நபி முஹம்மத் ﷺ அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்பதாகக் கூறினால் திருக்குர்ஆனுக்கு முறன்படுமா?

269

நபி முஹம்மத் ﷺ அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்பதாகக் கூறினால் திருக்குர்ஆனுக்கு முறன்படுமா?

 

நூல் 📚 :- திருக்குர்ஆனுடைய பார்வையில் சூனியமும் சூனியத்தால் பாதிக்கப்பட்டோர்களும்.
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

(மஸ்ஹூர்) என்ற வார்த்தைக்கு சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தம் வைத்தால் சூனியம் சம்பந்தமாக இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு கீழ் காணும் இறைவசனங்கள் முறன் படுமா?

 

نَحْنُ اَعْلَمُ بِمَا يَسْتَمِعُوْنَ بِهٖۤ اِذْ يَسْتَمِعُوْنَ اِلَيْكَ وَاِذْ هُمْ نَجْوٰٓى اِذْ يَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا‏

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.

சூரா பனி இஸ்ராயில் ஆயத் 47

 

(மஸ்ஹூர்) என்ற வார்த்தைக்கு சூனியம் செய்யப்பட்டவர் என்ற நேரடி அர்த்தம் கொடுத்தாலும் சூனியம் சம்பந்தமாக இடம் பெற்றுள்ள எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் மேற்கூறிய இறைவசனம் எவ்விதத்திலும் முறன்படாது. காரணம் சூனியம் தீன்டிய மனிதர்களை பற்றி அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் அதிகமாகவே அறிந்து வைத்திருந்தார்கள். அவ்வாறான காலகட்டத்தில் வாழ்ந்த மக்களை நோக்கி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக நான் இறைவனின் இருதித்தூதராவேன், எனக்கு வஹி இறங்குகிறது, நான் ஏழு வானங்களை கடந்து சென்றது மட்டுமின்றி இறைவனை சந்தித்து அதன் மூலம் எனக்கு தொழுகை பரிசாக கிடைத்தது என்றெல்லாம் மக்கள் மத்தியில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரும் போதெல்லாம் காஃபிர்களில் சிலர் இவர் நம்மை போன்று சாப்பிடுகிறார் நம்மை போன்று குடிக்கிறார் நம்மை போன்று கடைவீதிகளுக்கு செல்லும் இவர் ஏன் இவ்வாறெல்லாம் பேசுகிறார். ஒரு வேளை இவருக்கு யாராவது சூனியம் செய்திரிக்கக்கூடும். அதனால் தான் இவர் இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்பதாக நினைத்த படி முஃமின்களை நோக்கி சூனியம் செய்யப்பட்ட மனிதரே அண்றி வேரெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்று குத்திக் காட்டி ஏளனமாகவும் கேழியாகாவும் பேசி வந்த காரணத்தால் அந்த காஃபிர்களை நோக்கி இறைவன் அநியாயக்காரர்கள் என்பதாக திருக்குர்ஆனில் கூறியுள்ளானே தவிர வேறு எதற்காகவும் இவ்வாறு கூறவில்லை. உதாரணமாக

 

وَاتَّقُوا الَّذِىْ خَلَقَكُمْ وَالْجِـبِلَّةَ الْاَوَّلِيْنَ

 

குர்ஆன் கூறுகிறது உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள் என்று (ஸாலிஹ் நபி) கூறிய போது.

சூரா ஷுஃரா ஆயாத் 184

 

قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ

 

குர்ஆன் கூறுகிறது அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) “உங்கள்மீது எவரோ சூனியம் செய்து விட்டார்கள். (ஆதலால், உங்களுடைய புத்தி தடுமாறிவிட்டது.)

சூரா ஷுஃரா ஆயத் 185

 

وَمَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا وَاِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِيْنَ

 

குர்ஆன் கூறுகிறது (மேலும்) நீங்கள் நம்மைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக நாம் உங்களைப் பொய்யர்களில் ஒருவராகவே மதிக்கின்றோம்.

