நல்லோர்களின் கை கால்களை முத்தமிடுதல்

316

நல்லோர்களின் கை கால்களை முத்தமிடுதல்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

ﻋَﻦْ ﺯَﺍﺭِﻉٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ﻛَﺎﻥَ ﻓِﻲ ﻭَﻓْﺪِ ﻋَﺒْﺪِ ﺍﻟْﻘَﻴْﺲِ ﻗَﺎﻝَ ﻟَﻤَّﺎ ﻗَﺪِﻣْﻨَﺎ ﺍﻟْﻤَﺪِﻳﻨَﺔَ ﻓَﺠَﻌَﻠْﻨَﺎ ﻧَﺘَﺒَﺎﺩَﺭُ ﻣِﻦْ ﺭَﻭَﺍﺣِﻠِﻨَﺎ ﻓَﻨُﻘَﺒِّﻞُ ﻳَﺪَ ﺍﻟﻨَّﺒِﻲِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﻭَﺭِﺟْﻠَﻪُ

 

அப்துல் கைஸ் தூது குழுவினர் கூறினார்கள். நாம் மதீனாவுக்கு வந்த போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கை மற்றும் கால் பாதத்தை எங்களில் யார் முதலில் முத்தமிடுவது என்பதற்காக ஓடுவோம்.

 

அறிவிப்பவர் :- ஸாரிவு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 5225 அஹ்மது 24009

 

ﻋَﻦْ صَفْوَانَ بنِ عَسّالٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ قالَ يَهُودِيٌ لِصَاحِبِهِ اذْهَبْ بِنَا إِلَى هَذَا النّبيّ فَقَالَ صَاحِبُهُ لاَ تَقُلْ نَبيٌ إِنّهُ لَوْ سَمِعَكَ كَانَ لَهُ أَرْبَعَةُ أَعْيُنٍ فَأَتَيَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلاَهُ عن تِسْعِ آيَاتٍ بَيّنَاتٍ فَقَالَ لَهُمْ لاَ تُشْرِكُوا بِالله شَيْئاً وَلاَ تَسْرِقُوا وَلاَ تَزْنُوا وَلاَ تَقْتُلُوا النّفْسَ الّتِي حَرّمَ الله إِلاّ بِالحَقّ ، وَلاَ تَمْشُوا بِبَرِيءٍ إِلَى ذِي سُلْطَانٍ لِيَقْتُلَهُ وَلاَ تَسْحَرُوا وَلاَ تَأْكُلُوا الرّبَا وَلاَ تَقْذِفُوا مُحْصَنَةً وَلاَ تُوَلّوا الفِرَارَ يَوْمَ الزّحْفِ وَعَلَيْكُمْ خَاصّةً اليَهُودَ أَلاّ تَعْتَدُوا في السّبْتِ قَالَ فَقَبّلُوا يَدَيْهِ وَرِجْلِيْهِ فَقَالا نَشْهَدُ أَنّكَ نَبيٌ قالَ فَمَا يَمْنَعُكُمْ أَنْ تَتّبِعُونِي؟ قالَ قالُوا إِنّ دَاوُدَ دَعَا رَبّهُ أَنْ لاَ يَزَالَ مِنْ ذُرّيّتِهِ نَبيٌ وَإِنّا نَخَافُ إِنْ تَبِعْنَاكَ يَقْتُلُنَا اليَهُودُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று (சில) கேள்விகளைக் கேட்டு வருவோம் என்று இரண்டு யூதர்களில் ஒருவர் மற்றொருவரிடம் கூறினார். அதற்கு அவர், நீ (அவரை) இறைத்தூதர் என்று கூறாதே ! ஏனெனில் நீ இறைத்தூதர் என்று கூறியதை அவர் கேட்டுவிட்டால் அவருக்கு நான்கு கண்கள் வந்து விடும் (அதாவது அதிகம் பூரிப்படைந்து விடுவார்) என்று கூறி விட்டு நபிகளாரிடம் சென்றார்கள். நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது சான்றுகளை வழங்கினோம் (17:101) என்ற வசனத்தின் விளக்கத்தைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒன்பது சான்றுகளையும்) விளக்கினார்கள் ஒன்று அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள்! இரண்டு விபச்சாரம் செய்யாதீர்கள் மூன்று அல்லாஹ் தடை செய்த எந்த உயிரையும் அநியாயமாக கொல்லாதீர்கள் நான்கு திருடாதீர்கள் ஐந்து சூனியம் செய்யாதீர்கள்! ஆறு தவறிழைக்காதவனுக்கு எதிராக அவனைக் கொல்ல வேண்டும் என அரசனிடம் முறையிடாதீர்கள் ! ஏழு வட்டியை உண்ணாதீர்கள் . எட்டு கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறாதீர்கள் ஒன்பது போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடாதீர்கள் என்று கூறிவிட்டு , சனிக்கிழமை வரம்பு மீறாதீர்கள் என்ற கட்டளை யூதக் கூட்டத்தினரே! இது உங்களுக்கு மட்டும் குறிப்பானதாகும் என்று விளக்கம் அளித்தார்கள். இதை கேட்டுக் கொண்டிருந்த இரண்டு நபர்களும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கைகளையும் கால்களையும் முத்தமிட்டார்கள். மேலும் நீங்கள் இறைத்தூதர் தான் என்று நம்புகிறோம் என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். நீங்கள் இருவரும் இஸ்லாத்தை ஏற்பதை தடுத்தது எது? என்று கேட்டார்கள். நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னுடைய சந்ததிகளில் நபியாக இருந்து கொண்டே இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள். மேலும் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் எங்களை யூதர்கள் கொன்று விடுவார்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் : ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3144 நஸாயி 4078 அஹ்மது 18092

