நபி முஹம்மத் ﷺ அவர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று திருக்குர்ஆன் கூறுகிறதா?
நபி முஹம்மத் ﷺ அவர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று திருக்குர்ஆன் கூறுகிறதா?
நூல் 📚 :- திருக்குர்ஆனுடைய பார்வையில் சூனியமும் சூனியத்தால் பாதிக்கப்பட்டோர்களும்.
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
نَحْنُ اَعْلَمُ بِمَا يَسْتَمِعُوْنَ بِهٖۤ اِذْ يَسْتَمِعُوْنَ اِلَيْكَ وَاِذْ هُمْ نَجْوٰٓى اِذْ يَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا
குர்ஆன் கூறுகிறது (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட (சூனியக்கார) ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
சூரா பனி இஸ்ராயில் ஆயத் 47
اَوْ يُلْقٰٓى اِلَيْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ يَّاْكُلُ مِنْهَا وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا
குர்ஆன் கூறுகிறது அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) சூனியம் செய்யப்பட்ட (சூனியக்கார) ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்.
சூரா புர்கான் ஆயத் 8
மேற்கூறிய இறைவசனங்களில் (மஸ்ஹூர்) என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அநியாயக்காரர்கள் (மஸ்ஹூர்) என்ற வார்த்தையை “சூனியம் செய்யப்பட்டவர் அல்லது (சூனியத்தால் புத்திமாறி அதில் தேர்ச்சி பெற்ற) சூனியக்கார் என்ற அர்த்தத்தின் அடிப்படையில் தான் பயன் படுத்தியுள்ளார்கள். காரணம் இது போன்ற ஓர் வார்த்தையை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விடயத்திலும் பயன் படுத்தப்பட்டுள்ளது.
وَلَقَدْ اٰتَيْنَا مُوْسٰى تِسْعَ اٰيٰتٍ بَيِّنٰتٍ فَسْــٴَــلْ بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ اِذْ جَآءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّىْ لَاَظُنُّكَ يٰمُوْسٰى مَسْحُوْرًا
குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (நபியே! இதைப்பற்றி) நீங்கள் இஸ்ராயீலின் சந்ததிகளைக் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். (மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி மூஸாவே! நிச்சயமாக நீங்கள் சூனியத்தால் புத்தி மாறி (அதில் தேர்ச்சி பெற்ற சூனியக்கார்) என நான் உங்களை எண்ணுகிறேன்” என்று கூறினான்.
சூரா பனீ இஸ்ராயீல் ஆயத் 101
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒன்பது அத்தாட்சிகளை அற்புதங்களை காட்டிய போது ஃபிர்அவ்ன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி (மஸ்ஹூர்) என்ற வார்த்தையை பயன் படுத்தியதன் நோக்கம் சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்தில் அவன் கூறவில்லை. அதற்கு மாற்றமாக (சூனியத்தால் புத்திமாரி அதில் தேர்ச்சி பெற்ற) சூனியக்கார் என்ற அர்த்தத்தின் அடிப்படையில் தான் (மஸ்ஹூர்) என்ற வார்த்தையை ஃபிர்அவ்ன் கூறியுள்ளதை நம்மால் காண முடிகிறது.
