நபி முஹம்மத் ﷺ அவர்களின் (மாபெரும் தர்ஹா) ரவ்ளா ஷரீப் கப்ருஷ்தானம்

472

நபி முஹம்மத் ﷺ அவர்களின் (மாபெரும் தர்ஹா) ரவ்ளா ஷரீப் கப்ருஷ்தானம்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ رَحِمَهُ اللَّهُ…. فَجَاءَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا دُفِنَ نَبِيٌّ قَطُّ إِلَّا فِي مَكَانِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ

 

அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து கூறினார்கள்” இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் : ஒரு நபி எந்த இடத்தில் மரணிப்பார்களோ அந்த இடத்திலேதான் அடக்கமும் செய்யப்படுவார்கள் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- மாலிக் இப்னு அனஸ் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் முஅத்தா 1620

 

عَنْ جَابِر بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ورُفِعَ قَبرُه مِنَ الْأَرْضِ نحوًا مِنْ شِبْرٍ

 

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு தரையிலிருந்து ஒரு சான் அளவு உயர்த்தப்பட்டது. கல் நட்டப்பட்டது.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 6527 இப்னு ஹப்பான் 6635

 

ﻋَﻦْ ﺍﻟْﻘَﺎﺳِﻢِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ﺩَﺧَﻠْﺖُ ﻋَﻠَﻰ ﻋَﺎﺋِﺸَﺔَ ﻓَﻘُﻠْﺖُ ﻳَﺎﺃُﻣَّﻪْ ﺍﻛْﺸِﻔِﻲ ﻟِﻲ ﻋَﻦْ ﻗَﺒْﺮِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻭَﺻَﺎﺣِﺒَﻴْﻪِ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻓَﻜَﺸَﻔَﺖْ ﻟِﻲ ﻋَﻦْ ﺛَﻼَﺛَﺔِ ﻗُﺒُﻮﺭٍ ﻻَ ﻣُﺸْﺮِﻓَﺔٍ ﻭَﻻَ ﻻَﻃِﺌَﺔٍ، ﻣَﺒْﻄُﻮﺣَﺔٍ ﺑِﺒَﻄْﺤَﺎﺀِ ﺍﻟْﻌَﺮْﺻَﺔِ ﺍﻟْﺤَﻤْﺮَﺍﺀِ قَالَ ﺃﺑُﻮ ﻋَﻠِﻲٍّ ﻳُﻘَﺎﻝُ ﺇﻥَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻣُﻘَﺪَّﻡٌ ﻭَﺃﺑُﻮ ﺑَﻜْﺮٍ ﻋِﻨْﺪَ ﺭَﺃْﺳِﻪِ ﻭَﻋُﻤَﺮُ ﻋِﻨْﺪَ ﺭِﺟْﻠَﻴْﻪِ ﺭَﺃْﺳُﻪُ ﻋِﻨْﺪَ ﺭِﺟْﻠَﻲْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

 

காஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின்
வீட்டுக்கு சென்றேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கப்றையும் அவர்களின் தோழர்கள் இருவரின் கப்றுகளையும் திறந்து காட்டுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்கள் எனக்கு மூன்று கப்றுகளையும் திறந்து காட்டினார்கள். அவை அதிக உயரமாவையாகவும் இருக்கவில்லை பூமியுடன் சமமாகவும் இருக்கவில்லை. நடுத்தரமாக சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அபூ அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முற்படுத்தப்பட்டவர்களகவும்
அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைக்கு நேராகவும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கால்களுக்கு நேராகவும் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர்

 

அறிவிப்பவர் :- காசிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 3220

 

عَنْ سُفْيَانَ التَّمَّارِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ رَأَى قَبْرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسَنَّمًا

 

சுப்யானுத் தம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை நான் பார்த்தேன் அது ஒட்டகத் திமிலை போன்று உயரமாக இருந்தது.

