நபி முஹம்மத் ﷺ அவர்களின் பொருட்டை கொண்டும் நேரடியாகவும் உதவி தேடல்

336

நபி முஹம்மத் ﷺ அவர்களின் பொருட்டை கொண்டும் நேரடியாகவும் உதவி தேடல்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ

 

பஞ்சம் ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு மழை தேடுபவர்களாக ஆகியிருந்தார்கள். அதாவது, இறைவா ! நிச்சய்மாக நாங்கள் எங்களின் நபியை உன்னளனவில் வைத்து (வஸீலாவாக) உதவிச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக. ஆகியிருந்தோம். நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிராய். மேலும்
நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தப்பனாரைக் கொண்டு (முன்னிலையாக்கி) வஸீலாவாக்கி கேட்கிறோம். மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள். உடனே மழை பொழிந்து விடும்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1010, 3710 இப்னு ஹிப்பான் 2862

 

خطب عمر الناس فقال أيها الناس إن رسول الله صلى الله عليه وسلم كان يرى للعباس ما يرى الولد لوالده فاقتدوا أيها الناس برسول الله صلى الله عليه وسلم في عمه العباس واتخذوه وسيلة إلى الله

 

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரசங்கம் செய்யும் போது கூறினார்கள். மனிதர்களே நிச்சயமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஒரு மகன் தன் தந்தையை கருதுவது போல கருதினார்கள் . மக்களே அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் விஷயத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுவதுடன், அவர்களைக் கொண்டும் அல்லாஹ்விடம் பரிந்துரை வஸீலா தேட வேண்டும் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம்” முஸ்தத்ரக் 3/377 இப்னு அஸாகிர்” தாரீஹ் 6/328 பத்ஹுல் பாரி 577

 

عَنْ أَبُو الْجَوْزَاءِ أَوْسُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ قُحِطَ أَهْلُ الْمَدِينَةِ قَحْطًا شَدِيدًا فَشَكَوْا إِلَى عَائِشَةَ فَقَالَتْ انْظُرُوا قَبْرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاجْعَلُوا مِنْهُ كِوًى إِلَى السَّمَاءِ حَتَّى لَايَكُونَ بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ سَقْفٌ قَالَ : فَفَعَلُوا فَمُطِرْنَا مَطَرًا حَتَّى نَبَتَ الْعُشْبُ وَسَمِنَتِ الْإِبِلُ حَتَّى تَفَتَّقَتْ مِنَ الشَّحْمِ فَسُمِّيَ عَامَ الْفَتْقِ

 

மதீனா மக்கள் கடும் பஞ்சம் வரட்சியால் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் (தங்களின் நிலையை) முறையிட்டார்கள். அதற்கு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்குச் சென்று கப்ருக்கும் வானத்திற்கும் இடையில் எந்தவொரு திரையும் இல்லாதவாறு வானத்தை நோக்கி ஒரு வழியை (துளையை) ஏற்படுத்துங்கள் என்று சொன்னார்கள். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின் பெரும் மழை பொழிந்தது (எந்தளவுக்கென்றால்) புற்கள் (எங்கும்) வளர்ந்ததுடன் ஒட்டகங்கள் அதிக கொழுத்ததினால் வெடித்து விடும் அளவிற்கு இருந்தன. எனவே அந்த ஆண்டு “ஆமுல் ஃபத்க் என பெயரிடப்பட்டது.

 

அறிவிப்பவர் :- அபூ அல் ஜவ்ஸா அவ்ஸ் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரமீ 93

 