உதாரணமாக
புஹாரா என்ற ஊரைச் சேர்ந்தவரை (இமாம்) புஹாரி என்று அழைப்பது போல, திர்மித் என்ற ஊரைச் சேர்ந்தவரை (இமாம்) திர்மிதி என்று அழைப்பது போல, நஸா என்ற ஊரைச் சேர்ந்தவரை (இமாம்) நஸாயி என்று அழைப்பது போல, தாரமீ கூட்டத்தை சேர்ந்தவரை (இமாம்) தாரமீ என்று அழைப்பது போல, ஹாகிம் அதாவது நீதிபதியாக கடமை புரிந்ததவரை (இமாம்) ஹாகிம் (நீதிபதி) என்று அழைப்பது போல, சூனியம் செய்யப்பட்டவரை சூனியக்காரர் என்பதாகவும் அழைக்கலாம். இங்கு குறிப்பிட்டுக்கூறிய இமாம்கள் அனைவரும் பல ஹதீஸ்களை தொகுத்தது மட்டுமல்லாமல் அவைகளை நூல் வடிவில் வடிவமைத்து தந்தவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இன்னும் சில உதாரணங்கள்
சிங்கம் போன்ற வீரமுடையவர்களை சிங்கம் என்றோ வீரசிங்கம் என்றோ அழைப்பதில் எவ்வித குற்றமில்லை காரணம் சிங்கம் போன்ற வீரமுடைய ஹம்ஷா அலி ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் வாழ்ந்த காலத்தில் (அஸதுல்லாஹ்) அல்லாஹ்வின் சிங்கம் என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும் மறைக்கப்பட்ட திறையை மறைக்கும் திறை என்று அழைப்பது போல, குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று அழைப்பது போல, பட்டம் கொடுக்கப்பட்ட வரை பட்டதாரி என்று அழைப்பது போல, சூனியம் செய்யப்பட்டவரை சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த அரேபியர்கள் அழைத்திருக்கக்கூடும்.
وقوله مستورا ساترا فهو من اطلاق اسم المفعول وارادة اسم الفاعل كميمون بمعنى يامن ومشئوم بمعنى شائم. تفسير الوسيط لسيد طنطاوي
செய்யப்பட்டவன் என்ற வார்த்தையை, செய்பவன் என்ற அர்த்தத்தில் தாராளமாக பயன்படுத்தப்படலாம் (அதில் குற்றமில்லை) என்ற கருத்துக்களை தப்ஸீர் நூல்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
(மஸ்ஹூர்) என்ற வார்த்தைக்கு சூனியம் செய்யப்பட்டவர் என்ற நேரடிப் பொருள் இருந்தாலும் இது போன்ற இடங்களில் (மஸ்ஹூர்) என்ற வார்த்தைக்கு (சூனியத்தால் புத்திமாறி அதில் தேர்ச்சி பெற்ற) சூனியக்கார் என்ற பொருளையும் எடுத்து கொள்ள முடியும். இதனால் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய விடயத்திலும் அநியாயக்காரர்களால் (மஸ்ஹூர்) என்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. (மஸ்ஹூர்) என்ற வார்த்தையை சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. அதற்கு மாற்றமாக (சூனியத்தால் புத்திமாறி அதில் தேர்ச்சி பெற்ற) சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் கூறியுள்ளார்கள். காரணம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களுக்கு சூனியம் செய்து அதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டதெல்லாம் மதினமா நகரில் அவர்கள் இருக்கும் போதுதான். ஆனால் அதற்கு முன்னர் மக்கா நகரில் இருக்கும் போது மேற்கூறிய இறைவசனம் இறைவனால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்டு விட்டது.
இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரில் இருந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எவரும் சூனியம் செய்யவுமில்லை, அதன் மூலம் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவுமில்லை. எனவே அநியாயக்காரர்கள் (மஸ்ஹூர்) என்ற வார்த்தையை சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்தில் கூறவில்லை, அதற்கு மாற்றமாக ஃபிர்அவ்ன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பார்த்து கூறியது போல. அதாவது (சூனியத்தால் புத்திமாறி அதில் தேர்ச்சி பெற்ற) சூனியக்காரர் என்ற அர்த்தத்தின் அடிப்படையில் தான் (மஸ்ஹூர்) என்ற வார்த்தையை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடயத்தில் அநியாயக்காரர்கள் கூறி இருக்கக்கூடும். காரணம்
ﺍَﻛَﺎﻥَ ﻟِﻠﻨَّﺎﺱِ ﻋَﺠَﺒًﺎ ﺍَﻥْ ﺍَﻭْﺣَﻴْﻨَﺎۤ ﺍِﻟٰﻰ ﺭَﺟُﻞٍ ﻣِّﻨْﻬُﻢْ ﺍَﻥْ ﺍَﻧْﺬِﺭِ ﺍﻟﻨَّﺎﺱَ ﻭَﺑَﺸِّﺮِ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﺍٰﻣَﻨُﻮْۤﺍ ﺍَﻥَّ ﻟَﻬُﻢْ ﻗَﺪَﻡَ ﺻِﺪْﻕٍ ﻋِﻨْﺪَ ﺭَﺑِّﻬِﻢْؔؕ ﻗَﺎﻝَ ﺍﻟْﻜٰﻔِﺮُﻭْﻥَ ﺍِﻥَّ ﻫٰﺬَﺍ ﻟَﺴٰﺤِﺮٌ ﻣُّﺒِﻴْﻦٌ
குர்ஆன் கூறுகிறது
மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே என்று கூறுகின்றனர்.
