நபி முஹம்மத் ﷺ அவர்கள் பிறப்பதற்கு முன்பே அவர்களை பற்றி அறிந்து வைத்திருந்த வேதக்கார்கள்

321

நபி முஹம்மத் ﷺ அவர்கள் பிறப்பதற்கு முன்பே அவர்களை பற்றி அறிந்து வைத்திருந்த வேதக்கார்கள்

 

اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ وَاِنَّ فَرِيْقًا مِّنْهُمْ لَيَكْتُمُوْنَ الْحَـقَّ وَهُمْ يَعْلَمُوْنَؔ‏

 

குர்ஆன் கூறுகிறது எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த மக்காவின் திசையளவில் நீங்கள் திரும்பித் தொழுவீரென்ப)தை அறிவார்கள். ஆனால், அதிலொரு பிரிவினர் நிச்சயமாக நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்.

சூரா பகரா ஆயத் 146

 

ஒரு தந்தை தன் பிள்ளையை நன்கு அறிவதைப்போல வேதக்காரர்கள் அனைவரும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள் என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.

 

أن اليهود من قبل مبعث محمد عليه السلام ونزول القرآن كانوا يستفتحون أي يسألون الفتح والنصرة وكانوا يقولون اللهم افتح علينا وانصرنا بالنبي الأمي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பதற்கு முன்பே அவர்களை பற்றி யூதர்கள் அறிந்து வைத்திருந்தனர். மேலும் யுத்தங்களில் வெற்றிபெற இறைவனிடம் (உம்மி நபி) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன் வைத்தே உதவி தேடி வந்தனர். (பின்னர் அவர்களை மறுத்து விட்டார்கள்). இது சம்பந்தமாக

 

சூரா பகரா ஆயத் 89 இறங்கியது. விளக்கவுரை” தப்ஸீர் ராஸி 3/180

 

عن عبد الله بن سلام قال مكتوب في التوراة صفة محمد وصفة عيسى ابن مريم يدفن معه قال فقال أبو مودود وقد بقي في البيت موضع قبر

 

தவ்ராத்தில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வர்ணனையும் நபி ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்ற அவர்களது வர்ணனையும் எழுதப்பட்டுள்ளது. மேலும் அபூ மவ்தூது கூறுகிறார். (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடங்கியுள்ள ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களது) வீட்டில் ஒரு கப்ரின் இடமும் (ஒதுக்கப்பட்டுள்)ளது.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3617

 

عن عامر بن ربيعة قال سمعت زيد بن عمرو بن نفيل يقول أنا أنتظر نبياً من ولد إسماعيل ثم من بني عبد المطلب قال هو رجل ليس بالطويل ولا بالقصير ولا بكثير الشهر ولا بقليله وخاتم النبوّة بين كتفيه واسمه أحمد

 

நான் ஒரு நபியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் இஸ்மாயிலின் சந்ததியில் தோன்றும் நபி. அவர் அப்துல் முத்தலிபின் பிள்ளைகளில் நின்றும் உள்ளவர். அவர் ஆக நெட்டையுமில்லை; ஆக குட்டையுமில்லை. முடி மிக அதிகமானவருமில்லை; முடி மிக குறைந்தவருமில்லை. அவரது இரண்டு புஜங்களுக்கு இடையில் நபித்துவ முத்திரை இருக்கும். அவர் பெயர் அஹ்மத்” (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) என்று அழைக்கப்படுவார்.

 

அறிவிப்பவர் :- ஸைத் இப்னு அம்ரு இப்னு நுஃபைல் என்பவர் ஆமிரிப்னு ரபீஆவிடம் ஒரு முறை இவ்வாறு கூறினார். ஆதாரம் இப்னு ஸயீத்” தபகாத் 1/1

 

عن ابن عباس رضي الله عنه قال قال عبد المطلب قدمت اليمن في رحلة الشتاء فنزلت على حبر من اليهود فقال يا عبد المطلب أشهد أن في إحدى يديك ملكا وفي الأخرى نبوة وأرى ذلكفي بني زهرة ، فكيف ذلك ؟ فقلت لا أدري قال هل لك من شاعة؟ قال زوجة قلت أما اليوم فلا قال إذا قدمت فتزوج فيهن فرجع عبد المطلب إلى مكة فتزوج هالة بنت وهب بن عبد مناف “””” وتزوج عبد الله بن عبد المطلب آمنة بنت وهب ، فولدت رسول الله صلى الله عليه وسلم

 

நான் எமனில் தங்கிருந்போது ஒரு வேதப் பண்டிதர் என் உடல் அமைப்பை ஆராய்ந்து விட்டு, “அப்துல் முத்தலிபே! உமது ஒரு கையில் அரசாட்சியையும் மறுகையில் நபித்துவத்தையும் நான் காண்கிறேன். அது பனூ ஸஹ்ரா குடும்பத்திலிருந்து ஏற்படலாம் என்று கருதுகிறேன்” என்றார். “அது எப்படி?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அது “எப்படி என்று தெரியாது. ஆனால் இது நடக்கும். உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
“தற்போது இல்லை. “அப்படியானால் நீர் ஊர் திரும்பியதும் அந்தக் குடுபத்தில் ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ளும்.”
அப்துல் முத்தலிப் மக்கா திரும்பி ஹாலா பின்த் வஹ்ப் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்கள். (அவர்களின் மகன் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் திருமணம் செய்தது ஆமினா பின்த் வஹ்ப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களை ( அவர்கள் பனூ ஸஹ்ரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.) அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை கூறினார். ஆதாரம் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹ் 2/601

