நபி முஹம்மத் ﷺ அவர்களின் தூய வம்சம் பரம்பரை பற்றிய தகவல்கள்
நபி முஹம்மத் ﷺ அவர்களின் தூய வம்சம் பரம்பரை பற்றிய தகவல்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُعِثْتُ مِنْ خَيْرِ قُرُونِ بَنِي آدَمَ قَرْنًا فَقَرْنًا حَتَّى كُنْتُ مِنَ القَرْنِ الَّذِي كُنْتُ فِيهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதமுடைய சந்ததிகளில் தலைமுறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாகவே நான் இறைத்தூதராக அனுப்பப்பட்டேன்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3396
ஆதமுடைய சந்ததிகளில் தலைமுறை தலைமுறையாக இப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கும் வழியே சிறந்தோர் வழியாகவே இறைவன் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பி வைத்துள்ளான் என்ற செய்திகளை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. மேலும் அவர்களின் பரம்பரை வம்சத் தொடரை சுருக்கமாகப் பார்க்கலாம்.
محُمَّدٌ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،” عَبْدِ اللهِ ” هَاشِمِ ” كِنَانَةَ” عَدْنَانَ ” قِيدَارُ ” إِسْمَاعِيلَ ” إِبْرَاهِيمُ ” صَالِحُ ” إِدْرِيسَ ” آدَمَ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொட்டும் ” அப்துல்லாஹ்வை தொட்டும் ” ஹாஸிமை தொட்டும் ” கினானாவை தொட்டும் ” அத்னானை தொட்டும் ” கைதாரை தொட்டும் ” இஸ்மாயிலை தொட்டும் ” இப்ராஹிமை தொட்டும் ” ஸாலிஹை தொட்டும் ” இத்ரீஸை தொட்டும் ” ஆரம்ப மனிதர் ஆதம் வரை சந்ததிகளின் தலைமுறை தலைமுறையாக வழிவந்த தூய வம்சத்திலிருந்தே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைத்தூதராக இறைவன் அனுப்பி வைத்துள்ளான்.
நூல் 📚 ஆதாரம் :- பைஹகி” கன்ஸுல் உம்மால் 27606 பைஹகி” தலாயிலுன் நுப்வா 2007 நபி
♦️இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரண்டாவது மனைவியர் மூலம் பன்னிரண்டு ஆண் பிள்ளைகளை இறைவன் நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கினான். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு
نَبَايُوتُ ” وَقِيدَارُ ” وَأَدَبْئِيلُ ” وَمِبْسَامُ ” وَمِشْمَاعُ ” وَدُومَةُ ” وَمَسَّا ” وَحَدَارُ ” وَتَيْمَا ” وَيَطُورُ ” وَنَافِيشُ ” وَقِدْمَةُ
நபாயூத் ” கீதார் ” அத்பாஈல் ” மிபுஷாம் ” மிஷ்மாஃ ” தூமா ” மஸ்ஷா ” ஹதார் ” தைமா ” யதூர் ” நாஃபீஸ் ” கிதுமான்.
♦️நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன்களில் ஒருவரான கைதான் என்பவரும் அவரின் குடும்பத்தினரும் பல ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்தனர். அவரது சந்ததியில் வந்தவர்கள் தான் அத்னானும் அவர் மகன் மஅதும் ஆவார்கள், மேலும் இருவரும் பேரும் புகழும் பெற்றவர்கள். பிற்காலத்தில் இவர்களது சந்ததியில் தோன்றியவர்கள் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இந்த வம்சத்தின் தலைமுறையில் இந்த அத்னான் என்பவர் 21வது தலைமுறை பாட்டனாராவார்.