 

அறிவிப்பவர் :- சுப்யானுத் தம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஆதாரம் புஹாரி 1390

 

ﻋَﻦْ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ مَكْتُوبٌ في التّوْرَاةِ صِفَةُ مُحَمّدٍ، وَصِفَةُ عِيسَى بنُ مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ قالَ فقالَ أَبُو مَوْدُودٍ وقَدْ بَقِيَ في البَيْتِ مَوْضِعُ قَبْرٍ

 

தவ்ராத்தில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வர்ணனையும்; ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்ற அவர்களது வர்ணனையும் எழுதப்பட்டுள்ளது. அபூ மவ்தூது கூறுகிறார்: (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடங்கியுள்ள ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களது) வீட்டில் ஒரு கப்ரின் இடமும் உள்ளது.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3617

 

عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ، لَمَّا سَقَطَ عَلَيْهِمُ الْحَائِطُ فِي زَمَانِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْمَلِكِ أَخَذُوا فِي بِنَائِهِ، فَبَدَتْ لَهُمْ قَدَمٌ فَفَزِعُوا، وَظَنُّوا أَنَّهَا قَدَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ‏” فَمَا وَجَدُوا أَحَدًا يَعْلَمُ ذَلِكَ حَتَّى قَالَ لَهُمْ عُرْوَةُ لاَ وَاللَّهِ مَا هِيَ قَدَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ‏ مَا هِيَ إِلاَّ قَدَمُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ

 

அப்துல் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின் போது இறைத்தூதர் அலைஹி வஸல்லம் அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்த போது நான் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதமே இல்லை அதற்கு மாற்றாக இது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பாதகமாகும் என்றேன் என உர்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- உர்வா இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1390

 

أَنَّ مَوْضِعُ ﻗَﺒْﺮِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ مِنْ جَمِيعِ بِقَاعِ الْأَرْضِ بل أَفْضَلُ مِن َالْكَعْبَةِ وَالسَّمَوَاتِ وَالْعَرْشِ وَالْكُرْسِيِّ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கப்ர் ரவ்ளா ஷரீப் அமைந்திருக்கும் இடமானது பூமியின் அனைத்து இடங்களை விடவும் சிறந்தது. அது மட்டுமல்ல கஃபா, வானம், அர்ஷ், குர்ஷ், இவைகளை விடவும் சிறப்புக்குறியதாகும். என்ற கருத்தை ஹதீஸ்களை வல்லுனர்கள் இமாம்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

நூல் ஆதாரம் :- அன்வாரு ஸலாத்து வஸல்லாம் 108 நஸீமுர் ரியால் 3/531 இஸ்திஆப் 4/145 வபா அல் வபா 84

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளா ஷரீப் (தர்ஹா) கப்ருஷ்தானம் அதிக உயரமும் கிடையாது தரைமட்டமும் கிடையாது. நடுத்தர உயரமாகவும் மேலும் சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட நிலையிலும் போர்வையால் திரையிடப்பட்ட நிலையிலும் அவை அமைந்துள்ளது. மேலும் அது மதினமா நகரிலுள்ள ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் அமைந்துள்ளது. மேலும் அந்த வீட்டில் சுவர்கள் இருக்கவில்லை, ஆரம்பமாக அங்கு சுவர்களை எழுப்பியவர்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவார்கள். மேலும் அந்த வீடு ஆரம்ப காலகட்டத்தில் மஸ்ஜித் நபவி பள்ளிக்கு அருகில் இருந்தது, அதன் பின்னர் மன்னர் வலீத் இப்னு அப்துல் மாலிக் அவர்களுடைய ஆட்சி காலத்தில் ஹிஜ்ரி 88ஆம் ஆண்டு மஸ்ஜிதுன் நபவி இடிக்கப்பட்டு விசாலமாக கட்டப்பட்டது. அச்சமயம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீபை பள்ளிவாசலுக்குள் அப்துல் மலிக் அவர்கள் கொண்டு வந்தார்கள். இப்போதும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூபக்கர் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் கப்ரு ரவ்ளா ஷரீப் மஸ்ஜித் நபவி (உள்பகுதியில்) அமைந்துள்ளதை நம்மால் காண முடிகிறது. மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீப் கட்டப்பட்ட நிலையிலும். அருகில் சுவர்கள் எழுப்பப்பட்ட நிலையிலும். வீட்டின் மேற்பகுதி ஆரம்ப காலகட்டத்தில் முகடுகளாக இருந்தது. அதன் பின்னர் ஹிஜ்ரி 678ஆம் ஆண்டு மன்னர் முஹம்மது இப்னு கலாவூன் அஸ்ஸாலஹ் அவர்களுடைய ஆட்சி காலத்தில் குப்பா அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் வெள்ளை நிற குப்பாவாகவும் அடுத்து நீல நிற குப்பாவாகவும் இருந்து வந்தது. அதற்கு பின்னர் இச்சையூட்டும் பச்சை நிற குப்பாவாக அவை மாற்றப்பட்டது. இன்று வரை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீப் முஃமின்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சுவனத்து பூங்கா போன்று தோற்றம் அளிக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