 

عن حسان بن ثابت رضي الله عنه قال إني لغلام يفعة ابن سبع سنين أو ثمان أعقل كل ما رأيت وسمعت إذا يهودي بيثرب يصرخ ذات غداة يا معشر يهود فاجتمعوا إليه وأنا أسمع قالوا ويلك ما لك؟ قال طلع نجم أحمد الذي ولد به في هذه الليلة

 

ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நான் ஏழு எட்டு வயது சிறுவனாக சொல்வதைப் புரிந்து கொள்ளக்கூடிய பருவத்தில் இருக்கும் போது ஒருநாள் ஒரு யூதன் யத்ரிபின் (மதீனாவின்) வீதியில் நின்று கத்தினான் ‘ஓ யூதர்களே! என்ன ஆயிற்று உனக்கு? (ஏன் இப்படி கத்துகிறாய்?) என்று மற்ற யூதர்கள் ஒன்று கூடி கேட்ட போது” இந்த இரவில் பிறக்கும் அஹ்மத் (என்ற பெயருடைய குழந்தைக்கான) வின்மீண்கள் நட்சத்திரங்கள் வானில் தோன்றிவிட்டது என்று கூறினார்.

 

அறிவிப்பவர் :- ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி” தாலாயிலுன் நுப்வா 1/78 கன்சுல் உம்மால் 6/301

 

كان يهودي قد سكن مكة فلما كانت الليلة التي ولد فيها النبي صلى الله عليه وسلم قال يا معشر قريش هل ولد فيكم الليلة مولود؟ قالوا لا نعلم قال فإنه ولد في هذه الليلة نبي هذه الأمة بين كتفيه علامة لا يرضع ليلتين لأن عفريتا من الجن وضع يده على فمه فانصرفوا فسألوا فقيل لهم قد ولد لعبد الله بن عبد المطلب غلام فذهب اليهودي معهم إلى أمه فأخرجته لهم فلما رأى اليهودي العلامة خر مغشيا عليه وقال ذهبت النبوة من بني إسرائيل يا معشر قريش أما والله ليسطون بكم سطوة يخرج خبرها من المشرق والمغرب

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த அன்று” மக்காவில் வாழ்ந்த ஒரு யூதன் , இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த அன்றிரவு குறைஷிகளின் கூட்டத்தில் வந்து இன்றிரவு உங்களில் யாருக்காவது ஒரு குழந்தை பிறந்துள்ளதா? என்று கேட்க, அல்லாஹ்வின் மீது ஆணையாக அப்படி ஒன்றும் நாங்கள் அறியவில்லையே! என்றார்கள் குறைஷிகள். அச்சமயம் அவன் கூறினான். நான் கூறுவதை நன்றாகக் கவனியுங்கள். இன்றிரவு உங்களில் ஒரு நபி பிறந்துள்ளார். அவரின் இரு புஜங்களுக்கிடையில் ஒரு அடையாளம் இருக்கும். அதில் சில ரோமங்கள் இருக்கும்.
இதைக்கேட்டு அவர்கள் ஆச்சரியத்துடன் கலைந்து சென்றனர். தங்கள் வீடு சென்று மனைவிமார்களிடம் இதுபற்றி விசாரித்த போது அப்துல்லாஹ்விற்கு ஒரு ஆண்குழந்தை பிறந்திருப்பதாகவும் முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த யூதனிடம் தெரிவிக்கப்பட்டபோது அவன் வந்து பார்த்தான். அந்த குழந்தையின் முதுகில் நபித்துவ முத்திரையின் அடையாளம் இருப்பதைக் கண்டு மயக்கம்போட்டு விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்து கூறினான்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபித்துவம் பனூ இஸ்ரவேலர்களிடமிருந்து எடுபட்டுவிட்டது. குறைஷிகளே! உங்களுக்கு ஒரு மகத்தான ஆட்சி அதிகாரம் கிடைக்கப்போகிறது; அந்த செய்தி கிழக்கிலிருந்து மேற்குவரை பரவப் போகிறது.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் ஹாகிம், பைஹகி” தலாயிலுன் நுப்வா 1/78

 

فإنه خاتم النبيين فقالوا ما اسمه؟ فقال محمد فلما انصرفوا من عنده ولد لكل واحد منهم غلاما فسماه محمد

 

(சிரியாவில் ஒரு துறவியை சந்தித்து சில அரபுகள் பேசிக்கொண்டிருந்தபோது ”உங்கள் குலத்திலிருந்துதான்) நிச்சயமாக இறுதி நபி வருவார்; அவர் பெயர் முஹம்மது. (அவரைப் பின்பற்றினால் வெற்றி பெறுவீர்கள்)’ என்று அவர் சொன்னதைக் கேட்டு நாடு திரும்பிய அவர்கள் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைகளுக்கெல்லாம் ”முஹம்மது” என்று பெயர் வைத்தனர்.

 

ஆதாரம் தபரானி” முஃஜம் அல் கபீர் 273

 

குறிப்பு :- நபி முஹம்மத் ﷺ அவர்கள் பிறப்பதற்கு முன்பு முஹம்மத் என்ற பெயர் இவ்வுலகில் எந்த மனிதர்களுக்கும் வைக்கப்பட வில்லை என்ற கருத்தை தரும் வரலாற்று செய்திகளை அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்கள் சில சமயங்களில் பேசி உள்ளனர். அதன் வரலாற்று செய்திகள் நம் கைவசம் கிடைக்கப் பெறவில்லை. அல்ஹம்துலில்லாஹ்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.