நபி முஹம்மத் ﷺ அவர்களின் பிறப்பின் அதிசயங்கள் அற்புதங்கள்

303

நபி முஹம்மத் ﷺ அவர்களின் பிறப்பின் அதிசயங்கள் அற்புதங்கள்

 

ما ولدني من نكاح أهل الجاهلية شيء، ما ولدني إلا نكاح كنكاح الإسلام

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறியாமை காலத்து திருமண வழிமுறையில் நான் பிறக்கவில்லை. இஸ்லாமிய திருமணத்தைப்போல் அமைந்த திருமணத்தின் வாயிலாகவே நான் பிறந்தேன்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 13845 தப்ரானி” கபீர் 10812 இப்னு அஸாகிர் 1207

 

لم تجد حين حملت به صلى الله عليه وسلم ما تجد النساء من شدة الحمل والطلق

 

அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வயிற்றிலிருந்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிவருகின்ற நேரத்தில் பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவது போன்ற பிரசவ வழி மற்றும் உடல் ரீதியான மாற்றங்கள் ஏதும் அவர்களுக்கு ஏற்படவில்லை.

 

அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாய் ஷிபா அவர்கள். நூல் ஆதாரம் :- பைஹகி” தலாயிலுன் நுப்வா 1/80 தாரமீ” ஸுனன் 1/9 மவாஹிப் 1/67

 

فما شيء أنظره في البيت إلا نور، وإني أنظر إلى النجوم تدنو حتى إني لأقول يقعن عليَّ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெறும் வேளை, அன்று இரவு ஓர் காட்சியைக் கண்டேன். வானத்து நட்சத்திரங்கள் என் மேல் விழுந்து விடும் என்று நான் சொல்லும் அளவுக்கு நெருங்குவதைக் கண்டேன். பிள்ளை பெற்றதும் என்னை நோக்கி வந்த ஒளியினால் நாங்கள் இருந்த வீடு பிரகாசித்தது.

 

அறிவிப்பவர் :- எனது தாயார் எனக்கு அறிவித்ததாக உஸ்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ரானி” அல் முஃஜமுல் கபீர் 629 பைஹகி” ஷுஃபுல் ஈமானில் 1285

 

فاضاء لي ما بين المشرق والمغرب حتى نظرت الى بعض قصور الروم

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த போது (மாபெரும்) பேரொளி ஒன்று தோன்றியது. அதன் வெளிச்சத்தில் கிழக்கும், மேற்கும் துலங்கின. ரோமாபுரியிலுள்ள கோட்டைகள் தெரிந்தன.

 

அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாய் ஷிபா அவர்கள். ஆதாரம் ஷறஹுஷ் ஷிபா 751

 

رأت أمي حين حملت بي أنه خرج منها نور أضاءت له قصور الشام

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனது தாயார் (நான் பிறக்கும் போது என்) ஒளி தோன்றக் கண்டார்கள். அந்த ஒளியின் வெளிச்சத்தில் சிரியாவின் கோட்டைகள் பிரகாசத்தால் ஒளி வீசியது” என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ உமாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மத்” முஸ்னத் 4/127 ஹாகிம்” முஸ்தத்ரக் 2/600

 

ساجدًا واضعًا يديه على الأرض رافعًا بصره إلى السماء

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது கைகளை பூமியில் ஊன்றி பார்வையை வானத்தின் பால் உயர்தியவராக அதாவது சுஜூதுடைய அமைப்பில் அவர்கள் இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாய் ஷிபா அவர்கள். ஆதாரம் ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 6333 மஜ்மூஹ் ஷவாயித் 8/221 தபகாத் 1/82

 

ارتج إيوان كسرى وسقطت منه أربع عشرة شرفة

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் பிறந்த போது பாரசீக நாட்டில் உள்ள கிஸ்ரா மன்னனின் கோட்டை” மாளிகை பதிநான்கு மண்டபங்கள் அதிர்ந்து இடிந்து வீழ்ந்தன.

 

அறிவிப்பவர் :- தந்தை வாயிலாக மக்ஜூம் பின் ஹானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தபரீ” தாரீஹ் 2/166

 

انخماد نار المجوس التي كانوا يعبدونها، بعد أن بقيت مشتعلةً ألف عامٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் பிறந்த போது பல்லாண்டு காலமாக நெருப்பு வணங்கிகள் வணங்கி வந்த பிரம்மாண்டமான நெருப்புக் குண்டம் அனணந்தது.

