நபி முஹம்மத் ﷺ அவர்களுக்கு கெட்ட மனிதர்களினால் தீங்கு ஏற்படுத்த முடியுமா?

168

நபி முஹம்மத் ﷺ அவர்களுக்கு கெட்ட மனிதர்களினால் தீங்கு ஏற்படுத்த முடியுமா?

 

📚 :- திருக்குர்ஆன் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سُحِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا يَفْعَلُهُ حَتَّى كَانَ ذَاتَ يَوْمٍ دَعَا وَدَعَا ثُمَّ قَالَ أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِيمَا فِيهِ شِفَائِي؟ أَتَانِي رَجُلانِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلَيَّ فَقَالَ أَحَدُهُمَا لِلآخَرِ مَا وَجَعُ الرَّجُلِ؟ قَالَ مَطْبُوبٌ؟ قَالَ وَمَنْ طَبَّهُ؟ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ قَالَ فِيمَا ذَا؟ قَالَ فِي مُشُطٍ وَمُشَاقَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ قَالَ فَأَيْنَ هُوَ؟ قَالَ فِي بِئْرِ ذَرْوَانَ فَخَرَجَ إِلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ رَجَعَ فَقَالَ لِعَائِشَةَ حِينَ رَجَعَ نَخْلُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ فَقُلْتُ اسْتَخْرَجْتَهُ؟ فَقَالَ لا أَمَّا أَنَا فَقَدْ شَفَانِي اللَّهُ وَخَشِيتُ أَنْ يُثِيرَ ذَلِكَ عَلَى النَّاسِ شَرًّا ثُمَّ دُفِنَتْ الْبِئْرُ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் இந்த மனிதரைப் பீடித்துள்ள (வேதனை அதாவது) நோய் என்ன? என்று கேட்டார். மற்றொருவர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று இவர் பதிலளித்தார். எதில்? என்று அவர் கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று அவர் பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். (இதைச் சொல்லி முடித்த) பிறகு, இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; (சூனியப் பொருள் கட்டைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.) பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், இந்த (விசயத்தை மக்களுக்கு) தாங்கள் வெளிப்படுத்தி விட்டீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (இந்த விசயத்தை வெளிப்படுத்தினால்) அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு மூடப்பட்டு விட்டது.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 3268

 

லபீத் பின் அஃஸம் என்ற யூதன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் தீங்கு ஏற்படுத்தியதாகவும் அந்த தீங்கிழிருந்து இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் பாதுகாத்ததாகவும் மேற்கூறிய ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் லபீத் பின் அஃஸம் என்ற யூதன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் தீங்கு ஏற்படுத்தியதாக இடம்பெறும் ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதாக் கூரும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதங்களும் அதற்குறிய தெளிவான விளக்கங்களும்.

 

ﺍﻟﺮَّﺳُﻮْﻝُ ﺑَﻠِّﻎْ ﻣَﺎۤ ﺍُﻧْﺰِﻝَ ﺍِﻟَﻴْﻚَ ﻣِﻦْ ﺭَّﺑِّﻚَ ﻭَﺍِﻥْ ﻟَّﻢْ ﺗَﻔْﻌَﻞْ ﻓَﻤَﺎ ﺑَﻠَّﻐْﺖَ ﺭِﺳٰﻠَـﺘَﻪٗ ﻭَﺍﻟﻠّٰﻪُ ﻳَﻌْﺼِﻤُﻚَ ﻣِﻦَ ﺍﻟﻨَّﺎﺱِ ﺍِﻥَّ ﺍﻟﻠّٰﻪَ ﻟَﺎ ﻳَﻬْﺪِﻯ ﺍﻟْﻘَﻮْﻡَ ﺍﻟْـﻜٰﻔِﺮِﻳْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக்கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்;
அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

சூரா மாயிதா ஆயத் 67

 

தீய மனிதர்களின் தீங்கை விட்டும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் பாதுகாப்பதாக கூறியிருக்கும் போது லபீத் பின் அஃஸம் என்ற யூதன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தை கொண்டு எவ்வாறு தீங்கு ஏற்படுத்த முடியும்? எனவே தீங்கு ஏற்படுத்தியதாக இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மேற்கூறிய இறைவசனத்திற்கு முற்றிலும் முறன் என்பதே ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதமாகும்.

