நபி முஹம்மத் ﷺ அவர்கள் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் தொழுதார்களா?

63

நபி முஹம்மத் ﷺ அவர்கள் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் தொழுதார்களா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ : أَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ عَنِ الْحَكَمِ عَنْ مِقْسَمٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ” أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ

 

رواه ابن أبي شيبة في ” المصنف ” 2/ 164 ، وعبد بن حميد كما في ” المنتخب ” 653 والطبراني في ” المعجم الكبير ” 11/ 393، و” المعجم الأوسط ” 1/ 243، والبيهقي في ” السنن الكبرى ” 2/ 698.حديث صحيح [تہذیب الکمال 1/ 393، تهذیب التهذیب : 1/ 145]

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதத்தில் இருபது ரக்அத்துகளும் இன்னும் வித்ரும் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸன்னப் இப்னு அபீஷைபா 2/286

 

قلت :- يصلي في رمضان في غير جماعة عشرين ركعة والوتر

عن ابن عباس قال أخرجه ابن أبي شيبة في ” المصنف ” 2 / 290 وعبد بن حميد في ” المنتخب من المسند ” 73 / 1 – 2 والطبراني في ” الكبير ” 3 / 148

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் இரவுகளில் ஜமாத் அல்லாமல் இருபது ரக்அத்துகளும் இன்னும் வித்ரும் தொழக் கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸன்னப் இப்னு அபீஷைபா 2 / 290

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதத்தில் இருபது ரக்அத்துகள் தொழக் கூடியவர்களாக இருந்தார்கள் என்ற ஹதீஸின் அறிவிப்பு தொடரில் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் மிக்ஸம் என்பவர் அறிவிக்கிறார்கள் அவர்களை தொட்டும் ஹகம் என்பவர் அறிவிக்கிறார்கள் அவர்களை தொட்டும் அபூ ஷைபஷி இப்ராஹிம் இப்னு உஸ்மான் என்பவர் அறிவிப்பு செய்கிறார்கள்.

 

ஆரம்பமாக கூறப்பட்ட மிக்ஸம் ஹகம் என்ற இருவரும் நேர்மையானவர்கள் குறைகூறப் பெறாதவர்கள் ஆனால் அபூ ஷைபஷி இப்ராஹிம் இப்னு உஸ்மான் என்பவர் மாத்திரம் குறை கூறப்பட்டவர் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

எனவே மேற்கூறப்பட்ட ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவர் மாத்திரம் குறைகூறப்பட்டவராக இருப்பதால் அந்த ஹதீஸினுடைய பலயீனமாகும் அவருடைய குறையும் கடினமாக வில்லை காரணம் அவர்களை சிலர்கள் சரி கண்டும் உள்ளனர் அதை அடுத்து மேற்கூறப்பட்ட ஹதீஸுக்கு நேர் மாற்றமாக வேரு எந்த ஒரு அறிவிப்புக்களும் இடம் பெறவில்லை மேலும் அந்த ஹதீஸை வழுப்படுத்தக்கூடிய நேர்படக்கூடிய பல ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்று இருப்பதாலும் (மேற்கூப்பட்ட ஹதீஸ்களையும்) இது போன்ற காரணத்துக்குரிய வேறுவிதமாக அறிவிப்பு செய்யப்பட்ட ஹதீஸ்களையும் ஆதாரமாக எடுத்து கொள்ளலாம் என்பதாக இமாம் அபூ தாவூத் ரஹ்மத்துல்லாஹ் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹ் இமாம் தஹபி ரஹ்மத்துல்லாஹ் இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் இமாம் அப்துல் பர்ரு ரஹ்மத்துல்லாஹ் இன்னும் இது போன்றவர்கள் தெளிவான முறையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

குறிப்பு :- ஒருவர் மட்டுமே குறைகூறப்பட்டிருப்பதாலும் அந்த குறை கடினமாக வில்லை என்பதாலும் அடுத்த அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் நேர்மையானவர்கள் என்பதாலும் அந்த ஹதீஸில் கூறப்பட்ட விடயம் ஸஹீஹ் ஆதாரப்பூர்வமான செய்தியாக இருப்பதாலும் இவ்வாறான விடயங்களை முக்கிய காரணமாக வைத்து ஹதீஸ் கலை அறிஞர்கள் இமாம்கள் மேற்கூறப்பட்ட ஹதீஸை ஆதாரமாக எடுத்து கொள்ளளாம் என்றும் அதனை மூலாதாரமாக வைத்து அமல் செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

ஆதாரம் தஹ்தீபுல் கமால் 1/ 393 தஹ்ரிப் தஹ்ரிப் 1/ 145

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.