 

அறிவிப்பவர் :- தந்தை வாயிலாக மக்ஜூம் பின் ஹானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு கஸீர்” பிதாயா வன் நிஹாயா 2/268

 

غاضت بحيرة ساوة التي كانت تسير فيها السفن وجف ماؤها “ساوة” في بلاد فارس “وفاض وادى سماوة

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் பிறந்த போது (பாரசீக நாட்டின் ஸாவா என்ற ஊரில் பல்லாண்டு காலம் ஓடிக் கொண்டிருந்த) மிகப்பெரிய வற்றாத ஸாவா நதி அன்றைய தினம் வற்றியது. மேலும் (கூபாவுக்கும் சிரியாவுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகள் வரண்டு கிடந்த) ஸமாவா என்ற பெரிய ஓடை நீர்ப் பெருக்கெடுத்து வலிந்தோட ஆரம்பித்தது.

 

அறிவிப்பவர் :- தந்தை வாயிலாக மக்ஜூம் பின் ஹானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஷறஹுஷ் ஷிபா 1/750 ஸுபுலுல் ஹுதா 1/345 லிஸானுல் மீஸான் 4/96

 

كان المولود إذا ولد في قريش دفعوه إلى نسوة من قريش إلى الصبح فكفأن عليه برمة، فلما ولد رسول الله صلى الله عليه وسلم دفع إلى نسوة فكفأن عليه برمة، فلما أصبحن أتين فوجدت البرمة قد انفلقت عنه باثنتين، فوجدنه مفتوح العين شاخصا ببصره إلى السماء فأتاهن عبد المطلب فقلن ما رأينا مولودا مثله ووجدناه قد انفلقت عنه البرمة ووجدناه مفتوحا عينه شاخصا ببصره إلى السماء فقال احفظنه فإني أرجو أن يصيب خيرا

 

குரைஷிகள் ஒருவருக்கு இரவில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை குரைஷிப் பெண்களிடம் கொடுப்பார்கள். அவர்கள் அக்குழந்தயின் மீது ஒரு பானையை அதில் காற்றுப் புகும் வகையில் ஓட்டை போட்டு அக்குழந்தை மீது கவிழ்த்து வைத்து விடுவார்கள் காலையில் தான் அதை எடுப்பார்கள். குழந்தை வானம் பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் இது போன்று செய்வார்கள் அச்சமயம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போதும் அப்துல் முத்தலிப் அந்தப் பெண்களிடம் குழ்ந்தையை கொடுத்தார் அப்பெண்கள் வழமை போலவே செய்தனர் ஆனால் காலையில் வந்து பார்த்த போது அந்தப் பானை இரண்டாக உடைந்து கிடந்ததுடன் அக்குழந்தை வானத்தின் பக்கம் கண்களை செலுத்திக் கொண்டிருந்த காட்சியைக் கண்டவுடன் அவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இதை பற்றி அப்துல் முத்தலிபிடம் கூறிய போது அவர்கள் மகிழ்ந்து இந்தக் குழந்தைக்கு சிறந்த எதிர் காலம் உண்டு எனவே இக்குழந்தையை பத்திரமாக நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹகீம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் இப்னு ஹிஷாம்” அஸ்ஸீரதுன் நபவிய்யா 1/159

 

ﻓﻠﻤﺎ كان اليوم السابع ذبح عنه ودعا له قريشا فلما أكلوا قالوا يا عبد المطلب أرأيت ابنك هذا الذى أكرمتنا على وجهه ما سميته؟ قال سميته محمدا قالوا : فما رغبت به عن أسماء أهل بيته؟ قال أردت أن يحمده الله في السماء وخلقه في الارض

