நபி முஹம்மத் ﷺ அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மறைமுகமான (அறிவு) ஞானம்

352

நபி முஹம்மத் ﷺ அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மறைமுகமான (அறிவு) ஞானம்

 

وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَ لٰكِنَّ اللّٰهَ يَجْتَبِىْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَآءُ

 

குர்ஆன் கூறுகிறது (நயவஞ்சகர்களே!) மறைவான வற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்க மாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதனை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான்.

சூரா ஆல இம்ரான் ஆயத் 179

 

عَالِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَىٰ غَيْبِهِ أَحَدًا إِلَّا مَنِ ارْتَضَىٰ مِن رَّسُولٍ

 

குர்ஆன் கூறுகிறது (அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான். ஆயினும், (தன்னுடைய) தூதர்களில் எவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு (அதனை அவன் அறிவிக்கக் கூடும்.

சூரா ஜின் ஆயத் 26, 27

 

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ اَنْ يُّضِلُّوْكَ وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَضُرُّوْنَكَ مِنْ شَىْءٍ وَاَنْزَلَ اللّٰهُ عَلَيْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا‏

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனது கிருபையும் உங்கள்மீது இல்லாதிருந்தால் (நீங்கள் தவறிழைத்திருக்கக் கூடும். ஏனென்றால், எந்த விதத்திலும்) உங்களை வழி கெடுத்து விடவேண்டுமென்று அவர்களில் ஒரு கூட்டத்தினர் முடிவு கட்டியிருந்தனர். எனினும், அவர்கள் தங்களையே அன்றி (உங்களை) வழி கெடுக்கவில்லை. அவர்கள் உங்களுக்கு யாதொரு தீங்கிழைத்து விடவும் முடியாது. அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உங்கள்மீது அருட்செய்து நீங்கள் அறியாத அனைத்தையும் உங்களுக்குக் கற்பித்திருக்கின்றான். உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருள் மகத்தானதாகவே இருக்கின்றது.

சூரா நிஸா ஆயத் 113

 

♦️மறைமுகமான அறிவு ஞானம் என்பது அல்லாஹ்விற்குறியது” அவன் நாடியவர்களுக்கு குறிப்பாக இறைத்தூதர்களுக்கு அறிவித்து கொடுப்பான் என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அறிவித்து கொடுத்தான் என்றும் மேற்கூறப்பட்ட ஆயத்துக்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا فَوَاللَّهِ مَا يَخْفَى عَلَيَّ خُشُوعُكُمْ وَلَا رُكُوعُكُمْ إِنِّي لَأَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “நான் கிப்லாத் திசையில் மட்டும் பார்க்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக என்னுடைய முதுகுக்குப் பின்புறம் உங்களை நான் பார்க்கிறேன்.

 

அறிவிப்பவர் :- அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 418 அஹ்மது 8024

 

عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَهُبُّ اللَّيْلَةَ رِيحٌ شَدِيدَةٌ فَلاَ يَقُومَنَّ أَحَدٌ وَمَنْ كَانَ مَعَهُ بَعِيرٌ فَلْيَعْقِلْهُ فَعَقَلْنَاهَا وَهَبَّتْ رِيحٌ شَدِيدَةٌ

 

(நாங்கள் நடந்து தபூக்கிற்குச் சென்றோம். அப்போது) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், இன்றிரவு உங்கள்மீது கடுமையான காற்று வீசும். அப்போது உங்களில் எவரும் எழுந்திருக்க வேண்டாம். உங்களில் ஒட்டகம் வைத்திருப்பவர் அதைக் கயிற்றால் கட்டிவைக்கட்டும் என்று கூறினார்கள்.
அவ்வாறே அன்றிரவு கடுங்காற்று வீசியது.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுமைத் ஸாயித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1481

 

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَرَّ بِقَبْرَيْنِ يُعَذَّبَانِ فَقَالَ إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ الْبَوْلِ وَأَمَّا الْآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً فَشَقَّهَا بِنِصْفَيْنِ ثُمَّ غَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ لِمَ صَنَعْتَ هَذَا فَقَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்ருகளைக் கடந்து சென்ற போது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள் ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர் எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், யா ரஸுலல்லாஹ்! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?” என்று கேட்டதும், இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 218, 1361, 6052, 6055 முஸ்லிம் 292

