நபி முஹம்மத் ﷺ அவர்களின் சொல் செயலும் எட்டு ரகாத்து என்ற பெயரில் இமாம் ஜமாத்து தொழுகையும்
நபி முஹம்மத் ﷺ அவர்களின் சொல் செயலும் எட்டு ரகாத்து என்ற பெயரில் இமாம் ஜமாத்து தொழுகையும்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ، سند میں مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ ، قمي اور عِيسَى بْنُ جَارِيَةَ ضعیف ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَشْعَرِيُّ ، حَدَّثَنَا عِيسَى بْنُ جَارِيَةَ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِؓ ، عَنْ أُبَيِّ بْنِ کعبؓ ، قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، عَمِلْتُ اللَّيْلَةَ عَمَلًا ، قَالَ : ” مَا هُوَ ؟ ” ، قَالَ : نِسْوَةٌ مَعِي فِي الدَّارِ قُلْنَ لِي : إِنَّكَ تَقْرَأُ وَلَا نَقْرَأُ ، فَصَلِّ بِنَا ، فَصَلَّيْتُ ثَمَانِيًا وَالْوَتْرَ ، قَالَ : فَسَكَتَ رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ فَرَأَيْنَا أَنَّ سُكُوتَهُ رِضًا بِمَا كَانَ
عَنْ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا {رَجُلٌ سَمَاءِ} مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ ، قمي, ضعیف, اور عِيسَى بْنُ جَارِيَةَ, ضعیف
عَنْ عِيسَى بْنِ جَارِيَةَ، حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: جَاءَ أُبَيُّ بْنُ كَعْبٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنْ كَانَ مِنِّي اللَّيْلَةَ شَيْءٌ يَعْنِي فِي رَمَضَانَ، قَالَ: «وَمَا ذَاكَ يَا أُبَيُّ؟»، قَالَ: نِسْوَةٌ فِي دَارِي، قُلْنَ: إِنَّا لَا نَقْرَأُ الْقُرْآنَ فَنُصَلِّي بِصَلَاتِكَ، قَالَ: فَصَلَّيْتُ بِهِنَّ ثَمَانَ رَكَعَاتٍ، ثُمَّ أَوْتَرْتُ، قَالَ: فَكَانَ شِبْهُ الرِّضَا وَلَمْ يَقُلْ شَيْئ
مسند أبي يعلى الموصلي1801 سند عِيسَى بْنُ جَارِيَةَ ضعیف
உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! ரமழான் மாதத்தின் நேற்றைய இரவில் எனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டது’ என்றார். ‘என்ன பிரச்சனை?’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள் அதற்கவர்கள், ‘நாங்கள் குர்ஆன் ஓதத் தெரியாதவர்களாக இருக்கிறோம்; எனவே உங்களைப் பின்பற்றி நாங்கள் தொழுகிறோம்’ என்று என் வீட்டில் உள்ள பெண்கள் கேட்டனர். அவர்களுக்கு எட்டு ரக்அத்கள் தொழுவித்து, பின்னர் வித்ரும் தொழுவித்தேன்’ என்று கூறினார்கள். அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த ஒரு மறுப்பும் கூறாமல் மறைமுகமாகச் சம்மதம் தெரிவித்தனர்.
அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் முஸ்னத் அபீயஃலா 3 / 336 முஸ்னத் அஹ்மத் 1801
عَنْ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ الْقُمِّيُّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ جَارِيَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرِ رَمَضَانَ ثَمَانَ رَكَعَاتٍ وَأَوْتَرَ، فَلَمَّا كَانَتِ الْقَابِلَةُ اجْتَمَعْنَا فِي الْمَسْجِدِ، وَرَجَوْنَا أَنْ يَخْرُجَ إِلَيْنَا، فَلَمْ نَزَلْ فِيهِ حَتَّى أَصْبَحْنَا، ثُمَّ دَخَلْنَا فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، اجْتَمَعْنَا فِي الْمَسْجِدِ، وَرَجَوْنَا أَنْ تُصَلِّيَ بِنَا، فَقَالَ: إِنِّي خَشِيت أَوْ كَرِهْتُ أَنْ يُكْتَبَ عَلَيْكُمُ الْوِتْرُ
رواه ابن حبان 2409 سند عِيسَى بْنُ جَارِيَةَ ضعیف
ரமழான் மாதத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எட்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள். மறு நாள் இரவு நாங்கள் பள்ளி வாசலில் கூடினோம். அப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்து சுப்ஹு வரை காத்திருந்தோம். (சுப்ஹுக்கு வந்த) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வந்து தொழ வைப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்’ என்று கூறினார்கள். அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்கள் மீது வித்ரு கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சி விட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் இப்னு ஹிப்பான் 2409
عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ عَنْهُ: ” أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرِ رَمَضَانَ ثَمَانَ رَكَعَاتٍ وَأَوْتَرَ
رواه الطبراني 2/ 129 ، كما قال الهيثمي وفيه: عيسى بن جارية وثقه ابن حبان وغيره، وضعفه ابن معين : مجمع الزوائد: 3/172
நிச்சயமாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதத்தில் எட்டு ரக்அத்களும் இன்னும் வித்ரும் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் தப்ரானி 2 /129
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களை மூலமாக வைத்து கொண்டு தராவீஹ் என்ற பெயரில் அழைக்கப்படும் கியாமுர் ரமழான் என்ற தொழுகை எட்டு ரக்அத்து என்றும் அதனை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இமாம் ஜமாத்துடன் தொழுவதற்கு அனுமதி அழித்ததாகவும் அடுத்த அறிவிப்புக்களை மூலமாக வைத்து இமாம் ஜமாத்துடன் தொழ வைத்ததாகவும் இடம் பெற்றுள்ள இரு விதமான ஹதீஸ்களையும் போலி தவ்ஹீத் வாதிகள் மூல ஆதாரமாக வைத்து மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
காரணம் ஹதீஸ்களின் தரம் முக்கியமானது ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் பலயீனம் ஏதாவது ஒரு குறைகளிருந்தால் அந்த ஹதீஸை எடுக்கக்கூடாது அது இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு சமம் என்பதாக மேடைகளில் ஊளையிட்டு பல ஹதீஸ்களை மறுப்பதும் அல்லாமல் சமீபகாலகட்டத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கூட புத்தியை வைத்து மருத்து வந்த போலி தவ்ஹீத் வாதிகளுக்கு மேற்கூறப்பட்ட ஹதீஸ்களின் தரம் என்ன? அதனுடைய அறிவிப்பாளர் வரிசை சரியானதா? என்பதை கூட அவர்கள் பார்க்காமல் மக்கள் மத்தியில் தவறான நச்சு கருத்துக்களை பேசி வருவதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.
இமாம் ஜமாத்துடன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எட்டு ரக்அத்கள் தொழுததாக மேற்கூறப்பட்ட ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் வரிசையில் முஹம்மது இப்னு ஹுமைத் அர் ராஜி என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் ஒரு பொய்யர் என்றும் இவருடைய அறிவிப்புக்கள் மறுக்கப்பட வேண்டியவை என்றும் ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் மேலும் அடுத்த இருவிதமான அறிவிப்புத்தொடரிலும் ஈஸப்னு ஸாரியா என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்று அறியப்படாதவர் மேலும் இவர் அறிவிப்பு செய்யும் ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியவை என்றும் அதிகமான ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள் குறை கூறியவர்களில் மாபெரும் அறிஞர்களான இமாம் நஸாயி ரஹ்மத்துல்லாஹ், அபூ தாவூத் ரஹ்மத்துல்லாஹ், யஹ்யா இப்னு முயீன் ரஹ்மத்துல்லாஹ், இன்னும் இது போன்ற பல அறிஞர்களும் உண்டு மேலும் மேற்குறிப்பிட்ட ஹதீஸ்கள் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முறண் படுவதால் இது போன்ற ஹதீஸ்கள் கடுமையான பலயீனம் அடைகிறது என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் கடும் பலயீனம் என்பதை தெளிவான முறையில் கீழ் கானும் கிதாபுகளை மூலகாரணமாக வைத்து நாம் பார்க்க முடிகிறது.
وذكره الساجي والعقيلي في الضعفاء ” راجع التهذيب لابن حجر 8 / 207 محفوظة ” وذكره الساجي والعقيلي في الضعفاء ” راجع التهذيب لابن حجر 8 / 207 :- الثقات لابن حبان 5 / 214 الكامل في الضعفاء لابن عدي 5 / 248 الضعفاء للعقيلي 3 / 383 الضعفاء والمتروكين للنسائي 176 تهذيب الكمال 22 / 588 تهذيب التهذيب 8 / 185 التقريب 438
எனவே எம் பெருமானார் முஹம்மதே முஸ்தபா ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதத்தில் எட்டு ரக்அத்து இமாம் ஜமாத்துடன் கடைசி வரை தொழுததாகவோ அல்லது தொழும் படி அனுமதி அழித்ததாகவோ எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் ஹதீஸ் கிரகங்களில் கிடையாது என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்