நபி முஹம்மத் ﷺ அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள்

89

நபி முஹம்மத் ﷺ அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ انْشَقَّ القَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شِقَّتَيْنِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْهَدُوا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3636 அஹ்மது 3583

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُمْ أَنَّ أَهْلَ مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرِيَهُمْ آيَةً فَأَرَاهُمُ انْشِقَاقَ القَمَرِ

 

மக்காவாசிகள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டினார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3637, 4867 முஸ்லிம் 2802 அஹ்மது 13154

 

عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ قَالَ أَبُو طَلْحَةَ لِأُمِّ سُلَيْمٍ لَقَدْ سَمِعْتُ صَوْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَعِيفًا أَعْرِفُ فِيهِ الْجُوعَ فَهَلْ عِنْدَكِ مِنْ شَيْءٍ؟ فَقَالَتْ نَعَمْ فَأَخْرَجَتْ أَقْرَاصًا مِنْ شَعِيرٍ ثُمَّ أَخَذَتْ خِمَارًا لَهَا فَلَفَّتِ الْخُبْزَ بِبَعْضِهِ ثُمَّ أَرْسَلَتْنِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَهَبْتُ فَوَجَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَمَعَهُ النَّاسُ فَقُمْتُ عَلَيْهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَكَ أَبُو طَلْحَةَ؟ فَقُلْتُ نَعَمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَنْ مَعَهُ قُومُوا فَانْطَلَقُوا وَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ حَتَّى جِئْتُ أَبَا طَلْحَةَ فَأَخْبَرْتُهُ فَقَالَ أَبُو طَلْحَةَ يَا أُمَّ سُلَيْمٍ قَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ وَلَيْسَ عِنْدَنَا مِنَ الطَّعَامِ مَا نُطْعِمُهُمْ فَقَالَتْ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَانْطَلَقَ أَبُو طَلْحَةَ حَتَّى لَقِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو طَلْحَةَ حَتَّى دَخَلَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلُمِّي يَا أُمَّ سُلَيْمٍ مَا عِنْدَكِ؟ فَأَتَتْ بِذَلِكَ الْخُبْزِ قَالَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ الْخُبْزِ فَفُتَّ وَعَصَرَتْ أُمُّ سُلَيْمٍ عُكَّةً لَهَا فَأَدَمَتْهُ ثُمَّ قَالَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ ثُمَّ قَالَ ائْذَنْ لِعَشَرَةٍ فَأَذِنَ لَهُمْ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ثُمَّ خَرَجُوا ثُمَّ قَالَ ائْذَنْ لِعَشَرَةٍ فَأَذِنَ لَهُمْ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ثُمَّ خَرَجُوا ثُمَّ قَالَ ائْذَنْ لِعَشَرَةٍ فَأَكَلَ الْقَوْمُ كُلُّهُمْ وَشَبِعُوا وَالْقَوْمُ سَبْعُونَ أَوْ ثَمَانُونَ رَجُلًا

 

அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (தம் துணைவியார்) உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம், ‘நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்) பசியையைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், ‘ஆம் (இருக்கிறது)’ என்று கூறிவிட்டு, வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியில் அந்த ரொட்டியைச் சுருட்டி (என்னிடம் கொடுத்து) என்னை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் (அதையெடுத்துக் கொண்டு) சென்றேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அன்னாருடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா? என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம்’ என்றேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடனிருந்தவர்களிடம், ‘எழுந்திருங்கள்!’ என்றார்கள். மக்கள் (எழுந்து) நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன்.
இறுதியில் அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விவரத்தைத் தெரிவித்தேன். உடனே அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (என் தாயாரிடம்) ‘உம்மு சுலைமே! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மக்களும் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேண்டிய உணவு நம்மிடம் இல்லையே!’ என்றார்கள். உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (தாமே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன் சென்று வரவேற்பதற்காக) நடந்து சென்று அவர்களைச் சந்தித்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடன் அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருக்க வீட்டுக்குள் நுழைந்தார்கள். பிறகு ‘உம்மு சுலைமே! உம்மிடம் இருப்பதைக் கொண்டு வா!’ என்று அவர்கள் சொன்னார்கள். உடனே உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி) உத்தரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது உம்மு சுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், தம்மிடமிருந்த தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைச் சொன்னார்கள்.
பிறகு, ‘பத்துப் பேருக்கு (உள்ளேவர) அனுமதியளியுங்கள்’ என்று (அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதியளித்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு ‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியளியுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்ப உண்டுவிட்டு வெளியேறினார்கள். பின்னர், இன்னும் பத்துப் பேருக்கு அனுமதியளியுங்கள் என்றார்கள். அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அனுமதியளித்தார்கள். (இவ்வாறு வந்திருந்த) மக்கள் அனைவரும் வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது என்பது பேர் ஆவர்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3578, 6688 திர்மிதி 3630