عَنْ عُثْمَانَ بْنِ حُنَيْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلاً، ضَرِيرَ الْبَصَرِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يُعَافِيَنِي قَالَ إِنْ شِئْتَ دَعَوْتُ وَإِنْ شِئْتَ صَبَرْتَ فَهُوَ خَيْرٌ لَكَ ‏ قَالَ فَادْعُهُ ‏ قَالَ فَأَمَرَهُ أَنْ يَتَوَضَّأَ فَيُحْسِنَ وُضُوءَهُ وَيَدْعُوَ بِهَذَا الدُّعَاءِ ‏اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي فِي حَاجَتِي هَذِهِ لِتُقْضَى لِي اللَّهُمَّ فَشَفِّعْهُ فِيَّ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கண் பார்வை இழந்த ஒருவர் வந்தார் . எனக்கு சுகம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள் என்றார் . அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ,நீர் நாடினால் துஆ செய்கிறேன் ,நீர் நாடினால் பொறுமையாக இருங்கள். அதுதான் உமக்கு நல்லது என்று சொன்னார்கள். அதற்கு அந்த மனிதர் துஆச் செய்யுங்கள் என்றார். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ,நல்லபடி உளூ செய்து இந்த துஆவைக் கொண்டு துஆ செய்யுங்கள் என்றார்கள். இறைவா! உனது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபிய்யுர் ரஹ்மத் அருள் நபியைக் கொண்டு கேட்கிறேன் முன்னோக்குகிறேன் . யா முஹம்மது உங்களைக் கொண்டு எனது இரட்சகனின் பக்கம் எனது தேவை நிறைவேற முன்னோக்குகிறேன் . என்னில் அவர்களது வஸீலா சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக! என்று துஆ கேட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- உஸ்மான் இப்னு ஹுனைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3578 இப்னு மாஜா 1385

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا مَاتَتْ فَاطِمَةُ بِنْتُ أَسَدِ بْنِ هَاشِمٍ أُمُّ عَلِيٍّ دَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ…… اللَّهُمَّ اغْفِرْ لأُمِّي فَاطِمَةَ بِنْتِ أَسَدٍ وَوَسِّعْ عَلَيْهَا مُدْخَلَهَا بِحَقِّ نَبِيِّكَ وَالأَنْبِيَاءِ الَّذِينَ مِنْ قَبْلِي

 

பாத்திமா பின்த் அஸத் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்த போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு சென்றிருந்தார்கள் (அச்சமயம்) இறைவா ! உனது நபியின் பொருட்டாலும் எனக்கு முன்னும் உள்ள நபிமார்களின் பொருட்டாலும், என் தாயா் பாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரகுத்னி 3/1377 தப்ரானி” கபீர் 20324

 

ﻗَﺎﻝَ ﺁﺩﻡ ﻳَﺎ ﺭﺏ ﺃَﺳﺄَﻟﻚ ﺑِﺤَﻖ ﻣُﺤَﻤَّﺪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳﻠﻢ ﻟﻤﺎ ﻏﻔﺮﺕ ﻟﻲ؟ ﻓَﻘَﺎﻝَ ﺍﻟﻠﻪ ﺗَﻌَﺎﻟَﻰ : ﻳَﺎﺁﺩﻡ ﻭَﻛَﻴﻒ ﻋﺮﻓﺖ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻭَﻟﻢ ﺃﺧﻠﻘﻪ؟ ﻗَﺎﻝَ : ﻳَﺎﺭﺏ ﻟﻤﺎ ﺧﻠﻘﺘﻨﻲ ﺑِﻴَﺪِﻙ ﻭﻧﻔﺨْﺖَ ﻓﻲَّ ﻣﻦ ﺭﻭﺣﻚ ﺭﻓﻌﺖُ ﺭَﺃْﺳِﻲ ﻓَﺮَﺃَﻳْﺖ ﻋﻠﻰ ﻗَﻮَﺍﺋِﻢ ﺍﻟْﻌَﺮْﺵ ﻣَﻜْﺘُﻮﺑًﺎ ﻟَﺎ ﺇِﻟَﻪ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠﻪ ﻣُﺤَﻤَّﺪ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠﻪ، ﻓَﻌﻠﻤﺖ ﺃَﻧَّﻚ ﻟﻢ ﺗﻀﻒ ﺇِﻟَﻰ ﺍﺳْﻤﻚ ﺇِﻟَّﺎ ﺃﺣﺐَّ ﺍﻟْﺨﻠﻖ ﺇِﻟَﻴْﻚ ﻗَﺎﻝَ ﺍﻟﻠﻪ : ﻳَﺎ ﺁﺩﻡ ﺇِﻧَّﻪ ﻷﺣﺐُّ ﺍﻟْﺨﻠﻖ ﺇﻟﻲّ ﻭﺇﺫْ ﺳَﺄَﻟﺘﻨِﻲ ﺑِﺤَﻖ ﻣُﺤَﻤَّﺪ ﻓﻘﺪ ﻏَﻔﺮْﺕُ ﻟَﻚ ﻭَﻟَﻮْﻟَﺎ ﻣُﺤَﻤَّﺪ ﻣَﺎ ﻏﻔﺮﺕ ﻟَﻚ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (எனது பொருட்டால்) முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பொருட்டால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டதும் அவரை எப்படி அறிந்தீர் என்று இறைவன் கேட்டான். அதற்கு நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம், உன் திருக்கரத்தால் என்னைப் படைத்து உன் ரூஹிலிருந்து என்னுள் ரூஹை ஊதினாய். அப்போது தலையுயர்த்தி அர்ஷின் தூண்களில் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்ல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். படைப்பில் உனக்கு விரும்பானவரைத்தான் உன் பெயரோடு சேர்த்திருப்பாய் என்று அறிந்து கொண்டேன். அச்சமயம் இறைவன் கூறினான் உண்மைதான் உரைத்தீர். முஹம்மத் இல்லாவிட்டால் உம்மைப் படைத்திருக்க மாட்டேன்.அவரின் பொருட்டால் கேட்டதனால் உமது குற்றத்தை மன்னித்தேன் என்று இறைவன் கூறினான்.