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِيهِ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ائْذَنْ لِي يَا رَسُولَ اللَّهِ فَأُقَبِّلْ رَأْسَكَ وَرِجْلَيْكَ، فَأَذِنَ لَهُ فَقَبَّلَ رَأْسَهُ وَرِجْلَيْهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து யா ரஸுலல்லாஹ்! நான் உங்களின் தலையையும் இன்னும் காலையும் முத்தமிட அனுமதி கேட்க. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். அவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலையையும்
இன்னும் காலையும் முத்தமிட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அர் ருஹ்ஸது தக்பீலில் யதி 95

 

ﻋَﻦْ ﺍِﺑْﻦ ﺟَﺪْﻋَﺎﻥَ رَضِيَ اللَّهُ عَنْهُ ﻗَﺎﻝَ ثَابِت لأَنَسِ رَضِيَ اللهُ عَنْهُ أمَسَسْتَ النبيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم بيدك؟ ﻗَﺎﻝَ نَعَم فقبَّلها

 

ஸாபித் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கேட்டார்கள் நீங்கள் உங்கள் கையினால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டீர்களா? என்று நபித் தோழர் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்க அவர்கள். ஆம் என்றதும் நபித் தோழரின் கையினை அவர் முத்தமிட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அதபுல் முப்ரத் 144

 

ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ رَضِيَ الله عَنْهَا ﻗَﺎﻟَﺖْ كَانَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَآهَا أي ابنتَه فاطمة رَضِيَ اللَّهُ عَنْهَا قَدْ أَقْبَلَتْ رَحَّبَ بِهَا ثُمَّ قَامَ إِلَيْهَا فَقَبَّلَهَا ثُمَّ أَخَذَ بِيَدِهَا فَجَاءَ بِهَا حَتَّى يُجْلِسَهَا فِي مَكَانِهِ وَكَانَتْ إِذَا أَتَاهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحَّبَتْ بِهِ ثُمَّ قَامَتْ إِلَيْهِ فَقَبَّلَتْهُ وأَنَّهَا دَخَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي قُبِضَ فِيهِ فَرَحَّبَ وَقَبَّلَهَا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க வந்தால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மகளை எழுந்து நின்று வரவேற்று அவர்களுடைய கைகளை முத்தமிட்டு தனது இருக்கையில் அமரச் செய்வார்கள். மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைச் சந்திக்க வந்தால் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் எழுந்து நின்று வரவேற்று அவர்களை முத்தமிட்டு தனது இருக்கையில் அமரச் செய்வார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் அதபுல் முப்ரத் 979

