தொழுகையின் (நிபந்தனை) ஷர்த்துக்கள் 10
தொழுகையின் நிபந்தனைகள் ஷர்த்து 10
♦️1) முஸ்லிமாக இருத்தல்.
♦️2) தம்யீஸ் எனப்படும் அறிவைப் பெறுதல்.
♦️3) ஜனாபத் என்னும் பெருந்தொடக்கு மாதாந்தருது (ஹைளு). பிரசவருது (நிபாஸ்). வுளூ முறித்தல் ஆகியன இல்லாதிருத்தல்.
♦️4) உடல், உடை, இடம் ஆகிய மூன்றிலும் அசுத்தங்களை விட்டும் துப்புரவாயிருத்தல்.
♦️5) ஆண் பிள்ளைகளும், அடிமையும், அடிமைப் பெண்ணும் தொப்புள் தொடக்கம் முட்டுக்கால் வரை மறைத்தல் (இதற்கு அவ்றத்தை மறைத்தல் என்று கூறப்படும்)
♦️6) கிப்லா என்னும் கஃபாவின் திசையை இயன்றளவு சரிநோக்கிக் கொள்ளுதல்.
♦️7) தொழுகை, தன் மீது தவிர்க்க முடியாத கட்டாய கடமை என்பதை உணர்ந்திருத்தல்.
♦️8) அந்தத் தொழுகைகளின் உரிய நேரங்களை அறிதல்.
♦️9) தொழும் விதத்தை அறிதல்.
♦️10) பர்ளை பர்ளு என்றும் ஸுன்னத்தை ஸுன்னத் என்றும் விபரமாக அறிந்திருத்தல்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்