 

இது போன்ற வாதங்கள் முற்றிலும் தவறானவை காரணம் தீய மனிதர்கள் மூலம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்த முடியாது என்பதாக மேற்கூறிய இறைவசனம் கூறவில்லை, நாம் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அதற்கு மாறாக தீய மனிதர்கள் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்த முற்பட்டால், அல்லது தீங்கு ஏற்படுத்தினால், அந்த அதிலிருந்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் பாதுகாப்பானே தவிர தீய மனிதர்களினால் எந்த விதத்திலும் தீங்கு ஏற்படமாட்டாது என்று இறைவசனங்கள் எங்கும் கூறவில்லை. இவ்வாறு கூறமுற்படுவது தான் திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதை கீழ் காணும் இறைவசனங்களை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.

 

ﻗُﻞْ ﺍَﻋُﻮْﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟْﻔَﻠَﻖِۙ

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

சூரா பலக் ஆயத் 1

 

ﻣِﻦْ ﺷَﺮِّ ﻣَﺎ ﺧَﻠَﻖَۙ

 

குர்ஆன் கூறுகிறது இறைவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்.

சூரா பலக் ஆயத் 2

 

இறைவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும் என்பதாக இடம் பெற்றுள்ளது. இறைவனின் படைப்பினங்களில் மிக மிக முக்கியமான ஓர் படைப்புக்கள் தான் மனித ஜின் வர்க்கமாகும், இந்த மனித ஜின் வர்க்கத்திலுள்ள வழிகெட்ட மனிதர்கள் தீய ஜின் ஷைத்தான்களின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்பு தேடுங்கள் என்பதாக மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெழிவு படுத்துகிறது. இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது வழிகெட்ட மனிதர்கள் மூலம் எந்த ஒரு தீங்கும் ஏற்படுத்த முடியாது என்றிருந்தால்! இறைவன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை நோக்கி இவ்வாறு கூரும் படி கட்டளையிடுவானா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். மேலும்

 

ﻭَﻟَﻘَﺪْ ﻛُﺬِّﺑَﺖْ ﺭُﺳُﻞٌ ﻣِّﻦْ ﻗَﺒْﻠِﻚَ ﻓَﺼَﺒَﺮُﻭْﺍ ﻋَﻠٰﻰ ﻣَﺎ ﻛُﺬِّﺑُﻮْﺍ ﻭَﺍُﻭْﺫُﻭْﺍ ﺣَﺘّٰٓﻰ ﺍَﺗٰٮﻬُﻢْ ﻧَﺼْﺮُﻧَﺎ ۚ ﻭَﻟَﺎ ﻣُﺒَﺪِّﻝَ ﻟِﻜَﻠِﻤٰﺖِ ﺍﻟﻠّٰﻪِ ۚ ﻭَﻟَﻘَﺪْ ﺟَﺎٓﺀَﻙَ ﻣِﻦْ ﻧَّﺒَﺎِﻯ ﺍﻟْﻤُﺮْﺳَﻠِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது உமக்கு முன்பிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை , தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர், அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.

சூரா அன்ஆம் ஆயத் 34

 

