நபி முஹம்மத் ﷺ அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் என்று கூறுபவர்களை திருக்குர்ஆன் அநியாயக்காரர் என்று கூறுகிறதா?
நபி முஹம்மத் ﷺ அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் என்று கூறுபவர்களை திருக்குர்ஆன் அநியாயக்காரர் என்று கூறுகிறதா?
நூல் 📚 :- திருக்குர்ஆனுடைய பார்வையில் சூனியமும் சூனியத்தால் பாதிக்கப்பட்டோர்களும்.
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறும் ஹதீஸ்களை திருக்குர்ஆன் மறுப்பது மட்டுமின்றி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்து அதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டதாக எவர்களெல்லாம் கூறுகிறார்களோ அவர்களெல்லாம் அநியாயக்காரர்கள் என்பதாகத்தான் இறைவன் பின்னர் நடக்கவிருப்பதை முன் கூட்டியே திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான் என்பதாகக் கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதங்களும் அதற்குறிய பதில்களும்.
نَحْنُ اَعْلَمُ بِمَا يَسْتَمِعُوْنَ بِهٖۤ اِذْ يَسْتَمِعُوْنَ اِلَيْكَ وَاِذْ هُمْ نَجْوٰٓى اِذْ يَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا
குர்ஆன் கூறுகிறது (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
சூரா பனி இஸ்ராயில் ஆயத் 47
சூனியம் செய்யப்பட்ட மனிதரை தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று ஏன் அந்த அநியாயக்காரர்கள் இவ்வாறு கூற வேண்டும் என்பதை சற்று கூர்ந்து கவனியுங்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் அனைத்தும் அவர்களுடைய மனோ இச்சை படி உண்டாகியது என்பதாக அநியாயக்காரர்களின் நிலைப்பாடாகும். அந்த நிலைப்பாட்டிலிருந்த அவர்களுக்கு மத்தியில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஷைத்தான் தீன்டியுள்ளதை ஏதோ ஓர் வகையில் அறிந்த காரணத்தால் முஃமின்களை நோக்கி சூனியம் செய்யப்பட்ட மனிதரை தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று ஏளனமாகவும் கேளியாகவும் குத்திக்காட்டி பேசியிருக்கக்கூடும் என்று வைத்துக் கொள்வோம்.
இப்பொழுது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஷைத்தான் தீன்டவில்லை என்பதாக நாம் வைத்து கொண்டாள். மேற்கூறிய அந்த அநியாயக்காரர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைதூதராக ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் அனைத்தும் அவர்களுடைய மனோ இச்சை படி உண்டாகவில்லை, அதற்கு மாற்றமாக இறைவனுடைய அனுமதியை கொண்டு தான் உண்டாகியது என்ற கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். உதாரணமாக
ﻭَﺍﺫْﻛُﺮْ ﻋَﺒْﺪَﻧَﺎۤ ﺍَﻳُّﻮْﺏَۘ ﺍِﺫْ ﻧَﺎﺩٰﻯ ﺭَﺑَّﻪٗۤ ﺍَﻧِّﻰْ ﻣَﺴَّﻨِﻰَ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦُ ﺑِﻨُﺼْﺐٍ ﻭَّﻋَﺬَﺍﺏٍؕ
குர்ஆன் கூறுகிறது மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூருங்கள் ! அவர் தம் இறைவனிடம், “நிச்சயமாக ஷைத்தான் வேதனையிலும் துன்புத்தலாலும் என்னை தீன்டி விட்டான் (என்று கூறிய போது)
சூரா ஸாத் ஆயத் 41
நபி ஐய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஷைத்தான் வேதனையிலும் துன்புத்தலாலும் அதாவது உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தீன்டியுள்ளதை மூலகாரணமாக வைத்து இன்றைய கால கட்டத்திலுள்ள யூத நஸராக்கள் அதாவது அநியாயக்காரர்கள், முஃமின்களை நோக்கி ஷைத்தான் வேதனையிலும் துன்புத்தலாலும் தீன்டிய ஓர் மனிதரை தான் இறைத்தூதர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது என்பதாக அநியாயக்காரர்கள் கேளியாகவும் ஏளனமாகவும் முஃமின்களை நோக்கி பேசினால்! இவைகளை காரணமாக வைத்து நபிமார்களுக்கு ஷைத்தான் தீன்ட முடியாது.
