நபி முஹம்மத் ﷺ அவர்கள் பிறந்த தினத்தில் ஈத் மீலாத் என்று கூறலாமா?

288

நபி முஹம்மத் ﷺ அவர்கள் பிறந்த தினத்தில் ஈத் மீலாத் என்று கூறலாமா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

ஈத் என்ற சொல்லுக்கு பெருநாள் என்பதாக பொருள் கொள்ளப்படும். ஈத் என்ற சொல் நோன்பு பெருநாள் ஹஜ்ஜிப் பெருநாள் இவ்விரண்டு திணத்தை மட்டுமே குறிக்கும் என்பதாக சில மடயர்கள் வாதிடுவதை நம்மால் காணமுடிகிறது. இது போன்ற வாதங்கள் முற்றிலும் தவறானவை. காரணம் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒவ்வொரு விடயங்களுக்கும் ஈத் பெருநாள் என்று பொதுப்படையாக கூறப்படும்.

 

قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا

 

குர்ஆன் கூறுகிறது மர்யமுடைய மகன் ஈஸா கூறினார் எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும்.

சூரா மாயிதா ஆயத் 114

 

இறைவா! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும், முன் பின் வருபவர்களுக்கும் அது மகிழ்ச்சியை தரக்கூடிய நாள் அதாவது ஈத் பெருநாள் என்ற வார்த்தையை நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியுள்ளதை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ يَوْمَ الْجُمُعَةِ يَوْمُ عِيدٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். நிச்சயமாக ஜும்மாவுடைய நாள் பெருநாள் ஆகும்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மத் 8025, 10890

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ جَعَلَهُ اللَّهُ لِلْمُسْلِمِينَ فَمَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக (வெள்ளிக்கிழமை ஜும்மா நாள்) முஸ்லிம்கள் மீது அல்லாஹ் விதித்துள்ள ஒரு ஈத் பெருநாளாகும். மேலும் ஜும்ஆ தொழுகைக்கு வருபவர் குளித்து கொள்ளட்டும்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1089

 

வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாளை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈத் என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார்கள். ஈத் என்பது பெருநாள் அதாவது மகிழ்ச்சி தரக்கூடிய நாள் என்ற கருத்தை ஹதீஸ்களை கொண்டு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً سَيَّاحِينَ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلاَمَ قَالَ وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيَاتِي خَيْرٌ لَكُمْ تُحَدِّثُونَ وَنُحَدِّثُ لَكُمْ، وَوَفَاتِي خَيْرٌ لَكُمْ تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ، فَمَا رَأَيْتُ مِنَ خَيْرٍ حَمِدْتُ اللَّهَ عَلَيْهِ، وَمَا رَأَيْتُ مِنَ شَرٍّ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என் மீது உம்மத்தினர்கள் கூரும் ஸலாம் மலக்குகள் மூலம் எனக்கு எத்திவைக்கப்படுகிறது. மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எனது வாழ்வு உங்களுக்கு நன்மையே. நீங்கள் உரையாடு இருக்கிறீர்கள். நானும் உங்களுடன் உரையாடுகிறேன். எனது மரணமும் உங்களுக்கு நன்மையே. உங்கள் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. அதில் நன்மையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். தீமையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பஸ்ஸார் 1925

 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حَيَاتِي خَيْرٌ لَكُمْ، وَمَمَاتِي خَيْرٌ لَكُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனது ஹயாத்தும் உங்களுக்கு சிறந்தது இன்னும் எனது மரணமும் உங்களுக்கு சிறந்தது அதாவது (நான் பிறந்த நாளும் நான் மறைந்த நாளும் உங்களுக்கு சிறந்த மகிழ்ச்சி தரக்கூடிய நாளாகும்.)

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஜாமி அல் முஸ்னத் அஸ் ஸஹீஹ் 224

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் மறைந்த நாள் இவ்விரு நாட்களும் முஸ்லிம்கள் முஃமின்களுக்கு சிறந்த நாட்களாகும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் முஃமின்களுக்கு மகிழ்ச்சியை அதிகம் அதிகம் வெளிப்படுத்தும் நாளாகும். அந்த நாளை ஈத் பெருநாள் என்று பேச்சு வழக்கில் பொதுவாக கூறுவது ஷரியத்துக்கு முறன் கிடையாது என்ற கருத்தை திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.