 

عَنْ أُسَامَةَ بْنِ شَرِيك رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُمْنَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَّلْنَا يَدَهُ

 

நாங்கள் எழுந்து சென்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கைகளை முத்தமிட்டோம்.

 

அறிவிப்பவர் :- உஸாமத் இப்னு சரீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அர் ருஹ்ஸது தக்பீலில் யதி 58

 

عَنْ جَابِر رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ عُمَر رَضِيَ اللَّهُ عَنْهُ قَامَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَّلَ يَدَهُ

 

நிச்சயமாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து நின்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கைகளை முத்தமிட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- உஸாமத் இப்னு சரீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அர் ருஹ்ஸது தக்பீலில் யதி 59

 

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِك رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا نَزَلَتْ تَوْبَتِي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَّلْتُ يَدَهُ وَرُكْبَتَيْهِ

 

கஹ்ப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தவ்பா (பற்றிய வசனம் இறங்கிய) போது உடனே வந்து இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கைகளையும் கால்களையும் முத்தமிட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- கஹ்ப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் துர்ருல் மன்சூர் 956

 

عَنْ أَبِي بَزَّةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ دَخَلْتُ مَعَ مَوْلَايَ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُمْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَّلْتُ رَأْسَهُ وَيَدَهُ وَرِجْلَهُ

 

அப்துல்லாஹ் இப்னு ஸாயிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுழைந்த போது எழுந்து நின்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலை மற்றும் கை, கால்களையும் முத்தமிட்டோம்.

 

அறிவிப்பவர் :- பஸ்ஷத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அர் ருஹ்ஸது தக்பீலில் யதி 32

 

عَنِ ابْنِ عَبَّاس رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ فَقَبَّلْتُ يَدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسَ مَرَّاتٍ

 

அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கைகளை ஐந்து விடுத்தம் முத்தமிட்டேன்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அர் ருஹ்ஸது தக்பீலில் யதி 42

 

عَنْ صُهَيْبٌ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ يُقَبِّلُ يَدَيِ الْعَبَّاسِ أَوْ رِجْلَهُ

 

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கைகளையும் கால்களையும் முத்தமிட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- ஷுஹைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அதபுல் முப்ரத் 676

 

குறிப்பு :- சுஜூது செய்வது அதாவது வணங்கும் நோக்கில் சிரம் பணிவது அல்லாஹ் ஒருவனுக்கே அதை வேரு எவருக்கும் செய்யக் கூடாது. வணங்கும் நோக்கில் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அடி பணியக்கூடாது. தலைகுணியக்கூடாது. காலில் விழக்கூடாது இதுவெல்லாம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கும் கண்ணியம் மரியாதை என்ற நோக்கில் முத்தமிடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உதாரணமாக :- கணவன் மனைவி உடல் உறவு கொள்ளும் போது கை கால் நெற்றி அது அல்லாத இடங்களை முத்தமிட்டாள் அது ஷிர்க் அல்ல. அது அல்லாதவர்கள் அதாவது பிள்ளைகளை இறக்கத்தில் முத்திமிடுவது தாய் தந்தையை பாசத்தில் முத்தமிடுவது நல்லோர்களை மரியாதைக்காக வேண்டி முத்தமிடுவது. அவர்களின் கை, கால் மற்றும் நெற்றியை முத்தமிட்டுவதையெல்லாம் ஷிர்க் என்று கூறுவார்கள் இஸ்லாத்தின் பார்வையில் மடயர்கள் என்பதை மேற்கூறிய ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.