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது (அப்துல் முத்தலிப் முகம் காணாத தம் அன்புப் பேரனை மகிழ்ச்சியுடன் கஃபாவிற்கு தூக்கிச் சென்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவருக்காக பிரார்த்தித்தார்கள் மேலும்) குழந்தை பிறந்த ஏழாம் நாளில் (ஆடு) அறுத்து குறைஷிகளுக்கு விருந்து கொடுத்தார்கள். அப்போது (அவர்கள் அப்துல் முத்தலிபிடம் இந்தக் குழந்தையின் மீதுள்ள பிரியத்தால் எங்கள் அனைவரையும் அழைத்து நீங்கள் விருந்து கொடுத்திருக்கிறீர்களே) இந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க. முஹம்மத் என்று வைத்துள்ளேன் என அப்துல் முத்தலிப் கூற, இதுவரை இப்பெயரை நம் பரம்பரையில் யாருக்கும் வைக்கவில்லையே என்று கேட்டனர். அதற்கு அவர் இக்குழந்தை அல்லாஹ்வின் மூலமாகவும் வானம் பூமியிலுள்ள படைப்பினங்கள் (உலக மக்கள்) அனைவராலும் புகழப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹகீம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் இப்னு ஹிஷாம்” அஸ்ஸீரதுன் நபவிய்யா 1/185 இப்னு கஸீர்” பிதாயா வன் நிஹாயா 2/246 தபகாதுல் குப்ரா 1/103

 

أن إبليس رن أربع رنات حين ولد رسول الله صلى الله عليه وسلم

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக இப்லீஸ் நான்கு நேரத்தில் ஒப்பாரி வைத்து அழுதுள்ளான் அதில் ஒன்று தான் நான் பிறந்த அன்று ஷைத்தானின் தலைவன் இப்லீஸ் ஒப்பாரி வைத்து அழுதான்.

 

அறிவிப்பவர் :- முஜாஹித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு கஸீர்” பிதாயா வன் நிஹாயா 9/224 ஹில்யதுல் அவ்லியா 3/229 அஸ்பஹானி” அல்அழ்மத் 5/1679

 

இன்னும் சில நூல்களில் வேறுவிதமான சில அதிசயங்கள் அற்புதங்கள் நடைபெற்றதாக இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரிசுத்தமானவர்களாக இவ்வுலகில் பிறந்தார்கள்.

 

நூல் ஆதாரம் :- இப்னு ஸயீத்” தபகாத் 1/81

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் போது தொப்புள் கொடி வெட்டப்பட்ட நிலையில் அவர்கள் பிறந்தார்கள்.

 

நூல் ஆதாரம் :- இப்னு அஸாகிர்” தாரீஹ் தமஸ்க் 3/441 தலாயிலுன் நுபுவ்வா 1/83

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் போது காலிரண்டும் முந்தினதாகவும், வானத்தை பார்த்தவர்களாகவும், புன் சிரிப்புடையவர்களாகவும் கண்களில் சுருமா வும் எண்ணையும் போடப்பட்டவர்களாகவும் அவர்கள் பிறந்தார்கள்.

 

நூல் ஆதாரம் :- பைஹகி” தலாயிலுன் நுபுவ்வா 1/126

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் போது மற்றவர்கள் காணக்கூடாது என்ற நோக்கில் அவர்களின் இடது கரத்தால் தன் இரகசிய இடத்தை மறைத்தவர்களாவும், கத்னா செய்யப்பட்டவர்களாகவும் இன்னும் அல்லாஹ் ஒருவனே என்று சைக்கினை செய்வதற்காக தன் வலது கரத்தின் கலிமா விரலை உயர்த்தினவர்களாகவும் அவர்கள் பிறந்தார்கள்.

 

நூல் ஆதாரம் :- தப்ரானி 6/188 ஹில்யதுல் அவ்லியா 3/27 பிதாயா வன் நிஹாயா 2/247

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த அன்று சர்வாதிகார ஆட்சியாளர்கள் பித்துப்பிடித்தவர்கள் போன்று நிலைகுலைந்து போயினர். ஷிர்க்கின் தளங்கள் தரைமட்டமாயின. விக்ரகங்கள் வீழ்ந்தன, ஷைத்தான் பைத்தியம் பிடித்தவன் போல் அங்குமிங்கும் ஒப்பாரி வைத்துக்கொண்டு ஓடித்திரிந்தான்.

 

நூல் ஆதாரம் :- ஸீறத்துல் ஹலபிய்யா 1/78 இப்னு கஸீர்” அஸ்ஸீறத்துன் நபவிய்யா 1/212

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் பிறந்தது ஓர் ரஹ்மத்தாகும். அவர்கள் பிறந்த நாளன்று பல அதிசயங்கள் அற்புதங்கள் நடைபெற்றதை அதிகமான வரலாற்று நூல்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.