சூரா யூனுஸ் ஆயத் 2
ﻛَﺬٰﻟِﻚَ ﻣَﺎۤ ﺍَﺗَﻰ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﻣِﻦْ ﻗَﺒْﻠِﻬِﻢْ ﻣِّﻦْ ﺭَّﺳُﻮْﻝٍ ﺍِﻟَّﺎ ﻗَﺎﻟُﻮْﺍ ﺳَﺎﺣِﺮٌ ﺍَﻭْ ﻣَﺠْﻨُﻮْﻥٌۚ
குர்ஆன் கூறுகிறது
இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
சூரா தாரியாத் ஆயத் 5
நபிமார்கள் ரஸூல்மார்கள் மக்கள் மத்தியில் அச்சம் ஊட்டி எச்சரிக்கை செய்யும் போதெல்லாம் காஃபிர்களால் (ஸாஹிர்) சூனியக்காரர் என்ற வார்த்தையை தான் அதிகம் பயன் படுத்தியுள்ளார்கள் இதன் விளக்கம் முன்னர் விரிவாக தரப்பட்டுள்ளது. அதே போண்று தான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய விடயத்திலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களுடைய விடயத்திலும் (மஸ்ஹூர்) என்ற வார்த்தையை (ஸாஹிர்) சூனியக்காரர் என்ற அர்த்தத்தின் அடிப்படையில் காஃபிர்களால் பயன் படுத்தப்பட்டுள்ளது.
இடை குறிப்பு :- (மஸ்ஹூர்) என்ற வார்த்தைக்கு (சூனியத்தால் புத்திமாறி அதில் தேர்ச்சி பெற்ற) சூனியக்காரர் என்ற அர்த்தம் வைத்தாலும் சூனியம் சம்பந்தமாக இடம்பெற்றுள்ள எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் மேற்கூறிய இறைவசனங்கள் எந்த விதத்திலும் முறன் கிடையாது.
குறிப்பு :- அன்று காஃபிர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதரை தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று கூறியவாறு முஃமின்களை ஏளனம் செய்து கேளி செய்து திருக்குர்ஆனை மறுத்து வந்தார்கள். அதே போண்று தான் இன்றைய காலகட்டத்திலுள்ள வழிதவறியோர்களும் சூனியம் செய்யப்பட்ட மனிதரை தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று கூறியவாறு அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஃமின்களை ஏளனம் செய்து கேளி செய்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் திருக்குர்ஆனின் பார்வையில் அநியாயக்காரர்களாகும்.
அறிந்து கொள்ளுங்கள். உன்மையான அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் ஈமானில் உறுதியாக இருக்கக்கூடிய சத்திய ஸஹாபாக்கள், தாபீன்கள், இமாம்கள், நல்லடியார்கள் அனைவரும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஷைத்தான் தீன்டியதாக இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அனைத்தையும் உண்மை பித்துள்ளார்களே தவிர எவர்களும் பொய் பிக்கவில்லை. உன்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர்கள் சூனியம் செய்யப்பட்ட மனிதரை பின்பற்றவில்லை. அதற்கு மாற்றமாக சூனியம் செய்தும் அந்த சூனியத்திலிருந்து ஏக இறைவனால் பாதுகாக்கப்பட்ட மாமனிதர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே நாங்கள் பின்பற்றுகிறோம் என்பதை ஆணித்தனமாகவும் தெட்ட தெளிவகவும் வழிதவறியோர்களைப் பார்த்து கூறிக்கொள்வதில் நாம் பெருமை படுகிறோம்.
Facebook :- யா சைஹு யா ரிபாயி
Facebook pages manager :- அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்