நபி முஹம்மத் ﷺ அவர்கள் எங்களை போன்ற ஓர் மனிதரா?

317

நபி முஹம்மத் ﷺ அவர்கள் எங்களை போன்ற ஓர் மனிதரா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

 

قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது.

சூரா கஹ்ப் ஆயத் 110

 

மேற்கூறிய இறைவசனத்தை மூலாதாரமாக வைத்துக் கொண்டு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை போன்ற ஓர் சாதாரண மனிதர் என்று நாவு கூசாமல் வஹாபிஷ அமைப்புக்கள் மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

உன்மையில் மேற்கூறிய இறைவசனம் என்ன சொல்ல வருகிறது என்பதைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

 

மேற்கூறிய இறைவசனம் இறக்கப்பட்ட காரணம் :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் போதிக்கும் போது இறைவனுடைய அனுமதியைக் கொண்டு (முஃஜிசாத்து) பல அற்புதங்கள் மக்கள் மத்தியில் வைத்து செய்து காட்டுபவர்களாக இருந்தார்கள்.

 

உதாரணமாக :- மக்கள் மத்தியில் வைத்து சந்திரனை இரண்டாக பிளந்து காட்டினார்கள். நூல் ஆதாரம் புஹாரி 3869, 3870, 3871 மேலும் அவர்களுடன் கல் பேசியது. நூல் ஆதாரம் முஸ்லிம் 2277 மேலும் அவர்களுன் மலைகளும் மரங்களும் பேசியது. நூல் ஆதாரம் திர்மிதி 3626, தாரமி 1/12, ஹாகிம் 2/620, மிஷ்காத் 5919 மேலும் அவர்கள் உடைந்த கால்களை ஒட்ட வைத்தார்கள். நூல் ஆதாரம் புஹாரி 4039′ 4206 மேலும் அவர்கள் முதுகுக்கு பின்னால் நடப்பதை பார்க்கிறார்கள். நூல் ஆதாரம் புஹாரி 481 மேலும் அவர்கள் மதினாவில் இருந்து கொண்டு சிரியா நாட்டிலுள்ள சென்நிற மாளிகைகளை காண்பது மட்டுமின்றி பாரசீக நாட்டிலுள்ள மதாயின் நகரத்தையும் அதன் வெள்ளை மாளிகையையும் காண்கிறார்கள். மேலும் யமன் நாட்டிலுள்ள சன்ஆ நகரத்தின் வாசல்களையும் காண்கிறார்கள். நூல் ஆதாரம் அஹ்மது 3224 மேலும் அவர்கள் மறைந்த சூரியனை மீண்டும் வெளிப்படுத்தினார்கள். நூல் ஆதாரம் தப்ரானி” கபீர் 19861, இப்னு அஸாகிர் 17369 இவ்வாறு பல அற்புதங்களை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கள் மத்தியில் வைத்து செய்து காட்டும் போது, இவர் உன்மையில் இறைத்தூதரா? அல்லது இறைவனா? என்ற அவநம்பிக்கை சார்ந்த கேள்விக்குறி சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனை தெளிவு படுத்தும் நோக்கில் மேற்கூறிய இறைவசனம் இறக்கப்பட்டது.

 

قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى

 

அர்த்தம் :- (நபியே!) நீங்கள் கூறுங்கள். நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் (நான் கடவுள் அல்ல. கடவுளின் குமார் அல்ல. முற்கடவுளில் ஒருவர் அல்ல. உங்களை போன்ற உடல் அமைப்பை கொண்டவன். என்றாலும் நான் உங்களை போன்ற சாதாரண மனிதரும் அல்ல) எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது.

சூரா கஹ்ப் ஆயத் 110

 

இடை குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை போன்ற சாதாரண மனிதர் என்பதற்கும் மேற்கூறிய திருக்குர்ஆன் இறைவசனத்திற்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் கிடையாது என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… إِنِّي لَسْتُ مِثْلَكُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக நான் உங்களை போன்றவன் அல்ல.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1962, 7241, 7299, முஸ்லிம் 1102, 1104, தாரமீ 1745, 1748 அஹ்மது 5795, 6299, 7437, 7786, 8902, 11423, 11546, 12248, 13070, 24945

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் உங்களில் யாரைப் போன்றும் அல்ல.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1961 முஸ்லிம் 735 அபூ தாவூத் 950 நஸாயி 1659 தாரமீ 1424, 2098

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَر رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… إِنِّي لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக நான் உங்களில் யாரைப் போன்றும் அல்ல.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 4721, 6894, 7330, 12740, 13461, 26054, 27442, 27622

 

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… لَسْتُ كَهَيْئَتِكُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக நான் உங்களின் அமைப்பைப் போன்றவனும் அல்ல.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1922, 1967

 

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக நான் உங்களின் அமைப்பைப் போன்றவனும் அல்ல.

 

அறிவிப்பவர் :- அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1963, 1964, முஸ்லிம் 1102, 1105 அபூதாவூத் 2360, 2361, அஹ்மது 6125, 6413, 11055, 11822

 

عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمَرَهُمْ أَمَرَهُمْ مِنَ الأَعْمَالِ بِمَا يُطِيقُونَ قَالُوا إِنَّا لَسْنَا كَهَيْئَتِكَ يَا رَسُولَ اللَّهِ

 

நல்லவற்றை(ச் செய்யுமாறு) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அத்தோழர்களால் இயன்ற செயல்களையே ஏவுவார்கள். இதனை அறிந்த நபித்தோழர்கள், யா ரஸுலல்லாஹ்! நிச்சயமாக எங்கள் அமைப்பு தங்களின் அமைப்பைப் போன்றதல்ல என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 20

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَسْتَ مِثْلَنَا قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ

 

(நோன்பு சம்பந்தமாக கேள்வி கேட்க வந்த) அந்த மனிதர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி யா ரஸுலல்லாஹ்! நீங்கள் எங்களைப் போன்றவர் அல்ல.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 2389

 

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை போன்ற சாதாரண மனிதர் அல்ல. சாதாரண மனிதர் என்று வரும் போது அவர் பொய் பித்தலாட்டம் தவரு எல்லாம் செய்ய முடியும். ஆனால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் பின் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள். தவறின் பக்கம் நெருங்காதவர்கள். சாதாரண மனிதர்கள் மிஹ்ராஜ் செல்ல முடியாது. அவர்களுக்கு வஹி இரக்கப்பட மாட்டாது என்ற செய்திகளையெல்லாம் நாம் குர்ஆன் ஹதீஸை கொண்டு புரிந்து வைத்திருக்கிறோம்.

 

குறிப்பு :- செங்கல், கரிங்கல், மாணிக்கக்கல், ஹஜருல் அஸ்வத் கல், இவையெல்லாம் கல் என்ற இனத்தில் ஒன்று பட்டிருந்தாலும் செங்கல், கரிங்கல் போன்றதல்ல மாணிக்கக்கல். அதற்கு அதிக விலைமதிப்புள்ளது. மேலும் மாணிக்கக்கல் போன்றதல்ல ஹஜருல் அஸ்வத் கல். இஸ்லாத்தின் பார்வையில் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு அதிக சிறப்புகள் உண்டு. அதே போன்று தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை போன்ற மனித அமைப்பில் இருந்தாலும் அவர்களுக்கும் எங்களை போன்ற மனிதர்களுக்கும் அதிக அளவில் வித்தியாசங்கள் உள்ளது என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.