தொழுகையை முறிக்கும் காரியங்கள் 8
தொழுகையை முறிக்கும் காரியங்கள் 8
♦️1) தொழுகையை விட்டுவிடலாம் என்று எண்ணினாலும் தொழுது முடிப்போமா? அல்லது விடுவோமா? என இருமனம் கொண்டாலும் தொழுகை முறியும்.
♦️2) தொடாராக மூன்று செயலைச் செய்தல். ஆனால் சொறி, சிரங்கு, நடுக்கம் முதலியவற்றால் அவதிப்படுபவர்கள் பலமுறை சொறிந்தாலும் (குற்றமில்லை.)
🔸குறிப்பு :- மூன்று செயல் என்பது, ஒரு இடத்தில் தன் கை உசும்பாமலிருக்க. அதன் விரலால் எத்தனை முறை சொறிந்தாலும் தொழுகை முறியாது.
♦️3) குர்ஆன், துஆ, திக்ரு அல்லாத இரு எழுத்துக்களைக் கொண்ட சொல்லை மொழிவதாலும். கனைப்பதாலும் தொழுகை முறியும்.
🔸குறிப்பு :- நோயாளர் இவ்வாறு செய்தால் தொழுகை முறியாது. இதே போன்று தொழுகைக்கு பர்ளாான அளவுக்கு ஓத வேண்டிய ஓதலை ஓத முடியாதிருக்கும் நிலைமையில் கனைத்து அதனால் இரு எழுத்துக்கள் வெளியானாலும், நோன்பாளி காரலை உட்கொள்ளாமல் இருப்பதற்காக கனைத்து, அதனால் இரு எழுத்துக்கள் வெளிப்பட்டாலும் தொழுகை முறியாது.
♦️4) நோன்பை முறிக்கும் வஸ்த்துக்கள் விழுங்குதல், தொண்டைக்கு வெளியே வந்த காரலை விழுங்குதல் ஆகியவைகள் தொழுகையை முறிக்கும்.
♦️5) கிப்லா திசையை விட்டும் நெஞ்சைத் திருப்புதல். 6) செயலாலுள்ள பர்ளுகளை ஞாபகத்துடன் அதிகப்படுத்தல். ஒரு பாளை அல்லது ஷர்த்தை விட்டால் தொழுகை முறிந்து விடும்.
♦️7) காற்றடிக்கும் போது புடவை உயர்வதனால் அவ்ரத் (மறைக்க வேண்டிய உறுப்பு) வெளியாகினால் தன்கையால் மறைக்காவிட்டால் தொழுகை முறியும்.
♦️8) சப்தமாய்ச் சிரிப்பது, அழுவது, முனங்குவது ஆகியவையும் தொழுகையை முறிக்கும்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்