நபி முஹம்மத் ﷺ அவர்கள் கப்ரில் மறைந்து உயிருடன் இருக்கிறார்கள்

473

நபி முஹம்மத் ﷺ அவர்கள் கப்ரில் மறைந்து உயிருடன் இருக்கிறார்கள்

 

عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ‏ أَكْثِرُوا الصَّلاَةَ عَلَىَّ يَوْمَ الْجُمُعَةِ فَإِنَّهُ مَشْهُودٌ تَشْهَدُهُ الْمَلاَئِكَةُ وَإِنَّ أَحَدًا لَنْ يُصَلِّيَ عَلَىَّ إِلاَّ عُرِضَتْ عَلَىَّ صَلاَتُهُ حَتَّى يَفْرُغَ مِنْهَا ‏قَالَ قُلْتُ وَبَعْدَ الْمَوْتِ قَالَ وَبَعْدَ الْمَوْتِ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الأَنْبِيَاءِ ‏فَنَبِيُّ اللَّهِ حَىٌّ يُرْزَقُ

 

ஒரு முறை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களான ஸஹாபாப் பெருமக்களிடம்,
“வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த
நாளாகும். ஆகவே அந்த நாளில் என் மீது அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் மலக்குகள் மூலம் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றன.
என்றார்கள். அப்போது, “நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் தாங்களுடைய ஜீவியத்தில் எடுத்துக்காட்டப்படுவது போன்றே தாங்கள் மறைவுக்குப் பிறகும் (கப்ரிலும்) காட்டப்படுமா? என்று சில ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஒருவர் என் மீது ஸலவாத் ஓதினால் அவர் ஓதி முடிக்கின்ற வரை அவருடைய ஸலவாத்துக்கள் ஒன்று விடாமல் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன என்று கூறியதுடன், நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1637

 

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَىَّ إِلاَّ رَدَّ اللَّهُ عَلَىَّ رُوحِى حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلاَمَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால் நான் அவருக்குப் பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு எனது ரூஹைத் திருப்புகிறான் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 2041 அஹ்மத் 10815

 

قَالَ السُّيُوطِيُّ وَلَيْسَ الْمُرَاد بِرَدِّهَا عَوْدهَا بَعْد مُفَارَقَة بَدَنهَا وَإِنَّمَا النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَرْزَخِ مَشْغُول بِأَحْوَالِ الْمَلَكُوت مُسْتَغْرِق فِي مُشَاهَدَته تَعَالَى كَمَا هُوَ فِي الدُّنْيَا بِحَالَةِ الْوَحْي

 

மேற்கூறிய ஹதீஸிக்கு விளக்கும் போது இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுது முபாரக்கான ரூஹ் உடம்பை விட்டும் பிறிவதும் பிறகு உயிர் கொடுக்கப்படுவதும் என்பது இதன் பொருளல்ல. மாறாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆலமுல் பர்ஜக் எனும் (ஆத்ம உலகில்) மலகூத்தான காரியங்களில் உயிரோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகில் வஹி இறங்கும் சமயத்தில் இருந்ததைப்போலவே இறைவனோடு ஞானத்தில் மூழ்கியிருக்கிறார்கள் என்பது தான் இதன் விளக்கமாகும்.

 

நூல் ஆதாரம் அபூ தாவூத் விளக்கவுரை அவ்னுல் மஃபூது

 

عَنْ عَبْدِ اللهِ اِبْنِ مَسْعُوْد رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً سَيَّاحِينَ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلاَمَ قَالَ وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : حَيَاتِي خَيْرٌ لَكُمْ تُحَدِّثُونَ وَنُحَدِّثُ لَكُمْ وَوَفَاتِي خَيْرٌ لَكُمْ تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ فَمَا رَأَيْتُ مِنَ خَيْرٍ حَمِدْتُ اللَّهَ عَلَيْهِ، وَمَا رَأَيْتُ مِنَ شَرٍّ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என் மீது உம்மத்தினர்கள் கூரும் ஸலாம் மலக்குகள் மூலம் எனக்கு எத்திவைக்கப்படுகிறது. மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எனது வாழ்வு உங்களுக்கு நன்மையே. நீங்கள் உரையாடு இருக்கிறீர்கள். நானும் உங்களுடன் உரையாடுகிறேன். எனது மரணமும் உங்களுக்கு நன்மையே. உங்கள் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. அதில் நன்மையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். தீமையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்னத் பஸ்ஸார் 1925

 

عَنْ اِبْنِ مَسْعُوْد رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்விற்கு மண்ணுலகில் சுற்றிவரும் மலக்குகள் இருக்கிறார்கள். என் உம்மத்தினர் கூறும் சலாமை அவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 1282 தாரமீ 2816 அஹ்மது 3666

