நபி முஹம்மத் ﷺ அவர்களின் அஹ்லு பைத் என்னும் குடும்பத்தின் சிறப்புக்கள்
நபி முஹம்மத் ﷺ அவர்களின் அஹ்லு பைத் என்னும் குடும்பத்தின் சிறப்புக்கள்
اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ
குர்ஆன் கூறுகிறது நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள்.
சூரா அஹ்ஜாப ஆயத் 6
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا. مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي فَهُوَ صَدَقَةٌ
நிச்சயமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசு) பங்காகபெறமாட்டார்கள். என் மனைவிமார்களுக்கு சேரவேண்டிய வாழ்க்கைச் செலவு என் பிரதிநிதியின் ஊதியமும் போக நான் விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் ஆகும்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2776, 3096, 6729, முஸ்லிம் 1760 அஹ்மது 8892, 8892
عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي، فَمَنْ أَغْضَبَهَا أَغْضَبَنِي
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) எனது உடலில் ஒரு பகுதியாவார்கள் அவர்களை கோபமூட்டியவன் என்னை கோபமூட்டியவனாக ஆகி விட்டான்.
அறிவிப்பவர் :- மிஸ்வர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3714, 3767
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْها، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் சிறந்தவர் அவர்தம் குடும்பத்தில் சிறந்தவரே. நான் என் குடும்பத்தில் சிறந்தவர் ஆவேன்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் திர்மிதி 3895 இப்னு மாஜா 1977 நஸாயி 4619 தாரமீ 2306 அஹ்மது 8897
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்.
அறிவிப்பவர் :- ஸயித் அல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3768, 3781, இப்னு மாஜா 118 அஹ்மது 11594, 11618, 23329, 23330 மிஷ்காத் 570
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةُ سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சுவனப் பெண்களின் தலைவியாகும்.
அறிவிப்பவர் :- அபூ ஸயித் அல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி, திர்மிதி 3781, அஹ்மது 11756, 23329, மிஷ்காத் 568, 571
عَنْ أَبُو ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ﻗَﺎﻝَ ﺳَﻤِﻌْﺖُ ﺃَﺑَﺎ ﺫَﺭٍّ ﻳَﻘُﻮﻝُ ﻭَﻫُﻮَ ﺁﺧِﺬٌ ﺑِﺒَﺎﺏِ ﺍﻟْﻜَﻌْﺒَﺔِ ﻣَﻦْ ﻋَﺮَﻓَﻨِﻲ ﻓَﺄَﻧَﺎ ﻣَﻦْ ﻗَﺪْ ﻋَﺮَﻓَﻨِﻲ ﻭَﻣَﻦْ ﺃَﻧْﻜَﺮَﻧِﻲ ﻓَﺄَﻧَﺎ ﺃَﺑُﻮ ﺫَﺭٍّ، ﺳَﻤِﻌْﺖُ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻘُﻮﻝُ ﺃَﻟَﺎ ﺇِﻥَّ ﻣَﺜَﻞَ ﺃَﻫْﻞِ ﺑَﻴْﺘِﻲ ﻓِﻴﻜُﻢْ ﻣَﺜَﻞُ ﺳَﻔِﻴﻨَﺔِ ﻧُﻮﺡٍ ﻣَﻦْ ﺭَﻛِﺒَﻬَﺎ ﻧَﺠَﺎ ﻭَﻣَﻦْ ﺗَﺨَﻠَّﻒَ ﻋَﻨْﻬَﺎ ﻫَﻠَﻚَ
அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபாவின் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். (மக்களே) அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார் என்றார்கள்.
அறிவிப்பவர் :- அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மிஷ்காத் 573 ஹாகிம் 2/343
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்