 

عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رَضِيَ اللَّهُ عَنْهُ لقَدْ خَطَبَنَا النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ خُطْبَةً ما تَرَكَ فِيهَا شيئًا إلى قِيَامِ السَّاعَةِ إلَّا ذَكَرَهُ، عَلِمَهُ مَن عَلِمَهُ وجَهِلَهُ مَن جَهِلَهُ إنْ كُنْتُ لَأَرَى الشَّيْءَ قدْ نَسِيتُ، فأعْرِفُ ما يَعْرِفُ الرَّجُلُ إذَا غَابَ عنْه فَرَآهُ فَعَرَفَهُ

 

இறைதூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு முறை)
எங்களிடையே உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்து விட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.

 

அறிவிப்பவர் :- ஹுதைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6604 அஹ்மது 23274

 

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي ذَرٍّ حِينَ غَرَبَتْ الشَّمْسُ أَتَدْرِي أَيْنَ تَذْهَبُ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّهَا تَذْهَبُ حَتَّى تَسْجُدَ تَحْتَ الْعَرْشِ فَتَسْتَأْذِنَ فَيُؤْذَنُ لَهَا وَيُوشِكُ أَنْ تَسْجُدَ فَلَا يُقْبَلَ مِنْهَا وَتَسْتَأْذِنَ فَلَا يُؤْذَنَ لَهَا يُقَالُ لَهَا ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். அச்சமயம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு’ என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்’ என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்’ என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது’ என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3199, 4802

 

عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُول قَامَ فِينَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامًا فَأَخْبَرَنَا عَنْ بَدْءِ الْخَلْقِ حَتَّى دَخَلَ أَهْلُ الْجَنَّةِ مَنَازِلَهُمْ وَأَهْلُ النَّارِ مَنَازِلَهُمْ حَفِظَ ذَلِكَ مَنْ حَفِظَهُ وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு வரை) சொர்க்கவாசிகள் (சொர்க்கத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினைவில் வைத்துக் கொண்டார். அதை மறந்தவர் மறந்துவிட்டார்.

 

அறிவிப்பவர் :- உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 3192 முஸ்லிம் 2891

 

عَنْ أُسَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشْرَفَ عَلَى أُطُمٍ مِنْ آطَامِ الْمَدِينَةِ ثُمَّ قَالَ هَلْ تَرَوْنَ مَا أَرَى إِنِّي لَأَرَى مَوَاقِعَ الْفِتَنِ خِلَالَ بُيُوتِكُمْ كَمَوَاقِعِ الْقَطْرِ

 

இறைதூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி), “நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப்போவதைப் பார்க்கிறேன் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- உசாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1878, 2467 முஸ்லிம் 2885

 

عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ مَقَامًا، ما تَرَكَ شيئًا يَكونُ في مَقَامِهِ ذلكَ إلى قِيَامِ السَّاعَةِ، إلَّا حَدَّثَ به، حَفِظَهُ مَن حَفِظَهُ وَنَسِيَهُ مَن نَسِيَهُ، قدْ عَلِمَهُ أَصْحَابِي هَؤُلَاءِ، وإنَّه لَيَكونُ منه الشَّيْءُ قدْ نَسِيتُهُ فأرَاهُ فأذْكُرُهُ، كما يَذْكُرُ الرَّجُلُ وَجْهَ الرَّجُلِ إذَا غَابَ عنْه، ثُمَّ إذَا رَآهُ عَرَفَهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நீண்ட நேரம் நின்று கொண்டு, மறுமை நாள் ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் ஒன்றுவிடாமல் குறிப்பிட்டார்கள். அதை மனனமிட்டவர்கள் மனனமிட்டுக் கொண்டார்கள். அதை மறந்தவர்கள் மறந்து விட்டார்கள். இதோ இந்த என் தோழர்கள் அதை அறிந்து கொண்டனர். அவற்றில் ஏதேனும் ஒன்றை நான் மறந்துவிட்டிருந்தாலும் அதை நேரில் காணும் போது, அது என் நினைவிற்கு வந்துவிடும்; தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரது முகத்தை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.