 

நபி முஹம்மத் ﷺ அவர்களுடைய கப்ரு ரவ்ளா ஷரீபை ஸியாரத்து செய்யுங்கள்

 

عَنْ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيارَة القُبُورِ فَزُورُوهَا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். கப்ருஷ்தானங்களை சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் கப்ருஷ்தானங்களை தாராளமாகச் சந்தியுங்கள் ஸியாத்து செய்யுங்கள்.

 

அறிவிப்பவர் :- புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 977, 1977 அபூ தாவூத் 3235 நஸாயி 2032

 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என்னுடைய கப்ரை ஸியாரத் செய்தாரோ அவருக்கு என்னுடைய ஷபாஅத் பரிந்துரை கட்டாயம் ஆகிவிட்டது.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரகுத்னி 2695

 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ زَارَ قَبْرِي حَلَّتْ لَهُ شَفَاعَتِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் என்னுடைய கப்ரை ஸியாரத் செய்தாரோ அவருக்கு என்னுடைய ஷபாஅத் பரிந்துரை கிடைத்து விட்டது.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரகுத்னி 2/278

 

عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ‏ مَنْ زَارَ قَبْرِي، أَوْ قَالَ‏ مَنْ زَارَنِي كُنْتُ لَهُ شَهِيدًا أَوْشَفِيعًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். யார் என் கப்ரை ஸியாரத் செய்தாரோ (அல்லது) என்னை ஸியாரத் செய்தாரோ அவருக்கு நான் பரிந்துரைப்பவராகவும் சாட்சியாளராகவும் நான் ஆகிவிட்டேன் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 5/245

 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَجَّ فَزَارَنِي بَعْدَ وَفَاتِي كَانَ كَمَنْ زَارَنِي فِي حَيَاتِي‏

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் ஹஜ்ஜு செய்து விட்டு என் மறைவிற்குப்பின் என் கப்ரை ஸியாரத் செய்ய வந்தாரோ அவர் என் வாழ்விலேயே என்னை சந்தித்தவராவார்.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரகுத்னி 1323

 

குறிப்பு :- மதினா நகர் அதிக சிறப்புகளை உள்ளடக்கிய ஓர் அச்சமற்ற நகராகும். அந்த நகருக்கு அதிகளவில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மேலும் அந்த நகரைச் சுமந்த மண்ணில் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீப் அமைந்துள்ளது. அந்த ரவ்ளா ஷரீபை ஸியாரத்து செய்து அவர்களுடைய ஸபாஅத் என்னும் மாபெரும் பரிந்துரையை பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்

 

நபி முஹம்மத் ﷺ அவர்களுக்கு இரு மரணம் கிடையாது 

 

كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது (மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான். பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படுவீர்கள்.

சூரா பகரா ஆயத் 28

 

قَالُوْا رَبَّنَاۤ اَمَتَّنَا اثْنَتَيْنِ وَاَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰى خُرُوْجٍ مِّنْ سَبِيْلٍ‏

 

குர்ஆன் கூறுகிறது அதற்கவர்கள், எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு விண்ணப்பம் செய்கின்றோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளிப்பட ஏதும் வழி உண்டா?” என்று கேட்பார்கள்.

