திருக்குர்ஆன் ஹதீஸ் அன்று முதல் இன்று வரை பறைசாற்றிக் கொண்டு இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

 

குறிப்பு :- நவீன உலகில் இது போன்ற கொடிய நோய்கள் உலாவரும் தருனத்தில் அதை கண்டறிய நவீன மறுத்துவர்கள் ஆய்வு செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்னுமும் முயற்சிக்கிறார்கள் ஆனால் இன்னும் கண்டறிய வில்லை மாறுபட்ட கருத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் இறங்கிய திருக்குர்ஆன் நபிமொழிகள் இது போன்ற தொற்று நோய் ஆற்கொள்ளி நோய் ஜின் இனத்தை சேர்ந்த ஷைத்தான்களின் தீங்கு என்று பறைசாற்றுவது ஆச்சரியம் அளிக்கிறது. இன்ஷா அல்லாஹ் இது போன்ற இன்னும் அதிகமான தகவல்களும். மேலும் இதிலிருந்து பாதுகாத்து கொள்வது பற்றியும் இஸ்லாம் அதிகமாகவே கூறியுள்ளது இது பற்றிய பல தகவல்களை நாம்முடைய அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ பேஜில் பல ஆதரங்களுடன் விரிவாக பதிவிடப்படும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.