நபி முஹம்மத் ﷺ அவர்கள் மீது நேசம் வையுங்கள்

65

நபி முஹம்மத் ﷺ அவர்கள் மீது நேசம் வையுங்கள்

 

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ‏

 

(நபியே!) நீர் கூறிவிடுவீராக: “உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம் மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை.

 

சூரா தவ்பா ஆயத் 24

 

♦️இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்குப் பிரியமான அனைத்தையும் விட அல்லாஹ்வும், அவனது தூதரும் மேலாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தன்னுடைய வேதனையை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

 

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

 

குர்ஆன் கூறுகிறது (நம்பிக்கையாளர்களே! நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார்.

 

சூரா தவ்பா ஆயத் 128

 

النَّبِيُّ أَوْلَى بِالمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ

 

குர்ஆன் கூறுகிறது திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட இந்த நபி தான் மிக்க மேலானவர்களாக இருக்கிறார்கள்.

 

சூரா அஹ்ஜாப் ஆயத் 6

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ‘தன் தந்தை, பிள்ளை மற்றும் ஏனைய அனைத்து மக்களை விடவும் நான் நேசத்துக்குரியவனாக ஆகாத வரை உங்களில் எவரும் இறை நம்பிக்கையுடையவராக ஆக முடியாது.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 15, முஸ்லிம் 44 இப்னு மாஜா 67 அஹ்மது 12814

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّار

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவர் ஆவார். (அவை) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்ற எதையும் விட அதிக நேசத்திற்கு உரியவர்களாக ஆவது. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக் காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திருப்பிச் செல்வதை வெறுப்பதாகும்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 16, 21, 6941 முஸ்லிம் 43 திர்மிதி 2624

 

قَالَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَا رَسُولَ اللهِ أَنتَ أَحَبُّ إِلَيَّ مِن كُلِّ شَيءٍ إِلاَّ نَفسِي فَقَال رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمِن نَفسِكَ يَا عُمَرُ قَالَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَمِن نَفسِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الآنَ يَا عُمَرُ

 

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் என்னுடைய உயிரை தவிர மற்ற எல்லா வஸ்துக்களை விடவும் மிகப் பிரியமானவர் என்றார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இல்லை உன் உயிரை விடவும் உன்னிடம் நான் பிரியமாக வேண்டும் என்றார்கள். அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் இப்போது நீங்கள் என் உயிரை விடவும் எனக்கு பிரியமாகி விட்டீர்கள். அதற்கு (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “இப்போது தான் உமரே! (நீங்கள் உண்மையான நேசம் கொண்டிருக்கிறீர்கள்) என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6632 அஹ்மது 18047, 18961

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ؟ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا؟ قَالَ لاَ شَيْءَ إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْت

 

ஒரு மனிதர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, “மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதற்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கின்றாய்? என்று கேட்டார்கள். அம்மனிதர், “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நான் நேசிக்கின்றேன் என்பதைத் தவிர எதுவுமில்லை” என்று பதிலளித்தார். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் தான் நீ (மறுமையில்) இருப்பாய்” என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3683, 6167 முஸ்லிம் 2639 அபூதாவூத் 5127 திர்மிதி 2385

 

குறிப்பு :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பது (வாஜிபாகும்) கட்டாயமாகும். மேலும் அவர்களை நேசிப்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். யார் தன் பிள்ளை பெற்றோர் மற்றும் எல்லா மனிதர்களை விடவும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்க வில்லையோ அவர் உண்மையான முஃமினாக முடியாது. நம்மையும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் உயிரை விட நேசித்த கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவானாக. ஆமீன்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.