 

அறிவிப்பவர் :- ஹுதைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2891 அபூ தாவூத் 4240

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَنَدَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ، فَانْطَلَقُوا حَتَّى نَزَلُوا بَدْرًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا مَصْرَعُ فُلَانٍ وَيَضَعُ يَدَهُ عَلَى الْأَرْضِ هَاهُنَا هَاهُنَا قَالَ فَمَا مَاطَ أَحَدُهُمْ عَنْ مَوْضِعِ يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

 

இறைதூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் தொடங்கும் முன் எங்களிடம் சில குறிப்பிட்ட இடங்களில் கைவைத்து இது இவர் கொல்லப்படும் இடம் என்றார்கள். எதிரிகளில் கொல்லப்பட்ட எவரும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைவைத்து காட்டிய இடத்தை கொஞ்சம் கூட கடக்கவில்லை.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1779 அஹ்மது 13297 மிஷ்காத் 531

 

عَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ بَعْدَمَا غَرَبَتِ الشَّمْسُ فَسَمِعَ صَوْتًا فَقَالَ يَهُودُ تُعَذَّبُ فِي قُبُورِهَا

 

இறைதூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு முறை) சூரியன் மறைந்த பின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு யூதர்கள், அவர்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ அய்யூப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2869 அஹ்மது 23539

 

عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُول قَامَ فِينَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامًا فَأَخْبَرَنَا عَنْ بَدْءِ الْخَلْقِ حَتَّى دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الجنةَ، وَدَخَلَ أَهْلُ النَّارِ النارَ، حَفِظَهَُ مَنْ حَفِظَهُ وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு முறை) எங்களுக்கு அறிவுரை பகர்ந்து கொண்டிருக்கும் போது படைப்புகளின் உற்பத்தியிலிருந்து சுவர்க்கவாதிகள் சுவர்க்கத்திலும், நரகவாதிகள் நரகத்திலும் நுழைவது வரையிலான சகல விடயங்களையும் கூறிக்காட்டினர்கள். அதை நினைவில் வைத்தவர் நினைவில் வைத்துக் கொண்டார். அதை மறந்தவர் மறந்துவிட்டார்.

 

அறிவிப்பவர் :- உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3192 முஸ்லிம் 2891 மிஷ்காத் 506

 

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِب رَضِيَ اللَّهُ عَنْهُ… فَقَالَ بِاسْمِ اللَّهِ فَضَرَبَ ضَرْبَةً فَكَسَرَ ثُلُثَ الْحَجَرِ، وَقَالَ اللَّهُ أَكْبَرُ، أُعْطِيتُ مَفَاتِيحَ الشَّامِ، وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ قُصُورَهَا الْحُمْرَ مِنْ مَكَانِي هَذَا ثُمَّ قَالَ بِاسْمِ اللَّهِ وَضَرَبَ أُخْرَى، فَكَسَرَ ثُلُثَ الْحَجَرِ، فَقَالَ اللَّهُ أَكْبَرُ، أُعْطِيتُ مَفَاتِيحَ فَارِسَ، وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ الْمَدَائِنَ وَأُبْصِرُ قَصْرَهَا الْأَبْيَضَ مِنْ مَكَانِي هَذَا ثُمَّ قَالَ بِاسْمِ اللَّهِ وَضَرَبَ ضَرْبَةً أُخْرَى فَقَلَعَ بَقِيَّةَ الْحَجَرِ، فَقَالَ اللَّهُ أَكْبَرُ، أُعْطِيتُ مَفَاتِيحَ الْيَمَنِ، وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ أَبْوَابَ صَنْعَاءَ مِنْ مَكَانِي هَذَا

 