 

ஆதாரம் :- ஹாகிம்” முஸ்தத்ரக் 2/615 இப்னு அஸாகிர் 2/323 பைஹகி” தலாயிலுன் நுப்வா 5/88

 

குறிப்பு :- வஸீலா என்னும் ஏகத்துவ பிராத்தனை என்பது இறைவனை நெருங்கிக் கூடிய ஓர் வழியாகும். வஸீலா என்பது நபிமார்கள் நல்லடியார்கள் அல்லது அல்லது அவர்களுடன் சம்மந்தப்பட்ட பொருட்களையோ, இன்னும் நாம் செய்த நல்லமல்களையோ இறைவனிடம் முன்னிலைப்படுத்தி அவர்களின் அல்லது அவைகளின் பொருட்டால் தமது தேவைகளை இறைவனிடம் கேற்பதாகும். மேலும் ஷபாஅத் என்னும் மாபெரும் பரிந்துரைக்கும் வஸீலா என்று கூறப்படும். குறிப்பாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னிலைப் படுத்தி வஸீலா தேடுங்கள் என்ற கருத்துக்களை மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

நபி முஹம்மத் ﷺ அவர்களை நேரடியாக அழைத்து உதவி தேடல்

 

ﻭَﻟَﻮْ ﺃَﻧَّﻬُﻢْ ﺇِﺫْ ﻇَﻠَﻤُﻮﺍ ﺃَﻧْﻔُﺴَﻬُﻢْ ﺟَﺎﺀُﻭﻙَ ﻓَﺎﺳْﺘَﻐْﻔَﺮُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺍﺳْﺘَﻐْﻔَﺮَ ﻟَﻬُﻢُ ﺍﻟﺮَّﺳُﻮﻝُ ﻟَﻮَﺟَﺪُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ ﺗَﻮَّﺍﺑًﺎ ﺭَﺣِﻴﻤًﺎ ‏

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்தபோது, உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காகத் தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால், மன்னிப்பை
ஏற்பவனாகவும் மிகுந்த
அன்புடையோனாகவும் அல்லாஹவை அவர்கள் காண்பார்கள்.

சூரா நிஸா ஆயத் 64

 

عَنْ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ أَصَابَ النَّاسَ قَحَطٌ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، فَجَاءَ رَجُلٌ إِلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اسْتَسْقِ اللَّهَ لأُمَّتِكَ فَإِنَّهُمْ قَدْ هَلَكُوا فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ ، فَقَالَ ائْتِ عُمَرَ فَأَقْرِئْهُ السَّلامَ وَأَخْبِرْهُ أَنَّكُمْ مُسْقَوْنَ وَقُلْ لَهُ عَلَيْكَ الْكَيْسَ الْكَيْسَ فَأَتَى الرَّجُلُ عُمَرَ فَأَخْبَرَهُ فَبَكَى عُمَرُ ثُمَّ قَالَ يَا رَبُّ مَا آلُو إِلا مَا عَجَزْتُ عَنْهُ

 