 

عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عَتِيكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ … فَانْكَسَرَتْ سَاقِي فَعَصَبْتُهَا بِعِمَامَةٍ…..فَانْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثْتُهُ فَقَالَ ابْسُطْ رِجْلَكَ فَبَسَطْتُ رِجْلِي فَمَسَحَهَا فَكَأَنَّهَا لَمْ أَشْتَكِهَا قَطُّ

 

அப்துல்லாஹ் இப்னு அத்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். என் கால் உடைந்து விட்டது. எனவே (எனது) தலைப்பாகையினால் அதைக் கட்டினேன். பின்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அதைக்கூறினேன். அதற்கவர்கள் உனது காலை நீட்டு! என்று கூறினார்கள். எனவே எனது காலை நீட்டினேன். அதை அவர்கள் தடவி விட்டார்கள். உடனே அதில் எந்த வலியையும் ஒரு போதும் நான் அடையாதவனை போன்றாகிவிட்டேன்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அதீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 4039

 

عَنْ يَزِيدُ بْنُ أَبِي عُبَيْد رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَأَيْتُ أَثَرَ ضَرْبَةٍ فِي سَاقِ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقُلْتُ يَا أَبَا مُسْلِمٍ مَا هَذِهِ الضَّرْبَةُ؟ فَقَالَ هَذِهِ ضَرْبَةٌ أَصَابَتْنِي يَوْمَ خَيْبَرَ فَقَالَ النَّاسُ أُصِيبَ سَلَمَةُ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَفَثَ فِيهِ ثَلاَثَ نَفَثَاتٍ فَمَا اشْتَكَيْتُهَا حَتَّى السَّاعَةِ

 

ஸலமத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலில் வெட்டுக்காயத்தின் அடையாளத்தை நான் கண்டேன். அபூ முஸ்லிம் அவர்களே! இது என்ன வெட்டுக்காயம்? என்று கேட்டேன். அதற்கவர்கள், இது கைபர் போர் தினத்தில் எனக்கு ஏற்பட்டது. அப்போது மக்கள் “ஸலமா (கடுமையாக) தாக்கப்பட்டு விட்டார்” எனக்கூறினார்கள். எனவே நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிலே மூன்று முறை ஊதி உமிழ்ந்தார்கள். பின்பு இப்பொழுது வரை அதில் எந்த வலியையும் நான் அடையவில்லை எனக்கூறினார்கள்

 

அறிவிப்பவர் :- யஸீத் இப்னு அபீஉபைத் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 4206 அபூ தாவூத் 3894 அஹ்மது 16514

 

فَقَالَ أَيْنَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَقَالُوا يَشْتَكِي عَيْنَيْهِ يَارَسُولَ اللهِ قَالَ فَأَرْسِلُوا إِلَيْهِ فَأْتُونِي بِهِ فَلَمَّا جَاءَ بَصَقَ فِي عَيْنَيْهِ وَدَعَا لَهُ فَبَرَأَ حَتَّى كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ فَأَعْطَاهُ

 

(இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அலி பின் அபீதாலிப் எங்கே? என்று கேட்டார்கள். மக்கள், “அவருக்குக் கண் வலி, யா ரஸுலல்லாஹ்! என்று கூறினார்கள். உடனே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தவுடன், அவர்களுடைய இரு கண்களிலும் “தம் உமிழ்நீரை” உமிழ்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குணமடைந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸஹ்ல் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3009, 3701 முஸ்லிம் 2406 அஹ்மது 22821

 

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ…. فَقَالَ بِاسْمِ اللَّهِ فَضَرَبَ ضَرْبَةً فَكَسَرَ ثُلُثَ الْحَجَرِ، وَقَالَ اللَّهُ أَكْبَرُ أُعْطِيتُ مَفَاتِيحَ الشَّامِ، وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ قُصُورَهَا الْحُمْرَ مِنْ مَكَانِي هَذَا ثُمَّ قَالَ بِاسْمِ اللَّهِ وَضَرَبَ أُخْرَى، فَكَسَرَ ثُلُثَ الْحَجَرِ، فَقَالَ اللَّهُ أَكْبَرُ أُعْطِيتُ مَفَاتِيحَ فَارِسَ، وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ الْمَدَائِنَ وَأُبْصِرُ قَصْرَهَا الْأَبْيَضَ مِنْ مَكَانِي هَذَا ثُمَّ قَالَ بِاسْمِ اللَّهِ وَضَرَبَ ضَرْبَةً أُخْرَى، فَقَلَعَ بَقِيَّةَ الْحَجَرِ، فَقَالَ اللَّهُ أَكْبَرُ أُعْطِيتُ مَفَاتِيحَ الْيَمَنِ وَاللَّهِ إِنِّي لَأُبْصِرُ أَبْوَابَ صَنْعَاءَ مِنْ مَكَانِي هَذَا