நூல் 📚 ஆதாரம் :- அர்ரஹீக் அல் மக்தூம் 333 வபா அல் வபா 4/1235
♦️ஆரம்ப மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளில் தலைமுறை தலைமுறையாக வழிவந்த தூய சந்ததிகளின் வழியாகவே முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் தேர்ந்தெடுத்து இறைத்தூதராக அனுப்பி வைத்துள்ளான். அத்தகைய சந்ததிகளின் வம்சத் தொடர் பின்வருமாறு
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொடக்கம் நபி முஹம்மத் ﷺ அவர்களின் வரையிலான பரம்பரை வம்சத் தொடர்
إبراهيم عليه السلام هو ابن تارح” بن ناحور” بن ساروع أو ساروغ” بن راعو” بن فالخ” بن عابر” بن شالخ” بن أرفخشند” بن سام” بن نوح عليه السلام” بن لامك” بن متوشلخ” بن أخنوخ يقال أنه هو نبي الله إدريس عليه السلام” بن يرد” بن مهلائيل” بن قينان” بن أنوش” بن شيث” بن آدم عليهما السلام
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் ஷீஸ்” ஷீஸின் மகன் அனூஷ்” அனூஷின் மகன் கைனான்” கைனானின் மகன் மஹ்லாயீல்” மஹ்லாயீலின் மகன் யர்து” யர்தின் மகன் அஹ்னூக் இவர்கள்தாம் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் என்றும் சொல்லப்படுகிறது” இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் மதவ்ஷலக்” மதவ்ஷலகின் மகன் லாமக்” லாமகின் மகன் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்” நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் ஸாம்” ஸாமின் மகன் அர்ஃபக்ஷத்” அர்ஃபக்ஷதின் மகன் ஷாலக்” ஷாலகின் மகன் ஆபிர்” ஆபிரின் மகன் ஃபாலக்” ஃபாலகின் மகன் ராவூ” ராவூவின் மகன் ஸாரூஃ” ஸாரூஃஹின் மகன் நாஹூர்” நாஹூரின் மகன் இப்னு தாரஹ்” தாரஹின் மகன் நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆகும்.
நூல் 📚 ஆதாரம் :- இப்னு ஹிஷாம் 1/93 தபரீ” தாரீஹ் 2/239 மேலும்
عدنان هو بن أدد” بن الهميسع” بن سلامان” بن عوص” بن بوز” بن “قموال” بن أبي” بن عوام” بن ناشد” بن حزا” بن بلداس” بن يدلاف بن طابخ” بن جاحم” بن ناحش” بن ماخي” بن عيض” بن عبقر” بن “عبيد” بن الدعا” بن حمدان” بن سنبر” بن يثربي” بن يحزن” بن يلحن بن أرعوي” بن عيض” بن ديشان” بن عيصر” بن أفناد” بن أيهام” بن “مقصر” بن ناحث” بن زارح” بن سمي” بن مزي” بن عوضة” بن عرام بن قيدار” بن إسماعيل” بن إبراهيم عليهما الصلاة و السلام
நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் இஸ்மாயில்” இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் கைதார்” கைதாரின் மகன் அராம்” அராமின் மகன் அவ்ழாவ” அவ்ழாவின் மகன் மஜீ” மஜீயின் மகன் ஸமீ” ஸமீயின் மகன் ஜாரிஹ்” ஜாரிஹின் மகன் நாஹிஸ்” நாஹ்ஸின் மகன் முக்ஸிர்” முக்ஸிரின் மகன் ஐஹாம்” ஐஹாமின் மகன் அப்னாத்” அப்னாத்தின் மகன் ஐஸிர்” ஐஸிரின் மகன் தைஸான்” தைஸானின் மகன் ஐழு” ஐழின் மகன் அர்அவா” அர்அவாவின் மகன் யல்ஹன்” யல்ஹனின் மகன் யஹ்ஜன்” யஹ்ஜனின் மகன் யஸ்ரபீ” யஸ்ரபீயின் மகன் ஸன்பர்” ஸன்பரின் மகன் ஹம்தான்” ஹம்தானின் மகன் துஆ” துஆவின் மகன் உபைத்” உபைதின் மகன் அப்கர்” அப்கரின் மகன் ஐழ்” ஐழின் மகன் மாஹீ” மாஹியின் மகன் நாஹ்ஸ்” நாஹ்ஸின் மகன் ஜாஹிம்” ஜாஹிமின் மகன் தாபிஹ்” தாபிஹின் மகன் யதுலாஃப்” யதுலாஃபின் மகன் பல்தாஸ்” பல்தாஸின் மகன் ஹஷா” ஹஷாவின் மகன் நாஷித்” நாஷிதின் மகன் அவ்வாம்” அவ்வாமின் மகன் உபை” உபையின் மகன் கிம்வால்” கிம்வாலின் மகன் பவுஷ்” பவுஷின் மகன் அவ்ஷ்” அவ்ஷின் மகன் ஸலாமான்” ஸலாமானின் மகன் ஹமய்ஸா” ஹமய்ஸாவின் மகன் உதத்” உதத்தின் மகன் அத்னான் ஆகும்.