சூரா முஃமின் ஆயத் 11

 

♦️இறைவன் தாயின் கருவறையில் இருக்கும் போது உயிர் கொடுத்து மனிதனை வெளிப்படுத்தினான் பின்னர் அவன் நாடிய நேரத்தில் மரணிக்கச் செய்கிறான். மீண்டும் கப்ரில் அடக்கம் செய்த பின்னர் கேள்வி கணக்கின் போது மீண்டும் உயிர் கொடுக்கிறான். கேள்வி கணக்கு முடிந்தவுடன் மீண்டும் மரணிக்க செய்கிறான் என்ற கருத்தை மேற்கூறப்பட்ட ஆயத்துக்களை மூலாதாரமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ قَالَتْ أَقْبَلَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى فَرَسِهِ مِنْ مَسْكَنِهِ بِالسُّنْحِ حَتَّى نَزَلَ فَدَخَلَ الْمَسْجِدَ فَلَمْ يُكَلِّمْ النَّاسَ حَتَّى دَخَلَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَتَيَمَّمَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُسَجًّى بِبُرْدِ حِبَرَةٍ فَكَشَفَ عَنْ وَجْهِهِ ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ ثُمَّ بَكَى فَقَالَ بِأَبِي أَنْتَ يَا نَبِيَّ اللَّهِ لَا يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ أَمَّا الْمَوْتَةُ الَّتِي كُتِبَتْ عَلَيْكَ فَقَدْ مُتَّهَا

 

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரண செய்தியைக் கேள்விப்பட்ட என் தந்தை) அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அஸ்ஸுன்ஹ்’ எனுமிடத்திலுள்ள தமது வீட்டிலிருந்து குதிரையில் வந்து இறங்கி, (மஸ்ஜிதுன் நபவி) பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்கு வந்தார்கள். அங்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாடிச் சென்றார்கள் கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட போர்வையால் நபியவர்களின் உடல் போர்த்தப்பட்டிருந்தது. உடனே அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முகத்திலுள்ள துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மீது விழுந்து முத்தமிட்டுவிட்டு அழுதார்கள். பிறகு, ‘யா ரஸுலல்லாஹ்! என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணம்! அல்லாஹ் உங்களுக்கு இரு மரணத்தை ஏற்படுத்தவில்லை. உங்கள் மீது விதிக்கப்பட்ட அந்த (ஒரு) மரணத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்கள் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 1242, ‌4453 அஹ்மது 24863

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மேற்கூறப்பட்ட இரு மரணம் கிடையாது. கப்ரில் கேள்வி கணக்கின் போது அவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் அதற்கு பின்னர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரணமே கிடையாது என்ற கருத்தை மேற்கூறப்பட்ட ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

கப்ரில் காட்சி தரும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ أَتَاهُ مَلَكَانِ فَأَقْعَدَاهُ فَيَقُولَانِ لَهُ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஓர் அடியாரின் உடலைக் கப்ரு (சவக்)குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் விரும்பும் போது அவர்களின் காலணிகள் எழுப்பும் ஓசையை நிச்சயமாக அவர் (மய்யித்) செவியுறுவார். அதற்குள் இரண்டு வானவர்கள் அவரிடம் வந்து அவரை எழுப்பி உட்கார வைத்து, ‘முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?’ எனக் கேட்பார். அதற்கு ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என நான் உறுதிகூறுகிறேன்’ என்பார்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1338, 1374 முஸ்லிம் 2870 அபூ தாவூத் 3231

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قُبِرَ الْمَيِّتُ أَوْ قَالَ أَحَدُكُمْ أَتَاهُ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ يُقَالُ لِأَحَدِهِمَا الْمُنْكَرُ وَالْآخَرُ النَّكِيرُ فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ مَا كَانَ يَقُولُ هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள். மரணித்தவர் அல்லது உங்களில் (மரணித்துவிட்ட) ஒருவர் மண்ணறைக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டதும், நீலநிறக் கண்கள் உடைய கறுப்புநிற வானவர்கள் இருவர் அவரிடம் வருகின்றனர். அவர்களில் ஒருவர் ‘முன்கர்’ என்றும் மற்றொருவர் ‘நகீர்’ என்றும் சொல்லப்படும். அப்போது அவர்கள் இருவரும், ‘(இதோ!) இந்த மனிதர் பற்றி நீ என்ன சொல்லிக் கொண்டிருந்தாய்?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘இவர்தான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள்’ என்று கூறுவார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1071

 

குறிப்பு :- ஒவ்வொரு மனிதர்களுடைய கப்ருகளிலும் முன்கர் நகீர் என்ற இரு மலக்குகளின் கேள்வி கணக்கின் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த கப்ருகளில் தோற்றம் அழிக்கிறார்கள் காட்சி தருகிறார்கள் என்ற கருத்துக்களை மேற்கூறப்பட்ட ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.