எனவே மேற்கூறிய இறைவசனம் பொய் பின்னால் வந்தவர்கள் இட்டுக்கட்டியுள்ளார்கள் என்பதாக ஒரு கூட்டம் கூறினால்! அந்த கூட்டம் உன்மையான ஏகத்துவ வாதிகளாக இருக்க முடியுமா? அல்லது உன்மையான முஃமின்களாக இருக்க முடியுமா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். இன்னும் ஓர் உதாரணம்
ﻭَﻗُﻠْﻨَﺎ ﻳٰٓـﺎٰﺩَﻡُ ﺍﺳْﻜُﻦْ ﺍَﻧْﺖَ ﻭَﺯَﻭْﺟُﻚَ ﺍﻟْﺠَـﻨَّﺔَ ﻭَﻛُﻠَﺎ ﻣِﻨْﻬَﺎ ﺭَﻏَﺪًﺍ ﺣَﻴْﺚُ ﺷِﺌْﺘُﻤَﺎ ﻭَﻟَﺎ ﺗَﻘْﺮَﺑَﺎ ﻫٰﺬِﻩِ ﺍﻟﺸَّﺠَﺮَﺓَ ﻓَﺘَﻜُﻮْﻧَﺎ ﻣِﻦَ ﺍﻟﻈّٰﻠِﻤِﻴْﻦَ
குர்ஆன் கூறுகிறது இறைவன் கூருகிறான் மேலும் நாம், ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள் என்று சொன்னோம்.
சூரா பகரா ஆயத் 35
ﻓَﻮَﺳْﻮَﺱَ ﺍِﻟَﻴْﻪِ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦُ ﻗَﺎﻝَ ﻳٰۤﺎٰﺩَﻡُ ﻫَﻞْ ﺍَﺩُﻟُّﻚَ ﻋَﻠٰﻰ ﺷَﺠَﺮَﺓِ ﺍﻟْﺨُﻠْﺪِ ﻭَﻣُﻠْﻚٍ ﻟَّﺎ ﻳَﺒْﻠٰﻰ
குர்ஆன் கூறுகிறது இறைவன் கூருகிறான் ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி:“ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா? என்று கேட்டான்.
சூரா தாஹா ஆயத் 120
ﻓَﺎَﺯَﻟَّﻬُﻤَﺎ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦُ ﻋَﻨْﻬَﺎ ﻓَﺎَﺧْﺮَﺟَﻬُﻤَﺎ ﻣِﻤَّﺎ ﻛَﺎﻧَﺎ ﻓِﻴْﻪِ ﻭَﻗُﻠْﻨَﺎ ﺍﻫْﺒِﻄُﻮْﺍ ﺑَﻌْﻀُﻜُﻢْ ﻟِﺒَﻌْﺾٍ ﻋَﺪُﻭٌّۚ ﻭَﻟَـﻜُﻢْ ﻓِﻰ ﺍﻟْﺎَﺭْﺽِ ﻣُﺴْﺘَﻘَﺮٌّ ﻭَّﻣَﺘَﺎﻉٌ ﺍِﻟٰﻰ ﺣِﻴْﻦٍ
குர்ஆன் கூறுகிறது இறைவன் கூருகிறான் இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த (சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்;
பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு என்று கூறினோம்.
சூரா பகரா ஆயத் 36
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் ஷைத்தான் வழிகெடுத்ததை காரணமாக வைத்து இன்றைய காலத்திலுள்ள யூத நஸாராக்கள் அதாவது அநியாயக்காரர்கள் முஃமின்களை நோக்கி முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஷைத்தான் வழிகெடுத்துள்ளான் என்று கேளியாகவும் ஏளனமாவும் முஃமின்களை நோக்கி பேசினால். இவைகளை காரணமாக வைத்து நபிமார்களை ஷைத்தான் வழிகெடுக்க முடியாது.
எனவே மேற்கூறிய இறைவசனங்கள் பொய் பின்னால் வந்தவர்கள் இட்டுக்கட்டியுள்ளார்கள் என்று ஒரு கூட்டம் கூறினால்! அவர்கள் உன்மையான ஏகத்துவ வாதிகளாக இருக்க முடியுமா? அல்லது உன்மையான முஃமின்களாக இருக்க முடியுமா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.
