தொழுகையின் ஹைஆத் அலங்கார ஸுன்னத்துக்கள் 

80

தொழுகையின் ஹைஆத் அலங்கார ஸுன்னத்துக்கள்

 

♦️1) ஆரம்ப தக்பீரிலும் ருகூவில் குனியும் போதும் அதை விட்டு நிமிர்ந்து நிலைக்கு வரும்போதும் முந்திய அந்தஹிய்யாத்திலிருந்து எழுந்து நிலையில் நிற்கும் போது இரு கைகைளையும் இரு தோள்வரை உயர்த்திக் கீழே விடுதல். 

 

♦️2) தொப்புளுக்கும் நெஞ்சுக்கும் இடையில் இடது கை மணிக்கட்டின் மேல் வலது கையை வைத்துக் கட்டுதல். 

 

♦️3) மையித்துத் தொழுகையைத் தவிரவுள்ள மற்ற தொழுகைகளின் போது தொழ ஆரம்பித்து ஆரம்பத் தக்பீர் கட்டியவுடன் மெதுவாக வஜ்ஜஹ்து ஓதுதல். 

 

♦️4) அல்ஹம்து சூரத்தை ஓதுவதற்கு முன் எல்லா ரக்அத்துக்களிலும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிற் றஜீம்மையும் சேர்த்து ஓதுதல். 

 

♦️5) ழுஹர் அஸர் தொழுகைகளில் ஓதும் சூரத்துக்களை சப்தமின்றியும் மற்றைய மூன்று வேளைத் தொழுகைகளில் ஓதும் சூரத்துக்களையும் சப்தமிட்டும் ஓதுதல். 

 

♦️6) அல்ஹம்து சூரத்தை ஓதி முடிந்ததும் ஆமீன் (இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளவாயாக) என்று கூறுதல். 

 

♦️7) இரண்டு ரகஅத்துகளுக்கு மேற்பட்ட தொழுகைகளில் முந்திய இரண்டு ரகஅத்துக்களிலும் அல்ஹம்து (பாத்திஹா) சூரத்துடன் வேறு ஏதாவது ஒரு சூரத்தையும் ஓதுதல். 

 

♦️8) ருக்ஊ ஸுஜூதுகளுக்குக் குனியும்போது ஸுஜூதை விட்டு நிமிரும் போதும் அல்லாஹு அக்பர் என்று சொல்லுதல் ருக்கூவிலிருந்து நிலைக்கு வரும்போது இருகைகளையும் உயர்த்தி

  سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ 

 

🔸ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹு என்று கூறுதல். 

 

இதன் பொருள் :- அல்லாஹ்வைப் புகழந்தவரின் புகழை அல்லாஹ் அங்கீகரிப்பானாக!  ருக்கூவில் இருக்கும் போது

  سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ 

🔸சுப்ஹான றப்பியல் அளீம் வபி ஹம்திஹி என்று மூன்று தடவை கூடுதல்.  

 

இதன் பொருள் :- மகத்தான எனது இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறேன்.  ருக்கூவில் இருந்து  

 

سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ 

 

🔸ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹு என்று கூறி நிலைக்கு வந்ததும்.

 

  اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ 

 

🔸றப்பனா லக்கல் ஹம்து மில் அஸ்ஸமாவாத்தி வமில்அல் அர்ழி வமில் மாஷிஃத மின்ஷையின் பஃது என்று கூறுதல். 

 

இதன் பொருள் :- எனது இறைவா! புகழ் யாவும் உனக்கே வான மண்டலங்கள் நிரம்பவும் பூமி நிரம்பவும் இவை தவிர நீ நாடிய இதர பொருட்கள் நிரம்பவும் உள்ள புகழ் யாவும் உனக்கே உரியவை. 

 

🔸ஸுஜூதில் இருக்கும் போது

  سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ 

 

🔸ஸுப்றான றப்பியல் அஃலா வபிஹம்திஹி என்று மூன்று தடவையும் கூற வேண்டும். 

 

இதன் பொருள் :- உயர்வான எனது இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறேன். 

 

🔸ஸுஜுதிலிருந்து சிறு இருப்புக்கு வந்தவுடன்.

 

  رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وَارْزُقْنِي وَاهْدِنِي وَعَافِنِي  وَاعْفُ عَنِّي 

 

🔸றப்பிஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வர்பஃனீ வர்ஜுக்னீ வஹ்தினீ வஆபினீ வஃபு அன்னீ என்று ஓத வேண்டும்.  

 

இதன் பொருள் :- நாயனே! எனது பாவங்களை மன்னித்தருள். எனக்கு அருள்புரி. என் முறிவைப் பெருத்து, என்னை உயர்வாக்கு! எனக்கு உணவளி! எனக்கு நேர்வழி காட்டு! எனக்கு சுவாத்தியத்தைத் தந்தருள்! என்னை மன்னித்தருள்!  

 

♦️11) நடு இருப்பிலும் அத்தஹிய்யாத்து இருப்புக்களிலிருக்கும் போதும், இரு துடைகளின் மீது இரு உள்ளங்கைகளும் பதியும் வண்ணம் விரல்களை விரித்து வைத்தல் (அதாவது விரிக்காமலும், சேர்க்காமலும் இயற்கையான முறையில் வைத்தல்)  

 

♦️12) அத்தஹிய்யாத்தில் ஷஹாதத் கலிமாவிலுள்ள “இல்லல்லாஹு என்று கூறும்போது கலிமா விரலை உயர்த்துதல் 

 

♦️13) அத்தஹிய்யாத்துல் முபாரகா துஸ்ஸலவாத்துத் தையிபாத்து என்று சேர்த்துத் தொடர்ச்சியாக ஓதுதல்.  

 

♦️14) நடு அத்தஹியாத்து இருப்பிலும், இரண்டு ஸுஜுதுகளுக்கிடையில் அமரும் இருப்பிலும் வலது கால் பலத்தையூன்றி இடது காலின் மீது இருத்தல். 

 

♦️15) கடைசி அத்தஹிய்யாத் இருப்பிலும் இடது காலை வலது பக்கத்தில் வெளிப்டுத்தி சம்மனமாகிய பித்தட்டின் மீது அமர்தல். 

 

♦️16) நிரப்பமான அத்தஹிய்யாத்து. ஸலவாத்து. துஆக்கள் ஓதுதல். 

 

♦️17) இரண்டாம் ஸலாம் (இடது புறம் ஸலாம்) கூறுதல்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.