 

(முஸ்லீம்களை போர் மேகம் சூழ்ந்த காலம் அகழ்ப்போர்களம். குழி தோண்டிக் கொண்டிருந்தார்கள் ஸஹாபாக்கள்.அப்போது குறிக்கிட்டது ஒரு பாறை. அதை யாராலும் உடைக்க முடியாத போது நபித்தோழர்கள் நாயகத்திடம் முறையிட்டனர்.
சம்மட்டியை தாங்களே எடுத்து
பிஸ்மில்லாஹ் என்று கூறி ஒரு அடி அடித்தார்கள்.பாறையில் மூன்றில் ஒரு பாகம் உடைந்தது. அல்லாஹு அக்பர்.சிரியாவின் சாவிகள் எனக்கு தரப்பட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியம் நான் இங்கிருந்தே சிரியாவின் செந்நிற மாளிகைகளை காண்கிறேன்.என்றார்கள்.
பிஸ்மில்லாஹ் என்று கூறி இரண்டாவது ஒரு அடி அடித்தார்கள் பாறையில் இன்னொரு பகுதி உடைந்தது,அல்லாஹு அக்பர்.பாரசீக த்தின் சாவிகள் எனக்கு தரப்பட்டது, அல்லாஹ்வின் மீது ஆணை நான் இங்கிருந்தே பாரசீகத்தின் மதாயின் நகரத்தையும் அதன் வெள்ளை மாளிகையையும் காண்கிறேன்.
பிஸ்மில்லாஹ் என்று கூறி மூன்றாவது ஒரு அடி அடித்தபோது முழுபாறையும் உடைந்தது.அல்லாஹு அக்பர்.யமன் தேசத்தின் சாவிகள் எனக்கு தரப்பட்டது.அல்லாஹ்வின் மீது சத்தியம்.நான் இங்கிருந்தே யமனின் சன்ஆ நகரத்தின் வாசல்களை காண்கிறேன் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- பரா இப்னு ஆஸிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 18694

 

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ عَطِشَ النَّاسُ يَوْمَ الْحُدَيْبِيَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ فَتَوَضَّأَ مِنْهَا ثُمَّ أَقْبَلَ النَّاسُ نَحْوَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَكُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ لَيْسَ عِنْدَنَا مَاءٌ نَتَوَضَّأُ بِهِ وَلَا نَشْرَبُ إِلَّا مَافِي رَكْوَتِكَ قَالَ فَوَضَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فِي الرَّكْوَةِ فَجَعَلَ الْمَاءُ يَفُورُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ كَأَمْثَالِ الْعُيُونِ قَالَ فَشَرِبْنَا وَتَوَضَّأْنَا فَقُلْتُ لِجَابِرٍ كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ قَالَ لَوْ كُنَّا مِائَةَ أَلْفٍ لَكَفَانَا كُنَّا خَمْسَ عَشْرَةَ مِائَةً

 

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) அவர்கள் உளூச் செய்தார்கள். மக்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். அச்சமயம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உங்களுக்கென்ன ஆயிற்று?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் உளூச் செய்வதற்கும் குடிப்பதற்கு வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை” என்று பதிலளித்தனர். உடனே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கையைத் தோல் குவளையினுள் வைத்தார்கள். உடனே, அவர்களின் விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத் தொடங்கியது. நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) அருந்தினோம்; மேலும் உளூச் செய்தோம். அறிவிப்பாளர் சாலிம் இப்னு அபில் ஜஅத் ரஹ்மத்துல்லாஹ் கூறினார்:
நான் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ‘நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர் தாம் இருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3576, 4152

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَخْطُبُ إِلَى جِذْعِ نَخْلَةٍ، فَلَمَّا اتَّخَذَ الْمِنْبَرَ تَحَوَّلَ إِلَى الْمِنْبَرِ، فَحَنَّ الْجِذْعُ حَتَّى أَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاحْتَضَنَهُ، فَسَكَنَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ لَمْ أَحْتَضِنْهُ لَحَنَّ إِلَى يَوْمِ الْقِيَامَة

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு பேரீத்த மரக் கட்டை மீது நின்று ஜும்ஆ பிரசங்கம் செய்து வந்தார்கள். எப்பொழுது மிம்பரை தயார் செய்தார்களோ அதில் ஏறி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குத்பா கொடுக்க பேரீத்த மரக் கட்டை (மாநபியின் மீதுள்ள பாசத்தால்) சிணுங்கியது. அச்சமயம் அவர்கள் இறங்கி வந்து அதை கட்டி அணைத்ததும் அது அமைதியுற்றது. நான் மட்டும் அதை கட்டி அணைக்க வில்லையென்றால் கியாமத் வரை அது குழந்தை போல் சிணுங்கிக் கொண்டே இருக்கும் எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1415, 1417 அஹ்மது 2236, 3430

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.