குறிப்பு :- சூனியத்தின் மூலம் ஷைத்தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தீன்டியுள்ளான் என்பதாக இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அனைத்தும் திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதாகவும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் தீன்டியது என்பதாகக் கூறுபவர்கள் அனைவரும் திருக்குர்ஆனுடைய பார்வையில் அநியாயக்காரர்கள் என்பதாக யாரெல்லாம் கூறுகிறார்களோ அவர்கள் அனைவரும் ஹதீஸ் மறுப்பாளர்கள் திருக்குர்ஆன் வசனங்களை தவறான முறையில் புரிந்து கொண்ட நிலையில் தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுக்கக்கூடியவர்கள் என்ற கருத்தையே திருக்குர்ஆன் நமக்கு தெளிவு படுத்துகிறது.
கேள்வி :- நபி முஹம்மத் ﷺ அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் என்று கூறுபவர்களை திருக்குர்ஆன் ஏன் அநியாயக்காரர் என்று கூறவேண்டும்?
நமது பதில்கள் :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்பதாகக் காஃபிர்கள் கூறிய காரணத்தினால் தான் அவர்களை நோக்கி இறைவன் அநியாயக்காரர்கள் என்பதாக திருக்குர்ஆனில் கூறியுள்ளான் என்பதாகக் கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதம் முற்றிலும் தவறு என்பதை கீழ் காணும் இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
اَوْ يُلْقٰٓى اِلَيْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ يَّاْكُلُ مِنْهَا وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا
குர்ஆன் கூறுகிறது அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்றும் கூறுகிறார்கள்.
சூரா புர்கான் ஆயத் 8
சூனியத்தால் பாதிக்கப்பட்ட மனிதரை அதாவது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தான் இந்த முஃமின்கள் பின்பற்றுகிறார்கள் என்று ஏளனமாவும் கேளியாகவும் குத்திக்காட்டி பேசி மனவேதனை கொடுத்த காரணத்தால் தான் திருக்குர்ஆனில் இறைவன் அந்த காஃபிர்களை நோக்கி அநியாயக்காரர்கள் என்ற வார்த்தையை குறிப்பிட்டு கூறியுள்ளானே தவிர வேறு எதற்காகவும் இவ்வாறு கூறவில்லை.
சூனியத்தின் மூலம் ஷைத்தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தியது உண்மை. இருப்பினும் காஃபிர்கள் சூனியத்தை மூலகாரணமாக வைத்து முஃமின்களை ஏளனமாவும் கேளியாகவும் குத்திக்காட்டி பேசிய காரணத்தினால் தான் அந்த காஃபிர்களை அநியாயக்காரர்கள் என்பதாக இறைவன் திருக்குர்ஆனில் கூறியுள்ளானே தவிர சூனியம் என்ற ஒன்றில்லை, அதன் மூலம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பதாக திருக்குர்ஆனில் எங்குமே இறைவன் குறிப்பிட்டு கூறவில்லை என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு :- அன்று காஃபிர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதரை தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று கூறியவாறு முஃமின்களை ஏளனம் செய்து கேளி செய்து திருக்குர்ஆனை மறுத்து வந்தார்கள். அதே போண்று தான் இன்றைய காலகட்டத்திலுள்ள வழிதவறியோர்களும் சூனியம் செய்யப்பட்ட மனிதரை தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று கூறியவாறு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஃமின்களை ஏளனம் செய்து கேளி செய்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் திருக்குர்ஆனின் பார்வையில் அநியாயக்காரர்களாகும்.
அறிந்து கொள்ளுங்கள். உன்மையான அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் ஈமானில் உறுதியாக இருக்கக்கூடிய சத்திய ஸஹாபாக்கள், தாபீன்கள், இமாம்கள், நல்லடியார்கள் அனைவரும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஷைத்தான் தீன்டியதாக இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அனைத்தையும் உண்மை பித்துள்ளார்களே தவிர எவர்களும் பொய் பிக்கவில்லை. உன்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதரை பின்பற்றவில்லை. அதற்கு மாற்றமாக சூனியம் செய்தும் அந்த சூனியத்திலிருந்து ஏக இறைவனால் பாதுகாக்கப்பட்ட மாமனிதர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே நாங்கள் பின்பற்றுகிறோம் என்பதை ஆணித்தனமாகவும் தெட்ட தெளிவகவும் வழிதவறியோர்களைப் பார்த்து கூறிக்கொள்வதில் நாம் பெருமை படுகிறோம்.
Facebook :- யா சைஹு யா ரிபாயி
Facebook pages manager :- அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்