முன் சென்ற நபிமார்களை அவர்களுடைய கூட்டத்தினர் பொய்பித்தனர் மேலும் அவர்களை துன்புருத்தப்பட்டனர். இது போன்ற பல தீங்குகளை தீய மனிதர்கள் செய்த போதும் இறைத்தூதர்கள் பொறுமையாக இருந்தது மட்டுமின்றி இறைவனுடைய உதவியையும் எதிர்பார்த்தனர். இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது முன்னைய இறைதூதர்களுக்கும் குறிப்பாக நம்முடைய இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் தீய மனிதர்கள் தீங்கு ஏற்படுத்த முற்பட்டால் அல்லது தீங்கு ஏற்படுத்தினால், அந்த தீங்கிலிருந்து இறைவன் முன்னைய இறைதூதர்களையும் குறிப்பாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் பாதுகாப்பான் என்ற கருத்தை தான் ஹதீஸ் மறுப்பாளர்களினால் முன் வைக்கப்பட்ட மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- லபீத் பின் அஃஸம் என்ற யூதன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் அதாவது ஷைத்தானை கொண்டு தீங்கு ஏற்படுத்தியதாகவும் அந்த தீங்கிலிருந்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் பாதுகாத்ததாகவும் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன. இது போன்ற ஹதீஸ்கள் அனைத்தும் மேற்கூறிய திருக்குர்ஆன் இறைவசங்களுக்கு நேர்படுகிறதே தவிர எந்த விதத்திலும் அவைகள் முறன் கிடையாது.

 

நபிமார்கள் நல்லடியார்கள் மீது ஷைத்தான்களால் தவறான எண்ணங்களையும், ஊசலாட்டங்களையும், பயத்தையும், மறதியையும், ஏற்படுத்த முடியுமா?

 

ﺍِﻧَّﻪٗ ﻟَـﻴْﺲَ ﻟَﻪٗ ﺳُﻠْﻄٰﻦٌ ﻋَﻠَﻰ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﺍٰﻣَﻨُﻮْﺍ ﻭَﻋَﻠٰﻰ ﺭَﺑِّﻬِﻢْ ﻳَﺘَﻮَﻛَّﻠُﻮْﻥَ

 

குர்ஆன் கூறுகிறது எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை.

சூரா நஹ்ல் ஆயத் 99

 

மேற்கூறிய இறைவசனத்தில் எவர்கள் இறைவனைக்கு முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது ஷைத்தான்களால் எந்த ஒரு அதிகாரமும், எந்த ஒரு ஊசலாட்டத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதாகக் கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதங்களும் அதற்குறிய விளக்கங்களும்.

 

ﺍِﻥَّ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﺍﺗَّﻘَﻮْﺍ ﺍِﺫَﺍ ﻣَﺴَّﻬُﻢْ ﻃٰۤٮِٕﻒٌ ﻣِّﻦَ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦِ ﺗَﺬَﻛَّﺮُﻭْﺍ ﻓَﺎِﺫَﺍ ﻫُﻢْ ﻣُّﺒْﺼِﺮُﻭْﻥَۚ

 

குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.

சூரா அஃராப் ஆயத் 201

 

ஈமானில் உறுதியாக இருக்கக்கூடிய நபிமார்கள் நல்லடியார்களிடம் ஷைத்தான் ஊசலாடினால் அவர்கள் அந்த ஷைத்தானின் ஊசலாட்டத்தை இறைவனின் நாட்டத்தை கொண்டு கண்டறிகிறார்கள் என்பதாக மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- ஈமான் கொண்டு இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது ஷைத்தானுக்கு எந்த ஒரு ஆதிக்கமும் இல்லை என்பதாகக்கூரிய காரணம். நபிமார்கள் நல்லடியார்களை ஷைத்தான் வழிகெடுக்க முட்பட்டால் அதாவது உடல் ரீதியாக உணர்வு ரீதியாக மறதியாக தீங்கு ஏற்படுத்த முற்பட்டால் அல்லது தீங்கு ஏற்படுத்தினால், முழுமையாக அவர்கள் மீது எந்த ஒரு ஆதிக்கமும் ஷைத்தான்களால் செலுத்த முடியாது என்ற கருத்தை தான் திருக்குர்ஆன் நமக்கு தெளிவு படுத்துகிறது. மேலும் 

 

ﻗَﺎﻝَ ﺑَﻞْ ﺍَﻟْﻘُﻮْﺍۚ ﻓَﺎِﺫَﺍ ﺣِﺒَﺎﻟُﻬُﻢْ ﻭَﻋِﺼِﻴُّﻬُﻢْ ﻳُﺨَﻴَّﻞُ ﺍِﻟَﻴْﻪِ ﻣِﻦْ ﺳِﺤْﺮِﻫِﻢْ ﺍَﻧَّﻬَﺎ ﺗَﺴْﻌٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது அதற்கவர்: “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.