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى عَلَيَّ عِنْدَ قَبْرِي سَمِعْتُهُ وَمَنْ صَلَّى عَلَيَّ نَائِيًا أَبْلَغْتُهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவரேனும் என் கப்ரு ரவ்ளா (மண்ணரைக்கு) அருகில் இருந்து கொண்டு என் மீது ஸலவாத் ஓதினால் அதை நான் என் காதால் கேட்கிறேன். எவரேனும் தூரத்தில் இருந்து கொண்டு என் மீது ஸலவாத் ஓதினால் அது எனக்கு எத்திவைக்கப்படுகிறது.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் பைஹகி” ஸுஃபுல் ஈமான் 1481

 

عَنْ عَلِيِّ ابْن أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ لَمَّا حَضَرَتْ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ الْوَفَاةُ أَقْعَدَنِي عِنْدَ رَأْسِهِ وَقَالَ لِي يَا عَلِيُّ إِذَ أَنَا مِتُّ فَغَسِّلْنِي بِالْكَفِّ الَّذِي غَسَّلْتَ بِهِ رَسُولَ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ ، وَحَنِّطُونِي وَاذْهَبُوا بِي إِلَى الْبَيْتِ الَّذِي فِيهِ رَسُولُ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَأْذِنُوا فَإِنْ رَأَيْتُمُ الْبَابَ قَدْ يُفْتَحَ فَادْخُلُوا بِي وَإِلا فَرُدُّونَي إِلَى مَقَابِرِ الْمُسْلِمِينَ حَتَّى يَحْكُمُ اللَّه بَيْنَ عِبَادِهِ قَالَ فَغُسِّلَ وَكُفِّنَ وَكُنْتُ أَوَّلَ مَنْ يَأْذَنُ إِلَى الْبَابَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّه هَذَا أَبُو بَكْرٍ مُسْتَأْذِنٌ ، فَرَأَيْتُ الْبَابَ قَدْ تُفْتَحُ وَسَمِعْتُ قَائِلا يَقُولُ ادْخَلِوا الْحَبِيبَ إِلَى حَبِيبِهِ، فَإِنَّ الْحَبِيبَ إِلَى الْحَبِيبِ إِلَى الْحَبِيبِ مُشْتَاقٌ

 

அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மரணம் நெருங்கிய சமயத்தில், என்னை தனது தலைமாட்டில் உட்காரவைத்துக்கொண்டு, அலியே! நான் மரணத்து விட்டால், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குளிப்பாட்டிய கையைக்கொண்டு என்னை குளிப்பாட்டி, எனக்கு வாசனைத்தூள் போட்டு, என்னை ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளாவிற்கு எடுத்துச் சென்று, (நாயகத்திற்கு அருகில் அடக்கம் செய்ய) எனக்கு அனுமதி கேட்பீராக! அச்சமயம் ரவ்ளாவின் கதவு திறக்கப்பட்டால் என்னை உள்ளே கொண்டு சென்று (அடக்கம் செய்து) விடுவீராக! இல்லையெனில் முஸ்லிம்கள் அடக்கப்படும் (பொதுக்) கப்ருஸ்தானில் அடக்கம் செய்து விடுவீராக!. தனது அடியார்களுக்க தீர்ப்பு வழங்கும் (கியாமத் நாள்) வரை (நான் பொதுக் கப்ருஸ்தானிலியே இருந்துவிடுகிறேன்) என்றார்கள். (அவ்வாறே அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்) குளிப்பாட்டப்பட்டு, கஃபனிடப்பட்டார்கள். பின்னர் (அலியாகிய) நானே முதலில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளாவின் வாசற்படியில் (நின்றுக்கொண்டு) யா ரஸுல்லாஹ்! இதோ அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உங்களோடு (அடக்கம் செய்யப்பட) அனுமதி கேட்கிறார்கள் என்றேன். உடனே அண்ணலாரின் ரவ்ளாவின் கதவைப் பார்த்தேன். கதவு திறக்கப்பட்டது. ‘நண்பரை அவருடைய நண்பரோடு சேர்த்துவிடுங்கள். எனெனில், நண்பர் நண்பரோடு சேருவதைத்தான் விரும்புவார் என சப்தம் வந்தது எனக்கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அஸாகிர்” தாரீஹ் தமஸ்க் 437 இப்னு அபூ ஹாதிம் 8/161

 