(முஸ்லீம்களை போர்மேகம் சூழ்ந்த காலம். அகழ்ப்போர்களம். குழி தோண்டிக் கொண்டிருந்தார்கள் ஸஹாபாக்கள்.அப்போது குறிக்கிட்டது ஒரு பாறை. அதை யாராலும் உடைக்க முடியாத போது நபித்தோழர்கள் நாயகத்திடம் முறையிட்டனர்.
சம்மட்டியை தாங்களே எடுத்து)
பிஸ்மில்லாஹ் என்று கூறி ஒரு அடி அடித்தார்கள். பாறையில் மூன்றில் ஒரு பாகம் உடைந்தது. அல்லாஹு அக்பர். சிரியாவின் சாவிகள் எனக்கு தரப்பட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியம் நான் இங்கிருந்தே சிரியாவின் செந்நிற மாளிகைகளை காண்கிறேன். என்றார்கள். பிஸ்மில்லாஹ் என்று கூறி இரண்டாவது ஒரு அடி அடித்தார்கள் பாறையில் இன்னொரு பகுதி உடைந்தது, அல்லாஹு அக்பர். பாரசீக த்தின் சாவிகள் எனக்கு தரப்பட்டது,அல்லாஹ்வின் மீது ஆணை நான் இங்கிருந்தே பாரசீகத்தின் மதாயின் நகரத்தையும் அதன் வெள்ளை மாளிகையையும் காண்கிறேன்.
பிஸ்மில்லாஹ் என்று கூறி மூன்றாவது ஒரு அடி அடித்தபோது முழுபாறையும் உடைந்தது.அல்லாஹு அக்பர்.யமன் தேசத்தின் சாவிகள் எனக்கு தரப்பட்டது.அல்லாஹ்வின் மீது சத்தியம்.நான் இங்கிருந்தே யமனின் சன்ஆ நகரத்தின் வாசல்களை காண்கிறேன் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- பரா இப்னு ஆஸிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 18694

 

عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ قَالَتْ جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ حِينَ بُنِيَ عَلَيَّ، فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، فَجَعَلَتْ جُوَيْرِيَاتٌ لَنَا يَضْرِبْنَ بِالدُّفِّ، وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ، إِذْ قَالَتْ إِحْدَاهُنَّ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ دَعِي هَذِهِ، وَقُولِي بِالَّذِي كُنْتِ تَقُولِينَ

 

(காலித் இப்னு ஃதக்வான் ரஹ்மத்துல்லாஹ் அவர்களிடம்) கூறினார். எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் தாப் அடித்துக்கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி, ‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்’ என்று கூறினாள். உடனே, இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(இப்படிச் சொல்லாதே!) இதை விட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!’ என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 5147 அபூ தாவூத் 4922 திர்மிதி 1090 அஹ்மது 27021

 

🔶மேற்கூறிய ஹதீஸை மூலாதாரமாக வைத்துக் கொண்டு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது என்று வாதிடுகின்றனர்.

 

♦️இது போன்ற வாதங்கள் முற்றிலும் தவறானவை. காரணம் மேற்கூறிய ஹதீஸில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார் என்று கூறியது ஓர் சிறுமியாகும். ஆக சிறுமியின் பார்வையில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை நடக்கவிருப்பதையும் சுயமாக அறிபவர் என்ற எண்ணத்தில் தான் கூறி இருக்கக்கூடும். இதன் காரணத்தினால் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுமியை நோக்கி இதை விட்டு விட்டு முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்! என்று கூறினார்களே! அன்றி வேறில்லை.

 

குறிப்பு :- சுயமாக அறியும் ஆற்றலும்” மறைவான அறிவு ஞானமும்” இறைவனுக்கு மட்டுமே உண்டு அதனை யாரும் மறுக்க முடியாது” உதாரணமாக ஒருவரை இறைவன் தூதராக அனுப்பினான் என்றால் அவரைப் பார்த்து இறைத்தூதரே என்று தாராளமாக கூறலாம். அதே போன்று ஒருவருக்கு உதவி செய்யும் ஆற்றலை இறைவன் கொடுத்தான் என்றால் அவரைப் பார்த்து உதவி செய்தவரே” என்று தாராளமாக கூறலாம். அதே போன்று ஒருவருக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை இறைவன் கொடுத்தான் என்றால் அவரைப் பார்த்து அரசரே” ஆட்சி செய்பவரே என்று தாராளமாக கூறலாம். இதே போன்று தான் ஒருவருக்கு இறைவன் மறைவானவற்றை அறிவித்து கொடுத்து அதனை அவர் அறிந்து கொண்டால் அவரை பார்த்து மறைவானவற்றை அறிபவரே” அறிவு ஞானம் கொடுக்கப்பட்டவரே என்று தாராளமாக கூறலாம். இவ்வாறு கூறுவதில் எவ்வித குற்றமும் இல்லை என்பதை சாதாரணமாக திர்குர்ஆன் ஹதீஸ்களை மூலமாக வைத்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.