சூரா தாஹா ஆயத் 66

 

ﻓَﺎَﻭْﺟَﺲَ ﻓِﻰْ ﻧَﻔْﺴِﻪٖ ﺧِﻴْﻔَﺔً ﻣُّﻮْﺳٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் (பயம்) கொண்டார்.

சூரா தாஹா ஆயத் 67

 

சூனியம் எனும் ஷைத்தானுடைய சூழ்ச்சியை கொண்டு சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் நெளிவது போன்று தோற்றமளிக்க செய்த போது நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அச்சப்பட்டார்கள் பயப்பட்டார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது. மேலும்

 

ﻭَﺍِﺫَﺍ ﺭَﺍَﻳْﺖَ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﻳَﺨُﻮْﺿُﻮْﻥَ ﻓِﻰْۤ ﺍٰﻳٰﺘِﻨَﺎ ﻓَﺎَﻋْﺮِﺽْ ﻋَﻨْﻬُﻢْ ﺣَﺘّٰﻰ ﻳَﺨُﻮْﺿُﻮْﺍ ﻓِﻰْ ﺣَﺪِﻳْﺚٍ ﻏَﻴْﺮِﻩٖ ؕ ﻭَﺍِﻣَّﺎ ﻳُﻨْﺴِﻴَﻨَّﻚَ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦُ ﻓَﻠَﺎ ﺗَﻘْﻌُﺪْ ﺑَﻌْﺪَ ﺍﻟﺬِّﻛْﺮٰﻯ ﻣَﻊَ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟﻈّٰﻠِﻤِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.

சூரா அன்ஆம் ஆயத் 68

 

ஈமானில் உறுதியாக இருக்கக்கூடிய நபிமார்கள் நல்லடியார்களை ஷைத்தான் அவனுடைய ஊசலாட்டத்தை கொண்டு மறதியை ஏற்படுத்த முடியும் என்பதாக மேற்கூறிய ஆயத் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️குறிப்பு :- ஈமான் கொண்டு இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அத்தகைய நபிமார்கள் நல்லடியார்கள் மீது ஷைத்தான் ஊசலாட்டங்களையும் தவரான எண்ணங்களையும் மறதியையும் பயத்தையும் அவர்கள் மீது புகுத்த முடியும் என்ற கருத்தை திருக்குர்ஆன் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

நபிமார்கள் நல்லடியார்களை ஷைத்தான் வழிகெடுக்க முடியுமா?

 

ﻗَﺎﻝَ ﺭَﺏِّ ﺑِﻤَﺎۤ ﺍَﻏْﻮَﻳْﺘَﻨِﻰْ ﻟَﺎُﺯَﻳِّﻨَﻦَّ ﻟَﻬُﻢْ ﻓِﻰ ﺍﻟْﺎَﺭْﺽِ ﻭَﻟَﺎُﻏْﻮِﻳَـﻨَّﻬُﻢْ ﺍَﺟْﻤَﻌِﻴْﻦَۙ

 

குர்ஆன் கூறுகிறது (அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.

சூரா ஹிஜ்ர் ஆயத் 39

 

ﺍِﻟَّﺎ ﻋِﺒَﺎﺩَﻙَ ﻣِﻨْﻬُﻢُ ﺍﻟْﻤُﺨْﻠَﺼِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்’என்று கூறினான்.

சூரா ஹிஜ்ர் ஆயத் 40

 

மேற்கூறிய இறைவசங்களை மூலாதாரமாக வைத்துக்கொண்டு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களான நபிமார்கள் நல்லடியார்களை ஷைத்தான் வழிகெடுக்க முடியாது என்பதாகக் கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதங்களும் அதற்குறிய விளக்கங்களும்.