நூல் 📚 ஆதாரம் :- தபகாதுல் குப்ரா 1/101 இப்னு ஷஅத் 1/56 தபரீ” தாரிஹ் 2/272 மேலும்
محمد صلى الله عليه وسلم هو بن عبد الله” بن عبد المطلب” بن هاشم” بن عبد مناف” بن قُصَىّ” بن كِلاب” بن مُرَّة” بن كعب” بن لؤى” بن غالب” بن فِهْر” بن مالك” بن النَّضْر” بن كِنَانة” بن خُزَيْمَة” بن مُدْرِكة” بن إلياس” بن مُضَر” بن نِزَار” بن مَعَد” بن عدنان
அத்னானின் மகன் மஅத்தும்” மஅத்துடைய மகன் நிஸாரும்” நிஸாருடைய மகன் முளரும்” முளருடைய மகன் இல்யாஸும்” இல்யாஸுடைய மகன் முத்ரிகாவும்” முத்ரிகாவின் மகன் குஸைமாவும்” குஸைமாவின் மகன் கினானாவும்” கினானாவின் மகன் நள்ரும்” நள்ரின் மகன் மாலிக்கும்” மாலிக்கின் மகன் ஃபிஹ்ரும்” ஃபிஹ்ரின் மகன் காலிபின்” காலிபின் மகன் லுஅய்யும்” லுஅய்யின் மகன் கஅபும்” கஅபின் மகன் முர்ராவும்” முர்ராவின் மகன் கிலாபும்” கிலாபின் மகன் குஸய்யும்” குஸய்யின் மகன் அப்து மனாஃபும், அப்து மனாஃபின் மகன் ஹாஷிமும்” ஹாஷிமின் மகன் அப்துல் முத்தலிபும்” அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வும்” அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஆவார்கள்.
நூல் 📚 ஆதாரம் :- ஸஹீஹ் புஹாரி பாடம் 28 தபகாதுல் குப்ரா 1/55 தபரீ” தாரீஹ் 2/271 இஸ்திஆப் 1/13 பைஹகி” தாலாயிலுன் நுப்வா 1/19
أمه صلى الله عليه وسلم هي آمنة” بنت وهب” بن عبد مناف” بن زهرة” بن حكيم” ابن مرة (وكان يسمى كلابا)
முர்ராவின் மகன் (கிலாப்) ஹகீம்” ஹகீமின் மகன் ஷுஹ்ரத்” ஷுஹ்ரதின் மகன் அப்துல் மனாப்” அப்துல் மனாபின் மகன் வஹப்” வஹபின் மகள் ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்” அவர்களின் மகன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள்.
♦️ குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரம்பரையின் ஐந்தாவது தலைமுறை தந்தை முர்ராவாகும்” முர்ராவின் மகனுக்கு ஹகீம் என்றும் கிலாப் என்றும் இருவிதமான பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. (கிலாப்) ஹகீமுக்கு இரு மகன்மார்கள். அதில் ஒருவர் (குஸய்) குஸய்யின் மகன்மார்களில் வந்தவர்கள் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். மற்றவர் (ஷுஹ்ரத்) ஷுஹ்ரதின் மகன்மார்களில் வந்தவர்கள் தான் வஹப்” வஹபின் மகள் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தாய் அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்” சுருக்கமாக கூறப்போனால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தாய் தந்தை இருவர்களும் ஓர் தூய பரம்பரையில் இருந்து பாரம்பரியமாக தொடர் வழி வந்தவர்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ غَيْرِ الْمَغْضُوْب عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
(யா அல்லாஹ்) நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! நீ எவர்களுக்கு அருள்புரிந்தாயோ (அத்தகைய சத்திய ஸஹாபாக்கள் தாபீஈன்கள் இமாம்கள்) (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ (அத்தகைய முஹ்தஸிலாக்கள், கவாரிஜியாக்கள், ஷியாக்கள், காதியானிகள், போலி தவ்ஹீத் வஹாபிகள்) சென்ற வழியுமில்லை வழிதவறியோர் வழியுமில்லை . சூரா பாதிஹா ஆயத் 6,7
ஸல்லல்லாஹு அலா முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முகம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்
நூல் 📚 :- (சர்தார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்