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்தில் மக்கள் பஞ்சத்தினால் கஷ்டப்பட்டார்கள். அப்போது ஒரு மனிதர் (பிலால் இப்னு ஹாரிஸ் அல் முஸ்னி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கு வருகை தந்து” யா ரஸூலுல்லாஹ்! அல்லாஹ்விடம் உங்களின் உம்மத்துக்காக வேண்டி மழை பெய்யுமாறு துஆ செய்யுங்கள், ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அழிந்து விட்டார்கள் என்று கூறினார்கள். பின்னர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அந்த மனிதரின்) கனவில் வந்து உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று (எனது) ஸலாத்தை கூறுங்கள்” மேலும் “நீங்கள் (மக்களுக்கு) மழை பொழிவிக்கப்படும் (எனவும்), நீங்கள் (உமர் ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் விவேகமாக நடந்து கொள்ளுங்கள், நீங்கள் விவேகமாக நடந்து கொள்ளுங்கள் என்றும் கூறுங்கள்” எனக் கூறினார்கள். (பின்) அந்த மனிதர் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று இந்த செய்தியை கூறினார்கள். (இதனை கேட்ட) உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதார்கள். பிறகு “என்னுடைய இரட்சகனே! எனது சக்திக்கு அப்பாற்பட்டதை தவிர நான் எதையும் முயற்சி செய்யாமலில்லை என கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- மாலிக்குத்தார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அஸாகிர்” தாரீஹ் தமஸ்க் 489 இப்னு அபீஷைபா” முஸன்னப் 12/32

 

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَدِرَتْ رِجْلُ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ لَهُ رَجُلٌ اذْكُرْ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ، فَقَالَ يَا مُحَمَّدُ فَبَسَطَهَا

 

ஒரு தினம் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கால் மரத்து சோர்வடைந்த போது, அச்சமயம் “உங்களிக்கு மிகவும் விருப்பமான ஒருவரின் பெயர் கூறி அழையுங்கள்” எனக்கூறப்பட்டது. உடனே “யா முஹம்மதா! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களே எனக்கு உதவுங்கள்) என்று உரத்த குரலில் கூவினார். கால் மறுப்பு உடன் நீங்கி விட்டது.

 

அரிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு ஸயித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அதபுல் முப்ரத் 959

 

عن علي رضي الله عنه قال : قدم علينا أعرابي بعدما دفنا رسول الله صلى الله عليه وسلم بثلاثة أيام فرمى بنفسه على قبر رسول الله صلى الله عليه وسلم وحثا على رأسه من ترابه فقال قلت يا رسول الله فسمعنا قولك ووعيت عن الله فوعينا عنك وكان فيما أنزل الله عليك ولو أنهم إذ ظلموا أنفسهم الآية وقد ظلمت نفسي وجئتك تستغفر لي فنودي من القبر إنه قد غفر لك

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடக்கம் செய்து மூன்று நாட்கள் கழிந்தபிறகு ஒரு கிராம அரபி வந்து, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரின் மீது விழுந்தார். தலையில் மண் படிந்திருந்தது. ‘யா ரஸூலல்லாஹ்! உமது சொல்லுக்கு கட்டுப்பட்டுள்ளேன். அல்லாஹ் இறக்கி அருளிய (4:64) வசனதை உங்கள் மூலம் கேட்டுள்ளேன். எனக்கு நானே அநீதி இழைத்து விட்டேன். இறைவனிடத்தில் எனக்காக தாங்கள் மண்ணிப்பு இதோ உங்கள் தருபாருக்கு வந்துள்ளேன். எனக்காக மண்ணிப்பு கோருவீராக! என்றார். அப்போது, உமது பாவம் மண்ணிக்கப்பட்டது என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளா ஷரீப் கப்ரிலிருந்து சப்தம் வந்தது.

 

அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ஸீர் குர்துபி 5/265

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரில் மறைந்து உயிருடன் இருக்கிறார்கள் அவர்களை நேரடியாக அழைத்து உதவி தேடுவதில் எவ்வித குற்றமும் இல்லை. தாராளமாக உதவி தேடலாம் என்ற கருத்துக்களை மேற்கூறப்பட்ட ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே இவைகளை குற்றமாக கருதுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் கூமுட்டைகள் மடயர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.