நபி முஹம்மத் ﷺ அவர்கள் இமாம் ஜமாத்துடன் தராவீஹ் தொழுகையை தொழுதார்களா? அல்லது தொழும் படி மக்களுக்கு கட்டளை இட்டார்களா?
நபி முஹம்மத் ﷺ அவர்கள் இமாம் ஜமாத்துடன் தராவீஹ் தொழுகையை தொழுதார்களா? அல்லது தொழும் படி மக்களுக்கு கட்டளை இட்டார்களா?
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ لَيْلَةً مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي المَسْجِدِ، وَصَلَّى رِجَالٌ بِصَلاَتِهِ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ فَصَلَّى فَصَلَّوْا مَعَهُ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَكَثُرَ أَهْلُ المَسْجِدِ مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى فَصَلَّوْا بِصَلاَتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ المَسْجِدُ عَنْ أَهْلِهِ، حَتَّى خَرَجَ لِصَلاَةِ الصُّبْحِ، فَلَمَّا قَضَى الفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَتَشَهَّدَ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَيَّ مَكَانُكُمْ، وَلَكِنِّي خَشِيتُ أَنْ تُفْتَرَضَ عَلَيْكُمْ، فَتَعْجِزُوا عَنْهَا»، فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالأَمْرُ عَلَى ذَلِكَ
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ரமழான் மாதத்தில்) ஒரு நாளிரவு தங்கள் இல்லத்திலிருந்து வெளியாகி மஸ்ஜிதிற்கு வந்து தொழுதார்கள். அப்போது சில சஹாபாக்கள் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். மறுநாள் காலையில் இதுபற்றி அவர்கள் பேசிக் கொண்டார்கள். (இரண்டாம் நாளிரவு) இன்னும் அதிகமான மக்கள் கூடி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து தொழுதனர். மறுநாள் காலையிலும் மக்கள் இதுபற்றி பேசிக் கொண்டனர். மூன்றாம் நாளிரவு இன்னும் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அன்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிற்கு வந்தார்கள். அன்னாரைப் பின்பற்றி ஸஹாபாக்கள் தொழுதார்கள். நான்காம் நாளிரவு மஸ்ஜித் கொள்ளாத அளவிற்கு மக்கள் கூடிவிட்டனர். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிற்கு வரவில்லை. சுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். பஜ்ரு தொழுது முடிந்தவுடன் சஹாபாக்களை நோக்கி உட்கார்ந்து, அல்லாஹுத்தஆலாவை புகழ்ந்தபின்’உங்களுடைய நிலை எனக்கு மறைந்ததாக இல்லை. எனினும், இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு, அதனை நீங்கள் நிறைவேற்ற முடியாமல் ஆகிவிடுவீர்களோ என்றுதான் நான் பயந்தேன்’ என்று கூறினார்கள். இவ்விஷயம் இவ்வாறிருக்கும் நிலையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆதாரம் புஹாரி 2012
أَنَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم صَلَّی بِالنَّاسِ عِشْرِيْنَ رَکْعَةً لَيْلَتَيْنِ فَلَمَّا کَانَ فِي اللَّيْلَةِ الثَّالِثَةِ اجْتَمَعَ النَّاسُ فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ ثُمَّ قَالَ مِنَ الْغَدِ: خَشِيْتُ أَنْ تُفْرَضَ عَلَيْکُمْ فَلَا تَطِيْقُوهَا
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானில் இரண்டு இரவுகளில் மக்களுக்கு இருபது ரக்அத்துகள் தொழவைத்தார்கள். பின்னர் மூன்றாவது இரவில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரவில்லை. சுப்ஹு தொழுகைக்கு வந்தவர்கள் ஸஹாபாக்களை நோக்கி உங்கள்ளுக்கு இந்த தொழுகை கடமையாகி விடுமோ என நான் அஞ்சினேன் என கூறினார்கள்.
ஆதாரம் தல்கீஸ் அல் கபீர் 2 / 21
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதத்தில் சில நாட்கள் தராவீஹ் என்ற பெயரில் அழைக்கப்படும் கியாமுர் ரமழான் என்ற தொழுகையை இமாம் ஜமாத்துடன் இருபது ரக்அத்துகள் தொழுவிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் பின்னர் இத்தொழுகை கடமையாகி விடுமோ என பயந்து அதனை அவர்கள் விட்டு விட்டார்கள் மரணிக்கும் வரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்தொழுகையை இமாம் ஜமாத்துடன் தொழவுமில்லை இவ்வாறு நீங்கள் தொழுங்கள் என்று ஸஹாபாக்களுக்கு கட்டளையிடவுமில்லை என்பதாக மேற்குறிப்பிட்ட ஹதீஸ்களின் கருத்துக்களிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்