 

ﻭَﺍِﻣَّﺎ ﻳَﻨْﺰَﻏَـﻨَّﻚَ ﻣِﻦَ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦِ ﻧَﺰْﻍٌ ﻓَﺎﺳْﺘَﻌِﺬْ ﺑِﺎﻟﻠّٰﻪِؕ ﺍِﻧَّﻪٗ ﺳَﻤِﻴْﻊٌ ﻋَﻠِﻴْﻢٌ

 

குர்ஆன் கூறுகிறது ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம்மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும்,(யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

சூரா அஃராப் ஆயத் 200

 

நபிமார்கள் நல்லடியார்களாக இருந்தாலும் சரி அது அல்லாதவர்களாக இருந்தாலும் சரி ஷைத்தான் தவறான எண்ணங்களை கொண்டும் ஊசலாட்டங்களை கொண்டும் எதோ ஓர் வகையில் வழிகெடுக்க முற்பட்டால்! ஏக இறைவனிடம் பாதுகாப்பு தேடுங்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

ﻭَﻗُﻠْﻨَﺎ ﻳٰٓـﺎٰﺩَﻡُ ﺍﺳْﻜُﻦْ ﺍَﻧْﺖَ ﻭَﺯَﻭْﺟُﻚَ ﺍﻟْﺠَـﻨَّﺔَ ﻭَﻛُﻠَﺎ ﻣِﻨْﻬَﺎ ﺭَﻏَﺪًﺍ ﺣَﻴْﺚُ ﺷِﺌْﺘُﻤَﺎ ﻭَﻟَﺎ ﺗَﻘْﺮَﺑَﺎ ﻫٰﺬِﻩِ ﺍﻟﺸَّﺠَﺮَﺓَ ﻓَﺘَﻜُﻮْﻧَﺎ ﻣِﻦَ ﺍﻟﻈّٰﻠِﻤِﻴْﻦَ

 

குர்ஆன் கூறுகிறது மேலும் நாம்,“ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் ம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.

சூரா பகரா ஆயத் 35

 

ﻓَﻮَﺳْﻮَﺱَ ﺍِﻟَﻴْﻪِ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦُ ﻗَﺎﻝَ ﻳٰۤﺎٰﺩَﻡُ ﻫَﻞْ ﺍَﺩُﻟُّﻚَ ﻋَﻠٰﻰ ﺷَﺠَﺮَﺓِ ﺍﻟْﺨُﻠْﺪِ ﻭَﻣُﻠْﻚٍ ﻟَّﺎ ﻳَﺒْﻠٰﻰ

 

குர்ஆன் கூறுகிறது ஆனால் ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி:“ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.

சூரா தாஹா ஆயத் 120

 

ﻓَﺎَﺯَﻟَّﻬُﻤَﺎ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦُ ﻋَﻨْﻬَﺎ ﻓَﺎَﺧْﺮَﺟَﻬُﻤَﺎ ﻣِﻤَّﺎ ﻛَﺎﻧَﺎ ﻓِﻴْﻪِ ﻭَﻗُﻠْﻨَﺎ ﺍﻫْﺒِﻄُﻮْﺍ ﺑَﻌْﻀُﻜُﻢْ ﻟِﺒَﻌْﺾٍ ﻋَﺪُﻭٌّۚ ﻭَﻟَـﻜُﻢْ ﻓِﻰ ﺍﻟْﺎَﺭْﺽِ ﻣُﺴْﺘَﻘَﺮٌّ ﻭَّﻣَﺘَﺎﻉٌ ﺍِﻟٰﻰ ﺣِﻴْﻦٍ

 

குர்ஆன் கூறுகிறது இதன்பின் ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த (சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.