ﻋَﻦْ ﺳَﻌِﻴﺪِ ﺑْﻦِ ﻋَﺒْﺪِ ﺍﻟْﻌَﺰِﻳﺰِ رَضِيَ اللَّهُ عَنْهُ ﻗَﺎﻝَ ﻟَﻤَّﺎ ﻛَﺎﻥَ ﺃَﻳَّﺎﻡُ ﺍﻟْﺤَﺮَّﺓِ ﻟَﻢْ ﻳُﺆَﺫَّﻥْ ﻓِﻰ ﻣَﺴْﺠِﺪِ ﺍﻟﻨَّﺒِﻰِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﺛَﻼَﺛﺎً ﻭَﻟَﻢْ ﻳُﻘَﻢْ، ﻭَﻟَﻢْ ﻳَﺒْﺮَﺡْ ﺳَﻌِﻴﺪُ ﺑْﻦُ ﺍﻟْﻤُﺴَﻴَّﺐِ ﺍﻟْﻤَﺴْﺠِﺪَ، ﻭَﻛَﺎﻥَ ﻻَ ﻳَﻌْﺮِﻑُ ﻭَﻗْﺖَ ﺍﻟﺼَّﻼَﺓِ ﺇِﻻَّ ﺑِﻬَﻤْﻬَﻤَﺔٍ ﻳَﺴْﻤَﻌُﻬَﺎ ﻣِﻦْ ﻗَﺒْﺮِ ﺍﻟﻨَّﺒِﻰِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

 

ஹர்ரா போர் காலகட்டத்தில், மஸ்ஜிதுன் நபவியில் மூன்று நாட்கள் அதான் பாங்கும் சொல்லப்படவில்லை, மேலும் ஜமாஅத் தொழுகையும் நடைபெறவில்லை. ஸயீது பின் அல்முஸய்யப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலியே இருந்தார்கள். (இந்த மூன்று நாட்களாக) தொழுகையின் நேரத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளாவி
(மண்ணரையி)லிருந்து வரும்
கனைப்புச் சப்தத்தை வைத்தே
அறிந்து கொண்டார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸயீத் இப்னு அப்தில் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரமீ 94

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ﻗَﺎﻝَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَالَّذِي نَفْسُ أَبِي الْقَاسِمِ بِيَدِهِ لَيَنْزِلَنَّ عِيسَى ابْنُ مَرْيَمَ إماماً مقسطاً وحكماً عدلاً فليكسرن الصليب ويقتلن الخنزير وَلَيُصْلِحَنَّ ذَاتَ الْبَيْنِ وَلَيُذْهِبَنَّ الشَّحْنَاءَ وَلَيُعْرَضَنَّ عَلَيْهِ الْمَالُ فَلَا يَقْبَلْهُ ثُمَّ لَئِنْ قَامَ عَلَى قَبْرِي فَقَالَ يَا مُحَمَّدُ لَأُجِيبَنَّهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். அபுல் காஸிமின் (இது எனது பெயராகும்) உயிர் யாரது கையில் இருக்கிறதோ அவனின் மீதாணையாக, ‘ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (வானத்திலிருந்து) நீதமான நேர்மையான இமாமாக இறங்கி வந்து, சிலுவைகளை உடைப்பார்கள், பன்றிகளை கொல்லுவார்கள், மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வார்கள், விரோதம் குரோதம் போன்ற கசடுகளை போக்குவார்கள் மற்றும் பொருட்களை புறக்கணிப்பார்கள். அதை வாங்க ஒருவரும் (அந்நேரத்தில் ஏழைகள்) இருக்கமாட்டார்கள். இறுதியாக, என் கப்ரு ரவ்ளாவிற்கு வந்து, முஹம்மதே! என்று என்னை அழைத்தால், அவரது அழைப்பிற்கு நான் பதில் கூறுவேன்’ என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் மஜ்மவு ஸவாயித் 13813, அபூயஃலா 6584

 

குறிப்பு :- நபிமார்கள் நல்லடியார்கள் அவர்களுடைய கப்ரு தர்ஹாக்களில் மறைந்த வண்ணன் உயிருடன் வாழுகிறார்கள். அவர்களுடைய உடலை மண் தீன்டாது. அவர்களுக்கு சுவர்க்கத்து உணவு வழங்கப்படுகிறது என்ற கருத்துக்களை குர்ஆன் ஹதீஸ் கூறினாலும் குறிப்பாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரில் மறைந்த வண்ணம் உயிருடன் இருக்கிறார்கள். எனவே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிக அதிகமாக ஸலாவாத்து சொல்லுங்கள் இன்னும் ஸலாமும் கூறுங்கள். அவர்களுக்கு அவையெல்லாம் எடுத்து காட்டப்படும் என்ற செய்திகளை நம்மால் காணமுடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.