நபி முஹம்மத் ﷺ அவர்களின் அஹ்லு பைத் என்னும் தூய குடும்பம்

110

நபி முஹம்மத் ﷺ அவர்களின் அஹ்லு பைத் என்னும் தூய குடும்பம்

 

அஹ்லு பைத் என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய குடும்பத்தை குறிக்கும். இதில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி மக்கள் அனைவரும் அடங்குவார்கள்.

 

وَقَرْنَ فِىْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَـرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ‏

 

குர்ஆன் கூறுகிறது (நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச்சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று)திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை கடைப்பிடித்தொழுகுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) குடும்பத்தினர்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகின்றான்.

 

சூரா அஹ்ஜாப் ஆயத் 33

 

عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ قَالَتْ رَضِيَ اللَّهُ عَنْها قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْها ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻏَﺪَﺍﺓً ﻭَﻋَﻠَﻴْﻪِ ﻣِﺮْﻁٌ ﻣُﺮَﺣَّﻞٌ ﻣِﻦْ ﺷَﻌْﺮٍ ﺃَﺳْﻮَﺩَ ﻓَﺠَﺎﺀَ ﺍﻟْﺤَﺴَﻦُ ﺑْﻦُ ﻋَﻠِﻲٍّ ﻓَﺄَﺩْﺧَﻠَﻪُ ﺛُﻢَّ ﺟَﺎﺀَ ﺍﻟْﺤُﺴَﻴْﻦُ ﻓَﺪَﺧَﻞَ ﻣَﻌَﻪُ ﺛُﻢَّ ﺟَﺎﺀَﺕْ ﻓَﺎﻃِﻤَﺔُ ﻓَﺄَﺩْﺧَﻠَﻬَﺎ ﺛُﻢَّ ﺟَﺎﺀَ ﻋَﻠِﻲٌّ ﻓَﺄَﺩْﺧَﻠَﻪُ ﺛُﻢَّ ﻗَﺎﻝَ ﺇِﻧَّﻤَﺎ ﻳُﺮِﻳﺪُ ﺍﻟﻠَّﻪُ ﻟِﻴُﺬْﻫِﺐَ ﻋَﻨْﻜُﻢُ ﺍﻟﺮِّﺟْﺲَ ﺃَﻫْﻞَ ﺍﻟْﺒَﻴْﺖِ ﻭَﻳُﻄَﻬِّﺮَﻛُﻢْ ﺗَﻄْﻬِﻴﺮًﺍ

 

ஒரு முறை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து அலி ரலியல்லாஹு அன்ஹு பாதிமா ரலியல்லாஹு அன்ஹா ஹஸன் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்கள் இருந்தனர். அப்போது அவ்விருவரையும் தமது மடியில் வைத்துக்கொண்டு ஒரு போர்வையால் எல்லோரையும் போர்த்தி, “நபியுடைய குடும்பத்தார்களே! உங்களை விட்டும் எல்லா அசுத்தங்களையும் நீக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.” 33: 33

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2424 திரமிதி 3205, 3206, 3787 அஹ்மது 3061

 

يَا زَيْدُ أَلَيْسَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ؟ قَال نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ وَلَكِنْ أَهْلُ بَيْتِهِ مَنْ حُرِمَ الصَّدَقَةَ بَعْدَهُ قَالَ وَمَنْ هُمْ؟ قَالَ هُمْ آلُ عَلِيٍّ وَآلُ عَقِيلٍ وَآلُ جَعْفَرٍ وَآلُ عَبَّاسٍ

 

ஸைத் (இப்னு அர்க்கமே! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) மனைவியரும் அவர்களின் குடும்பமா? என்று கேட்கப்பட்ட போது, ‘நபியவர்களின் மனைவியர் அவரின் குடும்பத்தினர்கள் தான். என்றாலும் ஜகாத் பொருட்களைப் பெற்றுக் கொள்வது ஹராமாக்கப்பட்ட நபியவர்களின் குடும்பம் எனும் போது, அவரின் குடும்பம், ஜஃபரின் குடும்பம், உகைலாவின் குடும்பம், அப்பாஸின் குடும்பம் என்று எல்லோரும் அடங்குவர்கள்.

 

அறிவிப்பவர் :- ஸைத் இப்னு அர்க்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2408

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முப்பாட்டனார் ஹாஷிமுடைய மற்றும் அப்துல் முத்தலிபுடைய வாரிசுகளில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பம் (அஹ்லுல் பைத்) என்று கருதப்படுவர். மேலும் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பம், அபூதாலிபின் மகன்களான அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பம், ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பம், அகீல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பம், மற்றும் முஃமின்களின் தாய்மார்களான இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் பிள்ளைகள் அனைவரும் ‘அஹ்லுல் பைத்’ என்போரில் அடங்குவார்கள். என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ‏

 

குர்ஆன் கூறுகிறது (நபியுடைய) குடும்பத்தினர்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகின்றான்.

 

சூரா அஃஸாப் ஆயத் 33

 

மேற்கூறப்பட்ட ஆயத்தில் அஹ்லு பைத் அதாவது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தை அல்லாஹ் பரிசுத்தப் படுத்துவதாக கூறியிருப்பதன் அர்த்தம் அவர்கள் தவறான வழியில் செல்லாத வகையில் அவர்களுக்கு நேர்வழி காட்ட விரும்புகிறான் என்பதாகும்.

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு குடலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் பாவங்களில் இருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள். மேலும் பாவம் செய்யாதவர்கள் என்று ஷீஆக்கள் போன்று நம்பிக்கை கொள்வது முற்றிலும் தவறு அது அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ கொள்கைக்கு மாற்றம் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.