சூரா பகரா ஆயத் 36

 

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் ஷைத்தான் அவனுடைய சூழ்ச்சியை கொண்டு வழிதவறச் செய்துள்ளான் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️குறிப்பு :- இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களான நபிமார்கள் நல்லடியார்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் நான் வழிகெடுப்பேன் என்பதாக ஷைத்தான் கூறியதைக் காரணமாக வைத்து நபிமார்கள் நல்லடியார்களை ஷைத்தான் வழிகெடுக்க மாட்டான் என்பதாகக்கூற முற்படுவது முற்றிலும் தவறு, அது திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறனானவை காரணம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களான நபிமார்கள் நல்லடியார்களையும் ஷைத்தான் எதோ ஒரு வகையில் வழிகெடுக்க முடியும் என்ற கருத்தை மேற்கூறிய திருக்குர்ஆன் இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துவதை நம்மால் காண முடிகிறது.

 

நபிமார்களுக்கு ஷைத்தான் உணர்வு ரீதியாக தீங்கு ஏற்படுத்த முடியுமா?

 

وَدَخَلَ الْمَدِيْنَةَ عَلٰى حِيْنِ غَفْلَةٍ مِّنْ اَهْلِهَا فَوَجَدَ فِيْهَا رَجُلَيْنِ يَقْتَتِلٰنِ هٰذَا مِنْ شِيْعَتِهٖ وَهٰذَا مِنْ عَدُوِّهٖ فَاسْتَغَاثَهُ الَّذِىْ مِنْ شِيْعَتِهٖ عَلَى الَّذِىْ مِنْ عَدُوِّهٖۙ فَوَكَزَهٗ مُوْسٰى فَقَضٰى عَلَيْهِ قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّيْطٰنِ اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِيْنٌ‏

 

குர்ஆன் கூறுகிறது (மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார். ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடத்தில் கோரிக் கொண்டான். (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தி அவன் காரியத்தை முடித்து விட்டார். (அதனால் அவன் இறந்து விட்டான். இதை அறிந்த மூஸா) “இது ஷைத்தானுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான எதிரி” எனக் கூறினார்.

சூரா கஸஸ் ஆயத் 15

 

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களுடைய பகைவன் கிப்தியைக் கொலை செய்து விட்டு, இது ஷைத்தானுடைய சூழ்ச்சி என்பதாகக் கூறிய காரணம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உணர்வை தூண்டி விட்டு பகைவனை கொலை செய்யும் அளவுக்கு ஷைத்தான் உணர்வு ரீதியாக தீங்கு ஏற்படுத்தியுள்ளான் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

நபிமார்களுக்கு ஷைத்தான் உடல் ரீதியாக தீங்கு ஏற்படுத்த முடியுமா?

 

ﻭَﺍﺫْﻛُﺮْ ﻋَﺒْﺪَﻧَﺎۤ ﺍَﻳُّﻮْﺏَۘ ﺍِﺫْ ﻧَﺎﺩٰﻯ ﺭَﺑَّﻪٗۤ ﺍَﻧِّﻰْ ﻣَﺴَّﻨِﻰَ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦُ ﺑِﻨُﺼْﺐٍ ﻭَّﻋَﺬَﺍﺏٍؕ

 

குர்ஆன் கூருகிறது மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூறுங்கள் ! அவர் தம் இறைவனிடம், “நிச்சயமாக ஷைத்தான் வேதனையிலும் துன்புத்தலாலும் என்னை தீன்டி விட்டான் (என்று கூறிய போது )

சூரா ஸாத் ஆயத் 41

 

வேதனையிலும் துன்புத்தலாலும் அதாவது உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஷைத்தான் என்னை தீண்டி விட்டான் என்ற கருத்தை தரும் நபி ஐய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட பிரார்த்தனையை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️குறிப்பு :- நபிமார்கள் நல்லடியார்களையும் ஷைத்தான் வழிகெடுக்க முடியும் அதாவது உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தீங்கு ஏற்படுத்த முடியும். இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது நபிமார்கள் நல்லடியார்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் அளவுக்கு ஆற்றல் பெற்ற ஷைத்தான்களுக்கு சாதாரண மனிதர்களாக இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தீங்கு ஏற்படுத்த முடியாது என்பதாகக் கூருவது திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதை மேற்கூறிய இறைவசனங்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.