சூரா ஷுஃரா ஆயாத் 186

 

(மஸ்ஹூர்) சூனியம் செய்யப்பட்டவர் என்ற சொல்லின் பன்மை பதம் (அல் முஸஹ்ஹிரீன்) சூனியம் செய்யப்பட்டு விட்டார்கள் அல்லது சூனியம் செய்யப்பட்டு விட்டீர் என்பதாக நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விடயத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளது.

 

நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களுடைய கூட்டத்தை நோக்கி நீங்கள் உங்களை படைத்த இறைவனுக்கு கட்டுப்படுங்கள் என்று கூறிய போது அதற்கு அவர்கள் நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களே! யாரோ உங்களுக்கு சூனியம் செய்து விட்டார்கள் அல்லது சூனியத்தால் பாதிக்கப்பட்டு விட்டீர் என்று அக்கூட்டத்தினர் கூறிய காரணம். நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களே! நீங்கள் எங்களை போன்ற மனிதர் தானே அப்படியிருக்கையில் ஏன் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள், ஒரு வேளை உங்களுக்கு சூனியம் செய்யப்பட்டு (ஷைத்தான் தீன்டி) இருக்கலாம். அதனால் தான் நீங்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள். இல்லையெனில் நீங்கள் பொய்யர்களில் நின்றும் உள்ளவர். மேலும் சூரா ஷுஃரா ஆயத் 153, 154 ல் உங்களுக்கு சூனியம் செய்யப்பட்டு (ஷைத்தான் தீன்டி) இருக்கலாம். அதனால் தான் நீங்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள். உன்மை சொல்பவராக இருந்தால் அத்தாட்சிகளை கொண்டு வாருங்கள் என்று அக்கூட்டத்தினர் கூறியதை நம்மால் காண முடிகிறது. இது போன்று தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் விடயத்திலும் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

 

இடை குறிப்பு :- இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது (மஸ்ஹூர்) என்ற வார்த்தைக்கு சூனியம் செய்யப்பட்டவர் என்ற நேரடி அர்த்தம் வைத்தாலும் சூனியம் சம்பந்தமாக இடம்பெற்றுள்ள எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் மேற்கூறிய இறைவசனம் எவ்விதத்திலும் முறன் கிடையாது.

 

குறிப்பு :- அன்று காஃபிர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதரை தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று கூறியவாறு முஃமின்களை ஏளனம் செய்து கேளி செய்து திருக்குர்ஆனை மறுத்து வந்தார்கள். அதே போண்று தான் இன்றைய காலகட்டத்திலுள்ள வழிதவறியோர்களும் சூனியம் செய்யப்பட்ட மனிதரை தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று கூறியவாறு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஃமின்களை ஏளனம் செய்து கேளி செய்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் திருக்குர்ஆனின் பார்வையில் அநியாயக்காரர்களாகும்.

 

அறிந்து கொள்ளுங்கள். உன்மையான அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் ஈமானில் உறுதியாக இருக்கக்கூடிய சத்திய ஸஹாபாக்கள், தாபீன்கள், இமாம்கள், நல்லடியார்கள் அனைவரும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஷைத்தான் தீன்டியதாக இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அனைத்தையும் உண்மை பித்துள்ளார்களே தவிர எவர்களும் பொய் பிக்கவில்லை. உன்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதரை பின்பற்றவில்லை. அதற்கு மாற்றமாக சூனியம் செய்தும் அந்த சூனியத்திலிருந்து ஏக இறைவனால் பாதுகாக்கப்பட்ட மாமனிதர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே நாங்கள் பின்பற்றுகிறோம் என்பதை ஆணித்தனமாகவும் தெட்ட தெளிவகவும் வழிதவறியோர்களைப் பார்த்து கூறிக்கொள்வதில் நாம் பெருமை படுகிறோம்.

 

Facebook :- யா சைஹு யா ரிபாயி
Facebook pages manager :- அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.